கடை எண் 375 மற்றும் 376
சென்ற ஆண்டு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டும் ஸ்டால் அமைக்கப்பட்டு ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது.


இப்புத்தகக் கண்காட்சியில் வணிக நோக்கமின்றி தாவா பணியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கடையை (எண். 275) எடுத்திருந்தது.
நமது கொள்கை சகோதரர்கள் நமது ஸ்டாலிற்கு வருகை தந்தவர்களுக்கும், பார்வையாளராக அங்குமிங்குமாக நின்றிருந்தவர்களுக்கும், தாவா நோட்டீஸ்களை வினியோகித்தனர்.
மேலும் தூய இஸ்லாமியக் கொள்கைகளையும், பீ. ஜே. மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பையும் மேற்கோள் காட்டி சிறப்பாக தாவா பணி செய்தனர்.
இந்த தாவா பணியின் பயனாக ஓசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற சகோதரர் புனித இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது சிறப்பம்சமாகும்.
இறுதி நாளான 10-01-2010 ஆம் நாள் நாம் எதிர்பார்த் ததை விட அதிகமான சகோதரர்கள் வருகை தந்ததால் நமது தாவா பணிகுழுவினர் புத்தகக் கண்காட்சியகத்திற்கு வெளியிலும் அரங்கிலும் இன்னும் வீரியமாக தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்தனர்.
மாற்று மத சகோதரர்களுக்கு 50% சிறப்புக் கழிவுடன் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட 50% இழப்பையும் தாவா நோட்டீஸ் செலவீனங்களையும் தம்மாம் மற்றும் குவைத் மண்டலத்தினர் ஏற்றுக்கொண்டனர். தளவாடம் மற்றும் அரங்க அமைப்பிற்கான செலவை ரியாத் மண்டலமும், கடை வாடகையினை புருனை மண்டலமும் ஏற்றுக் கொண்டன. இலவச சி.டி.க்கள் மற்றும் இலவச புத்தகங்களுக்கான செலவை ஐக்கிய அரபு அமீரக மண்டலங்கள் ஏற்றுக் கொண்டன. இதர வாகனச் செலவு, போக்குவரத்து மற்றும் உணவுவகைச் செலவீனங்களுக்கு ஜித்தா மண்டலம் பொறுப்பேற்றுக் கொண்டது.)