தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

இறை நம்பிக்கை

நம்மில் ஒரு சிலர் அல்லாஹ்வை நம்புகிறோம் ஆனால் மறுமையை நம்புவதில்லை இறுதிநாளை நம்புவதில்லை விதியை நம்புவதில்லை சொர்க்கம் மற்றும் நரகத்திலும் நம்பிக்கையே இல்லை மாறாக தன் செல்வத்தையும் (எதிர்காலத்தில் காப்பற்றுவார்கள் என) பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் நம்புகிறார்கள் ஆனால் இறைவனை நம்பும் விதத்தில் நம்புவதில்லை.அவனுடைய வல்லமையையும்,கருணையையும் நம்புவதில்லை.

ஒரு முஹ்மின் என்பவர் எதையெல்லாம் நம்ப, வேண்டும் என்றால் 

  • அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு இணை இல்லை என்றும் முதலில் நம்ப வேண்டும்,
  • பிறகு மலக்குகளை நம்ப வேண்டும் ,
  • வேதங்களை நம்ப வேண்டும்,
  • நபிமார்களை நம்ப வேண்டும் ,
  • இறுதிநாளை நம்ப வேண்டும்
  • நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது  என்று நம்ப வேண்டும் ,
  • மரணத்திற்கு பின்பு மீண்டும் எழுப்ப படுவோம் என்றும் நம்ப வேண்டும் .

ஒரு சிலர் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் சமுதாயத்திற்க்கும், ஊருக்கும், உறவினர்களுக்கும் அஞ்சுகிறார்கள் யார் அல்லாஹ்வை அஞ்சவில்லையோ அவர்கள் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு அஞ்சியே வாழ்வதை கண்கூடாக காண்கிறோம்.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல்குரான் 2:177 )

"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பினோம் எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.( அல்குர்ஆன் 2:8)

அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர் (உண்மையில்) தம்மை தாமே ஏமாற்றி கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை (அல்குரான் 2:9 )

 அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை (அல்குரான் 2:9.)

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (அல்குரான் 2:28)
அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால்,அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள். (அல்குரான் 22:35)

 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.  (அல்குரான் 2:3.)

நன்மையும், தீமையும், இன்பமும், துன்பமும், உயர்வும்,தாழ்வும், ஆட்சியும், அதிகாரமும்,செல்வமும், ஏழ்மையும், அனைத்தும் அவனிடமிருந்து வந்ததுதான் என்று நம்ப வேண்டும் மேலும் அவன் அடியார்களுக்கு நன்மையே செய்கிறவன் என்றும் நம்ப வேண்டும் தன் படைப்புகளிடம் பாரபட்சம் காட்டவும் மாட்டான்  என்றும் நம்ப வேண்டும்.எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு முன் நாம் அனைவரும் அடிமைகளே!

ஒரு சிலருக்கு தனிச்சிறப்புகள் இருப்பதாக எண்ணிக்கொண்டு  அவர்கள் நல்லடியார்கள் என்றும் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்றும் தவறாக எண்ணிக்கொண்டு அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்ற பெயரில் ஷிர்க் எனும் எனும் இணைவைப்பில் விழுந்து விடுகிறார்கள் மேலும்அவுலியாக்கள் நல்லடியார்கள் என்று அவர்களிடம் சென்று பிரார்த்திக்கிறார்கள்.ஆனால் நல்லடியார்கள் யார் என்பது மறுமையில் தான் தெரியும்.

மேலும் சிலரிடம் ஏன் அவுலியாக்களை நாடி செல்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கு (அவ்லியாக்களுக்கு) துஆ செய்வதற்கே செல்கிறோம் என்கின்றனர் , நாம் அவர்களிடம் இறந்த உங்களது தாயோ தந்தையோ உறவினர்களோ உங்கள் ஊரிலேயே அடக்கம் செய்யப் பட்டிருப்பார்கள் அவர்களுக்காக என்றாவது இந்த அளவிற்கு முயற்சி  எடுத்து மையவாடிக்கு (கப்ருஸ்தான்) சென்று அவர்களது கப்ரு வாழ்க்கை மற்றும் நிலையான மறுமை வாழ்க்கைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்திருப்போமா? சற்று சிந்தித்து பார்க்கவேண்டும் சகோதர சகோதரிகளே

"வானங்களையும் ,பூமியையும் படைத்தவன் யார்?"என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்" என்று கூறுவார்கள் "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்திப்பவை பற்றி கூறுங்கள்"! என்று கேட்பீராக! "அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளை தடுக்க கூடியவர்களா? அல்லாஹ் எனக்கு போதும்.சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்" என்று கூறுவீராக (அல்குரான் 39:38)

அவன் இரவை பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும் சந்திரனையும் தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஓவொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை செல்கின்றன அவனே அல்லாஹ் உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள்,அணுவளவும் அதிகாரம் படைதவர்களல்ல (அல்குரான் 35:13)

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குரான் 35:14)

நாம் நமது வீட்டிலோ தொழில் நிறுவனத்திலோ நமது அதிகாரத்தை யாருக்காவது விட்டுக்கொடுப்போமா அப்படி இருக்கம் போது அனைத்தையுமே படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் அவனுடைய அதிகாரத்தை  பங்கிடுவதை எப்படி பொருத்துகொள்வான், மன்னிப்பான். 


அவர்களுக்கு அதிகாரத்தில் ஏதேனும் பங்கு உள்ளதா
? அப்படி இருந்திருந்தால் அற்பமான பொருளைக் கூட மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.(அல்குரான்4:53)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?(அல்குரான்2:107)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.(அல்குரான்3:189).

விரைவில். TNTJ தலைமைகழக செய்தி

எம்.ஐ சுலைமான் , ஷம்சுல்லாஹ், அல்தாஃபி , எம்.எஸ் சுலைமான், அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஆகியோர் உட்ட  TNTJ மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய ஏகத்துவ பிரச்சார வீடியோக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இன்ஷா அல்லாஹ் புதிய இணையதளம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஞாயிறு

முன்னால் த.மு.மு.க, தலைமை கழக பேச்சாளரின் மனம் திறந்த மடல்!!

