தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

சாய்பாபா – நறுமண சாமியாரின் சொகுசு வாழ்க்கை விபரங்கள்

சாய்பாபாவின் ஆசிரமத்தில் சோதனை செய்யும் அதிகாரிகள் அவரது தனி அறையான யஜுர் மந்திரில் கிலோ கணக்காய் தங்கம், வெள்ளி எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரின் அன்றாட பயன்பாட்டுக்காக பயன்படுத்திய அழகு சாதன பொருட்களை பார்த்து திகைத்து போய் உள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட ஷேவிங் செட்கள், விலை உயர்ந்த சர்வதேச செண்டுகள், ஷாம்புகள், சோப்கள் மற்றும் நாப்கின்கள் அவரின் அறை முழுக்க இருந்ததாக தெரிகிறது. எப்போது உபதேசம் செய்ய வரும் போதும் நறுமணங்களை பூசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக சாய்பாபா இருந்ததாக தெரிகிறது. மேலும் உலகின் முண்ணணி பிராண்டுகளின் கைக்கடிகாரங்களும் உயர்ந்த ரக உலர் பழங்களின் பாக்கெட்டுகளும் ஏராளமாய் இருந்துள்ளது.

அது போல் பக்தர்கள் நன்கொடையாய் கொடுத்த ஏராளமான பொருட்கள் திறக்கப்படாமலேயே உள்ளது. 7 கிலோ எடை கொண்ட தங்க மாலைகள், 75 வெள்ளி டம்ளர்கள் உள்ளிட்ட பல அன்பளிப்புகள் அப்படியே திறக்கப்படாமல் உள்ளன. உலகில் வாழும் சாமியார்களில் வேறு யாருக்கும் பக்தர்கள் இது போல் கொடுத்ததை தாங்கள் கண்டதில்லை என்று சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.

அது போல் 10,000 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகள், பிராண்டட் சட்டைகள், வேட்டிகளும் சாய்பாபாவின் அந்தரங்க அறைக்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. 2005-லிருந்தி இவ்வறையில் வசிக்கும் சாய்பாபா இவ்வறையில் டிரஸ்டின் மூத்த உறுப்பினர்களை கூட இவ்வறைக்குள் அனுமதித்ததில்லை என்பதும் அவரின் அந்தரங்க உதவியாளர் சத்யஜித்க்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரமளான் மாதத்தின் சிறப்பு


அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் வெகு விரைவில் புனிதனிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத்தை அடைவதற்கு முன் அதன் சிறப்பையும் கண்ணியத்தையும் , நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.

அல்லாஹ் ரமளான் மாதத்தை சிறப்புமிக்க மாதமாக ஆக்கியிருக்கிறான் காரணம் நமக்கு நேர்வழி காட்டும் சங்கைமிக்க திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் மாதம் திகழ்கிறது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)
ரமளான் மாதத்திற்கு சிறப்பாக அமைந்த திருக்குர்ஆனை அதிகமாக இந்த மாதத்தில் ஓதவேண்டும் குறிப்பாக அதன் பொருளோடு ஓதுவது சிறந்தது.

நோன்பு

ரமளான் மாதத்தின் மிகப் பெரும் பரிசாக அல்லாஹ் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறான்.நோன்பின் நன்மைகளை பற்றி நபி(ஸல்) அவர்கள் பல இடங்களில் சிலாகித்து கூறி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: முஸ்லிம் 1945)
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1894, 1904)
சாதாரணமாக நோன்பிற்கு அதிக நன்மை இருந்தாலும் ரமாளான் மாதத்தின் நோன்பிற்கு வேறு எந்த வணக்கத்திற்கும் இல்லாத அளவு சிறப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.ரமளான் மாதத்தில் நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்து நோன்பு நோர்பவர்களுக்கு நாம் செய்த முன் பாவங்களை மண்ணிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.நோன்பு எனும் சிறிய அமலுக்காக இவ்வளவு பெரிய பரிசை,நன்மையை விட்டுவிடக் கூடாது.
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 38, 1901, 2014)
இந்த ஹதீஸில் நாம் மேலும் கவனிக்க வேண்டியது ,நோன்பை நோற்கும் முன் அல்லாஹ் மேல் அதிக நம்பிக்கை கொண்டு இந்த செயலுக்காக அல்லாஹ் மிகப் பெரிய கூலியை நமக்கு வழங்க இருக்கிறான் என்று உறுதியாக நம்புபவருக்கே முன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.

