தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

ஜனவரி 27 போராட்டம் : செய்தி

ஸ்தம்பித்து போன சென்னை- மதுரை அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! அல்ஹ்ம்துலில்லாஹ்!
ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத்தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டப் புகைப்படங்கள்




















ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத்தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டப் புகைப்படங்கள் மதுரை



பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:
சென்னை, ஜன. 27-
பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத்துல்லா உள்பட ஏராளமான பிரமுகர்களும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ்-வேன்களில் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

27-1-2010 மாலை மலர்

மாலை முரசு – 27-1-11

ஜனவரி 27 TNTJ

அஸ்ஸலாமு அலைக்கும்

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்!




'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது சம்பந்தமாக அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த சட்ட விரோத தீர்ப்பை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு முழு சொந்தமான அவர்களின் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை சென்னையில் 11 மணிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தலைமையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்தது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

15 மாவட்டங்கள் சென்னை ஆர்ப்பாட்டத்திலும், 25 மாவட்டங்கள் மதுரை ஆர்ப்பாட்டத்திலுமாக கலந்துக் கொண்டன. அதில் ஆண்கள் மட்டுமில்லாமல், கைக் குழந்தைகளோடு பெண்களும், வயதானவர்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என்று அனைவரும் கலந்து, பாதிக்கப்பட்ட தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உயர்நீதி மன்றத்திற்கு கண்டனக் குரல் எழுப்பினர். உட்காரக்கூட இடமில்லாத‌ மக்கள் கூட்டத்தில் பலகீனமான சிலர் தங்களின் பிரயாணக் களைப்பினாலும் வெயிலினாலும் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வந்து குவிந்துக் கொண்டேயிருந்த மக்கள் வெள்ளத்தை சமாளிக்க முடியாத போலீஸார், சென்னை நகருக்குள் நுழையும் முன்பே நூற்றுக்கணக்கான வாகனங்களை தடுத்து நிறுத்தினர். "அனைத்து வாகனங்களும் வந்து சேராதவரை நாங்கள் பேரணியை முடிவுக்கு கொண்டு வரமாட்டோம்" என்று TNTJ வினர் அறிவிப்பு செய்த‌ பிறகு மீதமுள்ள வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. என்றாலும் நெருக்கடியான போக்குவரத்தினால் கடைசிவரை ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்துக்கொள்ள முடியாத சூழலும் சிலருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. சென்னை உயர்நீதி மன்றம் வரை பேரணி செல்லும் வழி முழுவதும் மக்கள் பெருமளவில் திரண்டுவிட்ட‌தால், உயர்நீதி மன்றம் வரை செல்வதாக இருந்த பேரணி அசையக் கூட‌ முடியவில்லை. சுமார் 12:30 மணி வரை தொடர்ந்த கோஷ‌ங்களுக்கும் முழக்கங்களுக்கும் பிறகு பி. ஜெய்னுலாபிதீன் அவர்கள் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்கள்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பை ஏற்று சென்னை மற்றும் மதுரையில் உச்சநீதிமன்ற கிளைகள் முன்பு திரண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மீது இறைவனின் மாபெரும் கிருபை உண்டாகட்டுமாக.


செவ்வாய்

ஜனவரி 27 மதுரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோர் கவனத்திற்கு!

