தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

இஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும்.

இஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும். 
ஓர் அறிவியல் பார்வை.

ஆரோக்கியம் என்றால் என்ன?

ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம். 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல்,உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர். 

இஸ்லாம் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு வலியுறுத்தியுள்ளது?

இஸ்லாம் சுத்தத்தை வழியுருத்துவதைப்போல் உலகில் வேறு எந்த மதமும் வழியுருத்தவில்லை.

தூய்மை என்பது ஈமானின் பாதி என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 328)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மனிதர்களில் அதிகமானோர் இரண்டு. அருட்செல்வங்களின் வியத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.  1.ஆரோக்கியம் 2.ஓய்வு. 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்: புகாரி 6412)

நோயற்ற வாழ்வே ஒரு மனிதனின் அனைத்து உடல், உள செயற்பாடுகளுக்குமான ஒரு உந்துகோளாக அமைகின்றது. நோயற்ற வாழ்விற்கு தூய்மை முதல் இடத்தை வகிக்கின்றது. இதனாலேயே இஸ்லாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை வலியுறுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டுகின்றது.

நாளின் துவக்கத்திலேயே இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துகின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியத்தில் கூட உடல், உள சுத்தத்தையே வலியுறுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   உங்களில் ஒருவர் உளுச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளு செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார். 

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள் (நூல்: புகாரி 162)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளுச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் தான் தங்கியிருக்கின்றான்.   

அறிவிப்பவர்:அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 3295)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து, தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கைகள் உறங்கும்போது எங்கே கிடந்தன என்று அறியாத காரணத்தினால் கைகளை முதலில் கழுவிக் கொள்ளுமாறும்; மூக்கிற்கு தண்ணீர் செலுத்துமாறும் நபி(ஸல்)அவர்கள் கட்டளை இடுகிறார்கள். 

ஏன் என்றால் மூக்கின் நாசிப்பகுதியல் ஷைதான் தங்கி இருக்கிறான் என்று கூறுகிறார்கள். 

இங்கு ஷைதான் தங்கியிருக்கிறான் என்றால் அழுக்குகள் தங்கியிருக்கிறது என்று பொருளாகும். நபி(ஸல்)அவர்கள் ஏதாவது தீங்கான செயல்களைக் குறிப்பிடும் போது ஷைதானுடன் ஒப்பிட்டு கூறுவார்கள்.இது போன்று ஏராளமான செய்திகளில் நபி(ஸல்)அவர்கள் தீங்கான விஷயங்களுக்கு ஷைதானை ஒப்பிட்டு கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் மலஜலம் கழித்துவிட்டு சுத்தப்படுத்துமாறு கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். 

மேலைத்தேய நாடுகளில் மலஜலம் கழித்துவிட்டு முறையாக சுத்தம் செய்யாத காரணத்தினால் அவர்கள் அடிப்படை சுகாதார அறிவற்றவர்களாகவும், தூய்மையில் பின் தங்கியவர்களாகவும் உள்ளனர். 

ஏன், நம் நாட்டவர்கள் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களிடம் கூட சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யும் பழக்கம் காணப்படுவதில்லை. இதனால் இவர்கள் இலகுவாக சிறுநீர் சம்பந்தமான தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், இஸ்லாம் நாம் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கே வழிகாட்டுகின்றது.

மூக்கிலுள்ள நுண்ணிய மயிர்கள் வெளியிலிருந்து மூக்கிற்குள் வரும் தூசு, துணிக்கைகளை அகற்றக்கூடியவையாகவுள்ளன. அத்துடன் ஐந்து நிமிடங்களிற்கு ஒரு முறை மூக்கினுள் சளி சுரக்கப்பட்டு இதுவும் வெளியிலிருந்து மூக்கினுள் வரும் அந்நிய பதார்த்தங்கள் உடலினுட் செல்லாமல் உடலைப் பாதுகாக்கின்றது. இச்சளி அந்நிய பதார்த்தங்களுடன் மூக்கில் தேங்குகின்ற காரணத்தினால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையேல் பக்டீரியாக்கள் இலகுவாக நுரையீரலுக்கள் நுழையும் அபாயம் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளுச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 160, 164)

எனவே தூக்கத்திலிருந்து எழுந்தவுடனும், ஐவேளை உளுச் செய்யும்போதும் மூக்கை சுத்தம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்தி நமது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த மார்க்கமாக விளங்குகின்றது.

பற் சுத்தம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். 

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 7240)

இன்று அநேகமானோர் பற் சுகாதாரத்தைப் பேணாததால் நிறைய பல் வியாதிகளால் அவதிப்படுகின்றனர். மனிதன் சாப்பிடுவதோ மூன்று வேளை. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முடியுமானால் ஐவேளை பல் துலக்குமாறு கட்டளையிடுகின்றார்கள். அதாவது மனிதர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் தான் கட்டாயமாக செய்யும்படி தாம் வலியுறுத்தவில்லை என்று சொல்லும் அளவிற்கு வாய், பற் சுகாதாரத்தைப் பேண வலியுறுத்துகின்றார்கள். 

பல்லுப் போனால் சொல்லுப் போச்சு என்று பொதுவாக சொல்வார்கள். அதாவது வாய், பல் சுகாதாரம் பேணப்படாதவிடத்து வாய்க்குள் ஏற்படும் கோளாறுகளால் உணவு உட்கொள்ள முடியாமல் மனிதன் ஆரோக்கியத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

British Medical Journal (BMJ)  ஆய்வின்படி பல் துலக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இருதய அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின்படி வாயிலுள்ள குறிப்பிட்ட இரு பக்டீரியாக்களில் ஒன்றின் மூலம் 50% மற்றையதின் மூலம் 35%  இருதய அடைப்பு ஏற்படுவதற்குரிய அபாயம் காணப்படுகின்றது. பல் துலக்கல், வாய் சுகாதாரம் பேணப்படாதவிடத்து இருதய நோய்களுக்கான அறிகுறிகள் அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்பாதிப்பு மனிதனுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைக்கு முன் பல் துலக்கலை கடமையாக்க நினைக்கும் அளவிற்கு வலியுறுத்துகிறார்கள். 

இஸ்லாம் போன்ற ஒரு இனிய மார்க்கத்தை உலகில் எந்ந இடத்திலாவது காணக் கிடைக்குமா?

கண்களின் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர் ! (சில நாட்கள்) நோன்பு வையும், (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும் (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள்

நூல்: புகாரி 1975

மனிதன் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்துள்ள இக்காலகட்டத்தில், மனிதனின் நவீன கண்டுபிடிப்பு சாதனங்கள் சிலதின் மூலம் மனிதன் அவனது கண்களின் ஆரோக்கியத்தை இழந்தவனாகக் காணப்படுகின்றான். அவற்றில் சில தொலைக்காட்சிப்பெட்டி, கணனி ஆகியன. இவற்றின் பாவனை இடைவிடாது தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் கண்கள் பார்வையைப் படிப்படியாக இழக்கின்றன. மனிதன் கண்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வைக் கொடுக்கத் தவறியமையே இதற்குக் காரணம். 

இதனாலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சொல்லித் தருகின்றார்கள். மனிதனது கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். இதற்கு முறையான உறக்கமே சிறந்த வழி. ஆனால் இன்று பொருளாதாரத்தை மையமாக வைத்து உலக மக்கள் அனைவரும் இயங்குவதால் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லாமல் இரவு, பகல் பாராமல்  உழைக்கத் தழைப்பட்டுள்ளனர். பெரும்பாலான இள வயதினர் பொழுதுபோக்கிற்காகவும், தம் நேரங்களை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்ற ரீதியில் தொலைக்காட்சியிலும், கணனியிலும் தங்கள் நேரங்களை செலவிட்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் தங்கள் கண் பார்வையில் பிர்ச்சினை ஏற்படும் வகையில் தமக்குத் தாமே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள்.
எனவே, இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நம் உடலுக்கும், கண்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்வோமேயானால் உடலினதும், கண்களினதும் ஆரோக்கியம் கெடாமல் வாழலாம்.

தோல் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) தினத்தில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

(நூல்: புகாரி 858)

சில தண்ணீர் வசதியில்லாத பிரதேசங்களைப் பொருத்தமட்டில் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியமில்லை. சில நோயாளிகளைப் பொருத்தமட்டிலும் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியப்படாமல் போகலாம். இவ்வனைத்தையும் கருத்திற் கொண்டு இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்தும் மார்க்கமாக உள்ளதால் கிழமைக்கு ஒரு முறையாவது அதாவது ஜும்ஆ தினத்தன்று குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமை என்று வலியுறுத்துகின்றது. 

வியர்க்கும் போது தோலிலுள்ள வியர்வைத் துவாரங்களின் மூலம் வியர்வை வெளியேறி தோலில் படிகின்றது. குளித்து சுத்தமாகும்போது தோலிலுள்ள இக்கழிவுகள் அகற்றப்பட்டு வியர்வைத் துவாரங்கள் அடைபடாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மனிதன் ஒரு கிழமைக்கு மேலாகவும் குளிக்காமல் இருந்தால் வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பாகின்றது. 

இஸ்லாத்தைப் பொருத்தளவில் ஐவேளைத் தொழுகைக்கு வுழூ செய்யும்போதும் முகம், கை, கால், மூக்கு, வாய், காது, தலைமுடி ஆகியவை சுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே, கடமை தவறாத ஒரு முஃமினானவன் எந்ந வேளையிலும் சுத்தத்தைப் பேணியவனாகவே இருப்பான்.

நகங்களை வெட்டி அகற்றப்படவேண்டிய முடிகளை அகற்றி ஆரோக்கியம் பேணுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1.விருத்தசேதனம் செய்வது. 2.மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது. 3.அக்குள் முடிகளை அகற்றுவது. 4.மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 6297)

மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடியைக் களைவது, மர்ம உறுப்பு முடியைக் களைவது ஆகியவற்றுக்கு நாற்பது இரவுகளை விட விட்டு வைக்கக்கூடாது என நாங்கள் நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 379)

நகங்கள் வளர்ந்து அதனுள் அழுக்குகள் தேங்குவதால் உணவு உட்கொள்ளும்போது அவையும் உணவுடன் சேர்ந்து சமிபாட்டுத் தொகுதிக்குள் சென்று உணவு சமிபாட்டில் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாந்திபேதி, உணவு நஞ்ஞாதல் போன்ற நோய்கள் ஏற்படும். அத்துடன் அக்குள் முடி, மர்ம உறுப்பு முடி ஆகியவற்றைக் களையாதவிடத்து வியர்வையின்போது வியர்வை அவ்விடங்களில் படிந்து பக்டீரியாக்களின் தாக்கம் அதிகரிக்கும். 

ஆனால், இஸ்லாம் நாற்பது இரவுகளுக்குள் நகங்களை வெட்டி, அக்குள் முடி, மர்ம உறுப்பு முடிகளைக் களைந்து, மீசையைக் கத்தரித்து ஆரோக்கியமான வாழ்வு வாழ வழிகாட்டுகின்றது. 

மன ஆரோக்கியம் மனிதனின் கட்டாயத் தேவையே!

பிறர் நலம் நாடுதல்.

உடல் ஆரோக்கியம் எந்தளவிற்கு ஒரு மனிதனுக்கு முக்கியமோ அதேபோல் மன ஆரோக்கியமும் அத்தியவசியமானது. சிலர் உடல் வலிமை பெற்றவர்களாக இருப்பினும் மன ஆரோக்கியம் இல்லாத காரணத்தினால் எந்த விடயத்திலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் வாழ்க்கையில் விரக்தியடைகின்றனர். 

இன்று பெரும்பாலான மனிதர்களின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தும் வகையிலும், மனதைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன. இதனால் மனதளவில் நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 10)
மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரி(ரலி)அவர்கள் (நூல்: முஸ்லிம் 82)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் (நூல்: புகாரி 13)

எனவே, நாம் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருந்தால் நம் நாவினாலும், கைகளினாலும் பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இதனால் மன ஆரோக்கியம் பேணப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 2320)
ஒரு முஸ்லிமானவன் தனக்கு எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு பிறருக்கு உதவக்கூடியவனாகவும், பிறர் நலம் நாடக்கூடியவனாகவும் இருக்க வேண்டும். இதனால் தாம் மனநிறைவைப் பெறுவது மட்டுமல்லாமல் பிறர் மனதையும் குளிர்சிசியடையச் செய்ய முடியும். 

பொது இடங்களில் மனச் சங்கடங்களை ஏற்படுத்துதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம், பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 239)

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் இரண்டு சாபத்திற்குரிய காரியங்களுக்கு பயந்து கொள்ளுங்கள். அந்த இரண்டு காரியங்களும் என்ன இறைத்தூதர் அவர்களே என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். அவை மக்களின் பாதையில் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலஐலம் கழிப்பதும் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: முஸ்லிம் 397)

இன்று சில மனிதர்கள் மிருகங்களை விடக் கேவலமாக பாதைகளில் நடந்து கொள்கின்றனர். தாம் சுற்றாடலை அசுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றனர். 

எனவே, இஸ்லாம் காட்டிய வழியில் நடந்து நம் உடல, உள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பிறர் உடல், உள ஆரோக்கியம் கெடாத வன்னமும் நம் நடவடிக்கைகளை மேற்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக வாழ முயற்சிப்போம்!
பாத்திமா ஷஹானா (கொழும்பு)
thanks:-www.rasminmisc.tk

படுத்த படுக்கையில் ஒரு பகவான்?..

இந்துக்களால் பகவான் என்றழைக்கப்படும் புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு உடல் நலமில்லை என்ற செய்திகள் வந்துள்ளன.

 
கடந்த 28 மார்ச் அன்று இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறப்பு டாக்டர் குழு ஒன்று பெங்களூரிலிருந்து புட்டபர்த்தி விரைந்துள்ளது.

ஆந்திர பிரதேச அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஸ் தலைமையிலான இந்தக் குழு பகவானுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

மனிதர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரை நாடுகின்றனர்.  
பகவானுக்கு உடல் நலம் குன்றினாலும் மருத்துவரைத்தான் நாடுகின்றனர் என்பது இங்கே கவனிக்கதக்கது.

