தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

TNTJ நிர்வாகிகள் உஷார் ! ! உஷார் ! ! ! ....

சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் இப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி கதிஜா பீவி [50] தனக்கு cancer இருப்பதால் சாகும் தருவாயில் இருப்பதாகவும் மருத்துவம் செய்யவில்லை என்றால் மௌத்தாகி விடுவேன் என்றும்,மருத்துவம் செய்ய உடனடியாக உதவி செய்யுமாறும் கோரிக்கை வைத்து அதற்குண்டான SCAN REPORT,XR AY , மருத்துவரின் கடிதம் அதற்கும் மேலே ஜமாஅத் கடிதம், வி.ஐ.பி பரிந்துரை கடிதம், ஐந்தாறு பள்ளிவாசல் லெட்டர் பேடில் கடிதம், எட்டு தவ்ஹீத் பள்ளிவாசலில் வசூல் செய்த விபரம் என்று அவர் அளித்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக ஆராய்ந்து பார்த்த போது எல்லாமே பெயர் மாற்றப்பட்ட XRAYமருத்துவமனை அளித்த ரிப்போர்ட் ஒரிஜினல் பெயர் நீக்கப்பட்டு இந்த பெண்மணி பெயர் ஒட்டி ஜெராக்ஸ் எடுத்ததை காண முடிந்தது. ஒரு ரிப்போர்ட்டில் BRAIN SURGERYஎன்றும் மற்றொன்றில் BREAST CANCER என்றும் எல்லாம் போலியான ஆவணங்கள் என்று தெரிந்ததும் எல்லாவற்றையும் கைப்பற்றி 50 வயது முஸ்லிம் பெண் என்ற காரணத்தால், காவல் துறையிடம் ஒப்படைக்காமல், நன்கு உதைத்து அனுப்பப்பட்டார் .ஆயிரக்கணக்கில் இந்த முறையில் வசூல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது, தவ்ஹீத் சகோதரர்கள் மருத்துவ உதவி செய்யும்போது மிக கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.