அனுப்புநர்
Puliangudi Seyad Ali  S.செய்யத அலி,
  முன்னாள் மாவட்ட செயலாளர், ம.ம.க.நெல்லை
  முன்னாள் த.மு.மு.க.தலைமை கழக பேச்சாளர்,
    புளியங்குடி.
    நெல்லை மாவட்டம்.
பெறுநர்
        மாவட்ட நிர்வாகிகள் / மாநில செயற்குழு உறுப்பினர்கள்,
        த.மு.மு.க. &  ம.ம.க.
        தமிழ்நாடு.

அன்புடையீர்!
        அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
        இம்மடல் உங்களை பூரண உடல் நலத்துடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக!
        எனது இக்கடிதத்தை திறந்த மனதுடன், விறுப்பு, வெறுப்புக்கு இடமளிக்காமல் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
        அன்புச் சகோதரர்களே! நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த நான் த.மு.மு.க.வில் 13 ஆண்டு காலம் பணியாற்றியவன்.  1994 ஆம் ஆண்டு எனது 14வது வயதில் தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசல்களில் அடி, உதைகளை வாங்கி பிரச்சார களத்தில் போராடி தூய இஸ்லாத்தை நிலைநாட்டிட போராடியவன்.  1997ல் சமுதாய போராளி டாக்டர்.பழநிபாபா அவர்களின் மறைவுக்குப் பின் த.மு.மு.க.வில் இணைந்தேன்.  1999ம் ஆண்டு முதல் கிளை ஃ நகரம் ஃ மாவட்டம் ஃ மாநிலம் என பல்வேறு பொறுப்புகளில் த.மு.மு.க.வில் பணியாற்றினேன்.
        கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கூலி எதையும் பெறாமல் முழுநேர பணியாளனாக, அல்லாஹ்விடத்தில் மட்டுமே நன்மையை எதிர்பார்த்து கழக பணியாற்றியவன்.  எனது உடல் பலவீனத்தையும் மறந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கழக வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டேன்.  இவற்றையெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தாங்கள் நன்றாக அறிவீர்கள்.
        பல்லாயிரம் சகோதரர்கள் கழக பொறுப்பிற்கு வந்தது முதல் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, பிரதிபலனை எதிர்பாராமல் இரவு பகல் வேறுபாடின்றி தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை த.மு.மு.க. இயக்கம் வளர அயராது பாடுபட்டு ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும்,  காவல் துறையாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு ஜமாத்தார்களால் ஊர் நீக்கம், சொந்த குடும்பத்தார்கள் விரட்டி அடிப்பு, பிரச்சார களங்களில் மோதல், உயிர்பலி என்று பல்வேறு தியாகத்திற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட இயக்கம் த.மு.மு.க. ஆனால் இந்த இயக்கம் இன்று தனிப்பட்ட இரண்டு நபர்களின் (ஜவாஹிருல்லாஹ்,  ஹைதர் அலி) சொத்தாக மாறிவிட்டது.  இவர்களின் ஜனநாயக விரோத, ஏதேச்சதிகாரத்தை கண்டித்து கருத்துரைக்கும் நிர்வாகிகள் மீது பொய் புகார்களை கூறி, எவ்வித விசாரணையும் இல்லாமல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் போக்கு இன்று வாடிக்கையாகிவிட்டது.  இந்நிலையில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளைக்கு சொந்தமான இடமானது எந்த இஸ்லாமிய அமைப்பிற்கும் சொந்தமானது அல்ல.  அறக்கட்டளையின் சொத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டு என்னைத் தொடர்ந்து தலைமை நிர்வாகிகள் தொந்தரவு செய்ததுடன் கொடுக்க மறுத்ததால் குற்றச்சாட்டு கூறி நீக்கிவிடுவதாகவும் மிரட்டினார்கள்.
                இவர்களின் இச்செயல்களை கண்டு மன வேதனை அடைந்து  கொண்டு இருக்கும்போது, 26-01-2011 அன்றைய தேதியிட்ட என்னுடைய ஈமெயிலுக்கு த.மு.மு.க.  தலைவர் M.H..ஜவாஹிருல்லாஹ்விடம்  இருந்து என்னை நீக்கிவிட்டதாக மெயில் கடிதம் வந்தது.  கழகத்திற்காக பாடுபட்ட என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் O.U.ரஹ்மத்துல்லாஹ் விசாரணை செய்ததாக பொய்கூறி என்னை நீக்கி உள்ளார்கள்.
     
