தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.
மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான். 

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர் நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study ) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.
சாகிர் நாயகின் அமைப்பின் பிரிவுகளில் ஒன்றான IREF அமைப்பின் பொறுப்பாளர் ஒருவருடன் திரு. ஜெர்ரி தாமஸ் விவாதம் ஒன்றையும் நடத்தியுள்ளார். 
இந்த வகையில், தாங்கள் தான் சரியான கொள்கையை கொண்டுள்ளோம் என்றும், இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிஞராக அவர்கள் எண்ணி வைத்துள்ள சாகிர் நாயகிடமே சவால் விடுத்துள்ளோம் என்றும் இறுமாப்புடன் பிரசாரம் செய்து வந்துள்ளனர் இந்த கூட்டத்தினர். 
கேரளா மாநிலத்தில், அதிகமான திருசபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்கிற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம் , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில் , பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கில புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாத்தினர், அதற்கும் தயாரானார்கள்.


விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம் - இந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்ககூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணதால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?
மனித கையாடல் பல, பைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?
இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?


என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை  கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.


ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தை கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்தது என்பதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!

சரி, பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.
எப்படி?

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே,  நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே, உங்கள் இறைவன் இவ்வளவு மட்டரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.

இவைகளுக்கு முறையான பதில்களை சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர் ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர் ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காம களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைபழங்கலாக ஒப்பீடு செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்கு பதில் சொல்லி உங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர் ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே, விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்துக்கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படி தான் பைபிளிலும் ஆபாசம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்து பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர் ஆனிலும் தானே அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளது என்று அடுத்து சொல்லலாயினர். பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தி உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலை சொல்லாமல், குர் ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம். இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனி தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர் ஆனை குறித்து கேளுங்கள், இப்போது பைபிளுக்கு பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த சகோ. பிஜே, இதற்குரிய மூல ஆதாரங்களை தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.

ஹதீஸ் என்று எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தல் இல்லை. விடாமல், சகோ. பிஜே, அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.
பின்னர், இல்லை, நாங்கள் onlinepj தளத்தில் பார்த்தோம் என்றனர். onlinepj தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு  ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தை திறப்பது முடியாது , ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சகோ. பிஜே.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதை தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்க கடமைப்பட்டவர்கள், அதை செய்யாமல், உங்கள் குர் ஆனில் தவ்ராத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே, இன்ஜீலை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே, அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (ஜீசுஸ்) கொடுத்ததாக சொல்கிறானே, அப்படியானால், இந்த கால பைபிளில் மனித கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை ! பைபிள் இறை வேதம் தான் என்பதை பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.
மேலும், குர் ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.

இது உங்கள் சுயக்கருத்து, இதற்க்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, எந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர் ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்களையும் சொல்லபட்டிருக்கிறது என்றார். 
ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் சகோ. பிஜே.
இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்த கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பை திசை திருப்பி, சகோ, பிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு, இது தவறு என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில்,  சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தன, ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன, எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர்க்கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது, விவாதத்தை கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது .

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், உங்களை விட எல்லாம் மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

உங்கள் சுய சிந்தனையை உபயோகித்து தான் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள்  எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் ?, உங்களிடம் மறுப்பு இல்லை ! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறேர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டியிருக்கிரோமே, அந்த குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை, என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், சரி, பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே same side goal போட்டு, உங்களுக்கு பாயின்ட்  எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.

என்ன வித்தியாசமாக சொல்கிறாரே என்று பார்த்தால், 

பைபிளில், எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் பூ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்த கொள்வார், என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர் வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜே, இதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.

இந்நேரம் வயிற்ரை கலக்கியிருக்கும் அவர்களுக்கு. ஆத்திரத்தில் எடுத்து குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டு காட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி  வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். சரி, இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்சனை இல்லை என்றனர் !

இதற்கு பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதை பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜே, இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களை தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீஎங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.
அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார்.
அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே, அந்த பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும், பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.

வெலெவெலெத்துப் போன  பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.. இறுதியாக பேசிய சகோ. பிஜே, தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.
பைபிளில் உள்ள ஆபாசங்கள் என்றும் முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிரீர்களே, குர் ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்ப்பதை போன்று அன்று நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை நாங்கள் தருவோம் என்று கூறி முடித்தார்.

