தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்!

மாயன் நாட்காட்டியின் அடிப்படையில் கடந்த 21-12-2012 அன்று உலகம் அழியும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஊடகங்களிலும் இது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில்இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை துண்டு பிரசுரங்கள் விநியோகம் சுவரொட்டிகள் மூலம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி,    துண்டு பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத்விநாயகர் சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகளை கைது செய்யவேண்டும் என பிரசுரம்  வெளியிட்டனர்.

மேலும்  விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில்காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை  கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர்  ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

திருவல்லிக்கேணி  காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர்  கைது செய்து  வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்  தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்