ஆனால் என்னுடைய 13 ஆண்டுகால அப்பழுக்கற்ற தூய பணிகளுக்கான அங்கீகாரமாக கடந்த 28-01-2011 அன்று வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற த.மு.மு.க. மாநில செயற்குழு அமைந்ததாகவே கருதுகிறேன்.  எனக்கு எதிராக எடுக்கப்பட்ட த.மு.மு.க தலைமை நிர்வாகக் குழுவின் ஒரு தலைபட்சமான, தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவை ரத்துசெய்திட வேண்டும் என வலியுறுத்தி பல மாவட்ட நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள் செயற்குழுவில் நியாயக்குரல் எழுப்பி பலமணி நேரம் போராடியது எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.  த.மு.மு.க. தலைமை எவ்வித விசாரணையும் இன்றி பல கட்டங்களில் பல மாவட்ட நிர்வாகிகளை கேள்வி கணக்கில்லாமல் நீக்கம் செய்திடும் முடிவை எடுக்கும்போது, அவர்களுக்காக நியாய குரல் எழுப்பிட யாரும் முன்வராத நிலையில் எனக்காக தலைமையிடம் போராட ஆள் இருக்கின்றது என்பதை நினைத்திடும் போது கண்களில் கண்ணீர்! (அல்ஹம்துலில்லாஹ்)..
        ஆனால் அதே நேரத்தில் தலைமை எடுத்த நிலைப்பாட்டை ஆதரித்தும், மாநில செயற்குழுவின் அனலை தணிப்பதற்காகவும், எனக்காக வாதாடிய சகோதரர்களின் நியாய குரலை அடக்குவதற்காகவும் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என் மீது வேண்டுமென்றே அபாண்டமான, ஜீரணிக்க முடியாத பொருளாதார குற்றச்சாட்டை சுமத்தி என்னை அங்கு அசிங்கப்படுத்தி உள்ளார்.  எனது பெயரை களங்கப்படுத்தினால் மட்டுமே என்னை உங்களிடமிருந்து தனிமைப்படுத்த முடியும் என நினைத்து அக்காரியத்தை செய்துமுடித்துள்ளார்.
        இந்நேரத்தில், பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கூறிய புளியங்குடி பள்ளிவாசல் பணம் கையாடல், ஊழல் குற்றச்சாட்டு அபாண்டமானது என்பதை பிற செயற்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தவும், எனக்காக வாதாடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நீதிக்காகத்தான் போராடி உள்ளோம் என்கிற மன ஆறதலை ஏற்படுத்துவதற்காகவுமே இக்கடிதத்தை உங்கள் அனைவருக்கும் எழுதுகின்றேன்.
        பிரச்சனையின் ஆரம்பத்துக்கு செல்வதற்கு முன்பாக சில ஆண்டுகள் பின்னோக்கி சென்று சில சம்பவங்களை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன். 
சகோதரர்களே!
        இந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாற்றமாக வாரிய பொறுப்பை ஏற்றவுடன் பதவிக்காக ஆட்சியாளருக்கு மாநில நிர்வாகிகள் ஜால்ரா போட ஆரம்பித்தவுடன் கழகத்தின் வீரியம் குறைய தொடங்கிவிட்டது.  கழகத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்தவர்கள் மாநிலம் முதல் கிளை கழகம் வரை தாங்கள் சார்ந்து இருக்கும் மஹல்லாக்களின் நன்மைக்காக உண்மையான காரணங்களுக்காக வாரிய தலைவர் ளு.ஹைதர் அலி அவர்களை சந்திக்கும்போது மாநில பொருளாளர் ழு.ரு.ரஹ்மத்துல்லா முதல் கிளை நிர்வாகிகள் வரை அவமானப்படுத்தப்பட்டார்கள்.  கழகத்திற்காக உழைத்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்.  ஆனால் செல்வந்தர்களும், வாரிய சொத்தை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களும் வாரிய தலைவர் ஹைதர் அலி அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்டனர்.
        பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை எவரையும் மதிக்காமல் அவர் செயல்பட்ட விதத்தையும் சகோ.கோவை செய்யது அவர்களின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் தன்னுடைய ஆற்றலால், தன் முயற்சியால் தமக்கு கிடைத்த பதவி என நினைத்துக் கொண்டு தான்தோன்றித்தனமாகவும், அகம்பாவமும், கர்வமும் தலைக்கேறிய நிலையில் உள்ளார் பொதுச் செயலாளர் ஹைதர் அலி எனக் கூறுவார்.    இவ்வாறு இருந்த அவரது செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் அன்றைக்கு நானும் ஒருவனாக இருந்தேன்.  வக்பு வாரியத்தில் இவரது தனிப்பட்ட செயல்பாடுகளில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஒட்டுமொத்த கழகமும் பதில் சொல்ல வேண்டி வந்தது.  இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது.  கட்சியை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, த.மு.மு.க. தலையீடே இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன், கட்சியை கைப்பற்ற அவர் செய்த சதிவேலைகளை அம்பலப்படுத்தியதற்கு பின்பாக அவரிடமிருந்து கட்சி காப்பாற்றப்பட்டது.இதிலும் எம்முடைய பங்கு இருந்தது.
       பின்னர் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ம.ம.க.வை அழிப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட பகிரங்கமான முயற்சிகளுக்கு எதிராக மாபெரும் கருத்துரவாக்கம் செய்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.  மேலும் நெல்லை மாவட்டத்தில் தனக்கு என அவர் உருவாக்கிய கோஷ்டி அரசியலுக்கு எதிரானவர்களோடு  நான் கைகோர்த்தது என இவைகள் அனைத்தும் என் மீது சகோ.ஹைதர் அலி அவர்களின் தீராத பகையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் நெல்லையில் அவர் உருவாக்கிய கோஷ்டியை சேர்ந்தவர்களின் பல மாத முயற்சிகளுக்குப் பின்னால் எனது ஊரில் எனக்கு எதிரான கோஷ்டி உருவாக்கப்பட்டது.  ஒரு சிலரை கையில் வைத்துக் கொண்டு பொய்யான காரணத்தை வைத்து பிரச்சனை செய்ய சொன்னார்கள்.  பிரச்சனையும் எழுந்தது.  10 ஆண்டுகாலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகுந்த ஒற்றுமையோடும், கட்டுக்கோப்போடும், சிறப்பான முறையில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நகர அமைப்பிற்கும் எடுத்துக் காட்டாக எனது ஊர் விளங்கியது.  எமது நகர அமைப்பை போன்று எவருமே செயல்பட முடியாத அளவுக்கு செயல் திட்டங்கள் பிரமிக்க வைக்க கூடியதாக இருந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)
       த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் இதற்காக பலமுறை என்னை பாராட்டியுள்ளார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று உருவாக்கப்பட்ட இந்த கோஷ்டிகள் மூலமாக எனக்கு எதிரான அவதூறுகள் பலமாக பரப்பப்பட்டது.  சகோதரத்துவம், கூட்டமைப்பு சிதைக்கப்பட்டது.  சகோதரத்துவம் உடைந்தது.  கழக வளர்ச்சி கடந்த 6 மாதமாக பெரிதும் பாதிக்கப்பட்டது.  கழகம் புளியங்குடியில் 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டது.  இந்நிலைக்கு காரணமான கயவர்கள்.ஹைதர் அலி அவர்களின் நிழலில் ஒதுங்கினார்கள்.  நானோ, நெல்லை மாவட்ட நிர்வாகமோ, த.மு.மு.க. தலைமை நிர்வாகமோ ஒன்றுமே செய்ய முடியவில்லை.  கழக கட்டமைப்பையும், சகோதரத்துவத்தையும் உடைத்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட த.மு.மு.க. தலைமை நிர்வாக குழு தயங்கியது என்கிற நிலையை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
        இப்போது விசயத்துக்கு வருவோம்!  மாநில செயற்குழுவில் மதியம் 3 மணிக்கு பிறகு பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என் மீது சுமத்திய பள்ளிவாசல் பணம் மோசடி தொடர்பான குற்றச்சாட்டு இன்றைக்கு அல்ல.  மாறாக நான் த.மு.மு.க மாவட்ட பொருளாளராக இருக்கும் போது கடந்த 2010 ஜீலை மாதத்தில் எனது ஊரில் உள்ள ளு.ஹைதர் அலி அவர்களின் ஆலோசனையில் செயல்படும் கோஷ்டியினரால் பரப்பப்பட்டது.
        இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சென்னையில் த.மு.மு.க. தலைமையகத்தில் வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற்றது.  இவ்விசாரணையின் போது பேரா.ஜவாஹிருல்லாஹ் சகோ.ஹைதர் அலி, ம.ம.க.  P.அப்துல் சமது ஆகியோர்  உடனிருந்தனர்.
        விசாரணையில், நான் 1 ரூபாய் மோசடி செய்திருந்தாலும் நீக்கிவிடுவது என்கின்ற அதிதீவிர முடிவில் சகோ.ஹைதர் அலி அவர்கள் இருந்தார்கள்.  அல்லாஹ்வின் உதவி மட்டுமே அன்றைக்கு எனக்கு உதவியாக இருந்தது.  விசாரணையில் குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. (திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் வசூலிக்கப்பட்ட சில ஆயிரம் ரூபாய்க்கும் திருச்சி லால்குடியைச் சார்ந்த நுச.ஷர்புதீன் அவர்கள் மூலமாக சவுதி அரேபியாவின் குடிமகனாகிய அரபு சகோதரர் முகமது அல் பர்ராஜ் அவர்களது சொந்த பணம் ரூ.3 லட்சம் உள்ளிட்டவைகளுக்கும், O.U.R. கொடுத்த பணம் ரூ.5 ஆயிரமும் சேர்த்து கணக்கு காண்பிக்கப்பட்டது).  ஆனால் குற்றச்சாட்டை பரப்பிய அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.  இதனை கண்டித்து நான் வாடகை கட்டிட மர்கஸ் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கி கொள்வதாகவும் வேறு யாரையாவது வைத்து மர்கஸ் நிர்வாகம் பார்த்து கொள்ளுங்கள் என்று நானே கூறிவிட்டதாலும், வாடகை கட்டிடம் மர்க்ஸ்க்கு அமைப்புக் குழு நியமனம் செய்யப்பட்டது.  அதே நேரம் அந்த விசாரணை நடைபெற்ற இடத்தில் வைத்தே நான் கோரிக்கை வைத்தேன்.   மேற்படி அவதூறு பிரச்சாரம் தொடர்பான உண்மை நிலையை எமது ஊரில் உள்ள மக்களுக்கு மத்தியில் தலைமை தெளிவுபடுத்திட வேண்டும் என்பதுதான். எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன்படி விசாரணை முடித்த 2 நாள் கழித்து ஆகஸ்ட் 6 ம் தேதி வெள்ளிக்கிழமை எமது பள்ளிவாசலில் நடைபெற்ற ஜீம் ஆ உரையில் தென்காசி  மைதீன் சேட்கான் அவர்களின் மூலமாக விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது.  'பள்ளிவாசல் பணத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.  எனவே அவதூறை நம்பாதீர்கள்!  ஒற்றுமையுடன் அல்லாஹ்வுக்காக செயல்படுங்கள'; என தென்காசி மைதீன் சேட்கான் அவர்கள் ஜீம்ஆ உரையாற்றி புளியங்குடியில் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். (VIDEO ஆதாரம் உள்ளது) அதன்பின்பு 1 நாள் கழித்து ஆகஸ்ட் 8 ம் தேதி காலையில் நடைபெற்ற புளியங்குடி நகர த.மு.மு.க. பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ம.ம.க. P.அப்துல்சமது, த.மு.மு.க. ழு.ரு.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  அவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி தலைமையில் நடைபெற்ற விசாரணையை குறிப்பிட்டு பேசினார்கள்.  ஆதாரம் எதுவும் இன்றி எவருடைய மானத்தோடும் விளையாடாதீர்கள்!என அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.
 
