தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.

பி. ஜைனுல் ஆபிதீன்.
(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும்.)
புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள்ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள்தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)
ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும்உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.
அவ்லியாக்கள்மகான்கள்நாதாக்கள்பெரியார்கள்தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாதுஅல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.
இவ்வாறு நாம் கூறுவதால்நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம். அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும்அவ்லியாக்களின் சிறப்பை நாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றி அரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காக அவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
நிர்வாணச் சாமியார்.
அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம்ஷரீஅத்தரீகத்,ஹகீகத்மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகுமுரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.
அவ்லியாக்கள்ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.
இவர் எழுதிய தபகாத் நூல்அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளில் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.
அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமாஎன்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.
அஷ்ஷைகு இப்ராஹீம்.
அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள்.
(நூல்: தபகாத்பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த மகானின்(?) வழியில் ஜும்ஆ மேடைகளில்இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்ப்போமாக!)
இந்தப் பெரியார்பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார்.
(நூல்: தபகாத்பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: இவ்வளவு கீழ்த்தரமாக நடந்தவர் தான் இறைநேசச் செல்வர்களில் ஒருவராம். இங்குள்ள நிர்வாணச் சாமியார்களுக்குக் கூட இவர் தான் முன்மாதிரியாக இருக்கக் கூடும். இந்த நிர்வாணச் சாமியாருக்கு ஏற்பட்ட அற்புதத்தைக் கேளுங்கள்.)
இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன.
இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது,அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக,வெள்ளியாக அவை மாறும்.
(குறிப்பு: இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை. பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா,காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.)
அபூ கவ்தா.
அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோபருவமடையாச் சிறுவனையோ கண்டால்................................... அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும்மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள்மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.
(தபகாத்பாகம்: 2, பக்கம்: 149)
குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதை மொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா?
சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியாஇறை நேசச் செல்வன்இந்த அவ்லியா பக்தர்கள்ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?
ஸய்யித் அஹ்மத் அல்பதவீ.
எனது ஷைகு அவர்கள்ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத்தலத்தில் ஒரு உடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போது கப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள்கப்ரை நோக்கிஉங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க!என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்துசரி என்று அவர் கூறியதை நான் கேட்டேன்.
நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத்தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களையும் அழைத்தார். இங்கே இவளது கன்னித்தன்மையை நீக்கு என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.
(தபகாத்பதவீயின் வரலாறு)
குறிப்பு: கப்ரிலிருந்து வந்து ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமாஎன்பது ஒருபுறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையாஇப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமாஎன்பதே கேள்வி!
இந்த அவ்லியா பக்தர்கள்கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டிகொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!
ஸய்யித் அல் அஜமீ.
இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்த நாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்த நாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லா நாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரது உள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்...?
(தபகாத்பாகம்: 2, பக்கம்: 62)
குறிப்பு: யானைக்கும், கழுதைக்கும் கப்ரு கட்டியுள்ளவர்களே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.
நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாதுநாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்தியமாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.
இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் யார் மீது இவரது பார்வை படுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும்.
(தபகாத்பாகம்: 2, பக்கம்: 61)
குறிப்பு: கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்?என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு அபீ ஹம்ஸா.
நான் நபி (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.
(தபகாத்பாகம்: 1, பக்கம்: 15)
குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.
நபி (ஸல்) அவர்களைக் கனவிலும்நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்த உலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.
ஷஃபான் அல் மஜ்தூப்.
இப்பெரியார் ஜும்ஆ நாட்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளியில் இருந்து கொண்டு குர்ஆனில் இல்லாத புதிய அத்தியாயங்களை ஓதுவார். அதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பாமரன் அதுவும் குர்ஆன் தான் என்று எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவர் ஓதுவது குர்ஆன் போலவே இருக்கும்.
(தபகாத்பாகம்: 2, பக்கம்: 187)
மார்க்க அறிஞர்கள் வீடுகளுக்குச் சென்று குர்ஆன் ஓதுவது போல் இந்தப் பெரியார் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஓதினார். அவர் என்ன ஓதுகிறார் என்று செவிமடுத்தேன். வமாஅன்தும் ஃபீதஸ்தீகி ஹுதின் பிஸாதிகீன். வலகத் அர்ஸலல்லாஹுலனா கவ்மன். பில் முஃதபிகாதி யள்ரிபூனனா வயஃகுதூன அம்வாலனா மின் நாஸிரீன் என்று ஓதினார். (இது குர்ஆனில் இல்லாததாகும்.) இப்படி ஓதி விட்டுஇறைவாகண்ணியமிக்க வேதத்திலிருந்து ஓதிய நன்மையை... என்று துஆச் செய்தார்.
(தபகாத்பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: எள்ளளவு இறையச்சம் உள்ள எவரும் குர்ஆனுடன் எதையும் கலக்கத் துணிய மாட்டார். ஆனால் இந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்! இவருக்கும் பெயர் இறைநேசராம்!

இந்தப் பெரியார் முன்பகுதிபின்பகுதியை மறைக்கும் விதமாகக் கோவணமே கட்டியிருப்பார்.
(தபகாத்பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: ஆறேழு மீட்டர்களில் ஆள் மூழ்கிப் போகும் அளவுக்குத் துணியில் ஜிப்பாவும்குஞ்சான் வைத்த துருக்கி தொப்பியும் அணிய வேண்டிய அவசியம் இந்தப் பரேலவிகளுக்கு இல்லை. ஒட்டுக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு காசை மிச்சப்படுத்தலாம்.
இவை அவ்லியாக்களின் இலட்சணங்களில் சில பகுதிகளாகும். சுன்னத் வல்ஜமாஅத்தின் மிகப் பெரும் இமாமாக மதிக்கப்படும் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்களின் நூலில் காணப்படும் இந்த விஷயங்களைக் கவனிக்கும் போதுகடந்த காலங்களில் யாரெல்லாம் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள் என்பது விளங்க வரும்.
இந்த சுன்னத் ஜமாஅத்தினர்இந்த உயர்ந்த (?) பண்புடையவர்களை இன்றளவும் அவ்லியாக்கள் என்று நம்புகின்றனர். மவ்லிதுக் கிதாபுகளில் வரும் துஆக்களில் இவர்களின் பெயர்களும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் பொருட்டால் கேட்கப்படும் துஆக்களும் உள்ளன.
நியாய உணர்வும்சிந்திக்கும் திறனும்இஸ்லாத்தின் அடிப்படை பற்றி ஓரளவு அறிவும் இருக்கும் முஸ்லிம்களே! இந்தத் தன்மைகள் அவ்லியாக்களுடையது என்பதை நம்ப முடிகின்றதாசிந்தியுங்கள். இப்படித் தான் நம்மை ஏமாற்றியுள்ளனர் இந்த முல்லாக்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

500 இளநிலை விரிவுரையாளர்அரசு கல்லூரிகளில் நியமனம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 500 இளநிலை விரிவுரையாளர்களை மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 500 இளநிலை விரிவுரையாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில், 5 ஆண்டுகளுக்கு அவர்கள் பணிபுரிய வேண்டும். யு.ஜி.சி., விதிமுறைப்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படுவர்.வாரம் 12 மணி நேரம் இவர்கள் பணிபுரிய வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும், ஒதுக்கீட்டு முறை இதற்கும் பொருந்தும். ஐந்து ஆண்டுகள் பணி புரிந்ததும், கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுரைப்படி, காலமுறை ஊதியப்படி பணியமர்த்தப்படுவர்.

முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டுப்படி 17 நபர்களுக்கு இந்த பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது தகுதியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

வெள்ளி

ஊழலின் மூலத்தை எதிர்க்க மறுக்கும் ஊழல் எதிர்ப்பாளர்கள்



இதோ இந்தியாவின் அனைத்து மக்களின் பிரதிநிதிகள்' என்று இரண்டு தனி மனிதர்கள் கதாநாயகர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தனி மனிதர்கள் யார் என்பதே தமிழ் நாட்டுக்குத் தெரியாது. ஒருவர் கதர்குல்லாய் அணிந்திருக்கிறார் – பெயர் அன்னா அசாரே என்கிறார்கள். "பிரதமரே ஊழல் செய்தாலும் விடக் கூடாது; "லோக்பால்' என்ற அதிகாரம் கொண்ட அமைப்பை அமைத்தாலே ஊழல் ஒழிந்துவிடும்' என்கிறார்; ஊழல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்கிறார். தூக்குத் தண்டனையை காந்தியே எதிர்த்தவர்தான் என்பது, இந்த நவீன காந்திக்கு தெரியாமல் போய்விட்டது.


"உண்ணாவிரதம்' என்ற போராட்டத்தை அறிவித்தார், அவ்வளவுதான். பார்ப்பன தேசிய ஊடகங்கள் அவற்றை தேசியப் பிரச்சனையாகவே மாற்றின. சமரசம் பேச ஆட்சியாளர்கள் ஓடிவந்தார்கள். மணிப்பூர் மாநிலத்தில் கொடூரமான ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி, இரோம் ஷர்மிளா என்ற வீராங்கனை கடந்த 10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார். மருத்துவமனையில் அவரை அடைத்துவைத்து ராணுவம் வலுக்கட்டாயமாக அவருக்கு மூக்கின் வழியாக உணவைத் திணிக்கிறது. ஷர்மிளாவின் பட்டினிப் போராட்டத்தை – ஒரு செய்தியாகக்கூட இந்த ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்றதில்லை.