மண்டபங்களில் உள்ளவர்களும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சார்ந்தவர்களும் காமராஜர் சாலை கீழவெளி வீதி தவிட்டுச் சந்தை தெற்கு வெளி வீதி வழியாக வாகனத்தில் வந்து டிவிஎஸ் பெட்ரோல் பங்க் (கிரைம் பிராஞ்ச்) அருகில் இறங்க வேண்டும்.
புதுக்கோட்டை, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை தெற்கு, நாகை வடக்கு, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பாண்டிக்கோவில் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக ஏவி மேம்பாலம் கீழ வெளி வீதி தெற்குவெளி வீதி தவிட்டுச் சந்தை வழியாக வந்து கிரைம் பிராஞ்ச் அருகில் இறங்க வேண்டும்.
திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் பைபாஸ் பாலம் தபஞ ஆபிஸ் எதிர்புறம் வழியாக வந்து எல்லீஸ் நகர் பாலம் முன்பு இறங்க வேண்டும். தேனீ, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காளவாசல் சந்திப்பு சோலைமலை அரசரடி ரயில்வே ஜங்சன் மேற்கு நுழைவாயில் அருகில் இறக்கி விடவும்.
பஸ்களும் வேன்களும் பேரணிக்கு வந்தவர்களை மேற்சொல்லப்பட்ட இடங்களில் இறக்கி விட்ட பின் அனைத்து வாகனங்களும் தமுக்கத்தைச் சுற்றியுள்ளகாந்தி மியூசியம், நீச்சல்குளம், லா காலேஜ், எக்கோ பார்க் பின்புறம், கரும்பு ஆலை ரோடு, ராஜா முத்தையா பின்புறம், ரேஸ் கோர்ஸ் ரோடு, பிடிஆர் மஹால் ரோடு, பாண்டியன் ஹோட்டல் அருகில், மாட்டுத் தாவணி பூ மார்க்கட் அருகில் சிட்கோ இடங்களில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

வெள்ளி

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

ண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.
STEP 1:
முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.
STEP 2:
இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
STEP 3:
தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.
STEP 4:
அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code
STEP 5:
தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.
STEP 6:
அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)
STEP 7:
உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.
STEP 8:
அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.
STEP 9:
இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.

புதன்

அநியாயமாக இடிக்கப்பட்ட டெல்லி நூர் பள்ளி: கொந்தெளித்த டெல்லி முஸ்லிம்கள்!

சட்ட விரோதமாக கட்டப்பட்டப்பட்டுள்ளது என்று கூறி டெல்லி அரசாங்கம் (Delhi Development Authority) கடந்த 12 ஆம் தேதி டெல்லி ஜங்புரியா பி பிளாக்கில் உள்ள நூர் பள்ளியை இடித்து தரைமட்டமாக்கியது.
இதை கண்டித்து ஒரு நாள் முழு அடைப்பு போன்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
கடந்த 2009 ஜூன் மாதம், “நூர் பள்ளிவாசலை இடித்து நீக்கம் செய்யவும் அருகில் உள்ள வால்மீகி கோயில் இடத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுக்கவும்” லெஃப்டினண்ட் கவர்னர் அலுவலக மதத்துறை கமிட்டி சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்தே பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆரம்பித்தது.
கடந்த 2009 ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெல்லி வளர்ச்சி ஆணையம் பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தது. ஆனால், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அதைச் செய்ய இயலவில்லை.
2010 அக்டோபர் மாதம், பள்ளிவாசலை இதுவரை இடித்து நீக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஜங்புரா ரெசிடென்ஸ் அஸோசியேஷன் தொடுத்தது.
நூர் பள்ளிவாசல் கட்டிடம் உள்ள  நிலம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை 2010 அக்டோபர் 26 ஆம் தேதி வக்ஃப் போர்டு டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனைக் கண்டுகொள்ளாமலேயே டெல்லி வளர்ச்சி ஆணையம் தங்கள் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி பள்ளிவாசலைக் காவல்துறை பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் மஸ்ஜித் இருந்த இடம் முஸ்லிம்களுக்குரியது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு  கேசட் ஆதாரத்தை  நூர் பள்ளி கமிட்டி தலைவர் சாஹி இமாம் அவர்கள் கோர்ட்டில் சமர்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இடிக்கப்பட்ட இடத்தில் கடந்த வெள்ளிகிழமை தொழுகை நடத்தப்பட்டது.
பள்ளிவாசலை மீண்டும் கட்டி தருவதாக டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளாராம்.
இடிக்கும் வரை வேடிக்கை பார்த்து விட்டு தற்போது பொதுமக்களின் கடும் எதிர்ப்பை பார்த்து விட்டு கட்டித் தருவதாக நாடகமாடுகின்றது டெல்லி காங்கிரஸ் அரசு!
காங்கிரஸின் இது போன்ற முஸ்லிம் வீரோத போக்கு கண்டனத்திற்குரியது.