(குறிப்பு : இதே தினத்தன்று (ஆகஸ்ட் 8) தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற சகோ ஹைதர் அலி அவர்கள் வருகை தந்தார்கள்.  அப்பொதுக் கூட்டத்திற்கு ம.ம.க. P.அப்துல்சமது அவர்களும் கலந்துகொள்ள சென்றார்கள்.  அங்கு இரண்டு நாட்கள் தங்கினார்கள்.   ஆகஸ்ட் 8,9 ம் தேதிகளில் தென்காசியில் சகோ.ஹைதர் அலி அவர்களால் நெல்லை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கோஷ்டியின் அட்டகாசத்தை நேரில் கண்டார்கள்.  மாவட்ட நிர்வாகத்தை மதிக்காமல் நிழல் மாவட்ட நிர்வாகமாக அவர்கள் செயல்படுவதையும் அதற்கு ஹைதர் அலி அவர்கள் உரமிட்டு வளர்க்கிறார் என்பதையும் P.அப்துல் சமது அவர்கள் பார்த்துவிட்டு மனம் குமுறிக் கொண்டே மன வருத்தத்தோடு சென்னை சென்றார் என்பதை இங்கே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.)
 
இறுதியாக எனது நியாயமான கேள்விகள் என்னவென்றால்?

பள்ளிவாசல் பணம் தொடர்பாக நான் தவறு செய்திருந்தால். .. . ?

