தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!

                                            இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்ப
வம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்து பிரதமராக ஆகுவதிற்கு முன்பாக வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஸ் டூரிஸ்ட்டாக சென்னை வந்திருந்திருந்து அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக(கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஸ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்கு சப்தம் போட்டு பேசினாராம். அவர் பேசிய சப்தம் கேட்டு வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய அறையினை விட்டு வெளியே வந்து அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள் போய் உங்கள் கர்னலிடம சொல்லுங்கள் அவருடன் பேசுகிறவர் லண்டனில் இருக்கிறார். அது தெரியாது கர்னல் நேராக இருப்பது போன்று சப்தம் போடுகிறார் என்று சொன்னாராம். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், முன்பு இருந்த தொலைபேசி அடுத்தவர்க்கு தொல்லை பேசியாக இருந்ததாம். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் தொலை பேசிக்கே வேலையில்லாது கைபேசி வந்து விட்டது. ஆனால் அதே தொலைபேசி இளசுகளை சீரழிக்கும் கைபேசியாக மாறிவிட்டது தான் இன்றைய சமுதாயத்திற்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.
செல்போன் வந்தபிறகு வயர் இணைப்பிற்கு முக்கியத்துவம் இல்லாத நிலமை வந்துவிட்டது. சாதாரண கூலி முதல் கோமான் வரை சட்டைப் பையில் கொண்டு செல்லும் அத்தியாசிய பொருளாக மாறிவிட்டது ஆச்சரிமில்லைதான். செல்போனின் முக்கிய செயல்பாடுகளை தெரியாதவர்கள் இல்லை யென்றே சொல்லலாம். இருந்தாலும் சில முக்கிய செயல்பாடுகளை இங்கே சொல்லலாம் என நினைக்கின்றேன்:

புதன்

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்க்கு...!

புனித மிக்க ரமாலான் மாதம் முடிந்து,ஹஜ்ஜை எதிர்நோக்கி உள்ளோம்.இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்க்கு வாய்ப்பு கிடைத்தவர்கள்,மனதளவில் ஹஜ் செல்வதற் க்கு தங்களை தயார்படுத்தத் துவங்கி விட்டார்கள்.இந்தசமயத்தில் ஹஜ் செல்வோர் தங்கள் உடல் குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன்.
நான் 1997ஆம் ஆண்டு சவுதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது பணியாற்றிய எனது அனுவத்தின் சில ஆலோசனைகளை இனைத்து உள்ளேன்.
1)ஹஜ் செல்ல நாடி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் முன் தங்கள் உடன்நலன்களை நல்ல முறையில் பரிசோதித்து,ஹஜ்ஜுக்கு செல்ல தயார் பண்ணிக்கொள்ள வேண்டும்.

ஹாஜி - யார் ?

இன்று திறப்பு விழா காணும் பிரியாணி ஹோட்டல் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று விளம்பர போஸ்டர்கள் வீதிகளில் ஓட்டப் படுவதை பார்த்திருக்கின்றோம்.ஆனால் அந்தப் போஸ்டர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக,காசிம் மரைக்காயரின் ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று வழியனுப்பு விழா போஸ்டர்களும்,ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும்போது, ஹாஜி பக்கிர் லெப்பையை வரவேற்கிறோம் என்று வரவேற்பு போஸ்டர்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அச்சடிக்கப் பட்டு ஒட்டப்படுகின்றன.

ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை,நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் கடமையாகி விடாது. யாருக்கு ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கு வசதியிருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்வது கடமையாகும்.
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குரான்3:97)

வெள்ளி

ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?


ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?
ஃபர்சான்
பதில்
ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடி கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உரையாற்றியதாக வரும் செய்தியைத் தவறான முறையில் புரிந்து கொண்டதால் இவ்வாறு செய்து வருகின்றனர்.

வியாழன்

இணையத்தில் சிறுவர்களைக் காத்திட!

இளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர் களை வழங்கி வருகிறது.

அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.


இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாய கரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.

மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர் களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே. 