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் !!
நன்றி:சகோ.நாஷித் அஹமத்

பிப்ரவரி 14 ஆர்ப்பாட்டத்தினை விளக்கி நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் தேனி மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% தனி இட ஒதுக்கீடும் மாநிலத்தில் இடஒதுக்கிடை அதிகப்படுத்த கோரி நடைபெற இருக்கின்ற முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

ஞாயிறு

மூச்சு திணறிய அசத்திய கொள்கை -தண்ணீர் கேட்ட ஜெர்ரி தாமஸ்

இறைவனின் மாபெரும் கிருபையால் 21,22 ஆகிய தினங்கள் நடைபெற்ற கிறஸ்தவ விவாதம் சத்திய இஸ்லாத்தை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிர்கவைத்துள்ளது அல்ஹம்துல்லிலாஹ் .
      இதுவரையில் ஜெர்ரி தாமஸ் என்பவர் விடுத்த சவ(டா)ல்களுக்கு ஆங்கிலம் தெரிந்து உலக அரங்கில் நாங்கள்தான் முடிசூடா மன்னர்கள் தவா பனியில் ஒரே கூடத்தில் பல பேரை இஸ்லாத்திற்கு கொண்டுவருவோம் என்று கூறிய எந்த அமைப்பிற்கும் இவரை  எதிர்கொள்ள தைரியமில்லாமல் ஒளிந்து ஓடிய இவர்களுக்கு  மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாங்கள் உங்களை எதிர்கொள்வோம் உங்கள் நம்பிக்கை தவறு என்பதை நிரூபிப்போம் என்று களத்தில் இரங்கி எதிர் சவால் விடுத்து நேற்றும் இன்றும் உலகமே பார்கும் வகையில் tntj.net,onlinepj.com,jesusinvites.com ஆகிய மூன்று இணைய தளங்களிலும் நேரடி ஓளிப்பரப்பு மூலம் விவாத களத்தை ஆங்கில மொழிபெயர்ப்பு  உடன்  சந்தித்து உலக மக்களுக்கு .பைபிள் இறைவேதமில்லை என்பதையும் பைபிளில்  ஆபாசம்,அசிங்கம் ,முரண்பாடுகள் ,நிறைத்து காணப்டுகின்றது என்பதையும் பைபிளின் வசனங்களை அடுக்கி இது எந்த வகையிலும் இறை  வேதமில்லை    என்பதை தெளிவாக பதியவைத்தனர். எதிர் அணியால் இது உண்மையில் இறைவேதம் தான் என்பதை ஒரு பேசுக்குகூட கூறமுடியாத அளவிற்கு நம்மால்  நிருப்பிக்க பட்டது.  தங்களை விட்டால் போதும் என்று சொல்லும் அளவிற்கு நம் சகோதரர்களின் வாதங்களும்,ஆதாரங்களும் அவர்களை கதிகலங்கவைத்தது .இனி இவர்கள்  வாழ்கையில் இஸ்லாத்தை விமர்சனம் செய்ய கனவில் கூட நினைக்காத அளவிற்கு இறைவன் இந்த சத்திய ஒளியை பிரகாசிக்க செய்துள்ளான்.அல்லாஹ் அக்பர்.

''உண்மை வந்து விட்டது.பொய் அழிந்துவிட்டது.பொய் அளியகூடியதாகவே உள்ளது''என்று கூறுவீராக!அல் குரான்-17:81

திங்கள்

பேச்சை பேணுக ???

மொழியின் உயிர்நாடி பேச்சுதான். மனிதன் பிறக்கும்போதே 'பேசா'விட்டாலும், அழுகை எனப்படும் ஒலியை எழுப்புகிறான். பின்னர், சிந்தனை வளர வளர மனிதனின் தொண்டையிலிருந்து வெளியேறும் ஒலி... அதனை அடுத்த பல உறுப்புக்கள் மற்றும் அவனின் சிந்தை மூலமும் சரியாக திருத்தப்பட்டு, அந்த ஒலி வெளிவரும்போது... அது 'பேச்சு' என்றாகிறது."ஒரு வித விதிமுறை + கட்டுக்கோப்பில்" அது இருந்தால்... இதுதான் மொழி என்றாகிறது..!   


அப்படி ஒரு 'மொழியை பேச' மனிதனின் நாக்கு, பல், அண்ணம், உதடுகள், உள்நாக்கு, மூக்கின் காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை என்று அவன் உடம்பில் பல உறுப்புகள் உதவுகின்றன. இவை ‘ஒலி உறுப்புகள்’ எனப்படுகின்றன. இவற்றைப்பயன்படுத்தி மனிதர்கள் ஒலி எழுப்புகின்றனர். அந்த ஒலிகள் ஏதேனும் பொருள் தந்தால், அதுதான் ‘பேச்சு’..!

செவ்வாய்

இஸ்லாத்தில் முளையவியல்.

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.
இஸ்லாத்தில் முளையவியல்.
பாத்திமா ஷஹானா (கொழும்பு)
அல்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகிய அல் அலக் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஓதுவீராக! ஏன்று கூறிவிட்டு மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றிக் கூறுகின்றான்.