1)    ஆகஸ்ட் 4ம் தேதி விசாரணையின்போது நான் வகித்து வந்த த.மு.மு,க. மாவட்ட பொருளாளர் பொருப்பிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?
2)    ஆகஸ்ட்6 வெள்ளிக்கிழமை ஜீம்ஆ உரையில் அல்லாஹ்வின் பள்ளிவாசலில் வைத்து தென்காசி மைதீன் சேட்கான் அவர்கள் பொய் பேசினாரா?
3)    ஆகஸ்ட் 8 புளியங்குடி பொதுக்குழுவுக்கு வந்த P.அப்துல்சமது அவர்களும், மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் பொய் பேசினார்களா?
4)    ஆகஸ்ட் 4, 2010 முதல் 26-01-2011 வரை 6 மாத காலம் நெல்லை மாவட்ட நிர்வாகியாகவும், தலைமை கழக பேச்சாளராகவும் இருந்துள்ளேன்.  பள்ளிவாசல் பணத்தை மோசடி செய்த குற்றவாளியை ஏன் தண்டிக்காமல் விட்டிருந்தீர்கள்?
5)    டிசம்பர் 6, 2010 பாபர் மசூதி மீட்பு போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திட சிவகங்கை மாவட்டத்திற்கு அனுப்பியது ஏன்?
6)    2011 ஜனவரி 25ம் தேதி வரையில் சகோ.ஹைதர் அலி அவர்களால் எனக்கு ஏற்படும் மன உளைச்சலை பற்றி நான் சந்திக்கும் அனைத்து தலைமை நிர்வாகிகளிடமும் புகார் தெரிவிக்கும் போது, ஹைதர் அலியின் கோரத் தாண்டவம் அதிகமாக உள்ளது.  கழகம் உடையும்  சூழ்நிலை உள்ளது எனவே பொறுமையாக இரு. பொறுத்துக் கொள் எனக் கூறியதோடு, மாநிலப் பொதுக்குழுவுக்குப் பின்னர், ஹைதர் அலி போய்விடுவார் எனவும், எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியது எல்லாம் நாடகமா?  அல்லது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் ஈனச் செயலா?
மிக மிக முக்கியமான கேள்வி
 
7)    கடந்த 14-11-2010 அன்று சகோ ஹைதர் அலி அவர்களை சந்தித்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடமும், சில நாட்கள் கழித்து சந்தித்த தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளிடத்திலும், இன்னும் பல பேர்களிடமும், என்மீது வேண்டுமென்றே அவதூறுகளை அவர் பரப்பினார்.  எந்த விசாரணையும் இன்றி, வேண்டுமென்றே பல கேவலமான அவதூறுகளை என் மீது சுமத்தினார்.  அந்நேரத்திலும் பள்ளிவாசல் பணம் மோசடி செய்தவன் என குற்றம் சாட்டினார்.  இதனை கேள்விப்பட்டவுடன் நான் நேரடியாக கோவைக்கு சென்று, அங்குள்ள நிர்வாகிகளிடம் உண்மை நிலவரத்தை கூறிவிட்டு, ளு.ஹைதர் அலி உண்மையாளராக இருந்தால் நிரூபிக்கட்டும்! என்ன தண்டனை வேண்டுமானாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என கூறிவிட்டு வந்தேன்.  ஆனால் இதுநாள் வரை நிரூபிக்கப்படவில்லை.
8)    கடந்த 23-11-2010 அன்று தலைமையகத்தில் நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவுக்கு முதல் நாள் 22ம் தேதி நிர்வாகக் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.   அக்கடிதத்தில் சகோ.ஹைதர் அலி அவர்கள் என்மீது சுமத்தும் மோசமான அவதூறை விசாரியுங்கள்.  பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்! குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் ஹைதர் அலி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியிருந்தேன்.  அதற்கும் எந்த விசாரணையும் இல்லை.
9)    அடுத்து, அதே கருத்தை வலியுறுத்தி 'எனது உயிரை விட எனது மானம் முக்கியம்' எனவே ஹைதர் அலி கூறிய குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என கடந்த 31-12-2010 அன்று தலைமை நிர்வாக குழுவுக்கு மறுபடியும் நினைவூட்டல் கடிதம் எழுதினேன்.  அதற்கும் பதில் இல்லை. என்ன கொடுமை பார்த்தீங்களா?       
10)    கடந்த ஜனவரி 26 ம் தேதியிட்ட ஒரு கடிதம் (இமெயில்) மூலமாக பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மூலமாக எனக்கு கிடைத்தது.  அக்கடிதத்தில் எவ்வித விசாரணையும் இன்றி, தான்தோன்றித்தனமாக பொய்யான 4 காரணங்களை கூறி 13 ஆண்டுகாலம் உழைத்த உண்மை தொண்டனை எவ்வித ஆதாரமுமின்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.  அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதற்காக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூறியிருக்கும் 4 காரணங்களும் எவ்வளவு அபத்தமானது என்பதை அக்கடிதத்தை படிக்கும் அனைவரும் நன்றாக அறிவார்கள்.  இருப்பினும் அக்கடிதத்திலேயே 5வது காரணமாக பள்ளிவாசல் பணம் மோசடியில் ஈடுபட்ட காரணத்தினாலும் எனக்கூறி நீக்கம் செய்திருக்க வேண்டியது தானே?  ஏன் செய்யவில்லை?
11)    என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள என் மீது பாசம் கொண்ட த.மு.மு.க. நிர்வாகிகள் தலைமை கழகத்தில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டபோதும்,  வெளிமாவட்ட நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சொல்லாத காரணத்தை தலைமை நிர்வாகிகள் செயற்குழுவில் சொன்ன காரணம் என்ன?
12)    எனது விவகாரமாக தலைமை நிர்வாகிகளிடம் சண்டையிட்ட முக்கியமான ஒரு நபரிடம் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள், அவரை 3 மாதம் பொறுத்துக் கொள்ள சொல்லுங்கள் இப்போது நிலைமை சரியில்லை, அவரை பொறுமையாக இருக்கச் சொல் என கூறியதன் காரணம் என்ன?
13)  செயற்குழுவுக்கு 10 நாட்களுக்கு முன்பே ஹைதர் அலி TORTURE பொறுக்க முடியாமல் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததை ஏற்க மறுத்து பொதுக்குழு முடியட்டும்  ஹைதர் அலி சென்று விடுவார் என்று கூறியதன் காரணம் என்ன?
 எனவே சகோதரர்களே! . . . .                       
ஜனவரி 28 ந் தேதி காலை 11 மணிக்கு பிறகு நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து கொண்டு தலைமை நிர்வாகிகள் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி) ஆகியோரின் கம்பெனியாக த.மு.மு.க. மாறிவிட்டது.  கருத்துச் சுதந்திரம் இல்லை என நான் நெல்லை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதற்கு பின்பாக நான் திருடனாகிவிட்டேன்.  என்ன கொடுமை இது! பாருங்கள்! இந்த அநியாயத்தை நியாயக் குரல் எழுப்பி மாநில செயற்குழுவில் பேசிய அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல இறைவனிடம் 'துஆ' செய்கின்றேன்.  நீங்கள் நீதிக்காகவே போராடியுள்ளீர்கள்.  'திருடனுக்கு பரிந்து பேசவில்லை.  அநீதி இழைக்கப்பட்ட, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி ஜீவனுக்காகவே வாதாடியுள்ளீர்;கள்.  (அல்ஹம்துலில்லாஹ்) எனவே நீங்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம்.
        என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு தலைமைநிர்வாக்குழு கூறியுள்ள முதல் காரணம், கழக பொதுச்செயலாளர் ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாகவும், இழிவாகவும், பொதுஇடத்தில்                                                                                                                                                                                                     பேசியதுதானே சகோதரர்களே!


