சனி

பெரியகுளம் எம்.எல்.ஏ., அலுவலகம் தேனியில் செயல்பட நடவடிக்கை

தேனி : பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் தேனியில் செயல்படும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி, பெரியகுளம் தனித்தனி தொகுதிகளாக இருந்த போது தேனியில் பெரியகுளம் ரோட்டில் பெத்தாட்ஷி விநாயகர் கோயில் அருகிலும், பெரியகுளத்தில் அழகர்சாமிபுரத்திலும் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் கட்டப்பட்டது. தேனி, பெரியகுளம் தொகுதிகள் மறுசீரமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர், எந்த எம்.எல்.ஏ., அலுவலகத்தை செயல்படுத்துவது என்ற குழப்பம் எழுந்தது. தற்போதைய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லாசரிடம் அதிகாரிகள் கருத்துகேட்டனர். தேனியில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள் இருப்பதாலும், முக்கிய அரசு அலுவலகங்கள் இருப்பதாலும் தேனியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தையே பயன்படுத்த முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தேனியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை லாசர் பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
                                                                          நன்றி். தினமலர்