தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகம்

பதவி ஆசையெல்லாம் அறவே கிடையாது, எங்களுக்கு சமுதாய மானமே முக்கியம் என நம் சமுதாயத்தின் மானம் காக்கப்புறப்பட்ட நம் முன்னாள் சகாக்கள் இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு வாய்கிழிய சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியலில் நமது சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது, எனவே தான் அதை மீட்க களமிறங்கப்போகிறோம் என களமிறங்கியவர்கள் கேவலப்பட்டு நிற்கிறார்கள். 

காலங்காலமாக முஸ்லீம் லீக் அல்லது இஸ்லாமிய கட்சிகள் வாங்கி வந்த 4 அல்லது 5சீட்டுக்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ண புறப்பட்டிருக்கும் புதிய படை தான் இந்த கழகம். கலைஞரிடம் அவமானப்பட்டு விட்டு இப்போது ஜெயலலிதாவிடம் பல்லைக்காட்டி 3 சீட்டு பெற்றிருக்கும் கழகத்தினர் யாருக்காக உழைக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. 

சமுதாயத்தை அடகுவைத்து எங்களின் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இவ்வளவு பிரதி நிதித்துவம் போதும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மமகவினர். அப்படியே 3 இடங்களில் போட்டியிட்டாலும் அது நிச்சயமாக எதிர்கட்சியில் முஸ்லீம்கள் நிறுத்தப்படும் தொகுதியாகத்தான் இருக்குமே தவிர இவர்கள் போய் புதிதாக முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தி விடப்போவதில்லை.



தூய தவ்ஹீத் கொள்கை தான் கழகத்தின் வளர்ச்சிக்குத் தடை, எனவே நீங்கள் இருக்கும் வரை நாங்கள் கல்லா கட்டமுடியாது, எனவே உங்கள் ஓரிறைக் கொள்கையை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறிவிடுங்கள் என அன்றைக்கே தன் சுய நலத்திற்காக தவ்ஹீது கொள்கையை கைகழுவிய இந்தக் கூட்டம் இன்றைக்கு சமுதாய மானம் காக்க தேர்தல் நிதி கேட்டு நிற்கிறது. 

ஒரு நல்ல‌ அமைப்பின் செயல்பாட்டுக்கு நிதி தரலாம், ஏதேனும் பள்ளிவாசல் அமைப்பதற்கு நிதி தரலாம், மக்களுக்கு பயன் தரக்கூடிய காரியங்களுக்கு நிதி தரலாம்,சமுதாய நலன் சார்ந்த போரட்டங்களுக்கு நிதி தரலாம். ஆனால் ஒரு தனி நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதி தருவதற்கு மக்களுக்கு என்ன வந்தது? மக்களையெல்லாம் கேணயர்களாக்கி மடையர்களாக்குவதை யாரால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்?

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு உங்களின் பல நாள் லட்சியத்தை அடைவதற்கு நாங்கள் ஏன் நிதி தர வேண்டும்? சாதாரணமாக கேட்டுப்பார்ப்பீர்கள், தராவிட்டால் உங்கள் வழக்கமான கட்டப்பஞ்சாயத்து பாணியில் மிரட்டிக்கேட்பீர்கள். இதெல்லாம் மக்களின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். 

கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் தேர்தலில் நிற்க ஆசையிருந்தால் உங்கள் சொந்த சொத்துக்களை விற்று அந்த ‍பணத்தில் போட்டியிடுங்கள் . அதை விடுத்து மக்களிடம் வசூல் செய்து அவர்கள் பணத்தில் போட்டிடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? அதனால் வெற்றியடைந்தால் உங்களுக்குத் தான் லாபம்,தோல்வியடைந்தாலும் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. காரணம் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி இரவு பகலாக உழைத்து உங்கள் வெற்றிக்கு போராடக்கூடியவன் அப்பாவித் தொன்டன் தானே!
 
உங்கள் அரசியல் நிலையை மக்கள் என்ன அறியாமலா இருக்கிறார்கள்?நீங்கள் எப்படியெல்லாம் அரசியல் செய்வீர்கள் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்m,உங்களின் செயல்பாட்டினால் வெறுத்துப் போன, உங்களின் அறிவுரையால் அல்லாஹ்வின் ஆலயத்தை மூடுவதற்கு முழுமூச்சாய் பங்காற்றிய அதே ஊரைச்சார்ந்த உங்கள் இயக்கத்தின் முன்னாள் தங்கமுட்டையிடும் வாத்தாய் இருந்தவர், இன்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கிறாரா இல்லையா?

உங்கள் நிலையை என்ன மக்கள் உணராமலா இருக்கிறார்கள்? நாம் வாழும் தமிழ்நாட்டில் நமக்கு இட ஒதுக்கீடு தர வேண்டுமானால் அது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் நிச்சயமாக முடியும் என தெரிந்தும் நீங்கள் இங்கே கேட்டால் எங்கே கூட்டணிக்கு ஆபத்து வந்து விடுமோ எனக் கருதி உங்களின் போராட்டக் களத்தை டெல்லிக்கு மாற்றினீர்கள். தாம்பரத்திலே நடத்தப்பட்ட ஒரே ஒரு கண்துடைப்பு மாநாட்டைத் தவிர வேறு ஏதேனும் போரட்டம் நடத்தினீர்களா? இல்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் விலைபோகாத, வீரியமான, அரசுக்கு இம்சை தரக்கூடிய போராட்டங்கள் குறிப்பாக சிறை நிரப்பும் போராட்டம் காரணமாக வேறு வழியில்லாமல் ததஜ நிர்வாகிகளை அழைத்து இவர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி 3.5% இட ஒதுக்கீட்டை வழங்கியது தமிழக அரசு. இதை நாங்கள் சொல்லவில்லை. இந்த இயக்கத்தில் இருந்து மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டு இன்றைக்கு உங்களுக்கு விசிறி வீசிக்கொண்டிருக்கிறாரே! அவர் சொன்னது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மனிதனுக்கு நன்றி செய்யாதவன் இறைவனுக்கு நன்றி செய்தவன் ஆக மாட்டான் என பேனரை வைத்து நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞருக்கு துதி பாடி பாராட்டு விழா நடத்தினீர்கள். அதுவும் நீங்கள் சீட்டுப் பொருக்குவதற்காக.

இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கிறது என கருணாநிதியே ஒப்புகொண்டும்,அதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சரியானது என சப்பைக்கட்டு கட்டினீர்கள். வக்ப் வாரிய தலைவராக இருக்கும் போது ஆளும் கட்சியினர் மற்றும் சில தனியார்கள் செய்த‌ முறைகேடுகளை கண்டும் காணாமலும் விட்டு விட்டீர்கள். எவ்வளவு வக்பு நில ஆக்கிரமிப்பு, மதுரை வக்ப் கல்லூரி பணி நியமணத்தில் நடந்த கொடுமை இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து விட்டு கடைசியில் கருணாநிதி உங்களை வெளியேற்றியதும், சமுதாய மானம் காக்க உங்களின் வக்ப் தலைவர் பத‌வியை ராஜினாமா செய்தீர்கள், இடஒதுக்கீட்டில் குறைபாடு என்றீர்கள்,தனியாக போட்டியிட்டு ஆளும்கட்சியை மண்ணைக் கவ்வ வைப்பதாக கூறினீர்கள். கடைசியில் மண்ணைக் கவ்வியது யார் என்பது நாடே அறிந்த விசயம்.

இப்போது மறுபடியும் மானம் காக்க அம்மாவுடன் கூட்டணி. 3 சீட்டுக்களைப் பெற்றது ராஜதந்திரம் என சப்பைக்கட்டு கட்டும் தலைவர் அவர்களே! எங்களுக்கு பதவி முக்கியமில்லை, சமுதாய நலன் தான் முக்கியம் என நீங்கள் அன்றைக்கு பேசிய பேச்சுக்கும், அரசியலில் சட்டசபையில் பிரதி நிதித்துவம் பெறுவது தான் முக்கியம் என இன்றைக்கு பேசும் பேச்சுக்கு கொஞ்சம் கூட பொருந்திப் போகவில்லையே! சுய நினைவோடு அல்லது சுயசிந்தனையோடு தான் பேசுகிறீர்களா?

கடைசியாக ஒன்று. நீங்கள் உண்மையிலேயே சமுதாய மானம் காக்க புறப்பட்டது உண்மையானால் நீங்களும், ஜனாப் ஹைதர் அவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து தமுமுகவில் இருக்கும் எத்தனையோ படித்த துடிப்பு மிக்க இளைஞர்கள் குறிப்பாக வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்களை வரும் தேர்தலில் நிறுத்தி அவர்களுக்கு வெளியே இருந்து வழிகாட்ட‌ உங்களுக்கு திராணியிருக்கிறதா?

பொதுவாக நாடாளுமன்ற‌ தேர்த‌லுக்கு த‌ங்க‌ளை வேட்பாளராக‌ த‌குதியாக்கிக் கொண்டவ‌ர்க‌ள் திரும்ப ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தேர்த‌லில் போட்டியிட‌ வெட்கப்படுவார்கள் . அதேபோல க‌ழ‌க‌த்தின் த‌லைவ‌ரும்,பொதுச்செய‌லாள‌ரும் ஏற்க‌னவே நாட‌ளும‌ன்ற‌ வேட்பாள‌ர்க‌ளாக‌ த‌குதிய‌டைந்து விட்டார்க‌ள், என‌வே அவ‌ர்க‌ள் இனிமேல் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்தலில் போட்டியிட‌ மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு பதவி ஆசை என்பது துளியும் கிடையாது என‌ க‌ழ‌க‌த்தின் உண்மைத் தொண்‌ட‌ர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதுமட்டுமின்றி கழகத்தில் தகுதியுடைய நிறைய பேர் வேட்பாளர்களாக காத்திருக்கிறார்கள். எனவே கழகத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும் அவர்களுக்கு வழிவிட்டு இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆசை அல்ல, உங்களுடைய கழகக் கண்மணிகளின் ஆசை.
காரணம் உங்களுடைய வழிகாட்டுதல் தமுமுகவிற்கு தேவை என அவர்கள் நினைக்கிறார்கள். ஏற்கனவே 3 சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகமாக மாற்றி விட்டீர்கள் என்ற கோபத்தில் இருக்கிறார்கள் உங்களுடைய தொண்டர்கள். அப்படிப்பட்ட உண்மைத் தொண்டர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தாமல் உங்கள் கழகத்தில் இருக்கும் நல்ல அறிவாளிகள் மற்றும் படிப்பாளிகளை முன்னிறுத்தி நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது நடக்குமா? இதை அமல்படுத்தி உங்களுக்கு பதவி ஆசை இல்லை என நிறுபிக்க முடியுமா? திருச்சியில் இருந்து பல்லவனாக வரும் ரயில் சென்னையிலிருந்து வைகையாக திரும்பிப் போவதைப் போல தவழ்ந்து வந்தால் தமுமுக, மானம் காக்க வந்தால் அது மமக‌ என மக்களை இரட்டைபணி செய்பவர்களாக ஆக்கியிருக்கிறீர்கள்.

வந்து போகும் ரயிலுக்குத் தெரியாது, அது என்ன பெயரில் செயல்படுகிறது என்று. ஆனால் தமுமுகவில் இருக்கும் எத்தனைத் தொண்டர்களுக்கு மமக மீது ‍பற்று இருக்கிறது. பொதுக்குழுவில் கூட அவர்களின் கருத்துக்கு வாய்ப்புத் தராமல் நீங்கள் எழுதிக்கொண்டு வந்த தீர்மானங்களை வாசித்து விட்டு போய் விடுகிறீர்கள். உங்களின் பதவிக்காலம் எவ்வித நிபந்தனையும் இன்றி ஒரு வருட காலம் நீட்டிப்பதற்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கைதூக்கினார்கள் என்பதை, தேவைப்பட்டால் பொதுக்குழு வீடியோவை ஒருமுறை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளுதல் நலம். இனியாவது உங்களின் தொண்டர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். பாவம் உங்களை நம்பி நிற்கும் அப்பாவித் தொண்டர்கள்.

பெரியகுளத்தில் முதியவரிடம் நூதன முறையில் ரூ. 40 ஆயிரம் திருட்டு.