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 96: 1,2)

வியாழன்

இஸ்லாத்தில் அண்டை வீட்டாரின் கடமைகள்

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                        அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 5187அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.              அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) நூல்: புகாரீ 6016                                                                                                                            அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 73முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்முஸ்லிம் தனது அருகிலிருக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத குடும்பத்துக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாமின் மாண்புகள் உலகளாவியது. அது மத, வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் தன்மை பெற்றது.அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கப்படும்போது தனது அடிமையிடம், "நமது அண்டை வீட்டாரான யூதருக்கு (ஆட்டிறைச்சியை) அன்பளிப்புச் செய்தாயா? நமது அண்டை வீட்டாரான யூதருக்கு அன்பளிப்புச் செய்து விட்டாயா?'' என (இருமுறை) கேட்பார்கள். "ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: "ஜிப்ரீல் எனக்கு அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு வாரிசுரிமையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று நான் எண்ணுமளவு (உபதேசித்தார்கள்)'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.''  (ஸஹீஹுல் புகாரி)அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள். நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள்.                        அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் 9298“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது. என்று நபிகளார் கூறினார்கள்.                                                          அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத் 12575அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்

அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அவரது நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வது அவசியமாகும். பக்கத்து வீட்டில் இருக்கிறார்; அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும் போது அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் வெளியூர் சென்று விட்டார்; எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.    அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரீ 4477பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம்; நம்பியவர்களுக்குத் துரோகம் செய்தல் இன்னொரு குற்றம்; இந்த இரண்டும் சேர்ந்து பெரும் பாவமாக மாறி விடுகிறது.“நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்த ஒன்றாகும். இது மறுமை நாள் வரை ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். “திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள்.     அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) நூல்: அஹ்மத் 22734அதாவது ஒருவர் பக்க வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வது, மற்ற பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும். ஒருவர் பக்கத்து வீட்டில் திருடுவது, மற்ற பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.



குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்
அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும் வழங்க வேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
''அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி)  நூல்: முஸ்­ம் (4758)
அற்பமானது என்று கொடுக்காமல் இருந்து விடாதீர்!

நாம் அண்டை வீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையில்லை. சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்க வேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாகக் கருதக் கூடாது.
''முஸ்­லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (2566)
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்

பக்கத்து வீடு என்று வரும் போது, அவர்கள் வீட்டைக் கட்டும் போது அல்லது வீட்டைப் புதுப்பிக்கும் போது மரக் கட்டைகள் போன்றவற்றை அண்டை வீட்டாரின் சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் போது அண்டை வீட்டாருக்கிடையில் பெரிய சண்டைகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
அண்டை வீட்டாருக்கு மரப் பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதைத் தடுக்கக் கூடாது என்றும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபிகளார்  நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ர­) சொல்­ விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்­க் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள்.                                       அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463)இஸ்லாமின் மாண்புகளைப் புரிந்த முஸ்லிம் தனது அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் மிக தாராளமாக நடந்து கொள்வார். அவருக்கு உபகாரத்தின் கதவுகளைத் திறந்து, தீமையின் வாயில்களை மூடிவிடுவார். அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு எற்படுவதை அஞ்சிக் கொள்வார்.நன்றியற்ற அண்டை வீட்டார்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். "இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்'' என்று கூறுவார்.                         (அல் அதபுல் முஃப்ரத்)                                                                                                              "ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு உதாரணம் ஒரு கட்டிடத்தைப் போன்றதாகும். அதில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது.''                                                            (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)                                                                                                                                                         மேலும் கூறினார்கள்: "முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணைகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது, ஒர் உடலைப் போன்றதாகும். அதில் எதேனும் ஒர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலைக் கொண்டும் தூக்கமின்மையைக் கொண்டும் முறையிடுகின்றன.''  (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஈமான் எனும் இந்த அற்புதமான இணைப்பின் மூலம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இணைப்பதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது. அதில் ஒர் அங்கமே அண்டை வீட்டினருடன் உறுதியான உறவை எற்படுத்தியதாகும். நன்மையான காரியங்களில் கூட்டாகுதல் மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டை வீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் சபைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டை வீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்ல வேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரியங்களில் கூட்டாகச் செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன்.   அறிவிப்பவர்: உமர் (ரலி)நூல்: புகாரீ 89                                                                                              அல்லாஹ்விடம் சிறந்தவர்“நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                                       அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: திர்மிதீ 1867)நல்ல அண்டை வீட்டார்“நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்: அஹ்மத் 14830                                                                                                                            தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.

அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)

பசுவதை தடுப்பு கறுப்புச் சட்டம்: பாசிசத்திற்கு அடிபணிந்த மத்திய அரசு

 


ஊட்டச்சத்து குறைவான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம். முதல் இடத்தில் வங்காளதேசம் உள்ளது. இந்தியாவில் 47 சதவீத குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைவினால் அவதியுறுகின்றனர். உலகில் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 15-வது இடம். பட்டினியையும், ஊட்டச்சத்துக் குறைவையும் போக்குவதில் மாமிசத்தின் பங்கு மறுக்கமுடியாதது ஆகும். வெறும் வெஜிட்டேரியன்(சைவ) உணவுகளால் மட்டும் எந்த நாடும் வாழ முடியாது. அவ்வாறு எந்த நாடும் உலகில் இல்லை என்பதுதான் உண்மை. மாமிச உணவும் கூட உணவுப் பட்டியலில் இடம் பெற்றால்தான் பட்டினியை ஓரளவாவது கட்டுப்படுத்த இயலும்.