அன்னா அசாரேயின் உண்ணாவிரத மேடையில் காந்தி படத்தை காணவில்லை. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே வணங்கிய "பாரத மாதா' படம்தான் அலங் கரித்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்கள் – அசாரேயின் படைத்தளபதிகள். அசாரே வுக்கு மிகவும் பிடித்தது, குஜராத்தின் மோடி ஆட்சிதான்; அங்கேதான் நல்லாட்சி நடக்கிறது என்கிறார்.

முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த "குஜராத் ராஜபக்சே'யின் ஆட்சியில் – 17 ஆயிரம் கோடி ரூபாய் குளம் வெட்டும் ஊழல், 260 கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல், 600 கோடி ரூபாய் மீன் வளர்ப்பு திட்ட ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. கிராமங்களில் வறுமையின் கோராத்தாண்டவம்; மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு – அவர்கள் விரும்புகிற இடங்கள் தாராளமாக ஒதுக்கப்படுகின்றன; அங்கே 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது. அன்று மன்னர்கள் ஆட்சியில், இப்படித்தான் ஊர்கள் "தானமாக' (சதுர்வேதி மங்கலங்கள்) வழங்கப்பட்டன. அங்கே மன்னனின் எந்த வரி விதிப்பும் நடைமுறைக்கு வராது. அன்று சதுர்வேதி மங்கலங்கள்; இன்று அதற்குப் பெயர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

டாட்டாவின் "நா÷னா' கார் தயாரிப்புக்கு – உற்பத்தி செலவைவிட மோடி கூடுதல் மானியம் தருகிறார். நிலத்தைப் பறிகொடுத்த மக்கள், அரசிடமிருந்து இன்னும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று கதறுகிறார்கள். முஸ்லிம்கள் இனப்படுகொலை வழக்கில், மோடிக்கு "நீரோ மன்னர்' என்று பட்டம் சூட்டியது உச்ச நீதிமன்றம் (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்தவன் நீரோ). இதே நரேந்திர மோடி குஜராத்தில் "லோக் அயுக்தா' என்ற ஊழல் மீட்புக் குழுவை அமைக்க மறுத்து விட்டார் என்பது அசாரேவுக்கு தெரியாதுபோலும். ஊழலுக்காக உயிர் விடவும் தயாரான அசாரே, மராட்டியத்தில் தனது சொந்த கிராமத்தில் செயல்படுத்தி வரும் நல்வாழ்வுத் திட்டங்களில், சாதிப் பாகுபாடுகளை கைவிடத் தயாராக இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார், மதச்சார்பற்ற எழுத்தாளர் ராம்புனியானி.

கதாநாயகனாகக் களமிறக்கப்பட்டுள்ள மற்றொரு ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்'. பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இதுவரை இயக்கம் நடத்தியவர். இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார். காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு; ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது சாம்ராஜ்யம்.

"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும், இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க., பார்ப்பன இந்துத்துவ சக்திகள் புடை சூழ "ராம்லீலா' மைதானத்தில் இவர் "உண்ணாவிரத'த்தைத் தொடங்கினார். ஊழல் அரக்கனாக – 10 தலை ராவணன் உருவத்தை அமைத்து, "ராம ராஜ்ய' பெருமையைப் பறை சாற்றினார்கள்.

ஊழல் ஒழிப்பு பேரார்வம், திடீரென்று இவர்களிடம் பெருக்கெடுத்து ஓடியது ஏன்? காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக காமன் வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்; 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. பாரதிய ஜனதா, இந்த உணர்வுகளை அறுவடை செய்ய திட்டமிட்டது. அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானிகளின் துடிப்பு.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள்.

பா.ஜ.க. பரிவாரங்களின் இந்த சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டது. அன்னா அசாரே உண்ணாவிரதத்தைத் தொடங்கியவுடன் – அவரிடம் சமரசம் பேச காங்கிரஸ் ஓடியது. அவரது பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தது. பாபாராம்தேவை சரிகட்டுவதற்கு, நான்கு மத்திய அமைச்சர்கள் ஓடினார்கள்! ஆனால், காங்கிரசுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்தியாவின் பிரதமரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, ராம்தேவின் கோரிக்கைகளில் ஒன்று. கடந்த காலங்களில் பாரதிய ஜனதா முன்மொழிந்த கோரிக்கைதான் இது. நாட்டின் 125 கோடி மக்கள் தொடர்பான ஒரு பிரச்சனையில், ஒரு "யோகா மாஸ்டர்' முடிவெடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக் கொண்டு விட்டார். அம்பேத்கர் போராடிப் பெற்ற – இரட்டை வாக்குரிமைக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரத சண்டித்தனத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

ஊழல் – பதுக்கல் பணத்தை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இவர்கள், ஊழலின் வேகம் பாய்ச்சலாக மாறியதற்கான காரணத்தை கூறõமல் ஏன் மறைக்கிறார்கள்? ஒரு காலத்தில் – அரசு நிர்வாக மட்டத்தில் கையூட்டு பெறும் பழக்கம் இருந்தது. பெரும் தொழிலதிபர்கள் – தொழில் உரிமம் – தொழில் அனுமதி பெறுவதற்கு கையூட்டு தந்து வந்தார்கள். அப்போதெல்லாம் தொழில் கொள்கைகளை அரசுகள்தான் உருவாக்கின. ஆனால், 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு "சுனாமி வரத் தொடங்கியது. அது, "தாராளமயமாக்கல்' என்ற கொள்கை வடிவில் வந்தது. அதன் பிறகு அரசின் தொழில் கொள்கைகளை வடிவமைப்பதையே பெரும் முதலாளிகளும் – பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டன. வி.பி. சிங் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதும் அதே காலகட்டம்தான்.

அரசுத்துறை நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கத்தில் "அசைவு' தொடங்கியது. வடமாநிலங்களில் பார்ப்பன ஆதிக்க சாதி யினரே முதல்வர்களாக வந்து கொண்டிருந்த நிலையும் மாறத் தொடங்கியது. அப்போது பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின்போது நிதியமைச்சர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த தாராளமயமாக்கல் கொள்கைதான் – அரசுத் துறைகளை, பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் பிடியில் கொண்டு போய் சேர்த்தது. முதலமைச்சர்களாக – பார்ப்பனரல்லாத – இதர சமூகப் பிரிவினர் வந்தாலும் – அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் விலை பேசி வாங்கி விட்டன. முதலமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளை பார்ப்பன – பன்னாட்டு நிறுவனங்களே இயக்கத் தொடங்கின.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை – தனியார் துறைக்கு விற்று விட்டால் சர்வதேசக் கடன்களை அடைத்துவிடலாம் என்ற ஆலோசனையை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரங்கராஜன் என்ற பார்ப்பனர் முன் வைத்தார். அவர் தலைமையிலேயே நரசிம்மராவ் ஒரு குழுவை நியமித்து, பொதுத் துறை பங்குகள் வேகம் வேகமாக விற்பனை செய்யப்பட்டன. முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் குழு (டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி) என்று அதற்குப் பெயர். தொடர்ந்து வந்த பாரதிய ஜனதாவின் ஆட்சியில் குழுவுக்கு பதிலாக, ஓர் அமைச்சரகத்தையே உருவாக்கினார்கள். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் அருண்ஷோரி தான் இந்தத் துறையின் அமைச்சர்.

இப்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் என்று சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொண்ட தேவ்கர் குழு கூறுகிறது. தேவ்கர், சர்வதேச நிதி நிறுவனத்தில் பொருளாதார ஆய்வாளராகப் பணியாற்றியவர். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அதாவது, "தாராளமயமாதல்' கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகுதான், மேற்குறிப்பிட்ட தொகையில் 68 சதவிகிதம் (6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) வெளிநாட்டு வங்கிகளுக்கு திருட்டுத்தனமாகப் போயிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் மூளை பார்ப்பன அதிகார வர்க்கம். இவர்களின் கொள்ளைக்காக, வனச் சட்டங்கள், மின்சாரம், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. அன்னியச் செலாவணி மோசடிகளை கிரிமினல் குற்றமாக்கிய "பெரா' சட்டங்கள் நீக்கப்பட்டன. மக்கள் நிலத்தை அபகரித்து, அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வரத் தொடங்கின. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை – 240 கோடி ரூபாய் என்றும்; இந்தத் தொகை அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது என்றும் வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் (Global Financial Integrity) கூறுகிறது.

2005 – 2006 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி ரூபாய் என்று ஒடுக் கப்பட்ட மக்களின் குரலை எதிரொலித்து வரும் கட்டுரையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெறாத அரசியல் கட்சிகளே இல்லை; பொதுவுடைமைக் கட்சிகளும் இதில் அடக்கம். அண்மையில் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, இதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இப்படி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு "தானமாக'க் கொட்டி அழப்படும் பெரும் தொகை, ஊழல் தொகைதானே! ஊழல் எதிர்ப்பாளர்கள் ஊழலின் மூலத்தை ஏன் எதிர்க்கவில்லை? இவர்களின் உண்ணாவிரத நாடகச் செலவும் – கார்ப்பரேட் நிறுவனங்களின் "கணக்குப் புத்தகங்களில்' பதியப்படுவதாலா?

