எஜமானியைப் பெற்றெடுக்கும் தாய்
ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களுள் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : புகாரி 4777
மேற்கண்ட ஹதீஸுக்கு நாம் கீழ்க்கண்ட வகையில் விளக்கம் கொடுத்து வருகின்றோம்.
பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும்.
எஜமான்னை ஒருத்தி பெற்றெடுப்பாள் என்பதை இன்றைய நவீன உலகம் வேறுவகையில் நிரூபித்து வருகிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில், வாடகைத்தாய் முறை அதிகரித்து வருகின்றது. கணவனின் விந்தணுவையும், மனைவியின் கரு முட்டையையும், (IVF முறையில் ஒன்று சேர்த்து) வேறொரு வாடகைப் பெண்ணின் கருவறைக்குள் வைத்து கரு வளர்த்தெடுக்கப்படுகின்றது. அந்த வாடகைத் தாய்க்கு, அந்த 10 மாதங்களுக்கு மாதச் சம்பளமும், பெற்றெடுத்த பின் ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகின்றது. ஹிந்தி நடிகர் அமீர்கான் தம்பதியினருக்கு தற்போது அவ்வாறு குழந்தை பிறந்துள்ளது சமீபத்திய தகவல்.
அதாவது வயிற்றில் இருக்கும் குழந்தை சம்பளம் கொடுக்கும் எஜமானியாகவும் பெற்றவள் சம்பளம் வாங்குபவளாகவும் இருக்கிறாள். இந்த வகையிலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிப்பு பொருந்திப் போகிறது.
தகவல் பைசல் ரியாத்
தகவல் ஃபெய்ஸல், ரியாத்