தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

காணவில்லை… காணவில்லை…

விஸ்வரூபம் படத்திற்கு தடைப்போட்ட போது, கருத்து சுதந்திரம் பேசிய கருணாநிதி, பாரதி ராஜா, ஆர்கேசெல்வமணி,ராமதாஸ் உள்ளிட்ட கருத்து சுதந்திர போராளிகளே(?) மெட்ராஸ் கஃபே திரைப்பட விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? எங்கே போனார்கள் இந்த கருத்து சுதந்திர போராளிகள்(?)...

மௌனம் காப்பது ஏன்?

காணவில்லை… காணவில்லை… விஸ்வரூபம் படத்திற்கு தடைப்போட்ட போது, கருத்து சுதந்திரம் பேசிய கருணாநிதி, பாரதி ராஜா, ஆர்கேசெல்வமணி,ராமதாஸ் உள்ளிட்ட கருத்து சுதந்திர போராளிகளே(?) மெட்ராஸ் கஃபே திரைப்பட விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? எங்கே போனார்கள் இந்த கருத்து சுதந்திர போராளிகள்(?)...

பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் அதைப் புறக்கணித்தது என்று கூறப்படுவது உண்மையா? மசூது கடையநல்லூர் ரஸ்மின், இலங்கை?????


..........பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் அதைப் புறக்கணித்தது என்று கூறப்படுவது உண்மையா? மசூது கடையநல்லூர் ரஸ்மின், இலங்கை????? ...........

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம். இதுபோல் ஜனாஸா தொழுகையில் பங்கு கொள்வதற்கும் முன்னரே உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நடந்து வருகிறோம். பெரியார் தாசன் அப்துல்லா அவர்களுக்காக புதிதாக ஒரு நிலைப்பாட்டை நாம் எடுக்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவராக இருப்பவர் வெளிப்படையாக அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அல்லது வெளிப்படையாக கடவுள் மறுப்புக் கொள்கையை வெளிப்படுத்தினால் அவரது ஜனாஸாவில் கலந்து கொள்வதில்லை என்பது நெடுங்காலமாக நாம் கடைப்பிடித்து வரும் நிலைபாடாகும். அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. அல்குர் ஆன் 9 : 113 ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்கு பாவமன்னிப்பு தேடுவதாக இருப்பதால் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைப்படி இதுபோன்ற ஜனாஸாக்களில் நாம் கலந்து கொள்வது இல்லை. தன்னைப் பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்கள் இணை கற்பித்தால் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர். பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பெரியார் கொள்கையைப் பெருமையுடன் பிரச்சாரம் செய்ததாலும், பெரியார் சிலைக்கு மாலை போட்டதாலும் இதைக் கடவுள் மறுப்புக் கொள்கையாகவே நாம் கருதுகிறோம். கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொன்னதுதான் பெரியாரின் பிரதானமான கொள்கை என்பது தமிழ் உலகமே அறிந்த உண்மையாகும். மேலும் இனவாதத்தை ஒழித்துக்கட்டிய இஸ்லாத்தை ஏற்ற பின்னும் திராவிட இன மக்களுக்காகப் பாடுபடுவதாக அவர் கூறியதும் ஏற்க முடியாததாகும். பெரியார் தாசன் அல்லாத பரம்பரை முஸ்லிம் இப்படி நடந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் இந்தக் கொள்கையைத் தான் கடைப்பிடித்து வருகின்றது. இதற்கு முன் எத்தனையோ பிரமுகர்கள் மரணித்து அவர்களின் ஜனாசா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டதுண்டு. இறந்தவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் செயலில் ஈடுபடுவது, அதை ஆதரித்துப் பேசியது தெரியவந்தால் நாம் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டோம். நபிகள் நாயகத்துக்கே அனுமதி இல்லாத ஒன்றை நாம் யாருக்காகவும் செய்ய முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டும். வேறு யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. பெரியாரின் அடிமை என்ற பொருளில் பெரியார் தாசன் எனவும் அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் அப்துல்லாஹ்வாகவும் அவர் தொடர்ந்து அழைக்கப்பட்டார். இனிமேல் யாரும் தன்னைப் பெரியார் தாசன் என்று அழைக்கக் கூடாது. நான் அல்லாஹ்வின் தாசன் மட்டுமே என்று பகிரங்கமாக அவர் அறிவிக்கவும் இல்லை. கெஜட்டில் மாற்றம் செய்யாவிட்டாலும் மக்கள் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று சொல்வது அவருக்குக் கடமையாக இருந்தது. அவர் முன்னிலையில் அவ்வாறு அழைக்கப்பட்ட போது அவர் அதை மறுக்கவில்லை என்பதையும் கூடுதல் தகவலாக சொல்லிக் கொள்கிறோம். இது தவிர இறந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திவிட்டு நல்லடக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்து இவர் பேசுவார், அடுத்து அவர் பேசுவார் என்று அரசியல் மேடையாக்குவதும், இறந்தவரைப் பற்றி இல்லாததைக் கூறிப் புகழ்வதும் தங்களின் வருகையை விளம்பரப்படுத்த தலைவர்கள் துடிப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தால் ஏற்க முடியாததாகும். ஏகத்துவக் கொள்கையில் மரணித்தவராக இருந்தாலும் அவரது மரணம் அரசிலாக்கப்பட்டால் அதையும் நாம் தவிர்ப்பதைக் கொள்கையாக வைத்துள்ளோம். தொழுதோமா, ஜனாஸாவுக்காக துஆ செய்தோமா, அடக்கம் செய்தோமா, என்று கலைந்துவிடுவது தான் சரியான இஸ்லாமிய முறையாகும். இந்த முறை மீறப்பட்டால் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்வது பெரியார் தாசன் எனும் அப்துல்லாஹ்வுக்காக எட்டுக்கப்பட்ட முடிவு அல்ல. கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். http://onlinepj.com/