2009 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிகளின் "செல்லப்பிள்ளை' தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு முன் தேதியிட்டு 91 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகையை நிதி நிலை அறிக்கையில் ப. சிதம்பரம் அறிவித்தார். இந்த வரிச் சலுகையை "தேசிய நலன்' கருதி வரவேற்பதாக பாரதிய ஜனதாவின் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்தில் பேசினார். அம்பானிகளைக் கொழுக்க வைப்பதில்தான் இவர்களின் தேசிய நலன்களே அடங்கியிருக்கின்றன.

இந்திய கிராமங்களில் நிலவும் தீண்டாமை குறித்து தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நூலாக வெளிவந்துள்ளது. அதில், “சமூகத்தில் ஏற்கனவே நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது தொழில் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களின் உழைப்பைச் சுரண்டி, குறைந்த கூலிக்கு ஒப்புக் கொள்ளச் செய்வதற்கு, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன'' என்று கூறுகிறது.

“பன்னாட்டு நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் மய்யம் கொண்டிருப்பது ஆபத்தானது. இதனால் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து – சமத்துவமற்ற நிலை மேலும் மேலும் வளர்கிறது'' என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினருமான திருமதி சோயா அசன் எச்சரித்துள்ளார்.

ஊழலுக்கு நீர் ஊற்றி வளர்த்து, நாட்டின் அரசியல் பொருளாதார அதிகாரங்களை தன் வசமாக்கிக் கொண்டு, வேகம் வேகமாக வளர்ந்து வரும் இந்த அதிகாரத் திமிங்கிலங்களை எதிர்க்காமல் – அவர்களின் மூகமூடிகள் ஊழலை எதிர்க்க வந்திருக்கிறார்கள். இப்போது, ஓர் அடிப்படையான கேள்வியை எழுப்ப வேண்டி யிருக்கிறது. ஊழல் ஒழிப்பு மட்டும்தான் இந்த நாட்டில் முதன்மையாக நிற்கும் பிரச்சனையா? ஊழலை மட்டும் ஒழிப்பது, இந்த சமுதாயத்தில் சாத்தியமா?

இந்த சாதிய சமூக அமைப்பே ஊழலைவிட கொடூரமானது என்ற எதார்த் தத்தை, திட்டமிட்டு ஏன் மறைக்க வேண்டும்? இன்னும் இரட்டை டம்ளர்கள், இரட்டை சுடுகாடுகள், சேரிகள், சாதிய வன்கொடுமைகள், "கவுரவ'க் கொலைகள் – அதை அங்கீகரிக்கும் கட்டப் பஞ்சாயத்துகள், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் விலக்கப்பட்டு நிற்கும் தலித் மக்களின் பறிக்கப்படும் வாழ்வுரிமைகள் – இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? இவர்களின் இதயங்களைத் தொடவில்லையா?

ஒரு மனிதனின் சமூக நிலையும் கவுரவமும் அவர் பிறவியிலேயே நிர்ணயிக்கப்படும் ஒரு நாற்றமெடுத்த சமூகம், உலகில் எந்தப் பகுதியிலாவது உண்டா? அரசியலும் பொருளாதாரமும் – சமூகம் பெற்றெடுக்கும் குழந்தைகள்தான். சமூகமே ஊழலாகிக் கிடக்கும்போது, இந்த ஊழல் நாற்றத்தைப் பாதுகாத்துக் கொண்டு, பொருளாதார ஊழல்களை மட்டும் ஒழித்துவிட இயலுமா?

அன்னா அசாரேயும், பாபாராம் தேவும் குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. உண்மையில், இந்த நாட்டின் மக்கள் அனைவரும் "சிவில் சமூகமாக' "குடிமக்கள்' என்ற உரிமைக்குரியவர்களாக வாழ்கிறார்களா? சட்டத்தின் அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் பொதுவாக சாதியச் சமூக அமைப்பு ஏற்றுக் கொண்டு விட்டதா?

ஒரு ஜனநாயக அமைப்பின் "சிவில் சமூகத்துக்கான இலக்கணம் என்ன? அம்பேத்கர் கூறுகிறார் : “சகோதரத்துவம் என்பது, ஜனநாயகத்தின் மற்றொரு பெயர்தான். ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல; முக்கியமாக அது, ஒரு கூட்டு வாழ்க்கை முறை. வழிவழியாக பெறப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. சாரத்தில் அது சமூக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கே ஆகும்.''

சமூக மனிதர்களுக்கு மதிப்பும், மரியாதையும் மறுக்கப்படுவதே இந்த நாட்டின் "பெருமை'. அதுவே இங்கு "÷தசம்; தேசப்பற்று'. அதற்கே "புனிதம்' "தெய்வீகம்' "தார்மீகம் என்று பெருமைகள் எற்றப்படுகின்றன. "சாதி தர்மத்தை மீறாதே' என்பதே இங்கு சமூக ஒழுங்காக கட்டமைக்கப்படுகிறது. செய்த "பாவ'ங்களுக்கு லஞ்சம் கொடுத்து "புண்ணியம்' பெரும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ள சமூகம் இது. "வேண்டுதல்' "தட்சணை' "பாவவிமோசனம்' "பரிகாரம்' என்ற பெயர்களில் லஞ்சம் இங்கே புனித மகுடங்களை சூட்டிக் கொண்டு நிற்கிறது.

குறுக்கு வழியில் சட்ட மீறலில் நேர்மையற்ற முறையில் பயனடைவதுதான் "லஞ்சம் – ஊழல்' என்றால், அதே இலக்கணம் சாதியச் சுரண்டலுக்கும் அப்படியே பொருந்தும். சமூகத்தின் இந்த ஊழலை அப்படியே காப்பாற்றிக் கொண்டு, அந்த நச்சு மரத்தின் வேர்களுக்கு நீர் ஊற்றி வளர்த்துக் கொண்டு, துளிர்விடும் இலைகளான "பொருளாதார ஊழலை' மட்டும் வெட்டுவதற்கு "அரிவாள்' தூக்கிக் கிளம்புவோர் மக்களை திசை திருப்பும் மனிதர்களே!

அம்பேத்கர் கூறுகிறார் :

“நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் சாதிக் கொடூரன் வந்து வழிமறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக் காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது.''
keetru

பொருளாதார சுமையால் தமிழன் டிவி நிகழ்ச்சிகள் நிறுத்தம் – இமயம் டிவியில் நிகழ்ச்சிகள் தொடரும்!

ஒவ்வொரு மாதமும் தமிழன் டிவி க்கு இரண்டரை லட்சம் ரூபாயும் ( வாரம் ஐந்து நாட்கள்) இமயம் டிவி யில் தினமும் ஒளிபரப்ப இரண்டரை லட்சம் ரூபாயும் செலவாகிறது.
இரண்டுக்கும் சேர்த்து மாதம் ஐந்து லட்சம் செலவிடுவதால் கடன் சுமை ஏறிக் கொண்டே போகிறது.
பல செலவுகளைக் குறைத்த போதும் இதை சமாளிக்க இயலவில்லை. வளைகுடாவில் வாழும் நம் சகோதரர்களும் பொருளாதார மந்த நிலை காரணமாக சிரமப்பட்டு வருகிறார்கள்.
எனவே தான் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் மட்டும் நிகழ்ச்சி நடத்தினால் போதும் என்று முடிவு செய்து இமயம் டிவியில் அரைமணி நேரம் மட்டும் ஒளிபரப்புவது என்றும் தமிழன் டிவி யில் நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ் நிதி நிலையை மேம்படுத்தும் போது அதற்கேற்ப நிகழ்ச்சிகளை அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-தலைமையகம்

வியாழன்

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க

 
இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.

எண்கள்,பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters), மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்கினால் உங்கள் பாஸ்வேர்ட் யாராலும் கண்டறிய முடியாது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல பாஸ்வேர்டை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம். இது போல பாஸ்வேர்டை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இன்ஸ்டால் செய்யும் முறை:
  • டவுன்லோட் செய்த மென்பொருளை(.exe) இன்ஸ்டால் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும். அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும்.
  • அடுத்து வரும் கீழே இருப்பதை போல இரண்டு விண்டோ வரும் அதில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும்.

  • அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகி மென்பொருள் ஓபன் ஆகும். 
உபயோகிக்கும் முறை:
  • முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கான பாஸ்வேர்டை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த பாஸ்வேர்டை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் Password Length என்ற இடத்தில் உங்கள் பாஸ்வேர்ட் அளவை தேர்வு செய்து (குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை பாஸ்வேர்ட் வேண்டுமோ அதி தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும். 
  • அடுத்து உங்களுக்கான பாஸ்வேர்ட்கள் லிஸ்ட் வரும். 
  • இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த பாஸ்வேர்ட்கள். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் பாஸ்வேர்ட் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம்.
  • இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த பாஸ்வேர்ட் திரும்பவும் வாராது ஆகையால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.
  • இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய பாஸ்வேர்டை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதானால் நாம் பாஸ்வேர்டை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.
  • இது போன்று நமது பாஸ்வேர்டை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கவும்.

