தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

SSU ஸைஃபுல்லாஹ் ஹாஜாவின் புரஃபைல் மோசடி

சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டதற்கு இரண்டாவது காரணமாக, அவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்ததான முகாம், கத்னா முகாம், இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் போன்றவைகளை அரபியிலும் ஆங்கிலத்திலும் புரொஃபைல் (சேவைகளின் தொகுப்புப் புத்தகம்) தயாரித்து அதைக் காட்டி வெளிநாட்டு மக்களிடம் வசூல் செய்துவிட்டு,இப்போது நான் மஸ்ஜித் முபாரக் பெயரில் தான் புரொஃபைல் தயாரித்தேன் என்கிறார் என்ற குற்றச்சாட்டு உணர்வு இதழில் வெளியானது.

அதை மறுத்து தன் சொந்த பந்தங்களை கூட்டி வைத்து சைபுல்லாஹ் அவர்கள் நடத்திய தர்பியாவில்,நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி 40லட்சம் அல்ல, 40ரூபாய் வாங்கியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயர் கொண்ட ரசீதைக் காட்ட முடியுமா எனக்கேட்கிறார்.அதுமட்டுமின்றி யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானலும் குற்றச்சாட்டு வைக்கலாம். இப்படி குற்றச்சாட்டு வைப்பதாக இருந்தால் நான் கூட வைப்பேன். ஜூலை
4 மாநாட்டிற்கு நான் பல கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தேன்.அதற்கு இன்றுவரை கணக்கு வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரை இறைவனின் அருளால் இன்று வரை கணக்கு விசயத்தில் பிசகியது இல்லை. காரணம் ஒரு கிளை வசூல் செய்து கொடுக்கும் பணத்திற்கு அவர்கள் சார்ந்த அந்த மாவட்ட நிர்வாகத்திடம் கிளை நிர்வாகம் கணக்கு கேட்கும். அதேபோல மாவட்ட நிர்வாகம்
கிளை நிர்வாகத்திடம் கணக்கு கேட்கும்.மாவட்டம் மூலம் மாநிலத்திற்கு வரும் வகைகளுக்கு மாநில நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் கணக்குக் கேட்கும். அதே போல கிளை மாவட்ட கணக்கு வழக்குகளை மாநில நிர்வாகம் கணக்குக் கேட்கும். இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்துதணிக்கைக் குழு கணக்குக் கேட்கும்.

கொடுக்கப்படும், வாங்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும்ஒவ்வொரு பைசாவிற்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். மாநில நிர்வாகம் கணக்கில் தவறு செய்திருந்தால் தணிக்கைக் குழுவிற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாநில நிர்வாகத்தின்மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு வந்தால் மேலாண்மைக் குழு அதைக் கேட்கும். மாநில நிர்வாகத்திற்கு எதிராக பொதுக்குழுவைக் கூட்டும் உரிமை மேலாண்மைக் குழுவிற்கு இருக்கின்றது.

இது தான் ஒரு நிர்வாகத்தின் செட்டப். இந்த செட்டப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவிர வேறு எந்த அமைப்புகளிலும் கிடையாது.

ஆக யார் நினைத்தாலும் இங்கே ஊழல் செய்து விடமுடியாது. அப்படியே செய்தாலும் அவர் மிக விரைவில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் சைபுல்லா ஹாஜா அவர்கள் மிகத்தந்திரமாகச் செயல்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் ஊழலைச் செய்து விட்டுஅது சம்பந்தமாக கணக்குக் கேட்டால் அது முபாரக் கமிட்டி என்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கணக்கு கேட்க உரிமை இல்லை என்றும் சொல்கிறார்.

அவர் மீது வைக்கப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு முழுமையான தெளிவான பதிலுக்கு கீழே உள்ள சுட்டியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்.