        சகோ.ஹைதர் அலி அவர்களை நான் தரக்குறைவாகவும், இழிவாகவும் எவனிடத்தில் பேசினேன்? பேசியது தொடர்பாக என்னை ஏன் விசாரணை செய்யவில்லை.  விசாரிக்காமலேயே 13 ஆண்டுகாலம் உழைத்தவனை அடிப்படை உறுப்பினர் பொருப்பிலிருந்து நீக்கம் செய்திடும் அதிகாரத்தை தலைமை நிர்வாக குழுவுக்கு யார் கொடுத்தது? இப்படி விசாரிக்காமலேயே யாரை வேண்டுமானாலும் நீக்கம் செய்யலாம் என்கிற உரிமையை செயற்குழு பொதுக்குழு இவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதா?

        தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களே!  எல்லாம் சிலகாலம் தான்.  இதேநிலை உங்களில் எவருக்கும் வரலாம்.  அல்லாஹ்வை மறந்து ஆட்டம்  போடாதீர்கள்!

        சரி!  நான் கேட்கிறேன்!

சகோ.ஹைதர் அலி அவர்கள், பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களை பலநேரங்களில் பொதுஇடத்தில் தரம் தாழ்த்தி விமர்சித்திருக்கிறார்களே!
அவருக்கு என்ன தண்டனை?

    மௌலவி J.S.ரிபாயி, தமிமுன்அன்சாரி, P.அப்துல் சமது ஆகியோரைப்பற்றியும், என்னைப்பற்றியும் தரம் தாழ்ந்து ஹைதர் அலி அவர்கள் கடுமையாக பலரிடத்தில் விமர்சித்திருக்கிறாரே?  அதற்கு என்ன தண்டனை?

சகோ.ஹைதர் அலி அவர்களை வாரிய பொறுப்பு ஏற்ற நாள்முதல் இன்றுவரை கடுமையாகவும், மிக, மிக இழிவாகவும், கேவலப்படுத்தி, என்னிடத்திலும், என்னைப் போல் பலரிடத்திலும் பேசியுள்ள கோவை செய்யது மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

        மிகச் சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகியிடத்திலும், என்னிடத்திலும் பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களை மிக, மிக கொச்சைப்படுத்தி கேவலமாக விமர்சனம் செய்த கோவை செய்யது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

சரி, . . .

    நான் ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாக விமர்சித்தேன் என்பதை ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும் நான் மட்டுமா அவரை பேசினேன்?

       ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாகவும், மிக, மிக கேவலமாகவும், இன்னும் ' உளவுத் துறையின் கைக்கூலி' என்றெல்லாம் விமர்சித்தவர்கள் தலைமை நிர்வாக குழுவில் அங்கம்வகிக்கும் மாநில நிர்வாகிகள் தானே?

  அவர்களுக்கு என்ன  தண்டனை  சகோதரர்களே!

        என்னுடைய 13 ஆண்டுகால உழைப்பினாலும், வளர்க்கப்பட்ட  அமைப்பு என்பதால் பல ரகசியங்களை வெளியிடாமல் பாதுகாத்து வருகின்றேன்.  மாநில நிர்வாகிகள், என் மீது எல்லை மீறும்போது நானும் எல்லை மீறுவேன் என்பதை இப்போதைக்கு சொல்லி           வைக்கின்றேன்.

           என் அன்பு சகோதரர்களே!  நான் இப்போது நீங்கள் அங்கம் வகிக்கும் இயக்கத்தில் இல்லை.  எனது இரத்தத்தை உறிஞ்சிய, எனது இளமையை அபகரித்துவிட்டு, 13 ஆண்டுகால எனது இயக்கப் பணியையும் பயன்படுத்திக் கொண்டு இன்று என் மீது அவதூறு பரப்பும் தலைமை நிர்வாகிகள் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி) மீது நிச்சயம் மறுமையில் வல்ல இறைவனிடம் வழக்கு தொடருவேன்.  எனது உடல் பலவீனத்தையும் மறந்து இரவு பகல் பாராமல் உழைத்;த உண்மைத் தொண்டனை விசாரணை எதுவும் இன்றி அநியாயமாக பழிபோடும் அனைத்து தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களும் அல்லாஹ்விடம் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.

        என் அன்பு சகோதரர்களே!  நான் இப்போது உங்களுக்கு அறவே பிடிக்காத ஒரு இயக்கத்தில் சேர்ந்துவிட்ட ஆத்திரத்தில் இருப்பீர்;கள்.  இருப்பினும் உங்களுடன் 13 ஆண்டுகாலம் பணியாற்றியவன் என்கிற முறையில் ஒரே ஒரு கோரிக்கை மட்டும்வைக்கின்றேன்.

சகோதரர்களே!  தன்னுடைய சுயநலத்திற்காக சகோ.ஹைதர் அலி அவர்களோடு என்னைப்போல பலரையும் பகடை காயாக்கி, மோதச் செய்துவிட்டு இன்றைக்கு எதிர்வரும் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்காக ளு.ஹைதர் அலி அவர்களோடு நேசக்கரம் நீட்டுவதற்கு உண்மையை குழிதோண்டி புதைத்துவிட்டு என்னைப் போல் பலரையும் அவமானப்பட செய்த பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் வார்த்தை ஜாலத்தையும், கபட நாடகத்தையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.  தான் நினைக்கும் காரியம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் பலிகடாவாக்க தயங்கவே மாட்டார் பேரா.ஜவாஹிருல்லாஹ்.  தான் நினைத்தால் சகோ.ஹைதர் அலி அவர்களுடன் கூட்டு!  நினைக்கவில்லை என்றால் வேட்டு! என்ன கொடுமை பாருங்கள்! மாநில நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதவி சுகத்திற்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணிபவர்களாகவே உள்ளனர். இப்போதைக்கு அவர்களுக்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்த திருப்தியில் உள்ளனர்.  தேர்தலுக்கு பின் மோதல் ஆரம்பமாகும்.  என்னைப்போல் பலர் அப்போது அவர்களுக்கு தேவைப்படும்!  நிச்சயம் என்னைப் போல் ஏமாளிகள் ஜவாஹிருல்லாஹ்,P.அப்துல் சமதுவுக்கு கிடைப்பார்கள்.