லைலதுல் கத்ர்

இந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)
இந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.

பிரார்த்தனை

நோன்பு நோர்கும்போது நம் பிரார்த்தனைகளை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நம்முடைய தேவைகளையும் ,செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும் அதிகமாக இறைவனிடம் கேட்டு அழுது மன்றாட வேண்டும் ஏனெனில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப் படுவதில்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறி இருக்கிறார்கள்.
'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).
தர்மம்

ரமளான் மாதத்தில் நம்முடைய தர்மத்தை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் வாரி வழங்கியதை ஜிப்ரில்(அலை) அவர்களே சிறப்பித்து கூறி இருப்பதை புகாரியில் நாம் பார்க்க முடிகிறது.
நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமளான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி,வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமளான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902
அனைத்து தரப்பு மக்களும் நல்ல விதத்தில் பெருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மத்தை கடமையாக்கி உள்ளது.ஒரு ஆளுக்கு 10 ரூபாயை மோதினாருக்கு கொடுத்து நம் கடமையை செய்து விட்டோம் என்று இல்லாமல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு அளவு அருசி(தானியம்) அல்லது அதற்குண்டான தொகையை கொடுக்க வேண்டும்.இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினானால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1503)
ஒழுக்கம்

ஒரு முஸ்லிம் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் ஒழுக்கத்தை பேணுவதை தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.ஆயினும் இந்த ரமளான் மாதத்தில் கூடுதல் பேணுதலாக இருப்பது அவசியம்.கஷ்டப்பட்டு 30 நாட்கள் நோன்பு நோற்று இரவு நின்று வணங்கியும் எந்த பயனும் இல்லாமல் போய்விடக் கூடாது. தீய செயல் செய்யக் கூடியவர் பசியாக இருந்து நோன்பு நோற்பது எனக்கு தேவையில்லாதது என்று கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1903, 6057
பொய் சொல்வதை நாம் சிறிய பாவம் என்றே எண்ணி வருகிறோம் ஆனால் பொய் பேச்சு நோன்பை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு தீய செயலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.வியாபாபாரிகள் தங்களுடைய வியாபாரம் பெருக வேண்டும் என்பதற்காக சர்வ சாதாரணமாக பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் ! தங்களுடைய நோன்பின் நன்மையை பாதுகாத்துக் கொள்ளட்டும்.நம் சமுதாயத்தில் அவதூறு பரப்புவதும் மிக சாதாரணமாக நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது குறிப்பாக பெண்கள் அவதூறு பரப்புவதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.இவர்களும் தங்கள் நாவை பாதுகாத்து நல்ல விஷயங்களை பேசி நன்மையை தேடிக் கொள்ளவேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் கூற வேண்டிய முக்கியமான ஒன்று தொலைகாட்சி.தொலைகாட்சியில் நல்ல விஷயங்களும் இருந்தாலும் கெட்ட விஷயங்களே அதிகமாக இருக்கிறது.ஷைத்தான் தன் வேலையை சுலபமாக செய்ய ஒரு கருவி.இஸ்லாமிய நிகழ்ச்சி,செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொலைகாட்சியை பயன்படுத்தி விட்டு ஆட்டம் பாட்டம் ,சினிமா போன்ற மார்க்கம் தடை செய்த நிகழ்ச்சிகளை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தொலைக்காட்சி பக்கம் நெருங்க அனுமதிக்காதீர்கள்.