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே, நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:
  1. பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.
  2. குழந்தைகளின் வயதின் அடிப்படை யில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.
  3. அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். 
  4. குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம். 
  5. "எப்போதும் அனுமதி' மற்றும் "எப்போதும் தடை செய்திடு' என இரு வகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம். 
  6. பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட், மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.
  7. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்.
  8. தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம். 
விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.

K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது. 

இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக, www.k9webprotection.com/getk9webprotectionfree என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். 

இதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகை களிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.

செவ்வாய்

பெரியகுளம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையில் கடந்த 02.10-2011 அன்று பாழாக்கப்படும் ஃபஜர் தொழுகை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. 







தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா


தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா
s.a.s.காமில்
பதில்
தொழுகை என்பது இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான உரையாடலாகும். இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1151
ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் 1266
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியார் தம் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 832
ஒருவருக்குத் தமிழ் மொழி மட்டும் தெரியுமானால் அவர் தான் விரும்பிய பிரார்த்தனைகளை அந்த மொழியில் தான் செய்ய முடியும். அவரவருக்குத் தெரிந்த மொழியில் பிரார்த்தனை செய்தாலே விரும்பிய பிரார்த்தனையைச் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைச் செயல்படுத்த முடியும். எனவே தொழுகையில் தமிழில் பிரார்த்தனை செய்வது தவறல்ல.
குர்ஆனில் இறைவன் கற்றுத்தரும் துஆக்களையும்,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் அரபு மொழியில் அப்படியே உள்ளபடி ஓத வேண்டும். அரபு மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இதன் நோக்கம் அல்ல. அல்லாஹ்வின் வார்த்தையையும் நபியின் வார்த்தையையும் அப்படியே கூற வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். குர் ஆன் ஹதீஸில் உள்ள துஆக்களை அரபு மொழியில் அதற்கு இணையான வேறு சொற்களைப் பயன்படுத்தினால் அந்த துஆக்களை ஓதியதாக ஆகாது.
அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆன் அரபுமொழியில் இருப்பதால் அதை அப்படியே தொழுகையில் ஓதினால் தான் நாம் இறைவனுடைய வார்த்தைகளைக் கூறியவர்களாக முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகள் அரபு மொழியில் அமைந்துள்ளது. இந்தப் பிரார்த்தனைகளை நபியவர்கள் கூறிய வார்த்தை மாறாமல் அப்படியே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
247حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ رواه البخاري
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப்பக்கம் சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் "நபி'யை நான் நம்பினேன்.'' என்று பிராத்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகி விடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்!
இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். "நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்' என்ற இடத்தை அடைந்ததும் ("உன் நபியை' என்பதற்கு பதிலாக) "உன் ரசூலை' என்று (மாற்றிச்) சொல்லி விட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், "இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) "நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்'' என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.
நூல் : புகாரி 247 
                                                       நன்றி.ஆன்லைன் பீஜே.

வெள்ளி

'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:-அமெரிக்க CRS அறிக்கை.!

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர்.ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.

புதன்

RSS-ன் கைக்கூலி என தன்னை மீண்டும் நிருபித்த அன்னா ஹசாரே!


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்னா ஹசாரே, போராட்டமெல்லாம் முடித்து சொந்த ஊரில்ஓய்வெடுத்தவர், திடீரென கிளம்பினார். “காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற லஞ்சம் வாங்கியவர்களை தூக்கிலிடவேண்டும் ” என அதிரடியார் அறிக்கைவிட்டார். ஆனால் அமர்சிங் கைதான அதே வாரத்தில் பல ஆயிரம் கோடி சுரங்கஊழல் வழக்கில் கைதான பீஜேபியின் ரெட்டியை பற்றி வாயை கூட திறக்கவில்லை...

காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற எம்பிகள் வாங்கிய லஞ்சமோ சில கோடிகள். அதைவிட பல ஆயிரம் கோடி மடங்குசுரங்க ஊழலில் ஈடுபட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்த பீஜேபியின் ரெட்டியை தூக்கில் போடவேண்டும் என ஏன் அன்னா ஹசாரே சொல்லவில்லை , குறைந்த பட்சம் அவர்களுக்கு எதிராக கண்டனம் கூடதெரிவிக்கவில்லை.

செவ்வாய்

குரங்கு -> நியாண்டர்தல் -> மனிதன்?