இந்நிலையில் இவர் உடல்நலம் தேறிட ஏராளமான இந்து சகோதரர்கள் பகவானைப் பிராத்தித்து வருவதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.  இவர்கள் பிராத்திப்பது வேறொரு பகவானையா அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் பகவான் புட்டபர்த்தி சாய்பாபாவையா என்பது என்னைப் போன்ற பாமரர்களுக்கு விளங்கவில்லை.

பெங்களூரிலிருந்து...

நன்றி: உணர்வு

திங்கள்

துக்கத்தில் தனது விரலை வெட்டி சமைத்து சாப்பிட்ட மனிதர்

நியூசிலாந்தை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.

அன்று சமையல் அறையில் தானே உணவை சமைத்தார். சமையலுக்கு தேவையான காய்கறிகளை கத்தியால் நறுக்கினார். அப்போது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவர் தனது கைவிரல் ஒன்றை வெட்டி காய்கறிகள் போன்று துண்டாக்கினார்.

அதை காய்கறிகளுடன் சேர்த்து அடுப்பில் வேக வைத்து சாப்பிட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை எரிக்மோனாஸ் டீரியோவில் உள்ள கிரைக்பிரின் என்ற மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் மேலும் தனது 2 விரல்களை வெட்டி சமைத்து சாப்பிட திட்டமிட்டிருந்ததாக கூறினார். நல்ல வேளையாக அதற்கு முன்னதாகவே சிகிச்சை பெற்றதால் அந்த விரல்கள் தப்பின.

இந்த தகவலை மனநல நிபுணர் கிரைக்பிரின்ஸ் தனது மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதில் உலகிலேயே முதன் முறையாக தனது உடல் உறுப்பை சாப்பிட்ட நரமாமிச மனிதர் இவர் தான் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
newsonews

'பசு நேசன்’ ராம்தேவ் முகத்திரை கிழிகிறது

மனித எலும்புகளையும் மாட்டுக்கறியையும் கலந்து மருந்து தயாரிப்பவர்!

‘பசுவதை’க்கு தூக்குத் தண்டனை தரவேண்டும் என்று நாடு முழுதும் இயக்கம் நடத்தி வரும் பாபாராம் தேவ், அவர் நடத்திவரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மருந்துகளில் விலங்குகளின் உறுப்புகள் மட்டுமல்ல; மனித எலும்புகளும் சேர்க்கப் படுவது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாபா ராம தேவ் என்ற இந்து மதவெறியாளர் ‘பாரத ஸ்வாபிமான் யாத்ரா’ என்ற பெயரில் யோகாப் பயிற்சி என்ற போர்வையில் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து, ‘பசுவதை’ செய்வோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கவேண்டும் என்றும், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து 3 மாதத்துக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் பேசி வருகிறார்.

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து உணவு மாட்டுக்கறி. இதில் பசுவை கொல்வது பாவம் என்ற பார்ப்பன சிந்தனையைப் புகுத்தி, மாட்டிறைச்சி உண்ணும் ஏழை எளிய மக்களை ‘தூய்மையற்றவர்கள்’ என்று இழிவுபடுத்துவதோடு, மாட்டுக்கறி உண்ணும் இசுலாமியர்களுக்கு எதிராக பகை உணர்வுகளைத் தூண்டி வருகிறார். இந்த ராம் தேவ் பாபா நிகழ்ச்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், மாட்டுக்கறி உணவை மத அரசியலாக்கும் உள்நோக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் பெரியார் திராவிடர் கழகம் தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 22 அன்று சென்னையிலும், மார்ச் 26 அன்று சேலத்திலும் கழகத் தோழர்கள் மாட்டுக்கறியுடனும் மாட்டு எலும்புகளுடனும் ராம்தேவ் நிகழ்ச்சி நடக்கும் விளையாட்டுத் திடல்களில் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்ச் 30 அன்று கோவையிலும் மாட்டுக்கறியுடன் நுழையும் போராட்டமும் நடந்தது.

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் மற்றொரு முகமூடிதான்இந்த ராம்தேவ். யாதவ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக கருதப்படும் இந்த சாமியாருக்கு வட மாநிலங்களில் பெரும் வாக்கு வங்கி இருக்கிறது. காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் பல வட மாநில அரசியல் கட்சிகள் இந்த ராம்தேவிடம் இருக்கும் வாக்கு வங்கிக்கும், ஆர்.எஸ்.எஸ். பலத்துக்கும் அடங்கியே இயங்குகின்றன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகாசோனி, ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவ், 2006 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த முலாயம்சிங் யாதவ், சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், உத்ராஞ்சல் முதல்வர் என்.டி.திவாரி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர், உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் மற்றும் அமர்சிங், காங்கிரஸ் முக்கியத் தலைவர் அகமது படேல், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் போன்ற பலரும் இந்த சாமியார் ராம்தேவ்வின் முக்கிய சீடர்கள்.

பசுக்களைக் கொல்லக் கூடாது என நாடெங்கும் குரல் கொடுக்கும் பசுநேசன் ராம்தேவுக்குச் சொந்தமாக “திவ்ய யோக பார்மசி” என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் மிகப் பெரும் மூலத்தனத் துடன் இயங்கி வருகிறது. ஆயுர்வேத மருந்து களைத் தயாரித்து பலகோடி ரூபாயில் வியாபாரம் நடந்து வருகிறது. கடந்த 2006 ஆம் வருடம் இந்த பசுநேசனின் நிறுவனம் தயாரித்த மருந்துகளில் விலங்குகளின்பாகங்களும், மனித மண்டை ஓட்டின் துகள்களும், மனித எலும்புத் துகள்களும் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டது.

மனித எலும்புகளைக் கலந்து மருந்து தயாரித்த இந்த விலாங்காபிமானியைக் கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் பிருந்தாகாரத் 2006 இல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியிடம் கோரிக்கை வைத்தார். சுகாதார அமைச்சகம் திவ்ய யோக பார்மசி தயாரித்து விற்பனை செய்த மருந்துகளைப் பரிசோதித்தது. ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் நவீன ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ராம் தேவ் தேயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் பாகங்களும், மனித மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளும் கலந் திருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போதைய அமைச்சர் அன்புமணி அந்த ஆய்வுக் குறிப்புகளை உத்ராஞ்சல் மாநில அரசு வழியாக அங்குள்ள மாநில அரசு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். ராம் தேவின் நண்பர் என்.டி.திவாரி தலைமையிலான உத்ராஞ்சல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அகில இந்திய மருந்து சட்டங்களின்படி ((Drugs & Cosmetic Act, Drugs & Magic Remedies Act)) இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை பெறும் அளவிலான குற்றங்களைச் செய்தவர் இந்த ராம்தேவ். தனியார் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் போலியான மருந்துகளை விற்பனை செய்தவர் என்ற குற்றச்சாட்டிலும் சிறைச் செல்ல வேண்டியவர்.