எனவே அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! வர இருக்கும் ரமளான் மதத்தில் இருந்தாவது பொய் சொல்வதை விட்டும் ,அவதூறு பரப்புவதை விட்டும்,மார்க்க முரனான காரியங்களில் கலந்து கொள்வதை விட்டும் இன்னும் பிற தீய காரியங்களை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இது போன்ற தீய காரியங்களை தவிர்த்து விட்டு திருக் குர்ஆனை ஓதுதல்,தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை அதிககப்படுத்திக் கொள்ளுங்கள்.நாம் மேற் கூறிய காரியம் ரமளான் மாதத்திற்கு மட்டும் உள்ளது அல்ல மாறாக மற்ற அனைத்து மாதத்திற்கும் நாம் பேணுதலாக இருப்பதற்கு இது ஒரு பயிற்சி காலமாக இருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளவேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)
நாம் இறைவனை அஞ்சுவதர்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளதாக நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.இறைவனை அதிகமாக அஞ்சி நற்காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு தீமையான காரியங்களில் இருந்து விலகி ,வர இருக்கும் ரமளான் மாதத்தை பயனுள்ளதாகவும் அதிக நன்மை பெற்றுத் தரக்கூடியதாகவும் ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

ஆசிரியர் : முஹமது ரஃபீக்
ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்

வெள்ளி

சத்தியத்தை மெய்ப்படுத்திய அடையாளங்கள்!

இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கியமான அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று மறுமை நாளை நம்புவதாகும்.  இந்த நம்பிக்கைதான் மனிதனை உலகத்தில் நிம்மதியுடன், இறை வனுக்கு அஞ்சி வாழ வழிவகுக்கும். இந்த நம்பிக்கையை இஸ்லாம் மிக ஆழமாகவும், ஆணித் தரமாகவும் போதிக்கிறது.

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எந்தச் சந்தேகமும் இல்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யாரிருக்கமுடியும்?!'        (அல்குர்ஆன் 4:87)

என்று மறுமைநாள் வந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை வல்லநாயன் அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான்..

நபி(ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தையும், மரணத்திற்குப்பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்தபோது, அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட, மறுமை வாழ்வையே கடுமையாக எதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறதா? என்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்றும் கூறலாம். அவர்கள் மறுமை நம்பிக்கையை மறுத்ததை வல்ல ரஹ்மான் பின்வருமாறு திருக்குர்ஆனில் பதிவு செய்கிறான்.

'மேலும் மனிதன், தான் படைக்கப்பட்டதை மறந்துவிட்டு நமக்கு உதாரணம் கூறுகிறான். எலும்புகள் மக்கிவிட்ட நிலையில் அதை அவனால் உயிர்ப்பிக்க முடியுமா? என்று அவன் கூறுகிறான்'  (அல்குர்ஆன் 36:78)

'எலும்புகளாகவும் மக்கிப்போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பின் புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுவோமா என்ன? என்றும் அவர்கள் கேட்கின்றனர்'      (அல்குர்ஆன் 17:49)

இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது. அந்த மறுப்பு எந்தவித நியாமும், அர்த்தமும் அற்றது என்று வல்ல நாயன் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

'கியாமத்நாள் மீது சத்தியம் செய்கிறேன். குறை கூறிக் கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன். மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்' (அல்குர்ஆன் 75:1-4)

வல்ல அல்லாஹ்வின் இந்த பேராற்றலை உணர்ந்த இன்னொரு கூட்டமோ மறுமை வாழ்வில் உறுதியாக மறுமை வாழ்வில் முழு நம்பிக்கை வைத்திருந்தது. அதன் வெளிப்பாடாக தரக்குறைவான வார்த்தைகளால் தாங்கள் ஏசப்பட்டபோது சகித்துக் கொண்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.  நாடு கடத்தப்பட்டார்கள். அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்கள் அவர்களை சிறிதளவும் அசைக்க முடியவில்லை.

குறைந்த எண்ணிக்கையினராகவும், பலவீனர்களாகவும் இருந்தும் பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருக் காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கைதான் காரணம்! மறுஉலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஒரு சமுதா யத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது!
கல்லுக்கும்-மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது (பார்க்க அல்குர்ஆன் 33:39) இந்த நம்பிக்கையினால்தான்!

தன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும், தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (பார்க்க அல்குர்ஆன் 59:9) இந்த நம்பிக்கையினால்தான்.

ஒற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம், ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது(பார்க்க அல்குர்ஆன் 3:103) இந்த நம்பிக்கையினால்தான்.

மதுவில் வீழ்ந்து கிடந்த சமுதாயம் (பார்க்க அல்குர்ஆன் 5:90)அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால்தான். 

தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும்கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது (பார்க்க அல்குர்ஆன் 60:12) இந்த நம்பிக்கையினால்தான். 

எந்த மனிதரிடமும், எந்த உரிமையையும் நாடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (பார்க்க அல்குர்ஆன் 2:273) இந்த நம்பிக்கையினால்தான்.

தங்களுக்கு நல்லது இது, கெட்டது இது என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (பார்க்க அல்குர்ஆன் 3:104) இந்த நம்பிக்கையினால்தான்.

மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மறுமை நம்பிக்கை ஒருபுறம் மகத்தான மாறுதலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கை அற்றவர்களோ கட்டுப் பாடற்ற வாழ்வில் லயித்துக்கெண்டு மறுமை நாளைப்பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும், அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்களைக் கொண்டு முன்கூட்டியே அறிவித்துச் கொடுத்துள்ளான். அவற்றில் பெரிய அடையாளங்களும், சிறிய அடையாளங்களும் அடங்கியுள்ளன. பெரிய அடையாளங்கள் இதுவரை நிகழவில்லை. சிறிய அடையாளங்களில் ஓரளவு நாம் வாழும் காலத்திலேயே நடந்துவருகின்றன. அவற்றை அறிவதன் மூலம் அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றில் நிகழ்ந்துவிட்ட, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சிறு முன்னறிவிப்புகளை மட்டும் இங்கு தெரிந்து கொள்வோம்.

காலம் சுருங்கும்!

'காலம் சுருங்கும் வரை அந்தநாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பது நபியவர்கள் காட்டிய அடையாளம்'                  (நூல்: திர்மிதீ)

காலம் வெகுவேகமாக ஓடுவதும் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து, அவன் கண்டுபிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கிவிட்டதைக் காண்கிறோம். ஒரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஒரு நாளில் சர்வ சாதாரணமாகக் கடக்கப் படுகின்றது. 

ஒரு வாரத்தில் செய்யப்படத்தக்க வேலைகள் ஒரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் இன்று உள்ளன. எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு உலகையும் எட்டி விடுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களும்கூட அந்தநாள் சமீபித்து வருகின்றது என்பதற்கான அடையாளமே.

'யுக முடிவு நாள் நெருங்கும்போது விபச்சாரமும், மதுவும் பெருகும்' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்;.(ஆதார நூல்: புஹாரி 80-81, முஸ்லிம்)   

'பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.       நூல்: புஹாரி 1036

'ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனிமேல் தோன்றுவார்கள்' என்பதும் நபிமொழியாகும்.            நூல்: முஸ்லிம் 3971

'தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    நூல்: ஹாகிம் 4-493

'மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்' என்பது நபிமொழி. நூல்: நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

'பள்ளிவாசல் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    நூல்: ஹாகிம் 4-493

'கடைகள் பெருகி, அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.               நூல்: அஹ்மத்

'பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரி;ப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி.         நூல்: புஹாரி

'தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவுநாள் ஏற்படாது' என்பது நபிமொழி. நூல்: அஹ்மத் 
(பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டக்கூடிய பலரை இன்று நாம் காண்கின்றோம்)

கவனிப்பாரற்ற நிலையில் பெற்றோர்கள்!

'ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்'          அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 4777

ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் என்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும். இன்றைக்குப் பரவலாக இந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர். 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள்!

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும்  வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வர்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்' (ஆதார நூல்: முஸ்லிம்)           

'செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலை ஏற்படும் வரையிலும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் வரையிலும் அந்த நாள் ஏற்படாது' (ஆதார நூல்: முஸ்லிம்)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்புகள் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகில் பல நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாழ்வும், புரட்சிகரமான மாறுதல்களும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.

பொறுப்பற்றவர்களிடம் பொறுப்பு!

'நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு! என்று நபியவர்கள் கூறியபோது, எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு' என்று விடையளித்தார்கள். (ஆதார நூல்: புகாரி)

இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச மின்றி உலகத்து ரிக்கார்டுகளை சரிசெய்து ஏமாற்றி அபகரித்துக் கொண்டவர்களை இன்றளவும் நாம் காண்பது அந்த நாளுக்கு எவ்வளவு நெருக்கமாகிவிட்டோம் என்பதைத் தெளிவாக்குகின்றது.
சாட்டையின் ஓரமும், செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும்!