பெரியகுளம். 3-

பெரியகுளத்தில் வங்கியில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்து வந்த முதியவரிடம் நூதன முறையில் பணம் திருடியவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.-


வங்கியில் பணம் எடுத்த விவசாயி,

தேனி மாவட்டம் பெரியகுளம், வடகரை, செகடகடித் தெருவை சேர்ந்தவர் ராமகிஷ்ணன்(வயது 75) விவசாயி. இவர் பெரியகுளத்தில் உள்ள கனரா வங்கியில் ரூ.40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

அப்போது அவரை பின்தொடந்து வந்த அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் ராமகிருஷ்ணணிடம் பக்கத்து வீட்டின் அருகே பணம் சிதறி கிடப்பதாக தெரிவத்தார். இதைதொடர்நது ராமகிருஷ்ணண் பணம் கீழே கிடக்கிறதா? என்று பார்க்கச் சென்றார். 

ரூ.40 ஆயிரம் திருட்டு
விவசாயி ராமகிருஷ்ணண் பணத்தை எடுக்க சென்றபோது அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ40 ஆயிரத்ததையும், அந்த வீட்டின் சாவியையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் ராமகிருஷ்ணண் அதிர்ச்சி அடைந்தார்.

 இச்சம்பவம் குறித்து ராமகிருஷ்ணண் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெரியகும் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு செல்பவர்களை நோட்டமி்ட்டு அவர்களின் கவனத்தை திருப்புவதற்காக ஏதாவது ஒரு வழியை பின்பற்றி பணம் திருடும் கும்பல் நடமாடி வருகிறது. இந்த கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு - ஓர் அவசர அலசல்



உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் மிகவும் பரபரப்பாகவும், மும்முரமாகவும் உலகம் முழுவதும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்நிகழ்கால நிகழ்வுகளில் கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக இந்த கட்டுரை வரையப் படுகிறது.
கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு.
ஒரு விளையாட்டாக இருந்தால் அந்த விளையாட்டை விளையாடுவதின் மூலம் உடலுக்கு ஒரு பயிற்சி கிடைக்க வேண்டும். ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அந்த விளையாட்டு ஒரு நன்மையைத் தர வேண்டும் எந்த நன்மையும் இல்லாத விளையாட்டை விளையாட்டுக்கள் பட்டியலில் சேர்பதே ஒரு சிறந்த சிந்தனையாளரின் பண்பாக இருக்க முடியாது.

11 பேர்கள் விளையாட பல கோடி மக்கள் அந்த விளையாட்டை பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள்(?) விளையாடுவது 11 பேர்தான் அதிலும் அவர்களுக்குக் கூட அந்த விளையாட்டினால் எந்த நன்மையும் இல்லை இதே நேரத்தில் அதைப் பார்க்கும் பல கோடி மக்களும் தங்கள் நேர காலத்தை வீனாக்கி தீமையை சம்பாதிப்பதுதான் கவலையான விஷயம்.

வாழ்க்கையாகிவிட்ட கிரிகெட் விளையாட்டு(?)
ஒரு விளையாட்டென்ரால் அது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாக இருக்களாம். அதனால் உடலுக்கும் உள வளத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கலாம்.

வியர்வை வெளியாகுதல், ஓடி ஆடித் திரிவதின் மூலம் இரத்த ஓட்டம் சீராக அமைதல் போன்றவற்றால் மிகப் பெரிய உடலியல் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்கலாம்.

ஆனால் இந்த கிரிகெட் விளையாட்டைப் பொருத்த வரையில் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு பகுதி என்பது போய் வாழ்க்கையே விளையாட்டாகிவிட்டதுதான் கவலையான செய்தியாகும்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் தொழிலாக கிரிகெட் இருக்கிறது.
அவர்கள் விளையாடினால் அவா்களுக்கு பணம் கிடைக்கிறது.

இதே நேரம் அதை இரவு, பகலாக கண் விழித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன கிடைக்கிறது? நோய் தான் மிச்சமாகிறது.

இன்றைக்கு கிரிகெட்டே பலருடைய வாழ்க்கை என்றாகிவிட்டது.

இதனால் சமுதாயத்தில் பொது மக்களுக்கு மத்தியில் பலதரப் பட்ட பிரச்சினைகளும் சிக்கள்களும் உருவெடுத்துள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.

நேரத்தை விரயப் படுத்தும் வீண் விளையாட்டு
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நேரம் என்பது மிகவும் முக்கியமானது.அதிலும் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையில் நேரம் என்பது அவனுடைய உயிருக்கு நிகரானது. காலம் பொன் போன்றது என்பார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தவரை காலம் பொன்னை விட மேலானது உயிரைப் போன்றது.

உயிர் போனால் எப்படி திரும்பப் பெர முடியாதோ அது போல் காலம் கடந்து விட்டால் அதனை நாம் திரும்பப் பெற முடியாது. பொன்னை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் நேரத்தை சம்பாதிக்க முடியாது.

கடைசி நேரத்தில் பரீட்சையை தவர விட்டவனிடம் நேரத்தின் மகிமையைக் கேட்டுப் பார்க்கச் சொல்வார்கள் நேரம் என்பது எவ்வளவு தேவையான முக்கியமாக விஷயம் என்பதை அவன் சொல்லுவான்.

ஆனால் இந்த கிரிக்கெட் விளையாட்டினால் எந்தளவுக்கு நேர விரையம் ஏற்பட்டாலும் நம் சகோதரர்கள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

ஒரு நாள் ஆட்டம், மூன்று நாள் முக்கோணத் தொடர், டெஸ்ட் ஆட்டம், உலகக் கிண்ணம், ஆசியாக் கிண்ணம், என்று எத்தனையோ பெயர்களின் கால விரையம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆட்டம் என்று சொல்லி அந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு ஒரு நாள் ஆட்டத்தில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அதனைப் பார்ப்பதற்காக டி.விக்கு முன் குந்தியிருப்பவர்களுக்கு என்ன பயன் ஏற்படுகிறது? நேர, கால, மின்சார , உடல் சக்தி விரையம் இதுதான் மிச்சம்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இவ்வாறு பேசுகிறான்.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் இழப்பில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. (103 - 1,3)

இறைவன் ஒரு பொருளின் மீது அல்லது ஒரு விஷயத்தின் மீது சத்தியமிட்டால் அந்த விஷயத்திற்கு அல்லது அந்தப் பொருளுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் உண்டென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட திருமறை அத்தியாத்தின் முதல் வசனத்திலேயே இறைவன் காலத்தின் மீது சத்தியம் செய்கிறான். காலத்தின் மீது இறைவனே சத்தியம் செய்து சொல்கிறான் என்றால் நேர காலம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் காலத்தின் மேல் சத்தியம் செய்துவிட்டு. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறான்.

நேரத்தை நமது இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டுமே தவிர பாழாக்கக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது.