இவரது மருந்து விற்பனை மோசடிகளையும், விலங்குகளின் பாகங்கள் - மனித எலும்புக் கலப்படங்களையும் அம்பலப்படுத்தியதற்காக தோழர் பிருந்தாகாரத் அப்போது அனைத்து அரசியல் கட்சிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் குரல் என்றும் குற்றம்சாட்டப்பட்டார். சங்பரிவார் கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அலுவலகமான ஏ.கே.ஜி. பவனை முற்றுகையிட்டு தாக்குதலையும் நடத்தியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட்டுகள் மீது அரசியல் ரீதியாகவும், நேரடியாகவும் மிகப் பெரும் தாக்குதலைத் தொடுத்த மருந்து மோசடி சாமியார் ராம்தேவ் தற்போது தமிழ்நாட்டுக்கு வரும்போது சிறு எதிர்ப்பைக்கூட பதிவு செய்யாது, மார்க்சிஸ்ட்டுகள் அமைதியாக இருப்பது வியப்பாக இருக்கிறது.

தான் தயாரிக்கும் மருந்துகளில் மாடு மற்றும் பல மிருகங்களின் பாகங்களையும், மனித எலும்பு களையும் கலந்து பல கோடி சம்பாதிக்கும் ராம்தேவ், மாட்டுக்கறி ஏழை எளிய மக்களுக்கு உணவாகப் பயன்படக் கூடாது. அப்படி உண்பவனை 3 மாதத்திற்குள் தூக்கில் போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார் என்றால் இப்பிரச்சாரத்தில் உள்ள நேர்மையற்ற தன்மையை யும், இந்தப் பிரச்சாரங்களின் பின்னணியில் இருக்கும் மனுதர்ம - பார்ப்பன அரசியலையும் ஒடுக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும்.
keetru

மண்ணறை

நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ).

மண்ணறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படுவது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஷயமாகும். மனிதன் மண்ணறையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான்

அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.(40:46) மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான் உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்பது போல மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மண்ணறை வேதனை உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும்.

நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட மிகக் கடினமானதாகும். எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புத்; தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பாதுகாவல் தேடுவது அவசியமாகும்.


இவ்வாறே நரகத்திலும் மண்ணறையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற்காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். இதற்கு மண்ணறை வேதனையென சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மண்ணறையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள் நெருப்பில் எரிந்துபோனவர்கள் மிருகங்களால் தின்னப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் திரைமறைவான வாழ்க்கையில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள்.

மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியலால் அடிக்கப்படுவது அல்லது இறந்தவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது நெருப்பாலான விரிப்பு விரிக்கப்படுவது நரகிலிந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது இப்படிப் பல வகைகள் உள்ளன.

அடியான் காஃபிராகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும். பாவியான முஃமினாக இருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின்; மண்ணறையில் அருள்பாலிக்கப்படுவான். அதாவது அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனது நற்செயல் அழகிய மனித வடிவில் உருவெடுத்து மண்ண றையில் அவனை மகிழ்விக்கும். 
                                                                 நன்றி: TNTJ காரைக்கால்

வெள்ளி

தேர்வுகள் முடிந்துவிட்டது, விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதிபெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரைமாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்கபயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?
1. ஆங்கில மொழிதிறனை (English language skill)வளர்த்துகொள்ள முயற்சிக்கவும் : ஆங்கில மொழிதிறன் என்பதுஇன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில்சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனைவளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை,வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடையகட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.
2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவதுதொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skillஇல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன் Communication skill -யைவளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்லபழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாறபழகுங்கள். Communication skill என்பது ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும்.
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்." (குர்ஆன் 3 : 104)
தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரைபிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள். குர் ஆனுடையகருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாகசெய்வதன் மூலம் நம்முடைய Communication skill - யை வளர்த்து கொள்ள முடியும்.
கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள் : தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும் internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக மின் அஞ்சல் (E -mail)துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போதுபெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்டவிஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாகஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்தபழக்க படுத்த வேண்டும்
10 மற்றும் +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு : விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொதுதேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள். 9 - ஆம் வகுப்பு முடித்து 10 - ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 - ஆம்வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2 வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள். +2ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள் தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டிதேர்வுகளுக்கு தயாராகுங்கள்.
+2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :
IIT-JEE - இந்த தேர்வு IIT, IISc - ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல்படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIEEE - NIT மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம்,இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIPMT - மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும்தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் , வேதியியல் படிக்கும் மாணவர்கள்எழுதலாம்.
HSEE - IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம்,குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்
மாணவர்களே! நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடுஅல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாகஉழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில்முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
S.சித்தீக்.M.Tech

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்




உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும். பழமையானது - உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே. இளமையானது - முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.         உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.   பல்கேரியாவில் தொழுகை   இத்தாலியில் தொழுகை இத்தாலியில் தொழுகை சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர். அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம். இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது. ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது. இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது. சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.   ஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி) இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர். “ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.   (நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்) முஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
                                            பதிந்தவர் ஜபருள்லாஹ் குத்புதீன் பதிந்த நேரம் 10:24 AM

ஜெட் விமானத்தை தாக்கிய தேனிக்கள் படை

பனி மூட்டம், மேக மூட்டம் போன்ற பருவ நிலை மாற்றம் அல்லது இயந்திரக் கோளாறு போன்ற காரணங்களால் ஒரு விமானம் புறப்படுவதற்குக் கால தாமதம் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். தேனீ படையின் தாக்குதல் காரணமாக சில நிமிடத் துளிகள் அல்ல, முக்கால் மணி நேரம் விமானம் கால தாமதம் என்று நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

இந்த அதிசயம், அற்புதம் சென்னை விமான நிலையத்தில் மார்ச்    
26ம் தேதி நடந்தேறியது.

தேனீப் படைத் தாக்குதல்

இது தொடர்பாக விமான நிலைய இயக்குனர், தினேஷ்குமார் இந்து நாளேட்டிற்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இதோ:

விமான நிறுத்தப் பாதை
31ல் ஜெட் விமானம் நின்று கொண்டிருக்கையில் அவரும், விமானத்தின் பைலட் கேப்டன் சந்திரசேகரனும் விமானத்தின் மூக்குப் பகுதியில் தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். ராட்சத உடலைக் கொண்ட ஜெட் விமான மூக்கின் முகப் பரிமாணமே தெரியாத வண்ணம் தேனீ படையினர் மொய்த்துக் கொண்டிருந்தனர். தேனீக்களைக் கொல்லக் கூடாது என்பதில் குறியாக இருந்த அந்த இரு அதிகாரிகளும், தேனீக்கள் பயணிகளைக் கொட்டி விடக் கூடாது என்பதிலும் கவனமாகச் செயல்பட்டனர்.

இங்கிருந்து கிளம்பி இந்தப் படை அடுத்த நிறுத்தத் தளத்தில் நிற்கும் விமானத்தில் போய் மொய்த்து விடுவதையும் அவர்கள் இருவரும் விரும்பவில்லை.

எனவே அவர்கள் தீயணைப்புப் படை வாகனங்களை வரவழைத்து உள்ளனர். தீயணைப்புப் படையினர் தண்ணீர் குழாய்கள் மூலம் வேக அழுத்தத்துடன் தேனீக்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்துள்ளனர். தீயணைப்புப் படையினரின் நீரழுத்தத் தாக்குதலுக்கெல்லாம் தேனீப் படையினர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் பயணிகள் அனைவரும் விமானத்தின் பின் வாசல்கள் வழியாக விமானத்தில் ஏறும் படி பணிக்கப்பட்டனர்.