திங்கள்

பெரியகுளம் கிளை சார்பாக 2013 ரமளானில் ரூபாய் 41,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 41,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

பெரியகுளம் கிளை சார்பாக 9-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை தாருல்பரக்கத் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் ஈஸா பரீத் அவர்கள் பெருநாள் உரை ஆற்றினார்கள் நூற்றுக்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

பெரியகுளம் 2013 பித்ரா தொகை ஒரு நபருக்கு ரூ100.00


பெரியகுளத்தில் பள்ளிவாசல் மீது கல் வீச்சு மறியல் பதட்டம்


செவ்வாய்

சிறை நிரப்பும் போராட்டம் ஒரு வாரம் தள்ளிவைப்பு

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை ஜாம்பஜார் கிளைத் தலைவர் யாகூப் அவர்களை வீடு புகுந்து கைது செய்து, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், அன்று மாலை 4 மணிக்கு இதற்கு நியாயம் கேட்க அணி திரண்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதற்கு காரணமாக இருந்த துணை ஆணையாளர் கிரி மற்றும் உதவி ஆணையாளர்கள் செந்தில் குமரன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்வரும் 03.01.2013 வியாழன் அன்று ஒரு லட்சம்பேர் பங்கு பெறும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாநில நிர்வாகிகளிடம் ஒரு வாரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததை ஏற்று இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் 10.01.2013 வியாழன் அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநித் தலைமையகம், சென்னை

“பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” இது நாம போட்ட தலைப்பில்ல CNN போட்டது