மறுமை நாளில் இறைவனின் விசாரனையைப் பற்றி நபியவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

வாழ்நாளைக் கழித்த விதம், கற்ற கல்வியின் படி நடந்த விதம், பொருளைச் சம்பாதித்து அதனை செலவு செய்த விதம், உடலை அழித்த விதம் ஆகியவை பற்றி ஓர் அடியான் மறுமையில் விசாரிக்கப் படாத வரை அவனுடைய கால்கள் அவ்விடத்தை விட்டும் நகராக என்று நபியவர்கள் கூறினார்கள். ( திர்மிதி – 2341 தாரமீ – 536 )

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் வாழ்நாளைக் கழித்த விதம் பற்றி விசாரிக்கப்படும் போது நல்ல முறையில் கழித்ததாக பதில் சொல்லிவிட்டால் அவன் மறுமையில் வெற்றி பெற்றவனின் பட்டியலில் சேர்ந்து விடுவான். ஆனால் இந்த கிரிக்கெட் மோகத்தினால் நிறையைப் பேர் அவா்களுடைய வாழ் நாளை வீனாக கழிக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் மறுமையில் தங்கள் நிலை என்னவாகப் போகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள் வேண்டும்.

நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் தரி கெட்ட விளையாட்டுக்களிலும் வீன் பொழுது போக்கான அம்சங்களிலும் ஈடுபடுபவர்கள் மறுமை நாளின் எந்த நிலையில் இருப்பார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா நான் விட்டு வந்ததில் (வாழ் நாளில்) நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாரில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான்.அவா்கள் உயிர்பிக்கப் படும் நாள் வரை அவா்களுக்குப் பின்னால் திறை உள்ளது. (23 – 99,100)

உலகத்தில் உள்ள வீனான காரியங்களில் நாம் வாழும் காலத்தில் மூழ்கி இருந்துவிட்டு மரணித்ததின் பின்னால் இறைவனிடம் மன்றாடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

முஃமின்கள் எப்படி இருப்பார்கள்?
உண்மையான ஒரு முஃமின் தனது வாழ்க்கையில் வீனான காரியங்களில் ஈடுபடாமல் தன்னைக் காத்துக் கொள்வான். வீனான காரியங்களில் ஈடுபடுபவர்கள் உண்மையில் முஃமின்களாக இருக்கவே முடியாது.

இறைவன் முஃமின்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவா்கள் வீனானதைப் புறக்கணிப்பார்கள்(23லி3) என்று குறிப்பிடுகிறான்.

உண்மையில் கிரிகெட் போன்ற இந்த வீனான விளையாட்டுக்களை புறக்கணிப்பவர்கள் மாத்திரம் தான் உண்மையான முஃமின்களாக இருக்க முடியும் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டும், முஸ்லீம்களின் வணக்க வழிபாடுகளும்.
கிரிக்கெட் மீது ஆழ்ந்த விருப்பமும், ஆசையும் கொண்டு கிரிக்கெட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அவா்களின் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

விளையாட்டு என்று வந்து விட்டால் தொழுகைக்கும் அவா்களுக்கும் தொடர்பின்றிப் போய்விடுகிறது. இரவு, பகலாக விளையாட்டில் மூழ்கியிருப்பார்கள் லுஹர் இல்லை, அசர் இல்லை, இரவு ஆட்டமாக இருந்தால் மஃரிப் இல்லை, இஷா இல்லை கேட்டால் விளையாட்டில் மும்முறமாம்?

என்னே விளக்கம் ?????????

தரி கெட்ட இந்த விளையாட்டை நேசித்து நாளை சுவர்க்கத்தை இழக்கும் நிலை தேவை தானா?

சில நேரங்களில் சிலர் சொல்லுவார்கள் முஸ்லீம் கிரிக்கெட் வீரர்கள் என்றால் அவா்கள் வணக்க விஷயத்தில் சரியாக இருப்பார்கள் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் உடனே அல்லாஹ்வைப் புகழ்வார்களாம்.

தொழுகையையே வேண்டுமென்று புறக்கணிக்கும் இவா்கள் மற்ற விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

ஒரு பவுன்டரி அடித்துவிட்டு அதற்காக மைதானத்தில் சுஜுது செய்துவிட்டால் நமது இஸ்லாமிய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீரனை தனது ஆத்மீக குருவாகக் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஐந்து வேலைத் தொழுகைக்கு அவன் சுஜுது செய்யவில்லை என்பது அவா்களுக்குத் தெரியாது கடமையான ஜும்ஆவை அவன் விட்டு விட்டான் என்பது அவா்களின் கண்களுக்கு தென்படுவதில்லை.என்றாவது ஒரு நாள் மைதானத்தில் அவன் செய்த சுஜுதுக்காக மாத்திரம் அவனை தூக்கி தலையில் வைத்துக் கொள்கிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(62லி9)

இறை இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ வர்த்தகமோ அவா்களை அல்லாஹ்வின் நினைவைவிட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதைவிட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவா்கள் அஞ்சுவார்கள்.(24-37)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள் (63-9)

மேற்கண்ட வசனங்களை ஒன்றுக்குப் பல முறை மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள். அந்த வசனங்கள் எவ்வளவு ஆழமான, அழகான அறிவுரைகளைக் கூறும் என்பது புரியும்.

இறைவனை நாம் எப்படி நினைக்க வேண்டும், இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தடுக்கக் கூடியது எது என்பவைகளைப் பற்றி தெளிவான, அழகான, ஆழமான கருத்துக்களை இறைவன் அதிலே படித்துத் தருகிறான். நாம் எந்தக் காரணம் கொண்டும் இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தூரமாக்கிக் கொள்ளக் கூடாது.

சூதாட்டமான கிரிக்கெட் விளையாட்டு (?)

விளையாட்டு என்ற பெயரில் ஆரம்பமான கிரிக்கெட்டின் இன்றைய நிலை என்னவெனில் முழுக்க முழுக்க சூதாட்டத்துடன் அது தொடர்பாக இருக்கிறது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பேசப்படாத நாளே இல்லை. கிரிக்கெட் சூதாட்டம் இல்லாத நாடே இல்லை இதுதான் இன்றையை கிரிக்கெட்டின் லட்சனமாக இருக்கிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட ரசிகர்கள் வரை அனைவரும் இந்த சூதாட்டத்தில் பங்கெடுப்பதை யாரும் மறுக்க முடியாது.