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

   கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - II

குரங்கு -> நியாண்டர்தல் (Neandertals or Neanderthals) -> மனிதன்? 

இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். "நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றல்லவா படித்ததாக நினைவிருக்கின்றது, அவர்கள் நமக்கு முன்னோர்கள் இல்லையா, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.

திங்கள்

நபிகளாரின் நற்குணங்கள்!

கண்ணியமிகு ஒழுக்கங்களையும் உயர்ந்த நாகரீகங்களையும் கற்றுத்தரும் கருணையாளனாகிய அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்...

 நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக! (முஹம்மதே) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் (அல்குர்ஆன் 68 : 1-4)

 நபி(ஸல்) அவர்கள் முழுமைப் பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்...

வியாழன்

தவ்ஹீத்வாதிகளே...!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது.

இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் காசுகள் ஒன்று திரட்டப்பட்டு பெரும் பெரும் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
ஒன்றுமே இல்லாமல் இருந்த போது இருந்த கொள்கைப் பிடிப்பு பெரும் பெரும் சொத்துக்களைப் பார்த்தவுடன் சிலரது உள்ளங்களை இன்றைக்கு சறுகச் செய்துள்ளது. சத்தியத்தைப் போதிக்க வேண்டும், இணை வைப்பை ஒழிக்க வேண்டும், அனாச்சாரங்களை அழிக்க வேண்டும் என்று பேசிய நாவுகளில் சில இன்று ஊர் வாதம் பேசத் துவங்கியுள்ளது. கொள்கையில் சறுகத் துவங்கியுள்ளது. கொள்கைவாதிகளை வீழ்த்திட கொடுமைவாதிகளோடும் கைகோர்க்கத் தயங்கவில்லை அவர்கள்.
இத்தகைய ஷைத்தானிய சக்திகளிடமிருந்து கொள்கைவாதிகளை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். தவ்ஹீத் சொந்தங்கள் தங்களுக்கு மத்தியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்...
சகோதரா! இது குருதி உறவல்ல. இவ்வுலகோடு முடிந்து போவதற்கு! மாறாக இது இறப்பிற்குப் பிறகும் தொடரும் கொள்கை உறவு. நம்மை பிளவுபடுத்தத் தான் எத்தனை எத்தனை ஷைத்தானின் சதிவலைகள், அவதூறுகள், விமர்சனங்கள். நம்மை பிளவு படுத்துவதன் மூலம் நம் கொள்கையை நசுக்கிவிடலாம் என நாசக்காரன் நினைக்கின்றான்.
ஆனால் நம்முடைய அழகிய முன்மாதிரி, நம் உயிரினும் மேலான நாயகத்தின் வழிகாட்டல்கள் நம்மோடு இருந்தால் நம்மை யார் தான் பிரித்திட இயலும். இதோ நாயகத்தின் வழிகாட்டல்களில் நம் உள்ளங்களை லயிக்கச் செய்வோம். அதில்தான் நம் எதிர்கால வெற்றி கனியவிருக்கிறது.
கொள்கை உறவு ஒரு கட்டிடம். சிறு மழை வெள்ளத்தில் சரியக்கூடிய கட்டிடமல்ல. புயலடித்தாலும் பூமியே நடுங்கினாலும் தளராத கட்டிடம்.  இதோ நம் கொள்கைத் தலைவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள்  ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள். (நூல்: புகாரி 481)
நம் கொள்கை உறவு வெறும் பேச்சோடு, புன் சிரிப்போடு முடிந்து விடக்கூடியதல்ல. இது உயிரோடும். உள்ளத்தோடும் கலந்த உறவு. இதோ நம் வழிகாட்டி நன்குரைப்பதைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உட-ன்) ஓர் உறுப்பு சுகவீனம டைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ர-), நூல்: புகாரி 6011
நாம் ஓரிறையையும். இறைத்தூதர் நெறியையும் உண்மையில் பிசகற அறிந்த இறை நம்பிக்கையாளர்கள் என்றால்,நம் கொள்கைச் சகோதரனை தன்னைப் போல் பாவிக்க வேண்டும் என நம் தலைவர் நமக்கு வழிகாட்டுவதைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர்:  அனஸ் (ரலி), நூல்: புகாரி 13