உய்குர் முஸ்லிம்களை சீனா அடக்குகிறது

சீனாவின் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசமான சிங்ஸியாங்கின் அமைதியைக் குலைத்த சம்பவங்கள் நிகழ்ந்து இரு வருடங்கள் கடந்து விட்டன.

சீன அரசு பொருத்தியுள்ள கண்காணிப்புக் கெமராக்களும் அதன் கைது நடவடிக்கைகளும் அங்குள்ள முஸ்லிம் மக்களது குரல்களை வெளிவராது தடுத்து வைத்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை அதன் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சிங்ஸியாங்கின் தலைநகரமான உரும்கியில் 2009 ஜூலையில் வன்முறை வெடித்த்து. இதில் 200 பேர் இறந்ததோடு 1700 பேர் காயமடைந்தனர். இதன் விளைவாக சீன அரசு 17000 கண்காணிப்புக் கெமராக்களை மேலதிகமாகப் பொருத்தியது. ஏற்கனவே அங்கு பல ஆயிரக்கணக்கான கெமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை சீன அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு சிங்ஸியாங் நல்ல உதாரணம். இங்கு தமது சொந்த மண்ணில் உய்குர் முஸ்லிம்கள் சிறுபான்மையாக மாறி வருகின்றனர்“ என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஸாம் ஸரீபி தெரிவித்துள்ளார்.

போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலையில் டச்சு அரசுக்கு பங்குண்டு-நீதிமன்றம்

1995-ஆம் ஆண்டு போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகாவில் முஸ்லிம் இனப்படுகொலையின் போது 3 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதில் நெதர்லாந்து அரசு காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8000 முஸ்லிம்களை அநியாயமாக கொலை செய்த செர் ராணுவத்திடமிருந்து தப்பித்து ஐ.நா அமைதிப்படையின் கீழ் செயல்படும் நெதர்லாந்து ராணுவத்திடம் 3 முஸ்லிம்கள் அடைக்கலம் தேடினர். ஆனால், நெதர்லாந்து ராணுவத்தினர் அவர்களை மீண்டும் செர்ப் ராணுவத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் 3 முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெதர்லாந்து ராணுவம் ஐ.நா அமைதிப்படையின் கீழ் செயல்பட்டாலும் ஸ்ரெப்ரெனிகா தாக்குதலிலும், மக்களை கூட்டமாக வெளியேற்றியதிலும் நெதர்லாந்து அரசு அதிகமாக தலையிட்டுள்ளது. ஆதலால் டச்சு அரசு மூன்று முஸ்லிம்களின் மரணத்திற்கு பொறுப்பாகும் என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

டச்சு(நெதர்லாந்து) ராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையின் கீழ் செயல்பட்டதால் நெதர்லாந்திற்கு முஸ்லிம்களின் மரணத்திற்கு பொறுப்பல்ல என 2008-ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இழப்பீடு தொகை கிடைக்க வழிகோலும் என கருதப்படுகிறது.

ஐ.நா அமைதிப்படையின் கீழ் செயல்பட்ட டச்சு ராணுவத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றிய ரிஸோ முஸ்தாஃபிச், இன்னொரு ராணுவ வீரர் ஹஸன் நுஹாநோவிச் ஆகியோரின் உறவினர்களை டச்சு ராணுவம் செர்பிய ராணுவத்தினரிடம் ஒப்படைத்தது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இத்தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ராணுவ தலைமையகத்தில் அடைக்கலம் தேடியவர்களை போர் குற்றவாளியான ராத்கோ மிலாடிச்சின் கீழ் செயல்படும் ராணுவத்திடம் ஒப்படைத்தது நெதர்லாந்து ராணுவம்.

செவ்வாய்

இந்த வார உணர்வில் (ஜுலை 8)


வரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்

திட்டமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நேசம் கொள்வது ஈமானின் ஒரு பகுதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தாய் தந்தையரை விட, மனைவி, மக்கள் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் அவர்களை அதிகம் நேசிக்காதவரை ஒருவன் முழுமை முஃமினாக முடியாது. அதே நேரத்தில் “தம் அந்தஸ்தை விட அதிகம் புகழக் கூடாது” என அவர்கள் மிகக் கடுமையாகவே எச்சரித்தும் உள்ளார்கள். எவர் வேண்டுமென்றே ‘என் விஷயத்தில் பொய்யைக் கட்டி விடுகிறாரோ அவர் நரகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’ (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் பெயரால் குறிப்பாக அவர்களுடைய பிறப்பு நபித்துவ விஷயங்களில் ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அல்லாமா ஸிலைமான் நத்வா (ரஹ்) கூறுகிறார்கள் -

இந்தக் கட்டுக்கதைகள் தோன்றியதற்கு மிக முக்கியக் காரணம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மீலாது விழாக் கூட்டங்கள் மற்றும் பயான் பேசக் கூடியவர்களால் ஏற்பட்டதாகும். இத்தகையவர்கள் பொதுவாக கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர். கூட்டத்தார்களை உணர்ச்சி வசப்படுத்துவதற்கும் அவர்களிடையே அழகான கலகலப்பை ஏற்படுத்துவதற்கும் இவை (கட்டுக்கதைகள்) தேவைப்பட்டன. இதில் ஓரளவு பேணுதலாக இருந்தவர்கள் (ஹதிஸ்களாக அல்லாமல்) சின்னச் சின்ன சூபி கதைகளாக, கவிதை தொகுப்புகளாக எழுதினார்கள். இதைச் செவியேற்றவர்கள் இதற்கு ரிவாயத்துகள் (நபி (ஸல்) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்பட்டவைகள்) எனும் அந்தஸ்தை கொடுத்து விட்டார்கள். அல்லது இதுவே பிறகு ரிவாயத்துல் எனும் இடத்தை பிடித்துக் கொண்டன. இதில் கொஞ்சமும் பயம் இல்லாதவர்களோ ஒரு ஸனதையும் (அறிவிப்பாளர் தொடரை) இணைத்து ஹதிஸ் எனும் அந்தஸ்தை கொடுத்து விட்டார்கள்.ஹாபிஸ் ஸீயூத்தி அவர்கள் அல்லாமா இப்னுல் ஜவ்சியின் இட்டுக்கட்டப்பட்டவைகள் எனும் நூலை மேற்கோள் காட்டி எழுதுகிறார்கள்.

பொய்யான ஹதிஸ்களைச் சொல்பவர்களில் பயான் பேசித் திரிபவர்களும் உள்ளனர். எல்லோரையும் விட பெரிய கேடு இவர்களிடம் இருந்தே வருகிறது. ஏனென்றால் இவர்கள் இப்படிப்பட்ட ஹதிஸ்களை விரும்புகிறார்கள்.

“எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். வசிய வைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.” ஸஹிஹான ஹதிஸ்களில் இப்படிப்பட்ட விஷயங்கள் இல்லை. இது தவிர ஸஹிஹான ஹதிஸ்களை இவர்கள் நினைவு கொள்வது கடினம். இத்துடன் இவர்கள் மார்க்கத்தை கடைப்பிடிப்பதும் இல்லை. இவர்களுடைய சபைகளிலே அறியாதவர்களின் கூட்டமே மிகுதியாக இருக்கும். எனவே சிறப்புகள், மகிமைகள், தண்டனை மற்றும் கூலி, சொர்க்கம் மற்றும் நரகம், மீலாது (பிறப்பு) பற்றிய சம்பவங்கள் மற்றும் அற்புதங்கள் பற்றி சுயமாக புனையப்பட்ட ஏடுகள் உருவாயின. இவை பெரும்பாலும் மூடர்களால் தொகுக்கப்பட்டு சரி செய்யப்பட்டதாகும்.

அல்லாமா ஷிப்லி (ரஹ்) அவர்கள் தம்முடைய ‘சீரத்துன்நபவி’யில் எழுதுகிறார்கள்.

சீரத் – நபி (ஸல்) அவர்கள் வரலாறு பற்றி ஏராளமான நூல்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றுடைய முடிவும் பின்வரும் இந்த நான்கு புத்தகங்களிடமே சென்றடைகிறது.

(1) திப்ரி (2) இப்னு ஸஃது (3) வாகிதி (4) இப்னு இஸ்ஹாக்

இதில் வாகிதி முற்றிலும் நிராகரிக்கத் தக்கவன் ஆவான்.

 வாகிதி சுயமாக ஹதிஸ்களை புனையக் கூடியவனாக இருந்தான் என முஹத்திஸீன்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறுகிறார்கள்.

 இப்னு ஸஃதில் பாதிக்கு மேல் வாகிதியைக் கொண்ட பெறப்பட்டதாக உள்ளது. ஆகவே வாகிதி விஷயத்தில் என்ன நிலையோ அதே தான் இப்னு ஸஃது நிலையிலும் உள்ளது.

 இப்னு இஸ்ஹாக்கில் பலவீனமான அறிவிப்புகள் வந்தாலும் இமாம் புகாரி அவர்கள் தம் ஜிஸ்உல் கிராஅத் – எனும் நூலில் இவருடைய ஸனதை கொண்டு ரிவாயத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.