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விளகிக் கொள்ள மாட்டீர்களா? (5-91)

கிரிக்கெட்டைப் பொருத்தவரை மேற்கண்ட அனைத்துத் தீமைகளும் கிரிக்கெட்டில் இருப்பதைப் பார்க்களாம்.

கிரிக்கெட் வீரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும், அதனோடு தொடர்பு படும் பெரும்பாலானவர்களும் மேற்கண்ட தீமைகளில் தங்களை இணைத்துக் கொள்வதை யாரும் மறுக்க முடியாது.

கிரிக்கெட் வீரர்களுக்காக மது பரிமாறப்படுகிறது. மதுவோடு அவா்கள் தொடர்புபடுகிறார்கள்.

சூதாட்டத்தில் தாராளமாக அவா்கள் பங்கு கொள்கிறார்கள். ரசிகர்களில் பெரும்பகுதியினரும் சூதாட்டத்தில் பங்கு கொள்கிறார்கள்.

இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களும், இதனை ஆதரிப்பவர்களும் தொழுகை விஷயத்தில் பொடுபோக்காகவே இருக்கிறார்கள் (இது பற்றி முன்னனரே விபவரிக்கப்பட்டுள்ளது. )

அன்பின் சகோதரர்களே !

பெரியவர்களே !

இளைஞாகளே !

கல்வியாளர்களே !

இந்த வழிகெட்ட கிரிக்கெட் மோகத்தைவிட்டும் விலகி தூய்மையான, மார்க்கம் சொல்லித் தருகின்ற மார்க்கத்திற்கு முரனாகாத, உடல் அளவில் நன்மை தரக்கூடிய விளையாட்டுக்களை விளையாட்டாக குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் செயல்படுத்தி இம்மை, மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக!

அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் அரபுப் பணம்!


‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: கஅப் இப்னு இயால் நூல்: திர்மிதி – 2258

இஸ்லாத்தின் ஏகத்துவ எழுச்சி நாதம் இந்தியா மற்றும் இலங்கை நாட்டில் எதிரொலிக்கத் துவங்கி சுமார் 6 தசாப்தங்கள் கடந்து விட்டன. நாம் கடந்து வந்த பாதையின் ரணச் சுவடுகளை ஒரு கணம் சற்று நிதானித்து நின்று பின்னோக்கிப் பாருங்கள். இந்நாட்டு முஸ்லிம்கள் இறைமறுப்பிலும் இணைவைப்பிலும் இமாலயச் சிகரத்தின் விளிம்பில் கைகோர்த்து இணைந்திருந்த காலம் அது. கற்களை நட்டி முக்திபெற முனைந்த மூடச் சமூகத்துடன் இணைந்து, கப்ருகளை கட்டி மோட்சம் பெற முனைந்தனர் எம் முன்னோர். வல்லோன் அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் வாழ்வாதாரப் பிச்சை வேண்ட கடமைப்பட்டவர்கள் வலீ என்றும் மகான் என்றும் மரணித்து மண்ணோடு உக்கிப்போன, இறை உத்தரவாதமற்ற ஊதாரிகளிடம் மடிப்பிச்சை ஏந்த ஆரம்பித்தார்கள். ஜோசியம் என்றும் சூனியம் என்றும் உளரிக்கொண்டு தலைப்பாகைக்குள்ளும் தாடிக்குள்ளும் மறைந்திருந்து மார்க்கத்தை விற்று வயிறு வளர்த்த பெயர் தாங்கி முஸ்லிம் பூசாரிகளிடம் தம் பகுத்தறிவை அடகு வைத்து சுயமரியாதை இழந்தனர்.

சத்தியத்தையும் அசத்தியத்தையும் வஹியின் வெளிச்சத்தில் எடுத்துரைக்க வேண்டிய உலமாக்கள், வழிகேட்டுக்கு பாதை காட்டும் களங்கரை விளக்குகளாக விஷ்பரூபம் எடுத்திருந்தனர். வணக்கம், வழிபாடு, திருமணம், கருமாதி, பிள்ளைப்பேறு, வாணிபம், சமூக உறவுகள், பண்பாடு, பழக்கவழக்கம் என்று அத்துனை துறைகளும் தூய இஸ்லாத்தை விட்டும் தூர விலகியிருந்த காலமது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இம்மியளவும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிற அளவுக்கு வழிகேட்டுச் சிந்தனைகள் கோலோட்சிய தருணத்தில் தான்:தூய இஸ்லாத்தின் உண்மைச் செய்திகளை வஹியின் வழியில் மக்களுக்கு எடுத்துரைக்கும் கொள்கை கோமான்கள் உதயமாகத் தொடங்கினர். ஏகத்துவ தந்தை இப்ராஹிம் நபியின் சரிதத்தில் ஆர்ப்பரித்து எழுந்த அதே அசத்தியக் குரல்கள் இக்கொள்கை கோமான்களின் ஏகத்துவ போராட்ட வாழ்விலும் எதிரொலிக்கத் துவங்கியது.

பணம், பதவி, பட்டம், அதிகாரம் என்ற அத்துனை ஆயுதங்களையும் கோர்வை செய்து அசத்திய வாதிகள் கொள்கை வாதிகளை எதிர்க்க முற்பட்டனர். ஓரிறைவனை வணங்கு என்று ஓங்கியுரைத்த குரல்வளைகள் ஒரேயடியாக நசுக்கப்பட்டன. அடியும் உதையும் எல்லை கடந்தன. வசைமொழியும் வீண் பழியும் வந்து குவிந்தன. ஸீன்னாவை நிலை நாட்ட நீட்டப்பட்ட சுட்டு விரல்கள் தஷஹ்ஹீதில் வைத்தே நெட்டி முறிக்கப்பட்டன. பின்பற்ற வேண்டியது குர்ஆன் ஸீன்னாவை மட்டும் தான் என்று மக்களை தட்டியெழுப்ப முனைந்தவர்கள் குண்டர்களால் எட்டி உதைக்கப்பட்டனர். சமூகத்தை விட்டும் தட்டிக் கழிக்கப்பட்டனர். அல்லாஹ்வை துதிக்கும் இறையில்லங்களில் கொள்கை வாதிக்கு கதவடைப்பு. மார்க்கம் பேசும் ஜம்மியதுல் உலமாவில் மத்ஹபை எதிர்த்ததற்காய் தடையுத்தரவு. தர்ஹாவை தரைமட்டமாக்கு என்ற தூதர் மொழியை எடுத்துச் சொன்னதற்காய் மையவாடிகளில் உறுப்புரிமை ரத்து.