CNN தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ”பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” என்ற தலைப்பில் பின் வரும் இணைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
http://religion.blogs.cnn.com/2011/05/13/half-of-new-testament-forged-bible-scholar-says/
இந்த நீண்ட செய்தியின் தமிழாக்கத்தை அப்படியே நேயர்களுக்கு தருகின்றோம்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்
-ஜான் பிலைக் (CNN -தொலைகாட்சியின் செய்தி தொடர்பாளர்)
உடல்பலஹீனமானமுதியவர்ஒருவர்சிறைச்சாலையில், குளுரில்நடுநடுங்கஅமர்ந்துஇருக்கிறார். முன்பு ஒருமுறை மரணத்தில் இருந்து தப்பியவர். ஆனால் இம்முறையோ மரண தண்டனை உறுதி செய்யபட்டுள்ளார்.
“ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”2 -ம் திமோத்தேயு(4:6-7)
அந்த வயதான முதியவர் வேறு யாருமில்லை அவர் தான் பவுல். மேலே குறிப்பிட்டுள்ள பைபிளின் படி புதிய ஏற்பாட்டின் மிகவும் சோகம் தோய்ந்த பகுதியாக கிருத்தவர்களால் கருதப்படுகிறது. பவுல் மரணிக்கும் முன்பு இறுதி வார்த்தைகளாக மேற்குறிப்பிட்டவாறு கூறினார் என்று பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் .
ஆனால் அங்கு தான் ஒரு பிரச்சனை. அதுவென்ன பிரச்சனை? அதாவது இதனை உண்மையில் பவுல் கூறவில்லை. அது அவர் சொற்கள் இல்லை !உண்மையில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதிக்கும் மேல் உள்ள பகுதிகளை பவுல் என்கின்ற அபோஸ்தல பெயர்தாங்கிகள் தான் எழுதினார்கள்.
“பெய்யைச் சொல்லி நல்லதைப் பரப்பினால் அது மக்களிடம் எடுபடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் பல மக்களிடம் காணப்பட்டது” என்று மிகவும் பிரசுத்தி பெற்ற பைபிளின் முற்கால கையெழுத்து பிரதிகளையும் ஆய்வு செய்யும், மிகவும் அனுபவமிக்க கிருத்துவ அறிஞர் எஹ்ர்மன்(Ehrman) தனது புத்தகமான “போர்ஜரிஸ்” (போலியாக இட்டுகட்டபட்டவைகள்) என்பதில் கூறுகிறார்.
மொத்தம் உள்ள 27 புதிய ஏற்பாடு புத்தகங்களில் 11 புத்தகங்கள்பொய்யாக இட்டுகட்டபட்டவை.
இயேசுவின் சீடர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குறிப்பிடப்படும் பைபிளின் புதிய ஏற்பாடுகளில் சில பகுதிகளும் அவர்கள் எழுதியவை இல்லை. ஏனெனில், இயேசுவின் சீடர்கள் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.
இயேசுவின் சீடர்கள் படிப்பறிவில்லாத விவசாயிகளா?
எஹ்ர்மனின் இந்த புத்தகம் அவரின் மற்ற பல புத்தகங்களை போலவே பல்வேறு விதமான விமர்சனங்களை கிளப்பிய வண்ணம் உள்ளது. அதில் ஒருவர் “பென் வித்தரிங்டன் (Ben Witherington)” இவர் “போர்ஜரி” என்ற எஹ்ர்மானின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால், அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை!
வித்தரிங்டன், எஹ்ர்மனின் புத்தகத்தை “ஒரு மூர்க்க தனமான ஏமாற்று புத்தகம், இதையும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்.
வித்தரிங்டன் மேற்படி எஹ்ர்மனின் புத்தகத்துக்கு ஒரு நீண்ட விமர்சனைத்தையே எழுதியுள்ளார். அதில், புதிய ஏற்பாட்டில் II பேதுருவைதவிர ஏனையவை இயேசுவின் வாழ்வுக்கும் பவுலுக்கும் சாட்சியாயிருந்த எழுத்தறிவுள்ள மிகச்சிறு கூட்டத்தினரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்கிறார்.
அடுத்து II திமோத்தேயு-வில் பவுலின் கூற்றாக சொல்லப்படுவது, அவர் எழுதாவிட்டாலும் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒரு எழுத்தர் வருங்கால சந்ததியினருக்காக எழுதியிருக்கலாம் என்றும்,
தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய, பவுலின் மனதைப் புரிந்து கொண்ட நண்பரோ அல்லது உதவியாளரோ பவுலின் கூற்றை செவியேற்று இருக்கலாம். இது புனையப்பட்டதல்ல! மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரின் வாக்கு! என்கிறார் வித்தரிங்டன்.
