* சின்ன விஷயத்திற்கு கூட கோபப்படுகிறேன். கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? கோபம் எதனால் ஏற்படுகின்றது?
- லியாகத் அலி, மேலக்கோட்டை ராம்நாடு
?மனிதனுக்கு இறைவன் கொடுத்த இயற்கை குணத்தில் கோபமும் ஒன்றாகும். நபிமார்களும் கூட பல சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டுள்ளதால் கோபத்தில் இருந்து முழுமையாக யாரும் விடுபட முடியாது. கோபங்களால் நன்மைகளும் விளைகின்றன. சமுதாயத்தில் தீமைகள் நடக்கும் போது அதில் கோபம் ஏற்பட்டவர்கள் தான் எதிர்த்து களம் இறங்குவார்கள். அநியாயத்துக்கு எதிராக உயிரைத் தியாகம் செய்ய முன் வருவதற்கும் கோப உணர்வு தான் காரணம். தீயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், மனைவி மக்கள் தவறு செய்யும் போது கண்டிப்பதற்கும் கூட கோபம் தான் காரணம். கோபம் கொள்ளாதவர்கள் எந்த சீர்திருத்தப் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். ஒருபாதி நன்மை
என்றாலும் இன்னும் பாதிக் கோபம் அர்த்தமற்றதாகவும் பிறருக்கு அநீதி இழைப்பதாகவும் உள்ளது. அது போல் கோப உணர்ச்சி எல்லை மீறும் போதும் பாதிப்பு ஏற்படுகிறது.கோபம் ஏற்படும் போது அதைக் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது. அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம் (விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்) எனக் கூறினால் உடனே அந்தக் கோபம் அடங்கிவிடும். இது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழியாகும். பார்க்க புகாரி 6115
உணர்வு 16:9
உணர்வு 16:9