எனவே தூய உள்ளங்களே!  அன்பு மாவட்ட நிர்வாகிகளே!  மாநில செயற்குழு உறுப்பினர்களே! நம்பிவிடாதீர்கள், மோசம் போய்விடாதீர்கள்!  என்பதை மட்டும் அறிவுரையாக இல்லாமல், கோரிக்கையாக பாசத்துடன் உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.  எனவே தலைமையை மாற்ற முயற்சியுங்கள்!

 எதையும் தீர விசாரியுங்கள்!  ஆய்வு செய்யுங்கள்!  கேள்விப்படுவதை எல்லாம் நம்பி விடாதீர்கள்.  எல்லாம் வல்ல இறைவன் நாம் ஆற்றும் அனைத்து நற்பணிகளுக்கும் உயரிய கூலி வழங்கிட போதுமானவன்.  மறுமையில் இறைவனின் கடும் பிடியிலிருந்து தப்பிக்க உண்மை மட்டும் பேசுவோம்!

                  வஸ்ஸலாம்.

                                           இப்படிக்கு,
                                   (S.செய்யது அலி)
                      முன்னாள் மாவட்ட செயலாளர்,
                            மனித நேய மக்கள் கட்சி,
                             நெல்லை மாவட்டம்,
                    முன்னாள் தலைமை கழக பேச்சாளர்.
     முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர்.

மமகவுக்கு பல்லக்கு தூக்கும் மாமா(மாசற்ற(?) மாணிக்கங்கள்)க்கள்

சமுதாயத்தின் மானம் காக்கப் போகிறோம் என சொல்லி நன்றாக கவனிக்கவும் சமுதாயத்தின் மானம் காக்கப்போகிறோம் என்று மட்டும் சொல்லி தமிழக அரசியலில் எங்களின் பிரதிநிதித்துவத்தை அடைந்தே தீரூவோம் என்ற ஒரே நோக்கத்திற்காக கவனிக்கவும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மனித நேயமிக்க மக்கள் கட்சி இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களுக்கு தன் தொண்டர்களை அடகுவைத்து சமுதாயத்தினர் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் என‌ பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவது அறிந்த ஒரு செய்திதான். சாதாரணமாக முஸ்லீம்லீக்தேசியலீக் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் சாதாரணமாக பெற்றுவந்த 5 சீட்டுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு மற்ற ஒரு மூன்றாவது நபரை வெற்றியடைய வைப்பதற்காக முக்கியமாக தாங்கள் மட்டும் எப்படியாவது எம்மெல்லே ஆகிவிடவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக வந்த வரை லாபம் என மூன்று சீட்டுக்களை எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி மற்ற கட்சிகள் சாதாரணமாக நடத்தும் இழுபறி பேச்சுவார்த்தைகள் கூட இல்லாமல் எனக்கு ஒன்னு உனக்கு ஒன்னு என்ற ரீதியில் 3 சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இஸ்லாமிய மானத்தை காத்தில் பறக்கவிட்டு பல் தெறிக்க சிரிக்கிறார் பேராச்சிரியர்.



இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக சமுதாயத்தை அடகு வைத்து 3 சீட்டு வாங்கி வந்திருக்கும் வைகைப் புயல்களை  ஊரே காரித்துப்பினாலும் அவர்களுக்கு சாமரம் வீசும் மன்னன் ஜமாத் மட்டும் அவர்களுக்கு ஆதரவாக பச்சை கொடி  பிடித்து இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அதிலும் மன்னன் ஜமாத் அவர்களுக்கு ஆதரவாக  வைக்கும் வாதத்தை நினைக்கும் போது சிரிப்பாகத்தான் வருகிறது. அதாவது வைகோ "கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 35தொகுதிகள் பெற்றாராம். இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 6தொகுதிகள் பெறவேண்டுமாம். ஆனால் 2009நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளைத் தான் பெற்றாராம். அப்படியாயின் மதிமுக மானமிழந்து விட்டதா? என அற்புதமான‌ வாதத்தை வைத்திருக்கிறார் மன்னன் ஜமாத்தின் அடிப்பொடி ஒருவர்.\

      நாம் அவர்களிடம் கேட்கிற கேள்வி! ஏம்பா! உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையாகொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லையாவைகோவும் சரி,காங்கிரஸூம் சரிஅவர்கள் யாரும் சமுதாய மானம் காக்க போகிறேன் என புறப்படவில்லை. அவர்கள் அவர்களின் கட்சிகளுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகள். அதுமட்டுமில்லாமல் வைகோ 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வைகோ 35 தொகுதிகளை ஏற்றுக்கொண்டார் ,அதேபோல 2009தேர்தலில் 4 தொகுதிகளை ஏற்றுக்கொண்டார். ஆனால் சமுதாய மானம் காக்க வீறுகொண்டு எழுந்த வெற்றி வீரர்கள் ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டார்களாஇல்லையே! ஒரு தொகுதி கலாச்சாரத்தை ஒழிக்கத்தானய்யா அவர்கள் புயலென புறப்பட்டார்கள். கருணாநிதியால் இழிவுபடுத்தப்பட்டு கடைசியாக 4 தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார்கள் . அந்தக் கணக்குப்படி அதாவது நீங்கள் எடுத்து வைக்கும் வைகோவின் தியரிப்படி 35 க்கு6 என்ற வீதம் வரும். ஆனால் அவரோ 4 ஐப் பெற்றுக்கொண்டார். அதாவது நாடாளுமன்ற வீதம் 24 க்கு 4 வரும்