வக்ஃபு மருத்துவ கல்லூரி – வெளிவந்தது உண்மை!

வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி குறித்து நாம் கேள்விகளை எழுப்பியவுடன் கதி கலங்கிப் போன வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மானும், அதற்காக அமைக்கப்பட்ட குழுவினரும் மக்களுக்கு விளக்கம் அளிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் விளக்கமே அவர்களிடம் உண்மையும் நேர்மையும் இல்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கின்றது.
அவர்கள் வாய்கள் மூலமே உண்மைகள் வெளி வந்து கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் சிதைந்து ஏற்கனவே இவர்களிடம் பணம் கொடுத்தவர்களை யோசிக்க வைத்துள்ளது.
இந்தக் கல்லூரி குறித்து தொடர்பாளர்களாக குறிப்பிடப்பட்டவர்களும் வக்பு வாரியத்தின் தலைவரும் அளித்துள்ள முரண்பட்ட விளக்கங்கள் இவர்களின் முகமூடியைக் கிழித்துக் காட்டுகின்றன.
இஸ்மாயீல் நாஜீ என்பவர் தொடர்பாளராகக் குறிப்பிடப்பட்ட மூவரில் ஒருவர். இவர் கூறும் விளக்கத்தை பாருங்கள்!
பீ.ஜை. என்னென்ன சந்தேகங்களை எழுப்பி உள்ளாரோ அத்தனைக்கும் பதில் கவிக்கோ அவர்களின் உரையிலேயே இருக்கிறது.
மருதுவக் கல்லூரி வக்ப் வாரியம் நடத்துகிறதா, இல்லை தனியார் டிரஸ்ட்டா? என்ற கேள்வியை இவர் எழுப்புவது டிசம்பர் 22 ந்தேதி வெளியான உணர்வு இதழில். அந்த இதழ் வெளிவருவதற்கு 18 நாட்கள் முன்பாகவே அதற்கு கவிக்கோ பதில் வழங்கி உள்ளார்.
04/12/2010 சென்னையில் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல கல்வியாளர்கள், ஆடிட்டர்கள், செல்வந்தர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மிகத் தெளிவாக கவிக்கோ கீழ் கண்டவாறு கூறினார்கள்:
மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக் கல்லூரியை வக்ப் வாரியமோ, மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவோ நடத்தவில்லை, மாறாக பத்து லட்சம் ரூபாய் ஷேர் வாங்குபவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்கள். முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப்போகிறார்கள், என தெளிவாக அறிவித்தார்கள்.
அந்தக் கூட்டத்தின் நிகழ்வுகள் சன் டிவி போன்ற தொலைகாட்சியிலும், தினசரி நாள் இதழ்களிலும் வெளி வந்தன.
இந்த வாக்கு மூலம் சொல்வது என்ன? இந்தக் கல்லூரிக்கும், வக்பு வாரியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இது பணம் படைத்தவர்கள் ஷேர் போட்டு நடத்தும் ஒரு தொழிலாகும் என்பது தான் இதன் கருத்து.
வக்பு வாரியத்துக்கும் இக்கல்லூரிக்கும் சம்மந்தம் இல்லை என்று இவர்கள் இப்படி வெளிப்படையாக அறிவித்து மக்களிடம் நிதி திரட்டினால் அதைப் பற்றி நாம் கண்டு கொள்ள மாட்டோம். இவர்களின் தனிப்பட்ட நாணயம் நேர்மையை நம்பி மக்கள் நிதி கொடுத்தால் அது குறித்து எச்சரிக்கை செய்யும் அவசியம் நமக்கு இல்லை. ஆனால் இஸ்மாயீல் நாஜீ சொல்வது உண்மையா?
இஸ்மாயீல் நாஜியின் விளக்கத்தைப் பார்த்துவிட்டு அப்துர்ரஹ்மான் கான் என்ற ஒரு சகோதரர் நேரடியாக இஸ்மாயீல் நாஜிக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை நமக்கும் அனுப்பியுள்ளார். அதில் அவர் கேட்டுள்ள கேள்விகளே இஸ்மாயீல் நாஜிக்கு நாம் அளிக்கும் பதிலாக அமைந்துள்ளது.