ஆனால்எஹ்ர்மன்,பேதுருவின் (பீட்டரின்) கடிதங்களை மாத்திரம் விமர்சித்துவிட்டு மற்றவைகளை விட்டுவிடவில்லை ! அவர், பரிசுத்த சுவிசேஷங்கலாக கருதப்படும் மத்தேயு, மார்க் மற்றும் யோவான் சுவிஷங்களும் கூட அவர்கள் எழுதியவைகள் இல்லை. இதில் எந்த ஒன்றும் இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்களையும் முன் வைக்கின்றார்.
முற்காலத்தில் எழுத பெற்ற எந்த சுவேஷங்களானாலும் அவைகளில், அதை எழுதியவர்கள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆக சுவேஷங்களின் பெயர்களை உண்டாக்கியவர்கள் பிற்கால எழுத்தர்கள் தான் என்று கூறுகிறார்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று இயேசுவின் சீடர்களாக கருதப்படும் பவுல் மற்றும் (பீட்டர்) ஆகிய இருவருக்கும் இன்றைக்கு பைபிளில் அவர்கள் பெயரில் உள்ள அதிகாரங்களுக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.
இதற்க்கு சான்றாக பைபிளில் அப்போஸ்தலர் 4 : 13 இல் இயேசுவின் சீடர்களான, பேதுரு மற்றும் ஜான் இருவரும் மீனவர்களாக் இருந்தனர். இது பற்றி குறிப்பிடுகையில் “agrammatoi,(அக்ரமத்தொய்)”என்ற கிரேக்க மொழிசொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி அர்த்தம் “எழுதப்படிக்க தெரியாதவர்கள்” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கும்போது எப்படி இந்த ஆகாங்களை இவர்கள் எழுதியிருப்பர் என்பதே எஹ்ர்மனின் வாதம்.
பைபிளில் பவுலின் பெயரால் எழுதப் பட்டவைகள் உண்மையான பவுலால் எழுதப்பட்டது தானா?
புதிய ஏற்பாட்டின் உண்மையான மூல பிரதியான பவுலின் கடிதங்களில் சுமார் சரிபாதி (13 கடிதங்களில் 7 கடிதங்கள்) போலியானவையே என்று ஏர்மன் கூறுகிறார்.
அவரது கடிதங்கைளை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, பயன்படுத்தப்பட்ட சொற்களின் தரங்கள், மற்றும் தனது போதனைக்கு தேரந்தெடுத்த சொற்களிலுள்ள தெளிவான முரண்பாடே இதற்கு காரணம்.
அதாவது, ஒவ்வொருவரது மொழி நடையும் வித்தியாசமானது. சிலர் ரத்தினச்சுருக்கமாகவும், சில பந்தி பந்தியாகவும் எழுதுவர். ஆனால் பவுலின் கிரேக்க மொழி நடையானது முதல் ரகம். கிரேக்கத்தில் குறுகிய சொற்களையே பயன்படுத்துவார். கனகச்சிதமான வசனங்களை பயன்படுத்துவார். ஆனால் எபேசியரில் (Ephesians) பவுலின் நடைக்கு மாற்றமாக மிக நீண்ட வசனங்களைக் கொண்டதாக காணப்படுகிறது.
இவ்வாறு நீண்ட வசனங்களை பயன்படுத்தவது கிரேக்க மொழியில் உள்ளதுதான். ஆனாலும், பவுலின் மொழிநடை அவ்வாறானதல்ல என்கிறார். இந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் பைபிளில் எபேசியருக்கு வழங்கிய ஆசிரியர் உரை அமைந்துள்ளது.
முதலாம் கொரிந்தியரில் பவுல்,பெண்கள் அனைவரும் தேவாலயங்களில “வாய் மூடிஅமைதியாக இருக்க வேண்டும், கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீட்டில் சென்று தன் கணவனை தான் கேட்க வேண்டும்” என்கின்ற 14ம்அதிகாரத்தின் 34 மற்றும்35 வசனங்களை எஹ்ர்மன் மேற்கோள் காட்டுகிறார்.
மேலும், இதேமுதலாம்கொரிந்தியரில்11ம்அதிகாரத்தின் 5,6 மற்றும்13ஆவதுவசனங்களில் பவுல்,“பெண்கள் திருச்சபைகளுக்கு வந்து இறைவேண்டலில் ஈடுபடும் போது தலையை மறைக்கவேண்டும்” என்று கூறுகிறார்.
பவுல், 11ம்அதிகாரத்தில்பேச அனுமதித்து விட்டு 14ம் அதிகாரத்தில் பேசக்கூடாது என்று எப்படிசொல்வார்? என்று எஹ்ர்மன்கேட்கிறார்.  இதிலிருந்து இதற்கும் பவுலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது.
ஏன்பொய்யானசெய்தியைபுனைந்தார்கள்?
பைபிளில் பொய்யான செய்திகள் புனயபட்டதற்க்கு முக்கிய காரணம் முற்கால கிறித்துவ தேவாலயங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான் . கிறித்துவ தேவாலயங்கள் பெண்களை நடத்தும் விதம், தலைமைத்துவம் மற்றும் எஜமானர்களுக்கும், அடிமைகளுக்கும் இடையேயான உறவு முறைகள் போன்ற விஷயங்களில் முரண்பட்டு சிதறி கிடந்தனர், என்கிறார் எஹ்ர்மன்.
