

தனியார் பஸ்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை விட அதிகம் வசூலிப்பதாக பல புகார்கள் இருந்தாலும் யாரும் இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க முன் வராமலே இருந்தனர்.
மக்களிடம் அடாவடியாக தனியார் பஸ்கள் வசூல் செய்யும் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக தனியார் பஸ் உரிமையாளர்களிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
”நாங்கள் கட்டணங்களை குறைக்க முடியாது” என தனியா பஸ் உரிமையாளர் திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து உடனயாக கடந்த 19.2.2012 அன்று வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு இந்த கட்டணக் கொள்ளை குறித்து புகார் அளிக்கப்பட்டது.

அவர்கள் கூறியபடி கடந்த 10.3.2012 அன்று பஸ் கட்டணத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் குறைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
தனியார் பஸ் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்