அந்தக் கடிதம் இது தான்
மரியாதைக்குரிய இஸ்மாயீல் நாஜீ அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். மருத்துவக் கல்லூரி தொடர்பாக நீங்கள் அளித்த விளக்கத்தை நான் பார்த்தேன். அதில் பாதி அளவுக்குத் தெளிவு கிடைத்தது. அது வக்பு வாரியத்தால் நடத்தப்படவில்லை என்பது கவிக்கோ அவர்களாலேயே தெளிவு படுத்தப்பட்டதாக தாங்கள் அதில் தெரிவித்துள்ளீர்கள்.
அது தான் உண்மை என்றால் சுவரொட்டிகள் மூலம் வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி என்று போட்டதையும் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையும் நானே சென்னையில் பார்த்தேன்.
மேலும் வக்பு மருத்துவக் கல்லூரி என்று போடப்பட்ட படத்தை நீடூர் இணைய தளத்தில் நான் பார்த்தேன். இப்போதும் அது அந்த இணைய தளத்தில் உள்ளது.
வக்பு போர்டுக்குச் சம்மந்தம் இல்லா விட்டால் வக்பு என ஏன் போடவேண்டும்?
அல்லது மக்களுக்காக வக்பு செய்யப்பட்டது என்ற அர்த்தம் என்றால் பணம் செலுத்துவோருக்கு லாபம் தருவதாக எப்படி கூறலாம். வக்பு செய்யப்பட்ட பின் எப்படி வருடத்துக்கு ஒரு சீட் கொடுப்பதாக வாக்களிக்க முடியும்?
அதில் ஷேர் சேர்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் தானே அது வக்பாகும்?
இந்த சந்தேகத்துக்கு உங்களிடம் இருந்து எனக்கு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அத்துடன் பீஜே பற்றி நீங்கள் பழைய செய்திகளை வெளியிடப் போவதாக எழுதியது நல்லதல்ல.
ஆனாலும் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் முக்கியஸ்தர்களிடம் நான் கேட்ட போது பீஜே பற்றிய எந்த விஷயத்தையும் இஸ்மாயீல் நாஜீ தாராளமாக வெளியிடலாம் என்று கூறியதுடன் நீங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதால் நீடூர் மதரசாவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதன் பின் சிம் இயக்கத்தில் இருந்த போதும் அது போல் செய்து மாட்டிக் கொண்டு நீங்கள் நீக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இன்னும் அசிங்கமாக பல செய்திகளைச் சொன்னார்கள் . இவற்றை நிரூபிக்க முடியும் என்றும் சொன்னார்கள். நீங்கள் விரும்பினால் இதற்கும் எனக்கு விளக்கம் தந்தால் உங்களைப் பற்றிய நல்லெண்ணம் எனக்கு அதிகரிக்கும்.
அன்புடன்
அப்துர்ரஹ்மான் கான்
இந்த சகோதரர் சுட்டிக் காட்டும் மருத்துவக் கல்லூரிக்கான அட்வைசரி மீட்டிங் நிகழ்ச்சியின் போது நிர்வாகிகளின் முன்னால் வைக்கப்பட்ட பேனரைத் தான் அந்த சகோதரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
JMHA என்றால் ஜாமியா மிஸ்பாஹுல் ஹிதா அரபிக் காலேஜ் என்பதன் சுருக்கம். அத்துடன் வக்பு மெடிக்கல் காலேஜ் என்று சேர்த்துள்ளனர். அதாவது இந்த மருத்துவக் கல்லூரியை நடத்துவது நீடூர் மதரஸா நிர்வாகம் என்றும் இது வக்பு அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றும் இந்த பேனர் சொல்கிறது.. இந்த பேனருக்கு முன்னால் வக்பு வாரியத்தலைவர் உள்ளிட்ட பலர் வீற்றிருக்கின்றனர்.