தாம் எதை நம்ப வேண்டும் என்பதை பற்றி, ஒவ்வொரு கிறிஸ்துவ பிரிவைச் சார்ந்தவருக்கு மத்தியில் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாதங்களை நிலை நிறுத்த வேதத்தின் துணையை நாடினர் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒருவர் எந்த பிரிவினரையும் சாராதவராக இருப்பின், அவர் தன்னுடைய பெயரை கொண்டு எந்த ஒன்றையும் எழுதாமல் பேதுரு (பீட்டர்) அல்லது யோவான் (ஜான்)என்கின்ற பெயர்களில் தங்கள் கருத்துகளை எழுதி வெளியிட்டனர்.
ஆக இந்த ஆரம்ப முதல் நான்கு நூற்றாண்டுகளில் தான் பேதுரு, யோவான் என்கின்ற பெயர்களில் பல்வேறு நபர்கள் தங்களை ஏசுவிற்கு மிகவும் நெருங்கியவர்களாக காட்டி கொண்டு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேதுரு, யோவான்என்கின்ற பெயர்களை பயன்படுத்தி போலியாக நூற்றுக்கணக்கான செய்திகளை இட்டுகட்டினர் என்று மதிப்பிட்டு எஹ்ர்மன் கூறுகிறார்.
இதனை வித்தரிங்டன் அவர்களும் மறுக்க முடியாத காரனத்தால், முற்கால கிறித்துவ பிரிவினர்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் பொய்யான செய்திகளும், கட்டுகதைகளும் மிதந்து கொண்டிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் !
அதே சமயம், பேதுரு (பீட்டர்) என்பவர் மீனவர் என்கின்ற காரனத்தால் அவர் எழுத படிக்க தெரியாதவர் என்று கூறுவது சரி இல்லை என மறுக்கிறார். ஏனெனில் மீனவர்களும் கூட வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்களை செய்ய எழுத்தை கையாளுகின்றனர் என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் வித்தரிங்டன்.
ஊடக பரபரப்பை மக்கள் விரும்புவதால், எர்ஹமனின் ஆக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று வித்தரிங்டன்கூறுகிறார்.
விவிலியத்தை பற்றிய ஞானமே இல்லாத இயேசுவை தேடக்கூடிய கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். எந்த விதமான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்து சொல்லலாம்.ஏனெனில் “போர்ஜெட்(Forged)” போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யும் மக்கள் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ ஒரு புதிய கருத்துக்கு செல்லவாய்ப்பே இல்லை என்கிறார் வித்தரிங்டன்.
ஆனால் எஹ்ர்மனின்கோணமோ இதற்க்கு மாற்றமானது.
“போர்ஜெட்(Forged)” என்கின்ற புத்தகத்தின் மூலம் பல மக்கள் உண்மையை கண்டு கொள்வர்.நானும் கூட இந்த உண்மைகளை முதலில் ஒப்பு கொள்ள மறுத்தேன். ஆனால் இப்போது இல்லை” என்று முன்னால் கிருத்துவ அடிப்படைவாதியான எஹ்ர்மன் கூறுகிறார். தற்போது அவர் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கின்ற கொள்கைக்கு மாறி விட்டார் !
பைபிளின் புதிய ஏற்பாடு கடவுளின் கரம் கொண்டு எழுதப் பட்டதல்ல, மாறாக அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் மனித கரங்களின் அச்சு தான் பதிந்துள்ளது !!
“நான் இதை மக்கள் தூக்கி வீச வேண்டும் என்றோ அல்லது இது பயனுள்ள இறையியல் என்றோ சொல்லவில்லை! மாறாக இதில் பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது”. இதிலிருந்தே பைபிள் என்பது ஒரு சராசரி மனிதனால் எழுதப் பெரும் புத்தகத்தின் அந்தஸ்தை தான் பிடிக்கும் .!! பைபிள் என்பது இறைவனிடமிருந்து பெற்ற புத்தகம் இல்லை.
ஏனெனில் பைபிளில் பல்வேறு ஆசிரியர்கள் தங்களை யார் என்றே காட்டிகொள்ளாமல் பொய்யான பெயர்கள் கொண்டு எழுதியதே இதற்க்கு போதுமான சான்று என்று கூறி முடிக்கிறார் எஹ்ர்மன் !
பைபிளில் மனிதக்கரங்கள் மலிந்து காணப்படுகின்றன. அது இறைவேதமே இல்லை! என்று நாம் பல வருடங்களாக சொல்லி வருகிறோம். அதை கிறிஸ்வதர்களுடனான நேரடி விவாதத்திலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.
ஆனாலும், அதை பல கிறித்தவ சகோதரர்கள் கிறித்தவத்தின் மீது இருக்கும் காழப்புணர்வினால்தான் இவ்வாறு நாம் பேசி வருகிறோம் என்று நம்மை விமர்சனம் செய்கின்றனர்.
அது உண்மையல்ல! நாம் மட்டுமல்ல, இந்த பைபிளை காய்தல் உவத்தலின்றி யார் எக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அது மனிதக்கரங்கள் விளையாடிய ஒரு புத்தகம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக இந்த கட்டுரை விளக்குவதை மறுக்க முடியாது!!!
-மொழிபெயர்ப்பு உதவி இம்ரான் சரீ

