பெரியகுளம். 3-
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.-
பெரியகுளத்தில் வங்கியில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்து வந்த முதியவரிடம் நூதன முறையில் பணம் திருடியவனை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.-
வங்கியில் பணம் எடுத்த விவசாயி,
தேனி மாவட்டம் பெரியகுளம், வடகரை, செகடகடித் தெருவை சேர்ந்தவர் ராமகிஷ்ணன்(வயது 75) விவசாயி. இவர் பெரியகுளத்தில் உள்ள கனரா வங்கியில் ரூ.40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
அப்போது அவரை பின்தொடந்து வந்த அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் ராமகிருஷ்ணணிடம் பக்கத்து வீட்டின் அருகே பணம் சிதறி கிடப்பதாக தெரிவத்தார். இதைதொடர்நது ராமகிருஷ்ணண் பணம் கீழே கிடக்கிறதா? என்று பார்க்கச் சென்றார்.
ரூ.40 ஆயிரம் திருட்டு
விவசாயி ராமகிருஷ்ணண் பணத்தை எடுக்க சென்றபோது அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ40 ஆயிரத்ததையும், அந்த வீட்டின் சாவியையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் ராமகிருஷ்ணண் அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து ராமகிருஷ்ணண் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெரியகும் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு செல்பவர்களை நோட்டமி்ட்டு அவர்களின் கவனத்தை திருப்புவதற்காக ஏதாவது ஒரு வழியை பின்பற்றி பணம் திருடும் கும்பல் நடமாடி வருகிறது. இந்த கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.