சற்று சிந்தியுங்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் பிறந்த நாளில் விழா எடுப்பவர்களே,

நபி (ஸல்) வாழ்க்கையில் நபித்துவ்த்திற்கு முன்னால் நாற்பது முறை இந்த பிறந்த நாள் வந்திருக்கிறது. நபித்துவக் காலத்திலிருந்து இறப்பு வரை இருபத்தி மூன்று முறை, அபுபக்கர் சித்திக் அவர்கள் கிலாபத்தில் இருமுறை உமர் (ரலி) கிலாபத் காலத்தில் பத்து, பதினொரு முறை, உஸ்மான் துன்னுரைன் கிலாபத்தில் பன்னிரண்டு முறை, அலி (ரலி) கிலாபத்தில் ஐந்து முறை முஆவியா (ரலி) கிலாபத்தில் இருபது முறை கடைசி சஹாபியான ஆமிர் பின் – வாஸிலா அல்லைஸி (ரலி) அவர்களின் இறப்பு வரை இந்த மீலாது (பிறப்பு) நாள் ‘163’ முறை வந்துள்ளது. அவர்கள் நம்மைப்போல் இது போன்று தங்கள் முஹப்பத்தை பிரியத்தை தெரிவிக்கவில்லை. என்னஸ அவர்களுக்கு நபி (ஸல்) மீது முஹப்பத் இருந்ததில்லையா? பிறகு இந்த மீலாது நாள் தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 110லிருந்து ஹிஜ்ரி 180 வரை பிறகு தபஉ தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 180 – லிருந்து ஹிஜ்ரி 220 வரை வந்து உள்ளது. பிறகு நான்கு இமாம்களில் இமாம் அபுஹனிபா தங்கள் எழுபது வருட வாழ்க்கையில் இமாம் ஷாபியி (ரஹ்) தங்கள் 54 வருட வாழ்க்கையில் இமாம் மாலிக் (ரஹ்) தங்கள் ‘99’ வருட வாழ்க்கையில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் உடைய இறப்பு வரை ‘294’ முறை வந்துள்ளது. இதே போல் முஹத்திஸீன்கள் காலத்தில், பிறகு ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய ‘91’ வருட காலத்தில் வந்துள்ளது. ஆனால் இவர்கள், எல்லாம் விழா எடுக்கவில்லை. சஹாபாக்களிலிருந்து முஹத்தீஸீன்கள் காலம் வரை இவர்களில் எவரும் மகிழ்ச்சியை தெரிவிக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவோ, விழா எடுக்கவோ இல்லையென்றால் நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு நன்மையான காரியமாக அல்லது வணக்க வழிபாடு சம்பந்தப்பட்டதாக இருந்திருந்தால் அவர்கள் அவசியம் செய்திருப்பார்கள். அவர்கள் செய்யவில்லையெனில் இது எந்தளவிற்கு சரியாகும்?

——-

மிகவும் பிரபலமான ஆனால் இட்டுக்கட்டப்பட்ட சில அறிவிப்புகள்

நபி (ஸல்) கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸ் – ‘அல்லாஹ் முதன் முதலாக என் ஒளியை – (நூரை) படைத்தான்’

ஸய்யத் சுலைமான் நத்வி கூறுகிறார்கள் – ‘இந்த அறிவிப்பை நான் ஹதிஸ்களின் ஏடுகளிலே அறியவில்லை’

முஸ்னத் அப்துர் ரஜ்ஜாக்கை மேற்கோள் காட்டி கூறப்படுவதாவது,

நபி (ஸல்) கூறினார்கள் – ஓ, ஜாபிரே அல்லாஹ் முதன்முதலாக உன் நபியின் ஒளியை படைத்தான். பிறகு அந்த ஒளி நான்கு பகுதிகளாகியது. அதிலிருந்து தான் லௌஹே மஹ்பூல் (எனும் பலகை) மற்றும் எழுதுகோல், அர்ஷ் மற்றும் நாற்காலி, வானம் மற்றும் பூமி, ஜின் மற்றும் மனிதனைப் படைத்தான்.

நாசிருத்தீன் அல்பானி அவர்கள் கூறுகிறார்கள் – பெரும் முயற்சிக்குப் பின்னும் என்னால் இதன் ஸனதை அறிய முடியவில்லை. ஆனால், இதற்கு மாற்றமாக ஸஹிஹ்ஹதிஸ் உள்ளது. அல்லாஹ் முதன் முதலாக எழுதுகோலை படைத்தான். (திர்மிதி, அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றி முன்சென்ற நபிமார்களின் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதிஸிலும் வந்துள்ளது. யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் இதனால் ஒரு நபியின் வருகைக்காக காத்திருந்தார்கள். ஆனால் கதை விடுபவர்களுக் இந்த ஸஹிஹான விஷயங்கள் திருப்தி அளிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றிய முன்னறிவிப்புகளில் தங்கள் கைவரிசையை காட்டினார்கள். யூதர்களுக்கு கிழமை, தேதி, வருடம், இடம் என எல்லாமே தெரிந்திருந்தது. ஆகவே, நபி (ஸல்) பிறப்பதற்கு முன்னமே யூத அறிஞர்கள் இது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கிறித்தவர்களோ இது பற்றி அ முதல் ஃ வரை அறிந்திருந்தார்கள். நபி (ஸல்) பிறப்புக்காலம் நெருங்கிய போது குறிகாரர்கள் சின்ன சேதிகள் மூலமாக, ஜின்கள் கவிதைகள் வாயிலாக, ‘நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்து பற்றி ஒரு கவிதைத் தொகுப்பு இயற்றப்பட்டது. பாரசீக அரசவைக்காரர்கள் மற்றும் குறைஷித் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள். கற்களில் நபி (ஸல்) பெயரின் வடிவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது. குரைஷ் குலத்தில் அதிக வாரிசுதாரர்களை கொண்ட கஅப்பின் லுஅய் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் தன் கோத்திரத்தாருக்கு நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றி நற்செய்தி கூறிக் கொண்டிருந்தான். மக்காவில் இருந்த மக்கள் அறிஞர்கள் மற்றும் குருமார்களின் வாய்களிலிருந்து நபி (ஸல்) அவர்களின் ‘முஹம்மத்’ எனும் பெயரைக் கேட்டு தம் குழந்தையாக இருக்கட்டுமே என நினைத்து தங்கள் குழந்தைகளுக்கு அப்பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் – இடம் மதினாவாக இருக்கும் என மதினாவைச் சேர்ந்த யூதர்களிடம் பரவி இருந்தது, இதனோலே அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) பிறந்த போது கதை விடுபவர்களின் கதைகளுக்கேற்ப இஸ்ரா மாளிகையின் பதினான்கு மாடங்கள் விழுந்து விட்டன, கஆபாவின் சிலைகள் குப்புற விழுந்து விட்டன. திப்ரு கடல் வற்றி விட்டது, பாரசீகத்தைச் சேர்ந்த நெருப்பு வணங்கிகள் வணங்கி வந்த ஆயிரம் ஆண்டுகள் அணையாத நெருப்புக் குண்டம் அணைந்து விட்டது. ஒரு ஒளி பிரகாசித்தது; இதில் சிரியாவின் மாளிகை வெளிப்பட்டது. (சீரத்துன் நபவி)

நபி (ஸல்) அவர்கள் பிறப்பிற்கு முன்பு மற்றும் பின்பு இது போன்ற கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவைகள் எல்லாமே ஹதிஸின் கருத்துரீதியாகவும், அறிவிப்பாளர் தொடர்ரீதியாகவும் மிகவும் பலகீனமானவை யாரும் இதனாலே முஹத்தீஸீன்கள் இதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தகியுத்தீன் அமீனி (ரஹ்) “ஹதீஸ் – உடைய செய்தியின் படித்தரங்கள்” எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். “நபி (ஸல்) பிறந்த போது எவருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு எந்த ஒரு ஸஹாபியும் உடன் இருந்தது இல்லை. ஒன்று நபி (ஸல்) பிறப்புப் பற்றி வரும் இது போன்ற அறிவிப்புகள் பிரபலமாக இருந்திருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்களே இது பற்றி விளக்கியிருக்க வேண்டும். இச்சம்பவங்கள் அறிவிப்புகளின் படி உண்மையிலேயே பிரபலமாக இருந்திருக்குமானால் நபி (ஸல்) அவர்களுக்கு தூதை எத்தி வைப்பதில், இந்தளவிற்கு இடையூறுகள் ஏற்பட்டு இருக்காது. இந்தச் சம்பவங்களின் பிரபல்யத்தால் உடனடியாக ஒவ்வொருவரும் ஈமான் கொண்டு இருப்பார்கள். ஒரு வேளை நபி (ஸல்) அவர்களே இதுபற்றி விளக்கி இருந்தால் இவ்வளவு முக்கியமான சம்பவங்களின் குறிப்புகள் ஆதாரப்பூர்வமான ஹதிஸ்களின் ஏடுகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். நுபுவத்திற்கான இவ்வளவு பெரிய ஆதாரங்களை, முஹத்தீஸின்கள் எப்படி அலட்சியம் செய்திருப்பார்கள்.”

கட்டுக்கதைகளில் வருகிறது.

ஆதம் (அலை) அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். முஹம்மத் கொண்டு என் பாவங்களை மன்னிக்க வேண்டுகிறேன். முஹம்மதை எவ்வாறு அறிந்தீர் என அல்லாஹ் கேட்டான். ஆதம் (அலை) கூறினார்கள். எப்பொழுது நீ என்னை தன் கரத்தினால் படைத்தாயோ இன்னும் என்னுள் உன் ருஹை ஊதிய போது நான் தலையை தூக்கினேன்.(உயர்த்தினேன்) அர்ஷில் இதை எழுதியிருக்க கண்டேன். ‘லாயிலாஹ இல்லல்லாஹி’ நீ தன் பெயருடன் மிகவும் பிரியத்திற்குரிய ஒரு படைப்பின் பெயரை இணைத்துள்ளாய் என்று அறிந்து கொண்டேன். இறைவன் சொன்னான் – நீர் உண்மையைச் சொன்னீர். ஆதமேஸ முஹம்மத் இல்லையென்றால் நான் உம்மை படைத்திருக்க மாட்டேன்.