வக்பு மருத்துவக் கல்லூரி என்றால் அதை வக்பு வாரியம் நடத்த வேண்டும். வக்பு வாரியம் நடத்தவில்லை என்று இஸ்மாயீல் நாஜீ சொல்லி விட்டார். கவிக்கோவே இதற்கும் வக்பு வாரியத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிவிட்டதாகவும் இஸ்மாயீல் நாஜீ சொல்கிறார். அப்படியானால் வக்பு மருத்துவக் கல்லூரி என்பதன் பொருள் என்ன?
இஸ்மாயீல் நாஜீ சொல்வது போல் இது பங்குதாரர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்றால் மேற்கண்ட பேனருக்கு என்ன அர்த்தம்?
ஒருவர் பள்ளிவாசலுக்கு வக்பு செய்து விட்டு அதற்காக மாதம் எனக்கு இவ்வளவு தர வேண்டும் எனக் கூறினால் அது வக்பாக ஆகுமா? வக்பு என்றால் இலாபத்தை எதிர்பார்க்காமல் கொடுப்பது தானே. அதற்காகப் பணம் கொடுப்பவர்கள் அல்லஹ்வுக்காக அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும். அதில் எந்த ரிட்டனும் எதிர்பார்க்கக் கூடாது என்று அறிவித்தால் தானே அது வக்பு ஆகும்?
ஒரு வேளை செல்வந்தர்களிடம் பணம் திரட்டிய பிறகு அவர்கள் பிரதிபலன் எதிர்பார்த்தால் நீங்க்ள் வக்பாகத் தந்து விட்டீர்கள். அதோடு அதை மறந்து விட வேண்டும் என்று சொல்வதற்காக இப்படி யோசித்து வக்பு கல்லூரி என்று போர்டு வைக்கப்பட்டதா?
வக்பு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்? வக்பு போர்டு என்று விளம்பரம் செய்வதற்கு என்ன அர்த்தம்?
இவர்கள் அளிக்கும் பதிலே இவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
ஆக மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி என்றும், வக்பு மருத்துவக் கல்லூரி என்றும் ஷேர் சேர்ந்தவர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரி என்றும் இடத்துக்குத் தகுந்தவாறு மாற்றி மாற்றி கூறுவதால் தானே மக்களை நாம் எச்சரித்தோம்.
அது கிடக்கட்டும். இதோ வக்பு வாரியத் தலைவர் சமவுரிமை பத்திரிகையில் கட்டம் கட்டி கூறி இருப்பதைக் காணுங்கள்
இந்த பேட்டியில் வாரியத் தலைவர் கூறுவது என்ன?
இந்தக் கல்லூரி வக்பு வாரியத்தால் நடத்தப்படுகிறது என்று தெளிவாகக் கூறுகிறார். அதில் பாதி இடங்களை அரசுக்குக் கொடுப்பதாகவும் மற்றொரு பாதியை வக்பு வாரியம் வைத்துக் கொள்ளும் என்றும் தெளிவாகக் கூறுகிறார்.
மேலும் தேவைப்படும் 60 கோடி ரூபாயை வக்பு வாரியமே திரட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியை நிர்வகிக்க வக்பு வாரியமும் மதரஸாவும் இணைந்து அறக்கட்டளை ஏற்படுத்தவுள்ளது என்றும் கூறுகிறார். அதாவது அதன் நிர்வாகத்தில் வக்பு வாரியமும் இருக்கும் என்று கூறுகிறார்.
இதற்கும் இஸ்மாயீல் நாஜி சொல்வதற்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா?
மேற்கண்ட வாரியத் தலைவரின் பேட்டியுடன் இஸ்மாயீல் நாஜி கூறுவதை ஒப்பிட்டு பாருங்கள்
மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக் கல்லூரியை வக்ப் வாரியமோ, மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவோ நடத்தவில்லை, மாறாக பத்து லட்சம் ரூபாய் ஷேர் வாங்குபவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்கள். முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப் போகிறார்கள், என தெளிவாக அறிவித்தார்கள்.
வாரியத் தலைவர் அப்துர் ரஹ்மான் வக்பு வாரியத்தின் கல்லூரி என்கிறார்.
