தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

ஜனவரி 27 TNTJ

அஸ்ஸலாமு அலைக்கும்

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்!




'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது சம்பந்தமாக அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த சட்ட விரோத தீர்ப்பை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு முழு சொந்தமான அவர்களின் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை சென்னையில் 11 மணிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தலைமையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்தது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

15 மாவட்டங்கள் சென்னை ஆர்ப்பாட்டத்திலும், 25 மாவட்டங்கள் மதுரை ஆர்ப்பாட்டத்திலுமாக கலந்துக் கொண்டன. அதில் ஆண்கள் மட்டுமில்லாமல், கைக் குழந்தைகளோடு பெண்களும், வயதானவர்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என்று அனைவரும் கலந்து, பாதிக்கப்பட்ட தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உயர்நீதி மன்றத்திற்கு கண்டனக் குரல் எழுப்பினர். உட்காரக்கூட இடமில்லாத‌ மக்கள் கூட்டத்தில் பலகீனமான சிலர் தங்களின் பிரயாணக் களைப்பினாலும் வெயிலினாலும் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வந்து குவிந்துக் கொண்டேயிருந்த மக்கள் வெள்ளத்தை சமாளிக்க முடியாத போலீஸார், சென்னை நகருக்குள் நுழையும் முன்பே நூற்றுக்கணக்கான வாகனங்களை தடுத்து நிறுத்தினர். "அனைத்து வாகனங்களும் வந்து சேராதவரை நாங்கள் பேரணியை முடிவுக்கு கொண்டு வரமாட்டோம்" என்று TNTJ வினர் அறிவிப்பு செய்த‌ பிறகு மீதமுள்ள வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. என்றாலும் நெருக்கடியான போக்குவரத்தினால் கடைசிவரை ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்துக்கொள்ள முடியாத சூழலும் சிலருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. சென்னை உயர்நீதி மன்றம் வரை பேரணி செல்லும் வழி முழுவதும் மக்கள் பெருமளவில் திரண்டுவிட்ட‌தால், உயர்நீதி மன்றம் வரை செல்வதாக இருந்த பேரணி அசையக் கூட‌ முடியவில்லை. சுமார் 12:30 மணி வரை தொடர்ந்த கோஷ‌ங்களுக்கும் முழக்கங்களுக்கும் பிறகு பி. ஜெய்னுலாபிதீன் அவர்கள் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்கள்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பை ஏற்று சென்னை மற்றும் மதுரையில் உச்சநீதிமன்ற கிளைகள் முன்பு திரண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மீது இறைவனின் மாபெரும் கிருபை உண்டாகட்டுமாக.