இதே போல் இன்னும் சில அறிவிப்புகள் 

(1) நீர் இல்லையென்றால் வானங்களை நான் படைத்து இருக்க மாட்டேன்.

(2) ஆதம் (அவர்கள் படைப்பு) நீருக்கும் மண்ணிற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்த போது நான் நபியாக இருந்தேன். (பதாவா இப்னு தையிய்யா)

இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகிறார்கள் -

இந்த ஹதிஸிற்கு எந்த அடிப்படையும் இல்லை. எந்த ஒரு அறிஞரும் இவ்வார்த்தைப் போன்று அறிவிக்கவில்லை.

முல்லா அலிகாரி (ரஹ்) அவர்கள் ஙமிகப்பெரிய இட்டுக்கட்டப்பட்டவைகள்ங எனும் நூலில் இந்த ஹதிஸை குறிப்பிடுகிறார்கள்.

= எவர் ஒரே வருடத்தில் என்னை(யை)யும் என் தந்தை இப்ராஹிம் (அலை) அவர்களையும் ஜியாரத் செய்கிறாரோ சுவனம் நுழைவார்.

இப்னு தைமிய்யா அவர்கள் இதனை இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகிறார்கள். இமாம் நவவி அவர்களும் ‘ஷரஹ் முஹத்தப்’ எனும் நூலில் பொய்யான ஹதிஸ் என்று எழுதியுள்ளார்கள்.

அல்லாமா ஷவ்கானி (ரஹ்) அவர்கள் எனும் நூலில் பின்வரும் ஹதிஸை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.

= ரசூல் (ஸல்) கூறினார்கள்.

நான் எனது தாயாரின் கப்ரு அருகே சென்றேன். எனது தாயாரை உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டபோது அல்லாஹ் அவரை உயிர்ப்பித்தான். பிறகு அவர்கள் என்மீது ஈமான் கொண்டார்கள். இதன் பிறகு அல்லாஹ் அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டான்.

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர்களில் சிலர் யாரென்றே அறியப்படாதவர்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான “முஹம்மத் பின் ஜய்யாது நக்காஷ்” மாபெரும் பொய்யனும் ஹதிஸ்களை சுயமாக இட்டுக்கட்டுபவனும் ஆவான்.

கதீப் பக்தாதி அவர்கள் ‘தாரிக்குல் பக்தாத்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

= ரசுல் (ஸல்) கூறினார்கள்.

நான்கு விஷயங்களில் நான் மற்ற மக்களை விட மேன்மைப்படுத்தப்பட்டு உள்ளேன்.

(1) வாரி வழங்குவதில் (2) வீரத்தில் (3) அதிகமாக (உடல்) உறவு கொள்வதில் (4) கடுமையாக பிடிப்பதில்

இது பொய்யான ஹதிஸ் ஆகும் என்று அல்பானி அவர்கள் கூறியுள்ளார்கள்.

பொய்யான ஹதிஸ்களில் ஒன்று.

ஜுப்ரயில் (அலை) அவர்கள் என்னிடம் ஒரு பானையை கொண்டு வந்தார்கள். நான் அதிலிருந்து சாப்பிட்டேன். இதனால் எனக்கு நாற்பது ஆண்களின் உடலுறவு சக்தி கொடுக்கப்பட்டது.

அல்பானி அவர்கள் இதை பொய்யான ஹதிஸ் எனக் கூறுகிறார்கள்.

அல்லாமா இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் பொய்யான ஹதிஸ்களைப் பற்றி எழுதும் போது இந்த ஹதிஸ் – ஐ குறிப்பிடுகிறார்கள்.

= எவர் தன் பிள்ளைக்கு பரக்கத்திற்காக ‘முஹம்மத்’ எனப் பெயரிட்டாரோ அவரும், அவருடைய பிள்ளையும் சுவனத்தில் நுழைவார்கள். அல்லாமா ஸய்யத் ஸிலைமான் நத்வா அவர்கள் “சீரத்துந்நபவி” எனும் நூலில் நபி (ஸல்) அவர்கள் அற்புதங்கள் பற்றி வரும் ஆதாரமற்ற அறிவிப்புகள், பிரபலமான அத்தாட்சிகள் மற்றும் அற்புதங்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசை பற்றி ஆராய்ந்து இறுதியாக சுருக்கமாக எழுதுகிறார்கள்.

(1) Þ நபி (ஸல்) அவர்கள் அற்புதத்தால் ஆமீனா (நபியின் தாயார்) அல்லது எந்த ஒரு மைய்யித்தும் உயிர் பெற்று எழுந்ததாக வரும் எல்லா அறிவுப்புகளும் பொய்யானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகள் ஆகும்.

(2) கழுதை, ஒட்டகம், ஆடு, மான், அசுத்தம் (நஜாஸத்) ஓநாய், சிங்கம் முதலிய விலங்குகள் மனிதர்களைப் போல் பேசியதாகவோ, அல்லது கலிமா சொன்னதாகவோ வரும் எல்லா அறிவுப்புகளும் ஸஹிஹானவைகள் கிடையாது.

(3) நபி (ஸல்) அவர்களுக்காக வானத்திலிருந்து உணவுகள் (படைக்கப்பட்டு) வந்ததாகவோ அல்லது சுவனத்திலிருந்து பழங்கள் வந்ததாகவோ வரும் எல்லா அறிவுப்புகளும் இட்டுக்கட்டப்பட்டவை மற்றும் மிகவும் பலகீனமானவைகளாகும்.

(4) ஹழ்ரத் இல்யாஸ், ஹழ்ரத் கிள்ரு இவர்களை சந்தித்ததாகவோ அல்லது ஸலாம் சொன்னதாகவோ வரும் அனைத்து அறிவுப்புகளும் ஸஹீஹானவைகளுக்கு அப்பாற்பட்டவையாகும்.

(5) நபி (ஸல்) அவர்களுக்கு ஙநிழல்ங இருந்தது. இல்லை என்பது மக்களிடம் பிரபலமான விஷயம் இது ஆதாரப்பூர்வமானது அல்ல.

(6) இயற்கைத் தேவையை கழித்து விட்டு வருவார்கள். அங்கே எந்த ஒரு அசுத்தமும் இருக்காது. (பூமி அப்படியே விழுங்கி விடும்) என்று வரும் எல்லா அறிவுப்புகளும் முழுக்க முழுக்க இட்டுக் கட்டப்பட்டவைகள்.

(7) பயான் பேசித் திரிபவர்களிடம் மிகவும் பிரபலமான செய்தி. அபுஜஹ்ல் – உடைய வேண்டலுக்கேற்ப அவன் கையில் இருந்த சிறு கற்கள் நபி (ஸல்) அவர்களின் அற்புதத்தால் கலிமா சொல்லக் கூடியவனாகி விட்டன. ஆனால் இதுவும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

(8) ஓர் அறிவிப்பில் வருவதாவது ரசுல் (ஸல்) ஒரு முறை அலி (ரலி) உடைய தொடையில் தலை வைத்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள். சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அஸர் தொழுகையின் நேரம் முடிவடைந்து கொண்டிருந்தது. அலி (ரலி) மரியாதை நிமித்தமாக நபியவர்களை எழுப்பவில்லை. சூரியன் மறைந்து விட்ட போது நபியவர்கள் எதார்த்தமாக (திடிர்) விழித்தார்கள். நீங்கள் தொழுது விட்டீர்களாக என அலி (ரலி) இடம் கேட்டார்கள். இல்லை – என்று அலி (ரலி) பதிலளித்தார்கள். நபி (ஸல்) துஆ செய்தார்கள். உடனே சூரியன் திரும்பி வந்தது. Þ இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானவை அல்ல.

(9) ஓர் அறிவிப்பு வருகிறது. நபி (ஸல்) அவர்களின் திருமுகம் இரவில் பிரகாசிக்கக் கூடிய அளவிற்கு ஒளி மிகுந்ததாக இருந்தது. ஒரு முறை இரவில் ஆயிஷா (ரலி) அவர்களின் கையிலிருந்து ஊசி (கீழே) விழுந்து விட்டது. தேடிய பிறகும் கிடைக்கவில்லை. யதார்த்தமாக நபி (ஸல்) வருகை புரிந்தார்கள். திருமுகத்தின் பிரகாசத்தால் ஊசி மின்னியது; கிடைத்தும் விட்டது. இது சுத்த பொய் ஆகும்.

பின்வரும் சம்பவம் பற்றி வரும் அனைத்து ரிவாயத்துகளும் ஆதாரப்பூர்வமானவை அல்ல.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த சமயத்தில் (வழியில்) ‘ஸவீர்’ எனும் குகையில் தஞ்சம் அடைந்தார்கள். இறைக்கட்டளையின் படி உடனடியாக குகையின் நுழைவாயில் ‘பபுல்‘ மரம் முளைத்து விட்டது. மேலும் ஒரு புறா ஜோடி அங்கு வந்து முட்டையிட்டது. முஷ்ரீகீன்களுக்கு குகையில் நபியவர்கள் உள்ளார்கள் என சந்தேகம் எழாமல் இருச்ச அங்கே ஒரு சிலந்தி, வலை பின்னியது.