'சாட்டையின் ஓரமும், செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது' என்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு. (ஆதார நூல்: திர்மிதீ)

மனிதன் மட்டுமே பேச இயலும் என்ற நிலைமாறி ஒலி நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறிவிட்டான். நேரடியாகப் பேசும் என்று அர்த்தம் கொண்டால் அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. செருப்பு வாராகப் பயன்படும் பொருட்கள்கூட ஒலி நாடாக்களாக மனிதனிடம் பேசும் என்று பொருள் கொண்டால், அந்த நிலையை மனிதன் அடைந்துவிட்டான்.

அன்றும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை! என்றும் நிகழக்கூடியவை!
'யுக முடிவு நாள் வரும்வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக்கொண்டே இருக்கும்'(முஸ்லிம்)      

மேலே கூறப்பட்டுள்ள சிறு அடையாளங்கள் மட்டுமின்றி, மேலும் 10 பெரும் அடையாளங்களை மறுமை நாள் நெருங்குவதற்கான அத்தாட்சிகளாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எடுத்து காட்டியுள்ளார்கள்.  அவற்றில் சில அடையாளங்கள் ஏற்படும் போது, பாவ மன்னிப்பையும் வல்ல அல்லாஹ் ஏற்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இந்த நிரந்தரமற்ற உலகத்தில் மரணம் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே நாம் அறியாத காரணத்தினால், அந்த மகத்தான நாள் வருவதற்கு முன் நம் வாழ்க்கையை வல்ல அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காட்டிய முறைப்படி அமைத்துக் கொண்டு, ஈருலக வெற்றியை பெற முயலுவோம்.  அதற்கு வல்ல ரஹ்மான் துணை புரிவானாக!

source: TNTJ DUBAI

வியாழன்

உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!



தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..
பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்,
இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.
ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.
அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம்,
நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.
அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.
எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லை, எங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, சொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லை, நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோ, பிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி



அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.
அல்குர்ஆன் 61:8

புதன்

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதின் அடிப்படைகள்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குபெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும்சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். பெயர்சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச்சட்டங்களை தெரிந்து கொண்டால் மிக எளிதாகநாம் முடிவெடுத்து விடலாம். நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமானபெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில்அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின்அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­லி) நூல் : முஸ்லி­ம் (4320)