இப்படி, இந்தக் குர்ஆன் ஸ_ன்னா என்ற ஏகத்துவ கொள்கையின் எழுச்சிக்காய் எதையெல்லாம் இழக்க முடியுமோ அனைத்தையும் இழந்தனர். தியாகத்தினதும் அர்ப்பணிப்பினதும் அறுவடை தான் இன்று நானும் நீங்களும் ஏந்தியிருக்கும் ஏகத்துவ தீபம். அன்று அசத்தியத்தின் அராஜகத்துக்கு மத்தியிலும் கொள்கையில் குழையாது, வழிகேட்டோடு வளைந்து போகாது எடுப்பாக நின்று பிரச்சாரம் செய்த உத்வேகத்தை இன்று காண முடிகிறதா? பள்ளிகளின்றி, பாடசாலைகளின்றி, வீட்டுத் திண்ணையிலும், முற்ற வெளியிலும் கொள்கை பேசிய போது இருந்த கொள்கை பிடிப்பை ஏன் இன்றைய நமது தாஈக்களிடம் காண முடியவில்லை? ஸ_ன்னா என்றால் அதை உயிரிலும் உயர்வாய் மதித்தவர்களின் வாரிசுகள் இன்று கொள்கையற்ற கோமாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி, கொள்கையில் சமரசம் செய்யும் இயக்கவாதிகளின் மேடையில் சிறப்பு அதிதியாய் ஏறி, சறுக்கல் பாதையில் பயணிப்பதை எப்படி ஜீரணிக்க முடியும்? நபி வழியில் தொழுவதற்கு மஸ்ஜிதுகளில் தடைவிதிக்கப்பட்ட அன்றைய எகத்துவ வாதிகளின் இன்றைய பரம்பரை, ஸ_ன்னாக்களை கிள்ளுக் கீரையாய் கருதும் கபோதிகளுக்கும், பித்அத் வாதிகளுக்கும் மஸ்ஜித் கட்டி இறையில்லங்களை தாரைவார்த்து எப்படி பாழ்படுத்த முடியும்?

இத்துனை வினாக்களுக்கும், எம் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்குமான ஒரே பதில்: எம்மிடம் அளவு கடந்து வந்து குவிந்த பணம்! பணம்!! பணம்!!! ஆம், அல்லாஹ்வின் தூதர் எதனை இந்த உம்மத்துக்கான சோதனை என்று முன்னறிவிப்புச் செய்தார்களோ அது எம் விடயத்தில் நிறைவேறியிருப்பதை பார்க்கிறோம். வெளிநாட்டு அரசுகளினதும், நிறுவனங்களினதும் ஊடாக இலங்கை வாழ் ஏகத்துவ வாதிகளுக்கு திறந்துவிடப்பட்ட செல்வ வாயில் எம் சொந்த தியாகங்களை விட்டும் எம்மை திசைமாற்றச் செய்தது. கஷ்டங்களையும், துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும் மனோவலிமையை இழக்கச் செய்து சொகுசாக வாழும் இழி உணர்வை எம் மனங்களில் விதைக்கலானது. பணத்தின் மூலம் பதவிகள் வந்து குவிந்தன. கிடைத்த பதவியை காப்பதற்காய் கொள்கையை கூட தாரைவார்க்க எம் தாஈக்கள் தயங்கவில்லை. மிம்பர் மேடையில் ஒர் உரை கிடைப்பதற்காய் கூட்ட துஆ ஓதும் ஸ_ன்னா விரோதிகளாய் நிறுவனத் தொண்டர்கள் நிறம்மாறியிருக்கிறார்கள். சத்தியத்தை உடைத்துச் சொன்னால் பதவிக்கு ஆபத்து என்பதற்காய் அடக்கி வாசிக்கும் அங்கவீன நிலைக்கு எம் அழைப்பாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

சத்தியத்தை எங்கு சொல்வது? எப்படி உடைத்துச் சொல்வது? தர்காவை எப்படி ஒழிப்பது? கொள்கை பற்றை எப்படி வளர்ப்பது? என்பதை சிந்திப்பதற்கு பதிலாக, கிணறை எங்கு தோண்டுவது? தண்ணீர் குழாய் எங்கு பொறுத்துவது? மஸ்ஜிதை பித்அத் வாதிகளுக்கு எப்படி கட்டிக் கொடுப்பது? என்கிற ரீதியில் சிந்திக்கும் சமூகமாக எம் ஏகத்துவ சமூகம் மாறிவிட்டது. அழைப்புப் பணியை விட வசூலை அள்ளித்தரும் சமுதாயப்பணிகள் முதலிடத்துக்கு வந்துவிட்டன. பணம் கிடைத்தால் மட்டும் மார்க்கம் பேசும் pசநியனை தாஈக்கள் ஏராளம் உருவாகியிருக்கிறார்கள். பணம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் கூட்டம் முன்பை விட பன்மடங்கு பெருகியுள்ளது. ஒட்டு மொத்தத்தில் அரபுப் பணத்தின் வருகையால் தஃவா அதன் உண்மையான உயிர்த்துடிப்பை இழந்து கொள்கை உறுதியற்ற கோமாளிகளின் கைகளில் சிக்கித்தவிக்கிறது.

இந்நிலை மாறி மீண்டும் சொந்த தியாகத்துடன் கூடிய ஓர் ஏகத்துவ புரட்சி மலர வேண்டும் என்பதை இலக்காக வைத்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயற்பட்டு வருகிறது. சத்தியத்தை உடைத்துச் சொல்வதை மட்டும் நோக்காகக் கொண்ட எம்மோடு இணைந்து செயற்பட உங்களை அன்புடன் அழைக்கின்றோம். தனித்துவ வழியில் தடம் பதித்து, தவ்ஹீதை உரத்துச் சொல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!                                                                           நன்றி: அ ழைப்பு பெப்ரவரி மாத இதழ்

மோடி கொடுத்த ரூ.29,000 கோடி!! குஜராத் சட்டமன்றத்தில் அமளி!!


அகமதாபாத்,மார்ச்.2:அரசியல் தரகர் நீரா ராடியாவால் டாடா நிறுவனம் ரூ.29,000 ஆதாயத்தை நரேந்திர மோடி அரசில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நானோ கார் தயாரிப்பை குஜராத்துக்கு கொண்டு வந்ததற்காக டாடாவுக்கு இந்த ஆதாயத்தை மோடி அரசு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குஜராத் சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.


மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமையவிருந்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலை, மம்தா பானர்ஜியின் தூண்டுதலால் எழுந்த போராட்டம் காரணமாக வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்கள் டாடாவுக்கு அழைப்பு விடுத்தும், குஜராத்தின் சனந்த் என்ற இடத்தில் இந்த தொழிற்சாலையை அமைத்தது டாடா. இதற்காக டாடாவுக்கு ரூ.29,000 கோடி அளவுக்கு நரேந்திர மோடி அரசு சலுகைகளைக் காட்டியுள்ளாக குற்றம்சாட்டப்பட்டது.


இந்தநிலையில், இன்று குஜராத் சட்டமன்றத்தில் நானோ தொழிற்சாலைக்கு இவ்வளவு சலுகைகளைக் கொடுத்தும், அவர்கள் வெளி மாநிலத்தவர்களைத்தான் வேலைக்கு எடுப்பதாகவும் ஊள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ மோத்வாடியா கேள்வி எழுப்பினார். உடனே இதனை மறுத்தார் அம்மாநில வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் வாஜுபாய் வாலா. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சொன்னது தவறு என்றும், இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


ஆனால் டாடாவுக்கு ரூ.29,000 கோடி ஆதாயத்தை மோடி அரசு அளித்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அரசியல் தரகர் நீரா ராடியா மூலமே இந்த ஆதாயத்தை டாடா அடைந்தார் என்றும் கூறினார். இதனால் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் மோதலும் எழுந்தன.

நீதித்துறையா? காவித்துறையா?


ஆமதாபாத், மார்ச்.1 : குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று விட்டு, குஜராத் திரும்பிக் கொண்டிருந்த 59 கரசேவர்கள் தீயில் கருகி செத்தனர்.ரெயில் எரிப்பு சம்ப வத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர மத கலவரம் வெடித்தது. 4 மாதம் நீடித்த இந்த கலவரத்தில் சுமார் 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்ட உமர்ஜியும் நிராபராதி என்று விடுதலை ஆனார். மீதமுள்ள 31 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 31 பேரில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

 
அரசு வக்கீல் இந்த தீர்ப்பை வரவேற்றார். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் சின்கா இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், கோத்ரா ரெயில் எரிப்பில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தண்டனை அளவுக்கு அதிமானது. நியாயமற்றது என்றார்.

சிந்திக்கவும்: பாபர் முசூதியை இடித்துவிட்டு கலவரம் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்தவ அத்வானி, முதல் நரேந்திர மோடிவரை வெளியே. கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்டது 59 பேர் அதை விபத்து என்று கமிசன் ரிப்போர்ட் சொல்கிறது. கரசேவை காரர்கள் ரயிலின் உள்ளே இருந்து கேஸ் மற்றும் அடுப்புகளை வைத்து சமையல் செய்ததில் நடந்த விபத்தாக இருக்கலாம் என்று கமிசன் சொல்கிறது. இப்படி ஒரு சந்தேகமான நிலையில் உள்ள ஒரு வழக்கை விரைந்து நடத்தி 11 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு. . எந்த ஆதாரமும் இல்லாத அநீத தீர்ப்பு. அதேவளை பாபர் மசூதியை இடித்துவிட்டு இந்தியா முழுவதும் கலவரம் நடத்தி முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த ஹிந்து தீவிரவாதிகள் எல்லாம் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்களது வழக்கை இன்னும் முடிக்கவில்லை. 59 பேரை எரித்து கொன்றார்கள் என்றே வைத்துகொள்வோம் அவர்களுக்கு தூக்கு சரி! அதை காரணமாக வைத்து கலவரம் நடத்தி 5௦௦௦ க்கும் அதிகமான முஸ்லிம் மக்களை இரத்த வேட்டை ஆடிய மோடி கும்பலுக்கு என்ன தீர்ப்பு? இன்னும் அந்த மோடி முதலமைச்சர்? இது நீதியின் தீர்ப்பு இல்லை! இது ஹிந்துவா ஆதரவு தீர்ப்பு! இது நீதி துறை இல்லை! ஹிந்துதுவாவின் படித்துறை!!

U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்


கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்

செவ்வாய்

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?



 
உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின்
சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ்என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.(அல்குர்ஆன் 34 : 6)
-கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி

எது முன்னேற்றம்? மகளிர் தின சிந்தனைகள் !!!