அந்த மாதிரி இன்றைக்கு நீங்கள் சத்தமில்லாமல் சாமரம் வீசும் மேற்படி சமுதாய தலைவர்கள் 4 கணக்குக்கு 4 X 6= 24 பெற்றிருக்க வேண்டும். அல்லது நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கும் வைகோ தியரிப்படி 2 X 6=12ஆவது பெற்றிருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட்டால் போதும் என்ற வேகத்தில் வெறும் 3சீட்டுக்களை வாங்கி வந்து வந்திருக்கிறார். அதை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவங்களுக்கு இப்படி மாப்பிள்ளை விசிறி வீசுறீங்களே! நியாயமாஇப்ப நாங்க ஏதாவது புதுப்பாயிண்ட வச்சமாநீங்க சொல்லியிருக்கிற மொக்கைப் பாயிண்டில் இருந்து தான் வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எப்படியாவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைத் தாக்கவும்பிஜேவை தாக்கவும் யார் தயாராக வந்தாலும் அவர்களுக்கு வால்பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள்வோம் என்ற கொள்கையில் இருந்தால் இப்படித்தான் சில நேரங்களில் சிந்தனை பல்பு எரியாது.

மமகவை மண்ணைக் கவ்வ வைப்போம்என்று சமுதாய உணவோடு(அது சமுதாய உணவு இல்லை. உணர்வு..ஸ்பெல்லிங் மிஸ்டேக்)சொல்லக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணைக் கவ்வ வைப்போம் என்று 'மனுநீதி'யையும் தாண்டிய வெறியோடு தீர்மானம் போடும் இவர்களுக்குமமக மூன்று சீட்டு வாங்கினால் என்ன?முப்பது சீட்டு வாங்கினால் என்ன? என்று என்று கேட்கும் சிந்தனையை அடகுவைத்து விட்ட சகோதர்களே!! ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்து மானங்கெட்டுப் போய் மதியிழந்து நிற்கும் அவர்களைத் தட்டிக்கேட்க எங்களுக்கு மட்டுமல்ல! சமுதாயத்தின் ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கஅவர்களிடம் லாபம் எதிர்பார்த்து நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு நிற்பவர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.

'தமது கட்சி வேட்பாளர்களில் 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கே ஆதரவுஎன்று கூட்டணி 'டிமான்ட்வைக்கத் தயாராஇவ்வாறு செய்தால் நீங்கள் இடஒதுக்கீடு பெறாமலேயே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை சட்டமன்றத்தில் ஏற்படுத்தி விடலாமே!
சே! என்ன ஒரு வாதம்! கொள்கை தான் இல்ல அட்லீஸ்ட் நிர்வாக அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும் என எதிர்பார்த்தோம். முதலில் ஒருவனுக்கு கொடுக்கும் சக்தி இருந்தால் தான் அவனிடம் சென்று கேட்பவன் அதைப் பெற முடியும். பிச்சை போடவே வழியில்லாதவன்கிட்ட போயி பிரியாணி வாங்கிக்கேட்ட கதயா இருக்குது மன்னன் ஜமாத்தின் வாதம். காலங்காலமாக இஸ்லாமியர்களுக்கு வாரியமும் போர்வையும் போர்த்தி வந்த அரசியல்வாதிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின் சீரிய போராட்டங்களினால் (பழைய போராட்டங்கள் உள்பட) நொந்து போய் இனிமேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என அள்ளிப்போடாமல் கொஞ்சமாக கிள்ளிப்போட்டிருக்கிறார்கள் . மெதுவாகத்தானே வாங்க முடியும். இதுக்கு துப்பு இல்லாமத் தானே நீங்க டெல்லிக்கு சலோ! டெல்லிக்கு சலோ! என்ற ரீதியில் போனீங்க. இதப்பத்தி கேக்க உங்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?
மேற்கண்டவை எங்கள் கருத்து அல்ல. ததஜவின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கனிமொழி எம்.பி அவர்களின் மூலமாக ததஜ நிர்வாகிகளை அழைத்து எப்படி கேட்கிறீர்கள் இட ஒதுக்கீடு எனக்கேட்டுததஜ நிர்வாகிகள் தந்த திட்டத்தின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு 3.5% வழங்கப்பட்டது. இப்பட்டியே படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கிடைக்கும் என தமுமுகவினரை அன்றைக்கு எதிர்த்து தென்சென்னை சார்பாக ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் உங்கள் தலைவர் பாக்கர் பேசியது தான்.
இட ஒதுக்கீட்டுக்கே இப்படி என்றால் அப்ப நீங்க கேட்ட கேள்விக்கு?ஆக நீங்கள் வைக்கும் முட்டாள் தனமான வாதத்திற்கு உங்கள் தலைவரே அன்றைக்கு பதில் கொடுத்து விட்டார். ஓசியிலே இண்டெர் நெட் கிடைக்கிறது என்பதற்காக உக்காந்து உக்காந்து யோசிச்சி இப்படி கந்தலான கழுசடை வாதங்களை எழுதி வாங்கிக்கட்டிக் கொள்வதற்கு பதிலாக வேறு ஏதாவது நல்ல வேலை செய்யலாமே!
    

மார்க்க சந்தேங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

ஆண்களுக்கு..
 அப்துந் நாசிர்       =          +91 9865584000
அப்துல் கரீம்        =          +91 9003225959
எம்.எஸ். சுலைமான்.= +91 9840743337
பெண்களுக்கு..
                                      +91 9940652566
உங்கள் மார்க்க சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்களை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளவும்

சனி

கோவை மாவட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக தங்களின் தேர்தல் நிலைபாட்டினை விளக்கும் விதமாக வைக்கப்பட்டு உள்ள பேனர்(FLEX

கோவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு

சமுதாய கோரிக்கையை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு  5% இடஒதுக்கீடு  தரும் கூட்டணிக்கே ஆதரவு என்று TNTJ அறிவித்த பொதுக்குழு முடிவை ஆதரிக்கிறோம்.
சமூக சிந்தனையுடன், சமுதாய முன்னேற்றத்துக்காக TNTJ எடுக்கும் மார்க்க மற்றும் அரசியல் முடிவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரிப்போம்.