தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

இஸ்லாமிய பெண்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும்: புதிய சட்டம் அறிமுகம்


 

போலிசார் கேட்டுக் கொண்டால் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும். இல்லையெனில் கைதாக வேண்டி வரும் என ஆஸ்திரேலியாவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மூடும் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கண்டறிய இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத் திரையை விலக்கி போலிசாரிடம் காட்ட வேண்டும் என சட்டமியற்றப்பட்டது.

இந்த சட்டத்தை தற்போது விக்டோரியா மாகாணமும் பின்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரம் அம்மாகாண போலிசாரிடம் ஏற்கனவே இருந்த போதிலும் இனி இரு சக்கர வாகனங்களில் வரும் சந்தேகத்திற்குரிய நபர்களையும் இப்புதிய உத்தரவின் கீழ் விக்டோரியா போலிசார் விசாரிக்க முடியும்.