ஆனால் அதற்கு ஆள்பிடிக்கும் இஸ்மாயீல் நாஜி வக்பு போர்டுக்கு சம்மந்தம் இல்லை என்கிறார். வக்பு போர்டுக்குச் சம்மந்தம் இல்லை என்று வாரியத் தலைவரே அறிவித்ததாகவும் அவர் கூறுகிறார்.
இரண்டு பேரில் யார் சொல்வது சரி என்று முதலில் பைசல் பண்ணி விட்டு இஸ்மாயீல் நாஜி வாய் திறப்பது நல்லது.
இஸ்மாயீல் நாஜியின் மேற்கண்ட தகவல் படி பார்த்தால் அப்துல் ரஹ்மான் பொய் சொல்வதில் வல்லவர் என்பது தெளிவாகிறது. கவிதைக்குத் தான் பொய்யழகு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது பொது வாழ்க்கைக்கும் பொய்யழகு என்று மாற்றி விட்டார்கள் போலும்.
வக்பு வாரியத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பதும் வக்பு வாரியமே இதை நடத்துகிறது என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? இந்த இரண்டில் எது உண்மை என்றாலும் வாரியத் தலைவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பது உறுதியாகிறதா? இல்லையா?
இஸ்மாயீல் நாஜீ எடுத்துக் காட்டிய வாரியத்தலைவரின் மேற்கோளின் படி மருத்துவக் கல்லூரிக்கும் வக்பு வாரியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ஆகிறது. இது தனவந்தரகள் கூடி பங்கு சேர்ந்து நடத்தும் தொழில் என்று ஆகிறது. ஆனால் வாரியத்தலைவர் தானே கையெழுத்துப் போட்டு பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் வக்பு வாரியமே இதை நடத்தப் போவதாக வக்பு வாரியத்தின் லட்டர் பேடில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தைப் பாருங்கள்
மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போவதாக மக்களிடம் நிதி கேட்கும் போது வக்பு வாரியம் இதை நடத்தப் போகிறது எனக் கூறி இதற்கு வக்பு வாரியம் – அதாவது அரசாங்கம் – பொறுப்பு என்று நம்பிக்கை ஊட்டப்படுகிறது, ஆனால் செல்வந்தர்களை அழைத்து பேசும் போது இதற்கும் வக்பு போர்டுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் இது அப்பட்டமான மோசடி அல்லவா?
தன்னுடைய அதிகாரத்தை அப்துல் ரஹ்மான் தவறாகப் பயன்படுத்தி பணம் பண்ண திட்டமிட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பது இதில் இருந்து உறுதியாகிறது.
அல்லது தனவந்தர்களிடம் பணம் வசூலித்து முடித்தவுடன் இது வக்பு வாரியக் கல்லூரி. உங்களுக்கு இதில் உரிமை இல்லை என்று கூறுவதற்காக இந்தத் திட்டமா என்று தெரியவில்லை.
ஆனால் மருத்துவக் கல்லூரியின் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட மூவரும் வாரியத் தலைவரை விட விபரமானவர்களாக உள்ளனர். வாரியத் தலைவர் கலைஞருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம். வக்பு வாரியத்துக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி இதை நடத்துவது ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா ட்ரஸ்ட் தான் என்று இவர்கள் கூறுகின்றனர்.
மேலும் மருத்துவக் கல்லூரிக்காக 50 ஏக்கர் நிலத்தை ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அளித்ததாக அப்துல் ரஹ்மான் மேற்கண்ட கடிதத்தில் கூறுகிறார். ஆனால் நிலம் கொடுத்தவர்களோ 25 ஏக்கர் நிலம் கொடுத்ததாகக் கூறுகின்றனர். இங்கேயும் இவர் கவிக்கோ அதாவது நன்றாகப் புளுகக் கூடியவர் என்று நிரூபிக்கிறார்
கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் சுமார் 50 லட்சம் ஆகும். ஆனால் மொத்த ஷேர் 60 கோடி என்றும் நூறு கோடி என்றும் மேற்கண்ட மூவரும் கூறுகின்றனர். 100 கோடியில் 50 லட்சம் என்பது அரை சதவிகிதம் தான். அதாவது அரை சதவிகிதப் பங்கு செலுத்திவிட்டு ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா என்ற ட்ரஸ்ட் அமைப்பதும் மோசடியாகும். நீ அவல் கோண்டு வா! நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதி திண்ணலாம் என்று கூறுவது போல் ஒரு சத்தித்திட்டம் இது என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.
இதோ அவர்களின் உரையாடல்களைக் கேளுங்கள் நாம் மேலே சொன்ன அனைத்தும் அதில் இருப்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
9443150959
9443222490
9443353666
பணம் போட்டவர்களுக்கு என்ன கிடைக்கும்? அதிலும் குழப்பம் தான் நிலவுகிறது.
மொத்த மாணவர் எண்ணிக்கை 100 என்று வாரியத் தலைவர் கூறுகிறார். அதில் 50 இடம் கட்டாயம் அரசாங்கத்துக்குப் போய் விடும். இதை வாரியத் தலைவரும் ஒப்புக் கொள்கிறார்.
அப்படியானால் மீதியுள்ள ஐம்பது இடங்களில் வாரியத் தலைவர் போன்றவர்க்ளுக்கு எத்தனை இடம் என்று தெளிவுபடுத்தவில்லை. அந்த வகையில் 20 இடங்களை அல்லது பத்து இடங்களைக் கழித்தால் மீதம் இருப்பது நாற்பது அல்லது முப்பது தான்.
அதிலும் அனைத்து இடங்களையும் பங்குதாரருக்குக் கொடுத்து விட்டால் கல்லூரியை எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? எனவே அதில் சரிபாதியை நிர்வாகம் தனது ஒதுக்கீடாக வைத்துக் கொண்டால் மீதி உள்ள 15 இடங்களை எப்படி நூறு பங்குதாரர்களுக்குக் கொடுக்க முடியும்?
சுழற்சி முறையில் கொடுப்பதாக இருந்தால் ஏழு வருடத்துக்கு ஒரு இடம் கிடைக்கும். அவ்வளவு தான்.
அல்லது குலுக்கல் முறையில் கொடுக்கப்படும். இப்படித்தான் ஒர் உரையாடலில் கூறப்படுகிறது. அதாவது சூதாட்டம் மூலம் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கலாம்.
அது மட்டுமின்றி மேற்கண்ட வாரியத் தலைவரின் அறிக்கையில் உள்ள பொய்யை நீடூரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அறியலாம். 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்று வாரியத் தலைவர் சொல்லி இருக்கிறார்.
300 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை கட்டப்பட்டு வருவதை புகைப்பட மற்றும் வரைபட ஆதாரத்துடன் இவர்கள் நிரூபிக்க வேண்டும். எந்தக் கட்டுமானப் பணியும் நடக்காத போது 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்று எப்படி இவர் கூறினார். இதுவும் கவிதை என்று நினைத்து கரடி விடுகிறாரா?
மருத்துக் கல்லூரி நடத்தும் ட்ரஸ்டில் அப்துர் ரஹ்மான் சேர்மனாக உள்ளார். அவர் கருனாநிதியின் நண்பர் என்ற காரணத்தால் அவரைப் பயன்படுத்துகிறோம். அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதி வாங்கிவிடுவார் என்று நம்புகிறோம் என்று அதன் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் சித்தார் கோட்டை சகோதரர் கேட்ட போது சொல்லியுள்ளனர். அந்த உரையாடல் முன்னர் இடம் பெற்றுள்ளது
