தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:-அமெரிக்க CRS அறிக்கை.!

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர்.ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.

புதன்

RSS-ன் கைக்கூலி என தன்னை மீண்டும் நிருபித்த அன்னா ஹசாரே!


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்னா ஹசாரே, போராட்டமெல்லாம் முடித்து சொந்த ஊரில்ஓய்வெடுத்தவர், திடீரென கிளம்பினார். “காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற லஞ்சம் வாங்கியவர்களை தூக்கிலிடவேண்டும் ” என அதிரடியார் அறிக்கைவிட்டார். ஆனால் அமர்சிங் கைதான அதே வாரத்தில் பல ஆயிரம் கோடி சுரங்கஊழல் வழக்கில் கைதான பீஜேபியின் ரெட்டியை பற்றி வாயை கூட திறக்கவில்லை...

காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற எம்பிகள் வாங்கிய லஞ்சமோ சில கோடிகள். அதைவிட பல ஆயிரம் கோடி மடங்குசுரங்க ஊழலில் ஈடுபட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்த பீஜேபியின் ரெட்டியை தூக்கில் போடவேண்டும் என ஏன் அன்னா ஹசாரே சொல்லவில்லை , குறைந்த பட்சம் அவர்களுக்கு எதிராக கண்டனம் கூடதெரிவிக்கவில்லை.

செவ்வாய்

குரங்கு -> நியாண்டர்தல் -> மனிதன்?


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

   கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - II

குரங்கு -> நியாண்டர்தல் (Neandertals or Neanderthals) -> மனிதன்? 

இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். "நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றல்லவா படித்ததாக நினைவிருக்கின்றது, அவர்கள் நமக்கு முன்னோர்கள் இல்லையா, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.

திங்கள்

நபிகளாரின் நற்குணங்கள்!

கண்ணியமிகு ஒழுக்கங்களையும் உயர்ந்த நாகரீகங்களையும் கற்றுத்தரும் கருணையாளனாகிய அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்...

 நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக! (முஹம்மதே) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் (அல்குர்ஆன் 68 : 1-4)

 நபி(ஸல்) அவர்கள் முழுமைப் பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்...

வியாழன்

தவ்ஹீத்வாதிகளே...!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது.

இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் காசுகள் ஒன்று திரட்டப்பட்டு பெரும் பெரும் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
ஒன்றுமே இல்லாமல் இருந்த போது இருந்த கொள்கைப் பிடிப்பு பெரும் பெரும் சொத்துக்களைப் பார்த்தவுடன் சிலரது உள்ளங்களை இன்றைக்கு சறுகச் செய்துள்ளது. சத்தியத்தைப் போதிக்க வேண்டும்இணை வைப்பை ஒழிக்க வேண்டும்அனாச்சாரங்களை அழிக்க வேண்டும் என்று பேசிய நாவுகளில் சில இன்று ஊர் வாதம் பேசத் துவங்கியுள்ளது. கொள்கையில் சறுகத் துவங்கியுள்ளது. கொள்கைவாதிகளை வீழ்த்திட கொடுமைவாதிகளோடும் கைகோர்க்கத் தயங்கவில்லை அவர்கள்.
இத்தகைய ஷைத்தானிய சக்திகளிடமிருந்து கொள்கைவாதிகளை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். தவ்ஹீத் சொந்தங்கள் தங்களுக்கு மத்தியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்...
சகோதரா! இது குருதி உறவல்ல. இவ்வுலகோடு முடிந்து போவதற்கு! மாறாக இது இறப்பிற்குப் பிறகும் தொடரும் கொள்கை உறவு. நம்மை பிளவுபடுத்தத் தான் எத்தனை எத்தனை ஷைத்தானின் சதிவலைகள்அவதூறுகள், விமர்சனங்கள். நம்மை பிளவு படுத்துவதன் மூலம் நம் கொள்கையை நசுக்கிவிடலாம் என நாசக்காரன் நினைக்கின்றான்.
ஆனால் நம்முடைய அழகிய முன்மாதிரிநம் உயிரினும் மேலான நாயகத்தின் வழிகாட்டல்கள் நம்மோடு இருந்தால் நம்மை யார் தான் பிரித்திட இயலும். இதோ நாயகத்தின் வழிகாட்டல்களில் நம் உள்ளங்களை லயிக்கச் செய்வோம். அதில்தான் நம் எதிர்கால வெற்றி கனியவிருக்கிறது.
கொள்கை உறவு ஒரு கட்டிடம். சிறு மழை வெள்ளத்தில் சரியக்கூடிய கட்டிடமல்ல. புயலடித்தாலும் பூமியே நடுங்கினாலும் தளராத கட்டிடம்.  இதோ நம் கொள்கைத் தலைவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள்  ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள். (நூல்: புகாரி 481)
நம் கொள்கை உறவு வெறும் பேச்சோடுபுன் சிரிப்போடு முடிந்து விடக்கூடியதல்ல. இது உயிரோடும். உள்ளத்தோடும் கலந்த உறவு. இதோ நம் வழிகாட்டி நன்குரைப்பதைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும்அன்பு செலுத்துவதிலும்இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உட-ன்) ஓர் உறுப்பு சுகவீனம டைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ர-)நூல்: புகாரி 6011
நாம் ஓரிறையையும். இறைத்தூதர் நெறியையும் உண்மையில் பிசகற அறிந்த இறை நம்பிக்கையாளர்கள் என்றால்,நம் கொள்கைச் சகோதரனை தன்னைப் போல் பாவிக்க வேண்டும் என நம் தலைவர் நமக்கு வழிகாட்டுவதைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர்:  அனஸ் (ரலி)நூல்: புகாரி 13
இந்த நேசம் என்பது காசுக்காகவோசுய லாபத்திற்காகவோஉலக ஆதாயத்திற்காகவோ ஏற்பட்ட நேசமல்ல. மாறாக கொள்கைச் சகோதரன் என்பதால் ஏற்பட்ட நேசம். எங்கள் இணைவும்பிரிவும் ஏகத்துவத்திற்காகவேஏகனுக்காகவே என்பதைப் பறைசாற்றும் நேசம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ்அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று அந்த வானவர் கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லைஎனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 5016
நம் கொள்கைக் கட்டிடம் சரிந்திடாமல் காப்பதற்காக அதன் இரும்புக் கம்பிகளாய்கான்கிரீட் கலவையாய்,கற்பாறையாய் நமக்குள் மலர வேண்டியது நேசம். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதென்பது போல் அற்பமென்றாலும் அன்பைத் தருமென்றால் அம்முறையே நம் சகோதரர்களின் சுவாசமாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)நூல்:  முஸ்லிம்
கொள்கையில் ஒன்றான நாம் ஓர் உடலென்றால் நம் விரலே நம் கண்ணைக் குத்தலாகுமாநம் பற்களே நமது நாவை பதம் பார்க்கலாமாகூடாது. நம் உடலிற்குள் எந்த விஷக்கிருமியும் நுழைந்து விடக்கூடாது. நாமே நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. நம் கிளைகள் முறிந்து விடக்கூடாது. இதுதான் நம் ஏகத்துவ மார்க்கத்தில் தலையாயது. இதோ நம் நேசர் விடையளிப்பதைப் பாருங்கள்.
மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எதுஅல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்;அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும்''
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)நூல்: புகாரி 48
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அது போல் கொள்கைக் குடும்பத்திற்குள்ளும் சில சறுகல்கள் தோன்றக்கூடும். அதில் நாம் சறுகிவிடக் கூடாது. நம் ஆணிவேரான கொள்கை அறுந்து விடக்கூடாது. நம் பிடிமானம் நம் கொள்கை உறவே. அதில் நம் பிடி தளர்ந்திடலாமாதீயில் எரித்தாலும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் என்பார்கள். அது கற்பனையென்றாலும் நம் கொள்கையுறவில் அது உண்மையாகட்டும்.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49:9, 10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில்யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர் தான்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி)நூல்: முஸ்லிம் 5003
நம் ஏகத்துவப் பூந்தோட்டத்தை நாசமாக்கும் எந்தக் களைகளும் முளைத்து விடக்கூடாது. களைகள் வளர்ந்தால் நம் மலர்த்தோட்டமே மணமற்றுப் போய்விடும். இறையச்சம் எனும் உரம் தான் களைகளை வேரறுக்கும் பூச்சிக் கொல்லியாகும். நம் கொள்கைத் தோட்டத்தின் செழிப்பிற்கு அடிப்படையாய் இறையச்சம் திகழ வேண்டும். இதோ இறுதித்தூதின் இறைச் செய்தி இயம்புவதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாராஅதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன். 
அல்குர்ஆன் 49:11, 12
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோஅவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாகஉங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான் இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர்பொருள்மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 5010
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்-ம் மற்றொரு முஸ்-மின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர-)நூல்: புகாரி 6951
நம் சகோதரன் நமக்கு அநீதி இழைத்தாலும் நாம் அவருக்கு உதவியே செய்ய வேண்டும். உதவி என்பது கொட்டக் கொட்ட குனிவதல்ல. மாறாக அநியாயக்காரனின் கரம் பிடித்து அவனை நம் வழிக்கு வரவழைப்பது தானே தவிர அவனைப் பகைப்பதல்ல. அது நம் நோக்கமுமல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்கூறுங்கள்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 
நூல்: புகாரி 6952
தியாகத் திருநாளின்போது உரையாற்றிய நம் இறுதித் தூதின் இறுதியுரையில் நாம் படிப்பினை பெறுவோம். இனிவரும் காலம் நம் வசந்த காலமாக வேண்டும். இனி தென்றல் தான் தவழ வேண்டும். நம் கொள்கைச் சகோதரர்கள் ஓர் உடலாகஒரு கூட்டுக் கிளிகளாக என்றும் வலம் வர சபதமேற்போம்.
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்என்றோம். நபி (ஸல்) அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில்இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோஅந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) 
நூல்: புகாரி 67
நன்றி: ஏகத்துவம்
 

திங்கள்

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

                                                 
நண்பர்களே,
திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம்.
கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.
மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.
இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்
                                                                                              நன்றி;வினவு