இறைவனுக்கு இணையானவராக காட்டும் வகையில் பெயர் சூட்டுவதைமிகக்கடுமையாக கண்டித்துள்ளார்கள். மேலும் இவ்வாறு பெயர் வைத்துக்கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும்எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில்அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர்யாரெனில், (உலகில்) 'மன்னாதி மன்னன்' எனப் பெயரிடப்பட்ட மனிதர்தாம்.அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறுயாருமில்லை.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) நூல் : முஸ்லி­ம் (4339) புகாரி (6205)என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் ''அஸீஸ்'' (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் ''அப்துர்ரஹ்மான்'' (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள்.அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி­) நூல் : அஹ்மத் (16944)ஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (ஹானீ) அவர்களை அவருடைய கூட்டத்தினர் ''அபுல் ஹகம்'' (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டிஅழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். நபி (ஸல்) அவர்கள்அவரை அழைத்து அல்லாஹ்தான் ''ஹகம்'' (நீதிபதி) ஆவான். அவனிடம் தான்''தீர்ப்பு'' உள்ளது. நீர் ஏன் ''அபுல் ஹகம்'' (நீதிபதியின் தந்தை) என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டீர்? என்று கேட்டார்கள். அதற்கவர் என்னுடைய சமுதாயம் ஏதாவது ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள் என் றுகூறினார். அதற்கு நபி (ஸல்) இது அழகானதல்ல எனக் கூறிவிட்டு உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார்.அவர்களில் மூத்தவர் யார்? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் சுரைஹ் என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீ இனி ''அபு சுரைஹ்'' (சுரைஹின் தந்தை) என்று அவருக்கு பெயர் சூட்டினார்கள்.நூல் : அபூ தாவூத் (4304
நபியவர்களின் புனைப் பெயரை வைப்பதின் சட்டம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்.ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற 'அபுல் காசிம்' ஆவேன்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­லி) நூல் : முஸ்­லிம் (4323)ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அதுகுற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரானமுஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரைவைப்பது கூடாது என்றுதான் தடுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே 'அபுல் காசிம்' ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்குகொடுத்தான்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : அஹ்மத் (9226)மேலும் நபியவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும்வைத்திருந்தார்கள். அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டுநபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள். இதன் காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுடைய குறிப்புப் பெயரைவைப்பதற்கு தடைவிதிக்கிறார்கள். அனஸ் பின் மா­ரிக் (ர­லி) அவர்கள்அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் 'அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!)''என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள்.அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) 'நான் இவரைத்தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!)'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனதுபெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது(அபுல்காசிம் எனும்)குறிப்புப்பெயரை சூட்டிக்கொள்ளாதீர்கள்!'' என்றார்கள்.நூல் : புகாரி (2120)இன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடைஇன்றைய காலத்திற்கு பொருந்தாது.எனவே ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால் குற்றமாகாது.ஒருவரை தீயவராக காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதைவெறுத்துள்ளார்கள். என் தந்தை (ஹஸ்க்ஷ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்கüடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''உங்கள்பெயரென்ன?'' என்று கேட்டார்கள். அவர்கள், ''ஹஸ்க்ஷ்ன்'' (முரடு) என்றுகூறினார். நபி (ஸல்) அவர்கள், ''(இல்லை) நீங்கள் (இனிமேல்) 'சஹ்ல்' (மென்மை)'' என்று சொன்னார்கள். அவர், ''என் தந்தை சூட்டிய பெயரை நான்மாற்றிக்கொள்ளமாட்டேன்'' என்றார். அதற்குப் பின்னர் எங்கள்குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்கüல்) முரட்டுத்தனம்நீடித்தது.அறிவிப்பவர் : முஸய்யப் பின் ஹஸ்க்ஷ்ன் (ரலி) நூல் : புகாரி (6190)அப்துல்லாஹ் பின் உமர் (ர­லி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்'ஆஸியா' (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, ''நீ (பாவியல்ல), ஜமீலா(அழகி)'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­லி) நூல் : முஸ்லிம் (4332)இங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா வாகும். இதுஅய்ன், ஸாத், யா, தா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.அ­ஃப், சீன், யா, தா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரைவைத்துக் கொள்ளலாம். இது பிர்அவ்ன் உடைய மனைவி அன்னை ஆசியா(அலை) அவர்களின் பெயராகும்
நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த நபர்களில் ''அஸ்ரம்' (நன்மைகளைமுறிப்பவர்) என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்)அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் ''அஸ்ரம்' (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறினார். அதற்கு நபியவர்கள் இல்லை நீ''சுர்ஆ'' (விளைவிக்கும் பூமி) என்று (அவருக்கு பெயர் சூட்டினார்கள்)அறிவிப்பவர் : உஸாமா பின் உஹ்தர் (ரலி) நூல் : அபூதாவூத் (4303)மக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறுசெய்பவர்) என்ற பெயர்கொண்ட ஒருவர் இஸ்லாத்தை தழுவினார். நபியவர்கள் அவரின் பெயரைமுதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்) என்று மாற்றினார்கள். அவருக்குபெயர் மாற்றம் செய்ததையும், இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தைதழுவமாட்டார் கட்டுப்படுபவர்தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும்குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். மக்கா வெற்றிநாளின் போது நபி (ஸல்) அவர்கள் கூற முதீவு (ரலி) அவர்கள்செவியேற்றார்கள் : (நபியவர்கள் கூறினார்கள்) இந்த நாளுக்குப் பிறகுகுரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு)மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை '' (முதீவு) '' தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லை. அவரின்பெயர் ''ஆஸி'' (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்று இருந்தது. அவருக்குநபியவர்கள் ''முதீவு'' (கட்டுப்படக்கூடியவர்) என்று பெயர் சூட்டினார்கள்.நூல் : அஹ்மத் (15446)பஷீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பஷீர்(நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள்
அறிவிப்பவர் : பஷீர் (ரலி) நூல் : அஹ்மத் (20950)தன்னைத் தானே பரிசுத்தப் படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதைதடைசெய்திருக்கிறார்கள்.
ஸைனப் (ர­லி) அவர்களுக்கு (முதரில்) 'பர்ரா' (நல்லவள்) என்ற பெயர்இருந்தது. அப்போது ''அவர் தம்மைத் தாமே பரிசுத் தப்படுத்திக்கொள்கிறார்''என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்றுபெயர் சூட்டினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி) நூல் : முஸ்லிம் (4335)நான் என் புதல்விக்கு 'பர்ரா' (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போதுஸைனப் பின்த் அபீசலமா (ர­ரி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதரில்) எனக்கு 'பர்ரா' என்ற பெயரே சூட்டப் பெற்றது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் எனஅல்லாஹ்வே நன்கறிந்தவன்'' என்று சொன்னார்கள். மக்கள், ''அவருக்குநாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ் வின்தூதர் (ஸல்) அவர்கள் ''அவருக்கு 'ஸைனப்' எனப் பெயர் சூட்டுங்கள்''என்றார்கள்.நூல் : முஸ்லிம் (4337)சில பெயர்கள் அழகிய பொருளூடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் கூறிஅழைக்கும் போது அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகியதன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலைஏற்படும். இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைதடைசெய்தார்கள். ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டுகொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள்.