இந்த நேசம் என்பது காசுக்காகவோ, சுய லாபத்திற்காகவோ, உலக ஆதாயத்திற்காகவோ ஏற்பட்ட நேசமல்ல. மாறாக கொள்கைச் சகோதரன் என்பதால் ஏற்பட்ட நேசம். எங்கள் இணைவும், பிரிவும் ஏகத்துவத்திற்காகவே, ஏகனுக்காகவே என்பதைப் பறைசாற்றும் நேசம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று அந்த வானவர் கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5016
நம் கொள்கைக் கட்டிடம் சரிந்திடாமல் காப்பதற்காக அதன் இரும்புக் கம்பிகளாய், கான்கிரீட் கலவையாய்,கற்பாறையாய் நமக்குள் மலர வேண்டியது நேசம். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதென்பது போல் அற்பமென்றாலும் அன்பைத் தருமென்றால் அம்முறையே நம் சகோதரர்களின் சுவாசமாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்:  முஸ்லிம்
கொள்கையில் ஒன்றான நாம் ஓர் உடலென்றால் நம் விரலே நம் கண்ணைக் குத்தலாகுமா? நம் பற்களே நமது நாவை பதம் பார்க்கலாமா? கூடாது. நம் உடலிற்குள் எந்த விஷக்கிருமியும் நுழைந்து விடக்கூடாது. நாமே நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. நம் கிளைகள் முறிந்து விடக்கூடாது. இதுதான் நம் ஏகத்துவ மார்க்கத்தில் தலையாயது. இதோ நம் நேசர் விடையளிப்பதைப் பாருங்கள்.
மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்;அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும்''
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 48
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அது போல் கொள்கைக் குடும்பத்திற்குள்ளும் சில சறுகல்கள் தோன்றக்கூடும். அதில் நாம் சறுகிவிடக் கூடாது. நம் ஆணிவேரான கொள்கை அறுந்து விடக்கூடாது. நம் பிடிமானம் நம் கொள்கை உறவே. அதில் நம் பிடி தளர்ந்திடலாமா? தீயில் எரித்தாலும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் என்பார்கள். அது கற்பனையென்றாலும் நம் கொள்கையுறவில் அது உண்மையாகட்டும்.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49:9, 10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர் தான்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி), நூல்: முஸ்லிம் 5003
நம் ஏகத்துவப் பூந்தோட்டத்தை நாசமாக்கும் எந்தக் களைகளும் முளைத்து விடக்கூடாது. களைகள் வளர்ந்தால் நம் மலர்த்தோட்டமே மணமற்றுப் போய்விடும். இறையச்சம் எனும் உரம் தான் களைகளை வேரறுக்கும் பூச்சிக் கொல்லியாகும். நம் கொள்கைத் தோட்டத்தின் செழிப்பிற்கு அடிப்படையாய் இறையச்சம் திகழ வேண்டும். இதோ இறுதித்தூதின் இறைச் செய்தி இயம்புவதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். 
அல்குர்ஆன் 49:11, 12
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான் இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5010
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்-ம் மற்றொரு முஸ்-மின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர-), நூல்: புகாரி 6951
நம் சகோதரன் நமக்கு அநீதி இழைத்தாலும் நாம் அவருக்கு உதவியே செய்ய வேண்டும். உதவி என்பது கொட்டக் கொட்ட குனிவதல்ல. மாறாக அநியாயக்காரனின் கரம் பிடித்து அவனை நம் வழிக்கு வரவழைப்பது தானே தவிர அவனைப் பகைப்பதல்ல. அது நம் நோக்கமுமல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 
நூல்: புகாரி 6952
தியாகத் திருநாளின்போது உரையாற்றிய நம் இறுதித் தூதின் இறுதியுரையில் நாம் படிப்பினை பெறுவோம். இனிவரும் காலம் நம் வசந்த காலமாக வேண்டும். இனி தென்றல் தான் தவழ வேண்டும். நம் கொள்கைச் சகோதரர்கள் ஓர் உடலாக, ஒரு கூட்டுக் கிளிகளாக என்றும் வலம் வர சபதமேற்போம்.
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். நபி (ஸல்) அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) 
நூல்: புகாரி 67
நன்றி: ஏகத்துவம்