தீயணைப்புப் படையினருக்கு டாட்டா காட்டிய தேனீப் படையினர் கடுகளவு கூட நகரவில்லை. இறுதியாக விமானத்தை இயக்குவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றானதும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தி ருந்து புறப்படுவதற்கான உத்தரவை கேப்டன் சந்திரசேகரன் பெற்றார்.

விமானம் ஓட்டுவதில் பலவிதமான சவால்களைச் சந்திப்பதில் சாதனை படைத்த சந்திரசேகர், விமானத்தைத் தரையி ருந்து ஆகாயத்தை நோக்கிக் கிளப்பும் போது மேற்கொள்ளும் சாதாரண வேகத்திற்குப் பதிலாக சம வேகத்தில், சரித்திர வேகத்தில் விமானத்தைக் கிளப்பியுள்ளார்.

அந்தச் சரித்திர வேகத்தில் கூட தேனீப் படையினரில் சிலர் தான் நகர்ந்துள்ளனர். மற்றவர்கள் விமானத் துடன் ஆகாய மண்டலத்திற்குச் சென்று விட்டனர்.

இது இந்து நாளேடு மார்ச்
27ந் தேதி வெளியிட்ட வித்தியாசமான ஒரு செய்தியாகும்.

அல்குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதம்

இங்கே இந்தச் செய்தியை ஆள்வதற்கான பின்னணி என்ன? அறிவியல் கண்டுபிடிப்பை, அணுகுண்டு வெடிப்பைக் கண்டிராத, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் செய்தியை அல்குர்ஆன் சொல்லி  இருக்கின்றது என்றால் அது மனித மூளையில் உதித்த செய்தி அல்ல; அனைத்தையும் படைத்த ஓர் அற்புத சக்தியிடமிருந்து பிறந்த உண்மை ஒளிக்கதிர் என்பதைப் போட்டு உடைப்பதற்காகவே இந்தச் செய்தி இங்கே ஆளப்படுகின்றது. இப்போது திருக்குர்ஆனின் தித்திக்கும் தேனீ அத்தியாயத்திற்குள் நுழைவோம்.

தேனடையின் தொழில் நுட்பமும் திட்பமும்


''மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளி ருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறு களி ருந்து மாறுபட்ட நிறங்களை உடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
(அல்குர்ஆன்   
16 : 68 .69)

இந்த வசனம் தேனீயின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுகின்றது.

பொதுவாக பூச்சிகள், புழுக்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை ரகசியங்கள், இரைக்கான ஆதாரங்கள், உறைவிடங்கள் அனைத்திலும் மனிதனை அதிர வைக்கும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் தேனீ கட்டும் கூட்டில் என்று சொல்வதை விட இன்றைய அறிவியல் உலகம் அதிசயிக்கத்தக்க வகையில் தேனீக்கள் கட்டுகின்ற வீட்டில் பல அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன.

தேன் கூட்டின் பலம்
ஒரு கட்டடப் பொறியாளர் இன்று கட்டடம் கட்ட வேண்டும் என்றால், அவருக்குக் கட்டடம் எப்படிக் கட்ட வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. அந்த இடத்தில் பூகம்பம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து அதற்குத் தக்க கட்டடத்தை வடிவமைக்கும் கல்வியையும் கற்றிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. அதனால் இப்போது சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் இந்தப் படிப்பையும் சேர்த்துப் படித்து வருகின்றனர். இது பகுத்தறிவுப் பிராணி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் மனிதன் ஒரு வீடு கட்டுவதற்காக எடுக்கும் அதிகப் பட்சமான பாதுகாப்பு நடவடிக்கை!

இதோ பாருங்கள்! ஈ என்ற ஓர் அற்பப் படைப்பு படைக்கின்ற அற்புதப் படைப்பையும் அது கொண்டிருக்கின்ற அறிவியல் படிப்பையும் பாருங்கள். அது எந்த மரத்தில் கூடு கட்டுவதாக இருந்தாலும் அந்த வழியில் புயல் காற்று வீசுமா என்று பார்த்துக் கொள்கின்றது. புயல் காற்று வரும் திசையில் வீடு கட்டுவது கிடையாது.

என்ன ஒரு அறிவாற்றல்! இப்போது தான் அல்லாஹ் தேனீக்குக் கூறிய ''மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்ற அந்த வார்த்தை எவ்வளவு அற்புதமாக அர்த்தப்படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

பேயாட்டத்தில் பிய்யாத கூடு

தேனீக்கள் அவ்வாறு ஆய்வு செய்து கூடு கட்டி விட்டால் எந்தப் புயல் வீசினாலும் அந்தக் கூட்டைப் பிய்த்து விட முடியாது. தான் கட்டியிருக்கும் அந்தக் கம்பம், கிளை ஓயாத பேயாட்டம் ஆடினாலும் அந்தக் கூடு பிய்யாது, பிரியாது. இது தேன் கூடு பற்றி இன்றைய அறிவியல் கண்கூடாக நிரூபிக்கும் உண்மை நிரூபணமாகும். மழையில் கரையாத, புயல் அலையில் கலையாத இந்தத் தேன் கூட்டுக்கே இந்தப் பலம் இருக்கின்றது என்றால் அந்தத் தேனீக்களுக்கு எத்தனை பலம் இருக்கும் என்பதை உணர முடிகின்றது அல்லவா?

அதனால் தான் மனித மூக்கில் உட்கார்ந்து கொண்டு சாதாரண ஈ மனிதனிடம் விளையாட்டுக் காட்டுவது போல் ஜெட் விமானத்தின் மூக்கில் உட்கார்ந்து கொண்டு இந்தத் தேனீக்கள் தீயணைப்புத் துறையிடம் விளையாட்டுக் காட்டியிருக்கின்றது. இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம், தேன் அடையின், தேனீ படையின் பலத்தைத் தான்.

''மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!''என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அந்தக் கட்டடக் கலையின் அற்புதம் இந்தத் தேனீக்கள் மூலம் ஜெட் விமானத்தின் மூக்கில் அப்படியே அர்த்தப் படுவதைப் பார்க்கிறோம்.

இதி ருந்து அல்குர்ஆன் கூறுகின்ற இந்த அறிவியல் அற்புதம் நூற்றுக்கு நூறு சரியாவதைப் பார்க்கின்றோம். இந்த வேதம் மனித் சொல் அல்ல! மந்திரச் சொல்லல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதச் சொல் என்று நம்மிடம் வேர் பிடித்த இந்தக் கொள்கை மேலும் நீர் பிடித்துக் கொள்கின்றது.

தேன் கூட்டின் தொழில் நுட்பம்

இதுவரை தேன் கூட்டின் பலத்தையும் அதன் திட்பத்தையும் பார்த்தோம். இப்போது அதன் தொழில் நுட்பத்தைப் பார்ப்போம்.