திங்கள்

காவல்துறை மிருகங்களை கண்டித்து அவசர தந்தி அனுப்ப வேண்டி வாசகங்கள்!

பின் வரும் வாசகம் அடங்கிய அவசர தந்தியை அனைவரும் இதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்
Please take action against Chennai Triplicane Assistant commissioner of police Senthil Kumaran and Chintadripet D.C Mr.Giri who unlawfully enter Muslim’s houses in midnight and abuse the Muslim women and arrested innocent Muslims, also lathicharge against the Muslims who condemn this criminal offense of the police
முதலமைச்சர் முகவரி :
Chief Minister’s Special Cell
Secretariat, Chennai 600 009
கவர்னர்
Dr. K. Rosaiah
Governor of Tamil Nadu
Raj Bhavan, Chennai – 600 022
தலைமை செயலாளர் : Chief Secretary
Thiru Debendranath Sarangi IAS
Chief Secretary to Govt
Secretariat, Chennai – 600 009
உள்துறைச் செயலர் : Home Secretary
Thiru R Rajagopal IAS
Principal Secretary to Government,
Secretariat, Chennai – 600 009
டிஜிபி
Mr. K. Ramanujam, IPS
Director General of Police
Chief Office, Dr. Radha Krishnan Salai, Chennai – 600 004.

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்!

மாயன் நாட்காட்டியின் அடிப்படையில் கடந்த 21-12-2012 அன்று உலகம் அழியும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஊடகங்களிலும் இது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில்இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை துண்டு பிரசுரங்கள் விநியோகம் சுவரொட்டிகள் மூலம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி,    துண்டு பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத்விநாயகர் சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகளை கைது செய்யவேண்டும் என பிரசுரம்  வெளியிட்டனர்.

மேலும்  விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில்காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை  கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர்  ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

திருவல்லிக்கேணி  காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர்  கைது செய்து  வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்  தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்



பெரியகுளம் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை 2012

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

வெள்ளி கிழமை ஜும்ஆ நாளில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் ? அத்தஹிய்யாத் அமர்வுதான் ஓர்விளக்கம்


இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் அமரும் போது துஆ செய்ய வேண்டுமா?
பதில் :
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில் பிரார்த்தனை செய்தால் அந்த பிரார்த்தனை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه  ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم
அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ  அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?'' என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அது, இமாம்  அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.
முஸ்லிம் (1546)
இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது. இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது இரண்டு குத்பாக்களுக்கு இடையே அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்து சரியானதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய கூடாது பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன் பின் உரை ஆரம்பமாகும். அப்போது உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது.
இரண்டு குத்பாக்களுக்கு இடையே இமாம் அமர்வது சிறிதளவு நேரம் தான். அமர்ந்து உடனே எழுந்து விடுவதாலும் அதன் பின்னர் இரண்டாம் உரையும் அதைத் தொடர்ந்து தொழுகையும் ஆரம்பமாகி விடும். எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்க முடியாது. ஏனெனில் இமாம் இடையில் அமர்ந்தடு முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபடும் அவசியம் உள்ளது.
இமாம் உரையாற்றும் போது அவருடைய உரையை கவனமாக கேட்பது மக்களின் பொறுப்பாகும். உரையில் கவனம் செலுத்தாமல் வேறு விசயத்தில் கவனம் செலுத்தினால் அந்த விசயம் நல்ல விசயமாக இருந்தால் கூட ஜும்ஆவின் நன்மையை இழக்க நேரிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
883 حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى  رواه البخاري
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக்கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம்  உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
            புகாரி (883)
934 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (934)
இமாம் உரையாற்றத் தொடங்கிவிட்டால் வானவர்கள் வேறு காரியங்களில் ஈடுபடாமல் அந்த உரையை கேட்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
929حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتْ الْمَلَائِكَةُ عَلَى بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَبْشًا ثُمَّ دَجَاجَةً ثُمَّ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ وَيَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை நடக்கும்) பள்ளி வாசலின் நுழைவாயிலில் நின்றுகொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றாவார்கள். இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (929)
இமாம் உரையாற்றும் போது அதைக் கேட்பதில் தான் மக்களின் கவனம் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம் என்றால் மேற்கண்ட நபிமொழிகளை மீறும் நிலை ஏற்படும்.
இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை என்ற பொருள் தான் சரியாகத் தெரிகிறது. ஏனெனில் இறைவனைப் புகழ்ந்து போற்றவும் அதன் பின் சலவாத் ஓதி பின்னர் துஆ செய்வது தான் அந்த இருப்பின் நோக்கம்.
பார்க்க :
இந்தக் கருத்து தான் சரியானது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக்குகிறது.
و حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك ح و حدثنا قتيبة بن سعيد عن مالك بن أنس عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه زاد قتيبة في روايته وأشار بيده يقللها
அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிலிம் அடியார்  தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என் பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்'' என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
நூல் : முஸ்லிம் (1543)
துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன. ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல். மற்றொன்று அத்தஹிய்யாத்தில் துஆ செய்தல். இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது. இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது.
புகாரி 935, 5295, 6400 ஆகிய ஹதீஸ்களில் நின்று தொழும் போது என்ற வாசகம் உள்ளது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا رواه البخاري
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், "ஜுமுஆ நாளில் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தி னார்கள்.
நூல் : புகாரி (935)
நின்று தொழும் போது என்று இதில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்படத்தேவை இல்லை.
இது தொழுகையில் நிற்கும் நிலையைக் குறிக்காது. ஏனெனில் நிற்கும் நிலையில் துஆ ஏதும் இல்லை. அது துஆ செய்வதற்கான நேரமும் அல்ல. நிற்குதல் என்பது வணங்குதல் என்ற கருத்திலும் ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. தொழுது வணங்கும் போது அடியான் துஆ செய்தால் அது ஏற்கப்படும் என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
தொழுது வணங்கும் போது இமாம் அமர்ந்த பின்னர் துஆ செய்யும் இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது அத்தஹிய்யாத் அமர்வுதான். அதில் ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்ப்டும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்
சஹீஹ் இப்னி ஹுஸைமாவில் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.
صحيح ابن خزيمة  - كتاب الجمعة المختصر من المختصر من المسند على الشرط الذي ذكرنا
 جماع أبواب فضل الجمعة -  باب ذكر وقت تلك الساعة التي يستجاب فيها الدعاء من يوم
 حديث : ‏1633‏8500  
نا أحمد بن عبد الرحمن بن وهب ، نا عمي ، أخبرني مخرمة ، عن أبيه ، عن أبي بردة بن أبي موسى الأشعري قال : قال لي عبد الله بن عمر : أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه وسلم في شأن ساعة الجمعة ؟ قال : قلت : نعم , سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " هي ما بين أن يجلس الإمام على المنبر إلى أن تقضى الصلاة " . نا أحمد بن عبد الرحمن , نا عمي , حدثني ميمون بن يحيى وهو ابن أخي مخرمة , عن مخرمة , عن أبيه بهذا الإسناد مثله سواء *
இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.
குறிப்பு : இதற்கு முன்னர் அந்த நேரம் எது என்று தெளிவுபடுத்தப்பட்டவில்லை என்று நாம் சொல்லி இருக்கிறோம். அந்தக் கருத்தில் இருந்து நாம் விலகிக்கொள்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம்                               thanks; online.pj.com

பெண்கள் ஜியாரத் செய்யலாமா



பெண்கள் ஜியாரத் செய்யலாமா
கேள்வி:
பெண்கள் கபூர் ஜியாரத் செய்வதைப் பற்றி ஒரு ஆய்வு வெளியிட வேண்டுகிறேன். பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? ஜியாரத் செய்யும் பெண்களை சபித்துள்ள ஹதீஸ் விளக்கம் என்ன ?
பதில்:
மண்ணறைகளுக்குச் சென்றுவரும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு மாத்திரம் சரியானதாக உள்ளது.

294
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ وَأَبُو صَالِحٍ هَذَا هُوَ مَوْلَى أُمِّ هَانِئِ بِنْتِ أَبِي طَالِبٍ وَاسْمُهُ بَاذَانُ وَيُقَالُ بَاذَامُ أَيْضًا رواه الترمذي

மண்ணறைகளைச் சந்தித்து வரும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் பள்ளி எழுப்புபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதீ (294)

இது பலவீனமான அறிவிப்பாகும். இதில் அபூ சாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர், இமாம் அபூ ஹாதிம், இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன் மற்றும் பலர் கூறியுள்ளனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பும் பலவீனமாக உள்ளது.