ஷேக் அலி இப்ராஹிம் ஹஷீஷ் அவர்கள் கூறுகிறார்கள். குகையில் சிலந்தி வலை பின்னியதாகவோ, புறாக்கள் முட்டையிட்டதாகவோ வரும் எந்த ஹதிஸீம் சரியானவை அல்ல. மேலும் எழுதுகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான் -

(9 ˜ 40)

“நீங்கள் பார்க்காத படைகளைக் கொண்டு அவரை பலப்படுத்தினான்.”

யாராலும் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மறைமுகமாக உதவினான் என இவ்வசனம் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. சிலந்தி, புறா, மரம் எல்லாமே பார்க்கப்படக் கூடிய பொருட்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய வரலாறு விஷயத்தில் மிகவும் பலகீனமான அறிவிப்புகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகளின் ஒரு பெரும் குவியலே உள்ளது. இவை நமது சமூகத்தில் மிகப் பெரும் தீய விளைவையே ஏற்படுத்தின. இதனால் சமுதாயத்திற்கு கேடு ஏற்படுத்தக் கூடிய ஒரு கூட்டமே உருவாகியது.

முல்லா அலிகாரி அவர்கள் தங்களுடைய ‘இட்டுக்கட்டப்பட்டவைகள்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

Þ பக்தாத்தில் மக்களுக்கு பயான் செய்யக் கூடிய ஒருவர் ‘பனி இஸ்ராயில்’ உடைய

“விரைவில் உம்முடைய இறைவன் உம்மை ‘மஹமுத்‘ எனும் (மிக்க புகழ் பெற்ற) இடத்தில் எழுப்புவான்”

-எனும் வசனத்திற்கு அதிசயமான வியாக்கானத்தை கண்டெடுத்தார். “ரசூல் (ஸல்) அல்லாஹி தஆலா உடன் அர்ஷீன் மீது வெளியாகுவார்கள்.”

இதை அறிந்த முஹம்மத் பின் ஜாரீர் திப்ரி அவர்கள் வெகுண்டெழுந்தார்கள். தங்கள் வீட்டுக் கதவில்

= “தன் அர்ஷீன் மீது ஒத்த இருக்கை இல்லாதவனும் தனக்கு எந்த துணைவனும் இல்லாதவனாகிய அவன் மிகத் தூய்மையானவன்” என்று எழுதினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹி தஆலாவுடன் அர்ஷீன் மீது வெளியாகுவார்கள் என்று கேட்டிருந்த பக்தாத் மக்கள் அதற்கு மாற்றமாக திப்ரி உடைய வீட்டில் இவ்வாசகத்தை கண்டவுடன் கோபங் கொண்டு அவர் வீட்டின் மீது கற்களை எறிய ஆரம்பித்து விட்டார்கள். அதன் கதவையும் உடைத்து விட்டார்கள்.

இது தான் இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது. தங்களுடைய குராபத்துகளுக்கு எதிராக எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய குராபத்துகளுக்கு எதிராக கொஞ்சம் எழுதினாலோ, பேசினாலோ அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பலவீனமான அறிவிப்புகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகள் இந்த உம்மதிற்கு மிகப் பெரும் கேட்டை ஏற்படுத்தி உள்ளன. நம்முடைய வயிற்று பிழைப்புகள் உணர்வார்களாக!

முஹம்மது இக்பால் உமரி

திங்கள்

வரலாறு புகட்டும் பாடம்

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.

உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.

உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.

ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.

யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.

அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.

நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.

நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.

என்ன அது?

நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.

அவன் கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.

இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.

“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?

“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.

ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.

இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.

வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.

சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.

சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.

இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.

எவ்வாறு ?

சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.

குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.

எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.

தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.

இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.

எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.

சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?

“நிச்சயமாக இல்லை”

நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?

அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.

“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !

கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.

கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.

சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.

இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.

வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.

உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.

இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……

புதுவலசை பைசல்

ஞாயிறு

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?

இதோ, அதோ என்று இத்தனை நாளும் போக்குக் காட்டி வந்த 3ஜி போன் சேவை இப்போது வந்தேவிட்டது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடபோன் என நான்கு நிறுவனங்களும் 3ஜி தொலைபேசி வசதியைக் கொடுக்க ஆரம்பிக்க, லட்சக்கணக்கானவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் பலபேர்களுக்கு அந்த சேவையால் கிடைக்கும் நன்மைகள், என்னென்ன ஸ்கீம்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் இன்னும் குழப்பம்தான் இருக்கிறது.

அது என்ன 3ஜி?

இதுநாள் வரை இருக்கின்ற வசதிகளை வைத்து தொலைபேசி மூலம் பேச முடியும், சுமாரான வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். அவ்வளவுதான்! இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் 3ஜி டெக்னாலஜி. இந்தத் தொழில்நுட்பம் உங்கள் செல்போனில் இருக்கும்பட்சத்தில் வீடியோ கால், நேரடித் தொலைக்காட்சி, இன்டர்நெட், ஃபேக்ஸ், என சகல வசதிகளையும் அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்ல, பவர்பாயின்ட் மாதிரியான ஃபைல்களைக்கூட அதிவேகமாக டவுன்லோடு செய்யமுடியும். ஆடியோ மற்றும் வீடியோவுடன் கூடிய மல்டி மீடியா போன்ற சேவைகளும் கிடைக்கும். சொடுக்குப் போடும் நேரத்தில் அத்தனையும் நடந்துவிட வேண்டும் என்று மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு உறுதுணை யாக வந்திருப்பதுதான் 3ஜி. இதன் மூலம் உடனடித் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், சமூகத் தொடர்புகள் போன்ற வழக்கமான வசதிகளுடன் ஆன்லைனில் சினிமா, விமானம், ரயில் போன்றவற்றுக்கான டிக்கெட்களைப் பெறுவதில் ஆரம்பித்து, கிராமப் பகுதிகளில் விவசாயம் தொடர்பான தகவல்களைப் பெறுவது, உடல் நலம், கல்வி தொடர்பான செய்தி களைப் பெறுவது வரை சேவைகள் விரிந்துகொண்டே போகிறது.

வீடியோகாலிங்!

செல்போனில் பேசும்போது உங்களுக்கு எதிர்முனையில் பேசுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஸ்கிரீன் மூலம் தெரிவதே வீடியோகாலிங். நேரில் பேசுவதைப் போன்ற உணர்வை இது ஏற்படுத்தும். இந்த வசதியைப் பெற இரண்டு தரப்பிலும் 3ஜி கனெக்ஷன் மற்றும் 3ஜி செல்போன் தேவை.

மொபைல் கேமிங்!

மல்டிபிளேயர் மற்றும் ஹெச்.டி. கேமிங் போன்றவற்றை உங்கள் மொபைலிலேயே பெறலாம். 3ஜி-யில் கேம்ஸ் விளையாடுவது வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். ஹெச்.டி. கேமிங் மூலம் உலகத்தில் எங்கிருந்தாலும் மற்றவருடன் விளையாடலாம்.
2ஜி-க்கும் 3ஜி-க்கும் உள்ள வித்தியாசம்!

மேம்பட்ட குரல் தரம் மற்றும் தெளிவு, அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் 2ஜி-யைவிட 3ஜி-யில் சிறப்பாக இருக்கும்.

2ஜி-யில் மல்டிமீடியா அப்ளிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சப்போர்ட் செய்யும். 3ஜி-யில் இந்த வசதி அதிகளவில் சப்போர்ட் செய்யும்.

2ஜி-யில் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா அனுப்ப முடியாது. ஆனால் 3ஜி-யில் அது சாத்தியம்.

2ஜி-யில் 9-13 கிலோ பைட்ஸ் மட்டுமே இருப்பதால் நேரடித் தொலைக்காட்சி பார்க்கும்போது படம் தெளிவாகத் தெரியாது. நெட் வசதியும் குறைவான வேகத்தில் இருக்கும். ஆனால் 3ஜி-யில் 384 கிலோ பைட்ஸ் வரை இருப்பதால் இந்த சிக்கல்கள் எதுவும் இருக்காது.

3ஜி-யின் நன்மைகள்!

அதிகப்படியான பாண்ட்வித் மற்றும் பாதுகாப்பு.
பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்ற 3ஜி சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது.
அதிகமான மல்டி மீடியா சேவைகள்
ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் சேவை.

3ஜி-யின் பாதகங்கள்!

அனைத்து வகையான மொபைல் போன்களிலும் இந்த வசதியைப் பெற முடியாது. 3ஜி வசதி பெறக்கூடிய பிரத்யேக மொபைல் போன்களைத்தான் பயன்படுத்த முடியும். இதன் விலை கொஞ்சம் அதிகமாக யிருக்கும்.

3ஜி உரிமம் பெற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்திருப்பதால் இதன் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்க முடியாது.

அதிகப்படியாக கிலோ பைட்ஸ் பயன்படுத்தப்படுவதால் மொபைல் போனுக்கான பேட்டரி அதிகளவில் செலவாகும்.

மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும்.

3ஜி சேவைக்கு தமிழக மக்களிடம் இருக்கும் வரவேற்பு பற்றி பி.எஸ்.என்.எல். அமைப்பின் முதன்மை பொது மேலாளர் சுப்ரமணியனிடம் பேசினோம்.
”இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் 3ஜி இணைப்பை வழங்க உரிமம் பெற்றுள்ளன. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்கள் மூலமும் 3ஜி வசதியைப் பெறலாம். இதில் பயன்படுத்தப்படும் டேட்டா கார்டை இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் வாங்கிப் பயன்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. 3ஜி போனை வைத்துக் கொண்டு எந்த ஊருக்கு வேண்டுமானாலும் காரோட்டிக் கொண்டு போகலாம். போகும்போது வழி தெரியவில்லை என்றால் உங்கள் மொபைல் போனில் தெரியும் மேப்பை வைத்துக் கொண்டே ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். மக்கள் 3ஜி போனை வாங்கியவுடன் ஆர்வத்துடன் வீடியோகால் பேசுகிறார்கள். பலருக்கும் இது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என்பது இன்னொரு சிறப்பு. மேலும் அலுவலகம், கடைகள் போன்ற இடங்களில் ஒரு வெப் கேமிராவை வைத்துவிட்டு உங்கள் 3ஜி மொபைலுடன் இணைத்துவிட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

அடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கேரளா மற்றும் தமிழ்நாடு சி.இ.ஓ. ராஜீவ் ராஜகோபால் கூறுகையில், ”இப்போதைக்கு சென்னை மற்றும் கோவையில் மட்டும் கடந்த மாதம் 27 முதல் 3ஜி சேவையைத் தொடங்கி இருக்கிறோம். தற்போதுள்ள சிம்கார்டுகளைப் பயன்படுத்தியே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையைப் பெறலாம். லேப்டாப் பயன்படுத்துகிறவர்களுக்கு 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நிலையான கட்டணம், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் என பல வகையான திட்டங்களையும் கூடிய விரைவில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தப் போகிறோம்” என்றார்.
என்ன, நீங்கள் தயாரா?
naanayamvikadan

பராஅத் இரவு – சில சிந்தனைகள்

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என நம் அனைவராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும் பள்ளி வாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன.

முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை.

‘பராஅத் இரவு’ ‘ஷபே பராஅத்’ என பல பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகின்றது. ‘லைலத்துல் கத்ரு’ ‘லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ‘லைலத்துல் பராஅத்’ என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.

பராஅத் இரவு

பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் ‘நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம்’ (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கின்றது என்றும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது தவறாகும். ‘திருக்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது’ என்று திருக்குர்ஆன் 2:185ம் வசனத்தில் திடடவட்டமாகக் கூறுகின்றது.

ஆக, பாக்கியம் மிக்க இரவு ரமழான் மாதத்தில் தான் இருக்கின்றது. அது ரமழானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது ‘லைலத்துல் கத்ர் இரவில்’ நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான். எனவே, ‘பாக்கியம் மிக்க இரவு’ என்பதும் ‘லைலத்துல் கத்ர் இரவு’என்பதும் ரமழான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகின்றது.

குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. முதல் இரவில் பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளப்பட்டது. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதுவும் ஏற்கத்தக்கதல்ல.

பராஅத் நோன்பு

ரமழானை வரவேற்கும் விதத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத் தொடக்கத்தில் இருந்தே நோன்பு நோற்றுள்ளார்கள். மற்ற மாதங்களை விட அதிகமாக ஷஃபானில்தான் நோன்பு வைத்துள்ளார்கள். 15 நாட்களும் நோன்பு வைத்துள்ளார்கள். மற்றபடி, ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என அண்ணலார் கூறியதாக உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீன மானவை. ஷஃபான் 15க்குப் பிறகு நோன்பே வைக்கக்கூடாது என்றே ஹதீஸ்கள் தடை செய்கின்றன.

ஷஃபான் மாதத்தின் பாதியை அடைந்து விட்டால் நோன்பு வைக்காதீர்கள்! (அறி விப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூ தாவூது, நஸயீ, திர்மிதி, இப்னு மாஜா). வழமையாக நோன்பு வைப்போர் மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

சிறப்பு வணக்கங்கள் – மூன்று யாஸீன்கள்

இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் ‘மூன்று சூயாசீன்’ ஓதி துன்பம் துயரங்கள் நீங்கி பாவங்கள் மன்னிக்கப்படவும் (1) நீண்ட ஆயுளைப் பெறவும் (2) நிலையான செல்வத்தைப் பெறவும் (3) துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் ‘தக்தீர்’ என்னும் விதி நிர்ணயிக்கப்படுகின்றது என்னும் நம்பிக்கைதான் மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கத்திற்கு காரணமாகும்.

கப்று ஸியாரத்

இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற் றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியா ரத்,பரார்த்தனைகள் நடை பெறும்.

சிறப்புத் தொழுகைகள்

இஷா தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.

இஷா தொழுகைக்குப்பின் இரண்டிரண்டு ரக்அத்களாக 12 ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.

‘அலியே! ஷஃபானின் 15-வது இரவில் நூறு ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் நூறு தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!’ போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்படுகிறார்கள்.

தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸும் கிடையாது.

இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்பார்கள்.

நன்மைகள் தானே

தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவற்றைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என நம்மில் பெரும் பான்மையினர் பலரும் நினைக்கலாம்.

‘எவர் நம்மால் கட்டளையிடப்படாத அமல்களை செய்கிறாரோ, அவை அல்லாஹ் விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவில் இன்றைக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது உண்மையிலேயே மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களால் காட்டித்தரப்படாத ஒரு வழிமுறையை முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக் கொண்டு செய்துவரக் கூடாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். குற்றமாகவும் ஆகிவிடும்.

ஹதீஸ்களின் நிலை

(1) ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில் ‘அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடு களுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கின்ற திர்மிதீ இமாம் அவர்களே, இமாம் புகாரி (ரஹ்) அவர் கள் இது பலவீனமானது எனக்கூறியதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

(2) இப்னு மாஜாவில் ‘ஷஃபானில் பதினைந்தாம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள்’ என நபி அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸும் சரி யானது அல்ல.

(3) ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி அவர்கள் கூறினார்கள். இதனையும் முஹத்தி ஸீன்கள் ஏற்கவில்லை. இதேபோல் மற்ற ஹதீஸ்களையும் நிராகரிக்கிறார்கள்.

நன்மையான நோன்புகள்

வாரந்தோறும் திங்கள், வியாழன் நாட்கள், மாதந்தோறும் பிறை 13,14,15 நாட்கள், ஆஷூரா நாள், ஷவ்வால் ஆறு நோன்புகள் என பல நாட்கள் நோன்பு வைக்க சிறந்த நாட்கள் என்றும் அவற்றுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும் என்றும் அண்ண லார் சொல்லியுள்ளார்கள். ஆனால், இந்நாட்களில் நோன்பு வைப்பதைப் பற்றி நினைத் துக்கூடப் பார்ப்பதில்லை. அதேசமயம், அண்ணலார் காட்டித்தராத ஷஃபான் 15 நோன் புக்கு பயங்கர முக்கியத்துவம் கொடுக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண் டும்.

பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி பதினைந்தாவது இரவில் தொழும் நூறு ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும் — இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது. இதே போன்ற கண்டனம் ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இறைவனும் இறைத்தூதரும் சொல்லிக்காண்பித்தபடி இஸ்லாமிய நன்னெறியைப் பின்பற்றி வாழ்கின்ற நற்பேற்றை உங்களுக்கும் எங்களுக்கும் வல்ல அல்லாஹ் அளிக்க வேண்டும் என்னும் பிரார்த்தனையோடு …
by umari

சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!

"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

"அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


"பண்பாடற்ற ஸியோனிஸ சக்திகள் தம்முடைய குறுகிய நோக்கங்களின் பொருட்டு முழு மனித குலத்தையும் தங்களுடைய சுயநல சடவாத, பொருள் முதல்வாத சித்தாந்தங்கள் எனும் இரும்புச் சக்கரங்களின் கீழிட்டு காலங்காலமாக நசுக்கிவருகின்றன" என்று அஹ்மதி நிஜாத் சாடியுள்ளார்.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் பலஸ்தீன் நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளமை, அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய மற்றும் ஈராக்கிய யுத்தங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை என்பன போன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்குச் சகாவான இஸ்ரேலும் ஒன்றிணைந்து தம்முடைய காலனித்துவ அடைவுகளுக்காக முழு மனித விழுமியங்களையும் பலிகொடுக்கத் தயாராக உள்ளமையைத் தான் நிரூபித்துள்ளன" என்று ஈரானிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

"இன்று உலகில் ஒரு குற்றச்செயல், ஊழல், சர்வாதிகாரம் என மனித இனத்தை இழிவுபடுத்தும் எந்த ஒன்றையேனும் கடந்துபோக நேர்கையில், அதன் பின்னணியில் ஸியோனிஸ இராச்சியமும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவர்கள் எதனைக் காவு கொடுத்தேனும் தம்முடைய சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதில்தான் மும்முரமாக உள்ளனர். அதைத் தவிர, வேறு எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை" என்றும் ஈரானிய அதிபர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.