மனிதன் தான் தொழில் நுட்பத்தில் சிறந்தவன். வட்டம், அரை வட்டம், கால் வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுங்கோணம் போன்ற வடிவிய ன் (Geometry)கணக்குகள் தெரிந்தவன். அந்தக் கணக்குகளைப் பின்புலமாகக் கொண்டு வானளாவ எழுந்து நிற்கும் அன்றைய தாஜ்மஹாலிலிருந்து இன்றை உலக வர்த்தக மையம் வரையிலான கட்டடங்களைக் கட்டத் தெரிந்த தொழில் நுட்ப நிபுணன்! பொறியியல் வல்லுனன் என்று பெயரெடுத்த இவன் கட்டடக் கலையில் தேனீயிடம் பிச்சை வாங்க வேண்டும்.

சதுரம் சதுரமாக ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு சென்றால் சதுர அமைப்பில் தான் அதை முடிக்க முடியுமே தவிர அதைக் கூடு வடிவில் கொண்டு வர முடியாது.

அது போல் வட்டம் வட்டமாக ஒரு கூட்டைக் கட்டினால் அதில் ஓட்டைகள் ஏற்படும். அந்தக் கூட்டைப் பூர்த்தி செய்ய முடியாது. நான்கு வட்டங்களை சேர்ந்தாற் போல் வைத்துப் பார்த்தால் அவற்றின் இடையே ஒரு துண்டு விழுவதைப் பார்க்கலாம்.

ஆனால் தேனீக்கள் கட்டுகின்ற இந்தக் கூட்டின், தொழில் நுட்பம் மிக்க வீட்டின் வடிவமைப்பைப் பாருங்கள். ஓட்டை இல்லாமல், உடைசல்கள் இல்லாமல் கூடு வடிவில் உருவாக்கப் படுகின்றது. எப்படி? இதன் அறுங்கோண வடிவ அமைப்பு தான் இதற்குக் காரணம்!

இந்த அறுங்கோண வடிவத்திலான செங்கல்களைச் சேர்த்து இந்தக் கூட்டைக் கட்டினால் தான் ஓட்டை ஏற்படாமல் குடியிருப்பதற்குத் தக்கக் கூடாக அமையும். மலர்களில் மொண்டு, தன் வயிறுகளில் சுமந்து கொண்டு வந்து கொட்டுகின்ற தேன் சொட்டுக்களுக்கு உரிய பாதுகாப்பு வங்கியாக இருக்கும் வகையில் அறுங்கோண வடிவில் அமைக்கும் அறிவியல் அறிவு அதற்கு எப்படி வந்தது?

''மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!''என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் வஹீயின் அடிப்படையில் தான் வந்தது.

                                                     ஷம்சுல் லுஹா
                                      நன்றி:rasminmisc

புதன்

ஜப்பானில் சுனாமி தாக்கி 4வாரங்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட வயோதிபர்

ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி பேரலை தாக்கி 4 வாரங்கள் ஆகியது.

பின், சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட அனர்த்த வலயத்திலுள்ள வீடொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து 75 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

குனியோ ஷிகா என்ற விவசாயியே இவ்வாறு தனது இடிந்த பண்ணை வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது பண்ணை வீடானது புகுஷிமா அணுசக்தி நிலையத்தை சுற்றிவர மக்களை வெளியேறப் பணிக்கப்பட்ட 20 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 11 ஆம் திகதி சுனாமி தாக்கியதையடுத்து சரிந்து விழுந்த மரங்கள், இறந்த பன்றிகள், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் சூழ்ந்து காணப்பட்ட இடிந்த வீட்டுக்குள் வெளியேற முடியாத நிலையில் குனியோ ஷிகா சிக்கிக் கொண்டார்.

மின்சாரமோ குடிநீரோ அற்ற நிலையில் வீட்டில் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்த உணவுகளை உண்டும் மென்பானங்களை அருந்தியும் அவர் உயிர் வாழ்ந்துள்ளார். அத்துடன் மிகலங்களால் இயக்கப்பட்ட வானொலி மூலம் அவர் ஒலிபரப்புகளை செவிமடுத்து வந்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் போது அவரது மனைவி காணாமல் போயுள்ளார். புகுஷிமா அணுசக்தி நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதாக எச்சரிக்கப்பட்டதையடுத்து குனியோ ஷிகாவின் வீட்டின் அருகில் குடியிருந்து சுனாமி அனர்த்தத்தில் உயிர் தப்பிய அயலவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்ததால் வீட்டில் தன்னந்தனியாக சிக்கியிருந்த குனியா ஷிகாவின் நிலையை எவரும் அறிய முடியாது போனது.

“சுனாமி எமது வீட்டை தாக்கிய போது எனது மனைவி இங்கே இருந்தார். அதன் பின் அவரைக் காணவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது என எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறினார். சுனாமியையடுத்து இருளிலேயே பொழுதை அவர் கழித்துள்ளார். தன்னால் நடக்க முடியாததால் சேதமடைந்த வீட்டிலிருந்து வெளியேற முடியாது சிரமப்பட்டதாக தெரிவித்த குனியோ ஷிகா, தான் இருப்பது எவருக்குமே தெரியாமல் உயிரிழந்து விட நேரிடுமோ என அஞ்சியதாக கூறினார்.

இந்நிலையில் அவரை மினாமி ஸோமா நகரிலுள்ள அவரது இடிந்த வீட்டிலிருந்து பொலிஸார் வெளியேற்ற முயன்ற போது, அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். “”எனக்கு வயதாகிவிட்டது. தான் இங்கிருந்து சென்றால் யார் என்னைக் கவனித்துக் கொள்வார்கள்” என தெரிவித்து முரண்டு பிடித்த அவரை பொலிஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றி அகதிகள் முகாமொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
                                                                thanks;newsonews

பெண்ணொருவர் ரயில் மோதி சிறுகாயங்களுடன் தப்பிக்கும் நேரடிக் காட்சி

இலங்கையில் இதல்கஸ்ஹின்ன என்னும் பிரதேசத்தில் தண்டவாளத்தின் அருகாமையால் நடந்து வந்த பெண் ஒருவர் ரயில் வருவதை அவதானிக்காமல் ரயிலில் மோதுகின்ற நேரடிக் காட்சியை ஒருவர் படம் பிடித்துள்ளார்.

18 வயதுடைய மலையக தமிழ் பெண் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளகியுள்ளார். ஆனாலும் ரயிலின் கரையோரத்தில் மோதுண்டதன் காரணத்தால் அவர் வெளியில் தள்ளப்பட்டு சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார்.

இச்சம்பவம் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின் கருத்து தெரிவித்த பெண் தான் நடந்து வரும் பொழுது தவறுதலாகவே மோதுண்டதாகவும் தனக்கு உடம்பில் பெரிய வலி இல்லையென்றும் தெரிவித்துள்ளார். அவருடைய தம்பி பின் அவரை அழைத்து செல்வதை கானொளியில் காணலாம்.  

தமிழக சட்டசபை தேர்தல்: 75% வாக்குப் பதிவு ??

 
தமிழக சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 75.2 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

பல இடங்களில் மின்னணு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியதோடு, சில இடங்களில் ஓட்டுப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இத்தகைய வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது.5 மணிவரை வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு,டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதாக தகவல் இல்லை.தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 75.2 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.

முபாரக், மகன்கள் கைது - எகிப்தில் இராணுவம் அதிரடி!