மார்ச் 8, உலக மகளிர் தினம் பெண்கள் மீது அக்கறையைக் காட்டும் வண்ணம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்! பெண்கள் மேம்பாட்டிற்கான கோஷங்கள் காதுகளைப் பிளக்க வைத்தன.
மகளிர் தினத்தன்று பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்திற்கு எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்கள்:
அடுப்பு ஊதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற காலம் மலையேறிப் போய், பெண்கள் கல்வித் துறையில் ஆண்களை மிஞ்சிவிட்டனர்.
வீட்டிற்கு வெளியே வந்தாலே அதிசயமாகப் பார்க்கப்பட்ட பெண், விண்வெளிப் பயணம் வரை செல்லுமளவிற்கு முன்னேற்றம்.
உலகத்தில் அதிக ஊதியம் பெறக் கூடியவராக உயர்ந்த பதவியில் இந்திரா நூயி என்ற பெண்மணி தான் இருக்கிறார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் பதவியை வகித்துக் கொண்டு பாராளுமன்றத்திலே முதல் முறையாக உரையை நிகழ்த்தினார்.
உலகத்தின் தற்போதைய வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் கூட ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண் போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம்.
இந்தியா உள்பட பல நாடுகளில் அரசியல் ரீதியாகப் பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் யதார்த்த நிலை.
நகர்மன்றங்களிலும் ஊராட்சிகளிலும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள தனி வார்டுகள்.
இவ்வாறு பல படித்தரங்களை பெண் சமுதாயம் அடைந்து விட்டதாக உரைகளின் வாயிலாகவும் செய்தித் தாள்கள் வாயிலாகவும் தொலைக்காட்சிகளின் சிறப்புச் செய்திகளின் வாயிலாகவும் அறிய முடிந்தது.
இந்த ஆண்டு மகளிர் தினத்தில் மிகவும் வலியுறுத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில:-
பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டும்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதால் வீட்டு வேலைகளில் பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பங்கெடுக்க வேண்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, பெண்களைப் போகப் பொருட்களாகக் காட்டும் சினிமாக்களைப் பற்றியும் சின்னத்திரைகளைப் பற்றியும் ஒரு சிறு கருத்தைக் கூட யாரும் கூறவில்லை. இதுவும் பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்தின் அறிகுறியா? அல்லது இவ்வாறு காட்சிப் பொருட்களாக ஆக்கப்படுவதை நவீன சமுதாயம் ஆதரிக்கிறதா?
எவ்வளவு தான் கல்வியில் முன்னேறி விட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதாரத்தில் செழிப்பான நிலையிலுள்ள நாடுகளில் பணியாற்றினாலும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டுக் கொடுமைகளை நிகழ்த்தும் வக்கிர புத்தியுள்ளவர்களின் (மாமியார் என்ற பெண் உள்பட) கொடூரங்களிலிருந்து பெண்ணினத்தைக் காப்பாற்ற என்ன வழி?
சமுதாயத்தில் சம அந்தஸ்து எனக் கருதப்படக் கூடிய வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்திலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகளிலிருந்து பெண்ணினம் விடுபட என்ன தீர்வு?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தேடாமல் வெறும் கோஷங்களுடன் முன்னேற்றம் என மார்தட்டிக் கொள்வதில் எவ்விதப் பயனுமில்லை.
நாம் வாழக்கூடிய காலச் சூழ்நிலையில் நம்முடைய சமுதாயப் பெண்களுக்கும் நிறையவே பொறுப்பு இருக்கிறது. உணர்வுகளுக்கு ஆட்படுத்த வைக்கும் சீரியல்கள் மற்றும் சினிமா போன்ற மாயைகளிலிருந்து நம் சமுதாயப் பெண்மணிகள் வெளியே வந்து, சமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்த எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. இத்துயர நிலையிலிருந்து சமுதாயம் விடுபட பெண்களின் பங்கு மிகவும் அவசியமானது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் பெண்ணினத்திற்கு உத்தமத் தோழர்கள் கொடுத்த கண்ணியத்தைப் பாருங்கள்.
என்னிடத்தில் நபி (ஸல்) அவர்கள், திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே! என்று கேட்டார்கள். நான் ஆம் என்று கூறினேன். கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா? என்று கேட்டார்கள். நான், (கன்னிப் பெண்ணை) அல்ல; கன்னி கழிந்த பெண்ணைத் தான் என்று கூறினேன். உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே பக்குவமில்லாத அவர்களைப் போன்று இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரி விட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ செய்தது சரி தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி (4052)
(என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தைகளை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே நான் மணமுடித்துக் கொண்டேன். (புகாரி 2406)
இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் தங்களுடைய குழந்தைகளைப் பராமரித்து, கல்வி எனும் செல்வத்தைப் புகட்டினார்கள் என்றால் நம் சமுதாயம் முன்னோக்கிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாயே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கன் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாயாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி (5200)
இதைப் போலவே சமுதாயத்தில் புரையோடி இருக்கும் வரதட்சணை உள்பட எல்லா தீமைகளை ஒழித்து கட்டுவதிலும் ஆண்களுக்கு ஈடாகப் பெண்களுக்கும் பங்கு உள்ளது என்பதை சகோதரிகள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
மேலும் நம்முடைய ஈருலக வாழ்வும் வளம் பெற இஸ்லாமிய மார்க்கம் நமக்குத் தெளிவான போதனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்திய மனங்கள் பண்பட்டு, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதற்குக் காரணமாக அமைந்த அந்த அறிவுரைகளை நம்முடைய வாழ்வில் மிளிரச் செய்ய ஒவ்வொரு பெண்மணியும் சபதம் எடுக்க வேண்டும்.
பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கு ஒருநாள் உபதேசம் செய்தார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகி விடுவார்கள் எனக் கூறியதும் ஒரு பெண் இரு குழந்தைகள் இறந்தால்...? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரு குழந்தைகள் இறந்தாலும் தான் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (1249)
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் தமிழகத்திலே தவ்ஹீத் எழுச்சிக்குப் பின்னர் பெண் ஆலிமாக்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் அவர்களைக் கொண்டு சமுதாயத்தில் சத்திய மார்க்கத்தை நிலை நாட்ட பெண்கள் முயற்சிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்.
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் வாழச் செய்து, நம்முடைய ஈருலகங்களையும் செழிக்கச் செய்வானாக!

இப்னு சாபிரா
தீன்குலபெண்மனி

துவங்கியது மாநில தலைமையத்தில் 30 நாள் பேச்சாளர் பயிற்சி முகாம்



















இறைவனின் மகத்தான அருளைக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சத்திய பிரச்சாரப் பணியை எவ்வித தயக்கமுமின்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் காட்டிய அடிப்படையில் மிக வீரியமாக முஸ்லிம்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகின்றது.
இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், தமிழகத்திற்கு வெளியேயும், வெளிநாடுகளிலும் இந்த ஜமாஅத் மகத்தான வளர்ச்சி கண்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே! அல்ஹம்துலில்லாஹ்!
”நாளொரு கிளையும், பொழுதொரு மர்கஸ்களுமாக” நம் ஜமாஅத் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வரும் இவ்வேளையில், நமது கிளைகள் மற்றும் ஜும்மா மர்கஸ்களுக்கு தகுந்தாற்போல நமது ஜமாஅத்தின் பிரச்சாரகர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. போதிய பிரச்சாரகர்கள் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாவா பணிகள் தேக்கமடைந்துள்ளன.
தாயீக்களுக்கான பற்றாக்குறையை சரி செய்ய மார்ச்-1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை 30 நாள் சிறப்பு வகுப்புகள் நடத்த மாநில நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
அதனடிப்படையில் இன்று ( 1-3-11) சென்னை மாநில தலைமையகத்தில் ஒரு மாத கால பேச்சாளர் பயிற்சி வகுப்பு காலை 10 மணிக்கு துவங்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதியிகளில் இருந்து சகோதரர்கள் இதில் பங்குபெற்றுள்ளனர்.
இதில் பி.ஜே உட்பட பல சிறந்த மார்க்க அறிஞர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.
பயிற்சியாளர்களுக்கு  தேவையான புத்தகங்கள் , தங்கும் இருப்பிடம்  மற்றும் உணவு பொன்றவைகள் இலவசமாக தரப்படுகின்றது குறிப்பிடதக்கது.