தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

ஞாயிறு விடுமுறை கிறித்தவ கலாச்சாரமா


ஞாயிறு விடுமுறை அளிப்பது பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதாக ஆகாதா?
எம்.ஜமால்
திருத்துறைபூண்டி, திருவாரூர்
? ஆறு நாட்கள் வேலை பார்த்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுப்பது தான் வார விடுமுறையின் நோக்கம்.
ஆனால் உலகை ஆளும் கனவுடன் புறப்பட்ட பிரிட்டிஷாரும், பிரஞ்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே கிறித்தவர்களாகவும் கிறித்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவதைக் கொள்கையாகக் கொண்டவர்களாகவும் இருந்ததால் சர்ச்சில் வழிபாடு நடத்துவதற்காக ஞாயிற்றுக் கிழமையை விடுமுறை நாளாக தங்கள் நாடுகளில் மட்டுமின்றி தாங்கள் கைப்பற்றிக் கொண்ட நாடுகளிலும் திணித்து விட்டனர்.
எப்படி ஆங்கில மொழியைத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் திணித்தார்களோ அது போல் இதையும் செய்தனர்.
இருநூறு முன்னூறு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் இதற்குப் பழகி விட்டதால் அதுவே நீடித்து வருகிறது.
வழிபாட்டுக்குரிய நாள் என்பதற்காக அவர்கள் ஞாயிறு விடுமுறையை ஏற்படுத்தினாலும்,  கிறித்தவர்கள் அல்லாத மக்கள் அதை வெறும் விடுமுறை நாளாக மட்டுமே கருதுகின்றனர். மத அடிப்படையில் அது கடவுள் ஓய்வு எடுத்த நாள் என்று கிறித்தவர்கள் நம்புவது போல் மற்றவர்கள் நம்புவதில்லை.
ஆனால் விடுமுறை நாளை மாற்றுவதில் அரசின் நிலைப்பாடும் ஒத்து வந்தால் தான் அதில் பயன் இருக்கும். நாம் மட்டும் நம் இஷ்டப்படி விடுமுறை அளிப்பதால் நமக்கு நஷ்டங்கள் தான் ஏற்படும். ஞாயிறு விடுமுறை என்பது அரசின் முடிவாகவும் உள்ளதால் அன்று நாம் மட்டும் போய் பூட்டிக்கிடக்கும் அரசு அலுவகத்தை நமது தேவைக்காக அணுக முடியாது.
அனைத்து மக்களும் ஞாயிறு விடுமுறை என்பதற்குப் பழகி விட்டதால் ஞாயிறன்று நாம் கடை திறந்தால் மக்கள் வர மாட்டார்கள். மக்கள் கூடும் நாட்களில் நாம் மட்டும் விடுமுறை அளித்தால் நமது வியாபாரத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அரசாங்கம் தான் இது போன்ற மாற்றங்களைச் செய்ய முடியும். தனி மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
சவூதி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ஞாயிறு விடுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. வெள்ளிக்கிழமை தான் அங்கே விடுமுறை விடப்படுகிறது.
அது போல் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல ஊர்களில் ஜும்மா தொழுகையைக் கவனத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகின்றது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் சிலவும் இவ்வாறு செய்து வருகின்றனர்.
இது போல் சாத்தியமான போது வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கலாம். நாம் மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால் அதில் ஒரு பயனும் இல்லை என்றால் அப்போது ஞாயிறு விடுமுறை அளிப்பது தவறில்லை. ஆறு நாட்கள் வேலை பார்த்து விட்டு ஒரு நாள் நமக்கு அளிக்கப்படும் ஓய்வு என்று மட்டுமே நாம் கருதுவதால் மார்க்க அடிப்படையில் நம்மீது குற்றம் வராது.
உணர்வு 16:24