மக்கள் புரட்சியால் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட எகிப்தின் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய இரு மகன்களையும் தடுப்புக்காவலில் வைத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவ அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக எகிப்து இராணுவ குற்றப்பிரிவினர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய மகன்கள் காமல், ஆலா ஆகிய இருவரையும் 15 நாட்களுக்கு, குற்றப்பிரிவினர் விசாரணை நடத்துவர். குற்றப்பிரிவின் ஜெனரலும் இந்த விசாரணையில் கலந்துகொள்கிறார்.

பொதுமக்களின் பணத்தைத் தவறாக பயன்படுத்தியமை, லஞ்ச ஊழல் மோசடி செய்தமை, மக்கள் புரட்சியை ஒடுக்க சுமார் 800க்கு மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றது போன்ற விஷயங்கள் தொடர்பில் இவ்விசாரணைகள் நடத்தப்படுகின்றன." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பிரிவின் இந்த அறிவிப்பு வெளியான நிமிடங்களிலேயே, முபாரக்கின் இரு மகன்களான காமல் மற்றும் ஆலா ஆகியோர் காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்களைக் கைது செய்யும்போது அங்கியிருந்த அவர்களின் ஆதரவாளர்கள், காவல்துறை வாகனத்தின் மீது தண்ணீர் குப்பிகள், கற்கள் போன்றவற்றை வீசி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதற்கிடையில், எகிப்து மக்கள் புரட்சியை ஒடுக்குவதற்காக, முபாரக்கின் கட்டளைக்கு ஏற்ப, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 800 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யபப்ட்டது தொடர்பான நடைபெற்றுக்கொண்டிருக்கையில் முபாரக்கிற்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
                                      inneram

மோடியை புகழ்ந்து சேற்றைவாரிப் பூசிக்கொண்ட அன்னா ஹஸாரே: காந்தியவாதிகள் கண்டனம்

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்தை பாராட்டிய அன்னா ஹஸாரேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஊழல் புரியும் ஆட்சியாளர்களை விசாரிக்க ‘லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர் ஹஸாரே. இவரது போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்த மத்திய அரசு ‘லோக்பால்’ மசோதாவை தயார்செய்யும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடம் அளித்தது. இதன்மூலம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் புகழாரம் சூட்டப்பட்டார் ஹஸாரே.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் குஜராத் மாநில முதல்வர் மோடி மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரின் கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு புகழாரம் சூட்டினார் அவர். அன்னா ஹஸாரேவின் இப்பேட்டி காந்தியவாதிகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும், நாடு முழுவதிலுமுள்ள நடுநிலையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து ஹஸாரே தனது கருத்தை வாபஸ் பெறாவிட்டால் அவரது ஊழலுக்கெதிரான இயக்கத்திலிருந்து வெளியேறப் போவதாக காந்தியவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு புகழாராம் சூட்டிய ஹஸாரேவின் அறிக்கை குஜராத்தின் உண்மையான நிலைமைகளை குறித்த அறியாமையின் வெளிப்பாடாகும் என மோடியை விமர்சிப்பவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஹஸாரே மோடிக்கு புகழாரம் சூட்டியதை கண்டித்து பிரபல மனித உரிமை ஆர்வலர்களும், காந்தியவாதிகளும் வெளியிட்ட கருத்துக்கள்:

பிரபல காந்தியவாதி சினுபாய் வைத்யா: ஹஸாரே புகழாரம் சூட்டியபடி குஜராத்தில் கிராமங்களில் வளர்ச்சி நிலை ஏற்பட்டிருந்தால் கிராமங்களில் வாழும் 10 சதவீத மக்கள் ஏன் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறுகின்றனர்? காரணம் வேறொன்றுமில்லை – அக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமையும், வளர்ச்சியில் பின் தங்கிய நிலையுமாகும். இதனால் கிராமமக்கள் நகரங்களில் குடியேறுகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க மோடியை வாழ்த்த என்ன நியாயம் உள்ளது?

பிரபல நாட்டிய கலைஞரும், சமூக சேவகருமான மல்லிகா சாராபாய்: குஜராத்தில் கிராம வளர்ச்சி என்பது பெயரளவில் மட்டுமே. விவசாய நிலங்களையும், பொதுவான மேய்ச்சல் நிலங்களையும் கையகப்படுத்தி அடிமாட்டு விலையில் குத்தகைதாரர்களுக்கு விற்கும் மோடியின் நடவடிக்கை எவ்வாறு கிராமங்களை வளர்ச்சியடையச் செய்யும்? சுஜாலாம் சுஃபாலாம் (Sujalam Sufalam scam) நீர் சேகரிப்பு திட்டத்தில் 1700 கோடி ஊழல், 109 கோடி ரூபாய் அணைக்கட்டு ஊழல் (NREGS boribund scam), மீன்வளத் துறையில் (fisheries) 600 கோடி ஊழல் உள்பட மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அரசு பெரும் கடனில் மூழ்கியுள்ளது. 21 லட்சம் விவசாயிகள் இழப்பீடுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அன்னா ஹஸாரே மோடியை புகழ்ந்து கூறிய வார்த்தைகளை வாபஸ் பெறாவிட்டால் அவருடைய ஊழலுக்கெதிரான இயக்கத்திலிருந்து விலகுவோம்.

இதுத்தொடர்பாக அன்னா ஹஸாரேவுக்கு மல்லிகா சாராபாய் கடிதம் எழுதியுள்ளார்.

க்ராந்தி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பராஸிம்ஹ் ஞாலா: கடந்த 7 வருடங்களாக மாநில ஆட்சியாளர்களின் ஊழலை விசாரிக்கும் ‘லோகயுக்தா’ குஜராத்தில் இல்லை. ஊழல் தொடர்பாக வந்துள்ள நூற்றுக்கணக்கான புகார்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள குஜராத்தை ஹஸாரே ஏன் புகழ்கிறார்?

பிரபல சமூக சேவகர் நதீம் ஸயீத்:சிறுபான்மையின மக்களின் கூட்டுப்படுகொலை நடந்த, போலி என்கவுண்டர் கொலைகள் நடந்தேறிய, பாலியல் வன்புணர்வுகளும், கொலைகளும் அரங்கேறிய மாநிலமான குஜராத்தின் முதல்வர் மோடியா பிற மாநில முதல்வர்களுக்கு முன்மாதிரியாக மாறவேண்டும்? என நதீம் அன்னா ஹஸாரேவிடம் கேள்வி எழுப்புகிறார்.