(
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ர­ரி) அவர்களுக்கு(முத­ரில்) 'பர்ரா' என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் 'ஜுவைரியா' (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'பர்ரா'விடமிருந்து(நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்' என்று சொல்லப்படுவதைஅவர்கள் வெறுத்தார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­ரி) நூல் : முஸ்லிம் (4334)சமுரா பின் ஜுன்தப் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற் றியாளன்), ரபாஹ்(இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்குபெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்
நூல் : முஸ்லிம் (4328)சமுரா பின் ஜுன்தப் (ர­லி)அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள்நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்துரில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ்(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர்(அல்லாஹ் மிகவும் பெரியவன்).இவற்றில் எதை நீர் முதரில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை'' என்றுகூறிவிட்டு, ''உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ்(இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றி யாளன்) என்றோ, அஃப்லஹ்(வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர்சொல்ரி) 'அவன் அங்கு இருக்கி றானா' என்று நீர் கேட்கும்போது, அவன் அங்குஇல்லாவிட்டால் 'இல்லை' என்று பதில் வரும். (அது திருப்தியளிப் பதற்குப்பகரமாக நற்குறியற்ற பதிலாக உங்கள் மனதுக்குப் படலாம்)'' என்றுகூறினார்கள்.அறிவிப்பாளர் சமுரா (ர­லி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள்மட்டுமே ஆகும். இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்துநீங்கள் அறிவிக்க வேண்டாம்.நூல் : முஸ்லிம் (4330)நபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதை கண்டுகொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களி­ருந்துவிளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவருக்கு ரபாஹ் (இலாபம்)என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார்.அறிவிப்பவர் : ஸலாமா (ரலி) நூல் : அஹ்மத் (16542)ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்)அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார்(சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம்எனத் தடை விதிக்க விரும் பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும்கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும்கூறவில்லை.பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ர­லி) அவர்கள்அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும்(அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.நூல் : முஸ்லிம் (4331)நம்முடைய குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது மேற்கண்டஅடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும்.ஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல்இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது.ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள்மற்றும் ஸஹாபி பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும்கிடையாது. இவற்றை நபியவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.
மேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச்சூட்டுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெண்களுக்கு பெயர் சூட்டும் போதுஎந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்துதான்வைக்க வேண்டும் என்பது மூட நம்பிக்கையாகும் . நபியவர்கள் அப்படி எந்தஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை. ஒருவர் விரும்பினால் தன்னுடையமகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம். அதனுடன்இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம். ஆனால் இப்படி வைப்பதுதான்சிறந்தது என்று எண்ணி வைத்தால் அது பாவமானதாகும்.