976
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ قَالَ وَفِي الْبَاب عَنْ ابْنِ عَبَّاسٍ وَحَسَّانَ بْنِ ثَابِتٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ هَذَا كَانَ قَبْلَ أَنْ يُرَخِّصَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زِيَارَةِ الْقُبُورِ فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ و قَالَ بَعْضُهُمْ إِنَّمَا كُرِهَ زِيَارَةُ الْقُبُورِ لِلنِّسَاءِ لِقِلَّةِ صَبْرِهِنَّ وَكَثْرَةِ جَزَعِهِنَّ رواه الترمذي

மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்கைள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ (976)

இந்த அறிவிப்பில் உமர் பின் அபீ சலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், ஷுஅபா, முஹம்மது பின் சஅத், இப்னு ஹுஸைமா, இமாம் நஸாயீ ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்கள் வழியாக வரும் பின்வரும் அறிவிப்பு மட்டும் சரியாக உள்ளது.

1563
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو بِشْرٍ قَالَا حَدَّثَنَا قَبِيصَةُ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ وَقَبِيصَةُ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْمَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ بْنِ ثَابِتٍ عَنْ أَبِيهِ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ رواه إبن ماجه

மண்ணறைகளை அதிகமாகச் சந்திக்கச் செல்லும் பெண்கைள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)
நூல் : இப்னு மாஜா (1563)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்று நாம் முன்னர் கூறி வந்தோம். இது தொடர்பாக வரும் மற்ற பல ஹதீஸ்களைப் பார்க்கும் போது பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருந்தார்கள். பிறகு இதற்கு அனுமதியளித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது. இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றது.

ஆண்களும் பெண்களும் கப்று ஸியாரத் செய்யக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் முன்னர் தடைசெய்திருந்தார்கள். குறிப்பாக இந்த விசயத்தில் பெண்களுக்கு கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும் அனுமதியளித்தார்கள்.

3651
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ أَبُو بَكْرٍ عَنْ أَبِي سِنَانٍ و قَالَ ابْنُ الْمُثَنَّى عَنْ ضِرَارِ بْنِ مُرَّةَ عَنْ مُحَارِبٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا ضِرَارُ بْنُ مُرَّةَ أَبُو سِنَانٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنْ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا وَلَا تَشْرَبُوا مُسْكِرًا و حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَهَيْتُكُمْ فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ أَبِي سِنَانٍ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : முஸ்லிம் (3995)

المستدرك على الصحيحين للحاكم  - كتاب الجنائز
 
حديث : ‏1327‏   19192  

 
حدثنا أبو بكر محمد بن إسحاق الفقيه ، أنبأ أبو المثنى معاذ بن المثنى ، ثنا محمد بن المنهال الضرير ، ثنا يزيد بن زريع ، ثنا بسطام بن مسلم ، عن أبي التياح يزيد بن حميد ، عن عبد الله بن أبي مليكة ، أن عائشة أقبلت ذات يوم من المقابر فقلت لها : يا أم المؤمنين ، من أين أقبلت ؟ قالت : من قبر أخي عبد الرحمن بن أبي بكر ، فقلت لها : أليس كان رسول الله صلى الله عليه وسلم نهى عن زيارة القبور ؟ قالت : نعم ، " كان قد نهى ، ثم أمر بزيارتها " *

அப்துல்லாஹ் பின் அபீ மலீகா கூறுகிறார் :

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளைச் சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் சென்றுவரக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.
நூல் : ஹாகிம் (1327)

1619
و حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرِ بْنِ الْمُطَّلِبِ أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ قَيْسٍ يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ فَإِنَّ جِبْرِيلَ أَتَانِي حِينَ رَأَيْتِ فَنَادَانِي فَأَخْفَاهُ مِنْكِ فَأَجَبْتُهُ فَأَخْفَيْتُهُ مِنْكِ وَلَمْ يَكُنْ يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ وَضَعْتِ ثِيَابَكِ وَظَنَنْتُ أَنْ قَدْ رَقَدْتِ فَكَرِهْتُ أَنْ أُوقِظَكِ وَخَشِيتُ أَنْ تَسْتَوْحِشِي فَقَالَ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ قُولِي السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை "பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்' என்று (என்னிடம்) கூறினார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.

(
பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
முஸ்லிம் (1774)

மண்ணறைகளுக்கு செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபியவர்கள் கற்றுக் கொடுத்திருக்கமாட்டார்கள்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து மறுமை சிந்தனையை வரவழைத்துக்கொள்ளலாம்.

ஆனால் ஆண்களானாலும் பெண்களானாலும் இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரிய இடமான தர்ஹாக்களுக்குச் சென்றுவர அனுமதியில்லை.

மேலும் பார்க்க
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/darga_ziyarath_yhavara/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/darga_ziyarath/