குஜராத் மக்கள் உரிமை ஜனநாயக அமைப்பின் தலைவர் ஜெ.எஸ்.பந்தூக் வாலா:ஹஸாரே போன்றோர் நடத்தும் மக்கள் இயக்கங்களை கபளீகரம் செய்வது என்பது எக்காலத்திலும் பா.ஜ.கவின் தந்திரமாகும். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘முழு புரட்சி’(total revolution)யையும், வி.பி.சிங்கின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும் தட்டிப் பறித்த சங்க்பரிவார் ஹஸாரேவின் இயக்கத்தையும் பறித்துச் சென்றுவிடாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

இந்நிலையில் மோடியை தான் புகழ்ந்தது கடும் எதிர்ப்பை கிளப்பியதையொட்டி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஹஸாரே, தான் எல்லாவித மதரீதியான ஜாதி ரீதியிலான பாரபட்சத்திற்கு எதிரானவன் எனவும், எல்லாவித மதரீதியான கலவரங்களையும் தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மோடி மற்றும் நிதீஷின் கிராமீய வளர்ச்சியை மட்டுமே பாராட்டியதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஹஸாரேவின் அறிக்கையைக் குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ரஷீத் அல்வி: இந்தியாவில் எந்த மதசார்பற்ற தலைவரும் மோடியை ஆதரிக்கமாட்டார்கள். நீங்கள் மோடியை ஆதரிக்கின்றீர்கள் என்றால் 2002-ஆம் ஆண்டு நடந்த இனப் படுகொலையை ஆதரிக்கினறீர்கள் என அர்த்தமாகும் என அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
                                                thoothu

செவ்வாய்

மதி மயங்கும் மாணவர்கள்

மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன.
அந்தத் தீமைகளில் தலையாயது காதல் என்ற பெயரில் உள்ள காமம்! அடுத்து போதை, சூதாட்டம் என தீமைகளின் பட்டியல் நீள்கின்றது. குறைந்தபட்சத் தீமை புகைப் பழக்கமாவது ஒரு மாணவனை ஆட்கொள்ளாமல் விடுவதில்லை. சுற்றிலும் தீமைகளின் தீ நாக்குகளைக் கொண்ட ஒரு வளையத்தின் மத்தியிலும் பற்றி எரியாமல் இருக்கும் ஒரு சூடத்தைப் போன்று அவற்றிலிருந்து தப்புகின்ற, மதி மயங்காத மாணவர்களும் இருக்கின்றார்கள்.
பளிங்கு போன்ற தெளிந்த உள்ளத்தைக் கொண்ட இத்தகைய மாணவர்களிடம் தான் பல இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் பார்வைகளைத் திருப்புகின்றனர். தங்கள் கருத்துக்களை அவர்களிடம் பதிய வைக்கின்றனர். அலை மோதிய பல்வேறு பயங்கரத் தீமைகளிலிருந்து தப்பிய மாணவர்கள் இந்த இயக்கங்களிடம் மதி மயங்கி விடுகின்றனர். தடம் மாறி விடுகின்றனர். அந்த இயக்கங்களில் ஒன்று தப்லீக் ஜமாஅத்! இது ஒரு வழிகெட்ட இயக்கம் என்பதற்கு வானளாவிய ஆதாரம் தேவையில்லை. இவர்கள் தொழுகைக்குப் பின்னர் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து தஃலீம் தொகுப்பு என்ற புத்தகத்தைப் படிப்பார்கள். அப்போது அவர்களிடம், குர்ஆன் தர்ஜுமாவைப் படியுங்கள் என்று சொன்னால் போதும். அவர்களுடைய முகம் அல்லாஹ் சொல்வது போன்று மாறி விடும்.
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்ததுஅவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.  (அல்குர்ஆன் 74:49-51(
கண்ட கண்ட குப்பைகளைப் படிக்கும் இவர்களிடம், கண்ணியமிக்க குர்ஆனைப் படியுங்கள் என்று சொன்னால் கோபக் கனல் வீசுகின்றது. இவர்கள் வழிகெட்ட இயக்கம் என்பதற்கு இது சிறந்த ஒரு அடையாளம். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் படிப்பு, குடும்பம், வேலை அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு மனம் போன போக்கில் அலைகின்றனர்.
அடுத்து, ஜமாஅத்தே இஸ்லாமி சிந்தனையைப் பின்னணியாகக் கொண்ட இயக்கங்கள். இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஷிர்க் என்று சுற்றி வளைத்துக் கொண்டு நிலை நிறுத்துவார்கள். ஆனால் திருக்குர்ஆனும் ஹதீசும் நேரடியாகவே கண்டிக்கின்ற இணை வைப்பை, ஷிர்க்கை, சமாதி வழிபாட்டை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இதிலிருந்தே இவர்களது வழிகேட்டைப் புரிந்து கொள்ளலாம். மேலும் இவர்களின் அழைப்புப் பணி, நட்சத்திர விடுதி அழைப்புப் பணியாகும். நாற்சந்தி, நடுவீதி அழைப்புப் பணி அல்ல!
இந்த இயக்கங்களின் வார்ப்பாக வந்த எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் போன்ற இயக்கங்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் இருக்கின்றன. துவக்கத்தில் ஜனநாயகம் ஷிர்க், ஜிஹாத், இஸ்லாமிய ஆட்சி என்று புரட்சிகரமாகப் பேசி புறப்பட்ட இவர்கள் காலப் போக்கில் தலை கீழாக மாறி, தறி கெட்டுப் போய், தேசத்தைப் பொதுவாக்குவோம்; அரசியலை நமதாக்குவோம் என்று வெற்றுக் கூச்சல் போடுகின்றனர்.
தமுமுகவாவது தேர்தல் களத்திற்கு வந்த பிறகு தான் சாமியாருக்கு ருகூவு செய்தார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் களத்திற்கு வருவதற்கு முன்பே அரசியல் ஆதாயத்திற்காக சாமியார்களுக்கு ஸஜ்தா செய்வார்கள் போல் தெரிகிறது. பொங்கல் வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து என்று தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன்பே தங்களை வழிகெட்ட அமைப்பினர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய கல்லூரி மாணவர்களில் சிலர் இவர்கள் விரிக்கும் மாய வலைகளில் விழுந்து விடுகின்றனர். இந்த இயக்கத்தினர் சமுதாயம், ஜிஹாத், ஆட்சி அதிகாரம் (இஸ்லாமிய ஆட்சி அல்ல) போன்ற பசப்பு வார்த்தைகளில் தங்கள் பாசறைக்கு மாணவர்களிடம் தான் அதிகம் தூண்டில் போடுகின்றனர். இவர்களது தூண்டிலில் தொங்கும் மண் புழுவை நம்பி இம்மை, மறுமையை இழந்து விடக் கூடாது என்று மாணவர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இவர்களது வலையில் சிக்கிய மாணவர்கள் தங்கள் கல்வியை இழந்து தேர்வுக்குக் கூட சரியாகப் படிக்காமல் கண்ட கண்ட போஸ்டர்களை ஒட்டிக் கொண்டு திரிந்து தேர்வில் தோல்வியடைகிறார்கள்; தங்கள் எதிர்காலத்தை இருண்ட பாலைவனமாக ஆக்குகின்றனர்.
நாம் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுவாக இளைஞர்கள் அனைவரையும் கேட்டு கொள்வது ஒன்றே ஒன்று தான். இந்த இயக்கம் மட்டுமல்ல! தவ்ஹீத் ஜமாஅத் உட்பட எந்த இயக்கமாக இருந்தாலும் கண்டதும் காதல் என்பது போல் இல்லாமல் ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)
அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போன்று அசை போட்டு, ஆய்வு செய்து பின்பற்றுங்கள்; சிந்தித்து செயல்படுங்கள். இம்மையில் மாற்றம் காணுங்கள்; மறுமையில் ஏற்றம் காணுங்கள் 
நன்றி:ஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2011