அதாவது வாரியத்தின் தலைவர் என்ற முறையில் அவர் சேர்மனாக இல்லை. மாறாக கருணாநிதியின் நண்பர் என்ற முறையில் தான் இவர் சேர்மனாக்கப்பட்டுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர். நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இவர் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படுவார். அப்போது இவர் சேர்மனாக இருப்பாரா? அல்லது வாரியத்தின் புதிய சேர்மன் இந்தப் பொறுப்புக்கு வருவாரா?
தேர்தல் வருவதற்குள் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறப்படுமா? பெறப்படாது என்றால் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அனுமதி பெறுவது எப்படி? இவரைப் போன்றவர்கள் இதில் ஈடுபட்டதாலேயே அனுமதி கிடைக்காமல் போகுமே? அனுமதி அளிப்பது மத்திய அரசின் அதிகாரம் என்ற போதும் மாநில அரசு ஆட்சேபனை செய்தால் மத்திய அரசு எப்படி அனுமதி அளிக்கும்?
முடிவாக நாம் சொல்வது இது தான்.
இதை வக்பு வாரியம் நடத்துகிறது என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
வக்பு வாரியமும் நீடூர் மதரசாவும் இணைந்து நடத்துகிறது என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
அரசும் வக்பு வாரியமும் இணைந்து நடத்துகிறது என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
இதை மக்களிடம் நன்கொடை பெற்று வக்பாக நடத்துகிறோம் பணம் கொடுத்தவர்கள் மறுமையில் தான் நன்மையை எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதை மட்டும் மக்களிடம் சொல்லுங்கள்
அல்லது ஷேர் சேர்த்து கமர்ஷியலாக நடத்துகிறோம். அதன் பங்குதாரர்களே அதை நிர்வகிப்பார்கள் என்றால் அதை மட்டும் மக்களுக்குச் சொல்லுங்கள்
அதன் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை பங்குதாரர்கள் தேர்வு செய்வார்கள் என்றால் அதை மட்டும் மக்களுக்குச் சொல்லுங்கள்
அல்லது அதன் நிர்வாகிகளாக நிரந்தர சேர்மன் மற்றும் நிர்வாகிகள் இருப்பார்கள் என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
மருத்துவ மனை கட்டட்டப்பட்டு வந்தால் கட்டப்பட்டு வருகிறது என்று சொல்லுங்கள்.
காலியிடமாகத் தான் உள்ளது. இனிமேல் தான் அதற்கான வரைபடம் தயாரித்து பல்வேறு மட்டங்களில் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர் தான் மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது உங்கள் கனவு என்றால் அதை மட்டும் மக்களிடம் சொல்லுங்கள்

ஆனால் இடத்துக்கு ஏற்ப அனைத்தையும் நீங்கள் சொல்வது என்றால் மக்கள் பைத்தியக்காரர்கள் என்று முடிவு செய்து விட்டீர்கள். ஒயிட் காலர்ஸ்கள் எதைச் சொன்னாலும் நம்பக்கூடிய ஏமாளிகள் என்று மக்களைக் கருதுகிறீர்கள்.
உங்களை நம்பி பணம் தந்தவர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக நாம் எச்சரிக்கை செய்தது இப்போது மேலும் உறுதியாகிறது.
முதலில் நம்க்கு சந்தேகம் தான் இருந்தது. இவர்கள் முரண்பட்டு பேசுவதால் இதில் கடுகளவும் நம்பகத் தன்மை இல்லை என்பது உருதியாகிறது. எனவே இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த பொதுமக்களுக்கும் தனவந்தர்களூக்கும் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.