தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

இவர்கள் முஸ்லிம்களா ?

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 78 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மூன்றாம் நாளான நேற்று, கடலூர் கடலில் கரைக்க, மார்க்கெட் கமிட்டி முன் ஊர்வலம் துவங்கியது. பஸ் நிலையம் முன் விநாயகர் சிலைகளுக்கு, இஸ்லாமியர்கள்(?) சார்பில், அவுலியா தர்கா டிரஸ்டி யாசீன், பாபு, தே.மு.தி.க., நகர செயலர் அக்பர் அலி உள்ளிட்டோர், இனிப்பு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

 
 அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
- அல் குர்ஆன் 2:165