தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு நிபந்தனை

எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரி (முதல் தலைமுறை) தகுதி கோரும் மாணவர்கள், ஆதாரங்களுக்கான பிரதியை கட்டாயம் வைக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்பில் குடும்பத்தில் முதல் பட்டதாரி (முதல் தலைமுறை பட்டதாரி) தகுதி பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்த ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ல், கல்விக் கட்டணம் ரூ.4,000-த்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோன்று பி.இ. படிப்பில் மொத்த ஆண்டுக் கட்டணத்தில், கல்விக் கட்டணம் ரூ.7,500-க்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
நிபந்தனை ஏன்? கடந்த கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோரில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 6,440. இதே போன்று பி.இ. படிப்பில் சேர கடந்த ஆண்டு விண்ணப்பித்த 1 லட்சத்துக்கு 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோரில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 78,000 ஆகும்.
பி.இ. படிப்புக்கான விண்ணப்பத்தின்போது குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவோரிடமிருந்து தலைமையக தாசில்தார் ஆதாரச் சான்றிதழ் பிரதியை (ஜெராக்ஸ் பிரதி) அண்ணாபல்கலைக்கழகம் பெற்று, அதை ஆய்வு செய்து கலந்தாய்வின்போது தகுதி கோரிய மாணவருக்கு ஒப்புதல் வழங்குவதை அண்ணா பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவோரிடம் அதே நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி, எம்.பி.பி.எஸ். படிப்பில் ரூ.4,000 கல்விக் கட்டண விலக்கைக் கோருவோருக்கு வசதியாக விண்ணப்ப-தகவல் தொகுப்பேட்டில் விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவதற்கான தலைமையக தாசில்தார் சான்றிதழ் பிரதியை கட்டாயம் இணைக்க வேண்டும். இவ்வாறு சான்றிதழ் பிரதி இல்லாத விண்ணப்பங்கள், பொதுப் பிரிவு விண்ணப்பங்களாகக் கருதப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
சிறப்புப் பிரிவினர் கவனிக்க: முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 அல்லது படிவம் 2-ஐ பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. கடந்த ஆண்டுகளைப் போன்று மேலே குறிப்பிட்ட சிறப்புப் பிரிவினருக்கு என தனி விண்ணப்ப முறை கிடையாது.
விளையாட்டுப் பிரிவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிப்போர், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு கவுன்டருக்கு ""நேரில் வந்து கொடுப்பது'' அவசியமாகும் என்றார் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

கால்நடை மருத்துவம் படிக்க 3,000 "பழைய' மாணவர் விருப்பம்!

தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் "பழைய மாணவர்கள்' கால்நடை மருத்துவ பட்டப்படிப்பில் (பி.வி.எஸ்சி.) சேர விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான "கட்-ஆஃப்' மதிப்பெண் அதிகரித்துள்ளதால், கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்.), இளநிலை மீன்வள பட்டப்படிப்பு (பி.எஃப்.எஸ்சி.), பி.டெக். உணவு பதனிடும் தொழில்நுட்பம் ("பி.டெக் புஃட் பிராஸஸிங் டெக்னாலஜி') மற்றும் பி.டெக். கோழியின உற்பத்தித் திட்டம் (பி.டெக். பெüல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி) ஆகிய படிப்புகளை சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தப் படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர்.
எத்தனை இடங்கள்? கால்நடை மருத்துவப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) 226 இடங்களும், மீன்வளப் பட்டப்படிப்புக்கு (பி.எஃப்.எஸ்சி.) 40 இடங்களும், பி.டெக். உணவு பதனிடும் தொழில்நுட்பப் படிப்புக்கு ("பி.டெக் புஃட் பிராஸஸிங் டெக்னாலஜி') 20 இடங்களும், பி.டெக். கோழியின உற்பத்தி திட்டத்துக்கு ("பி.டெக். பெüல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி') 20 இடங்களும் உள்ளன.
முதல் கட்டமாக கால்நடை மருத்துவப் படிப்புக்கு 3,600, மீன்வள பட்டப்படிப்புக்கு (பி.எஃப்.எஸ்சி.) 400, உணவு பதனிடும் தொழில்நுட்பப் படிப்புக்கு 500, கோழியின உற்பத்தி திட்ட படிப்புக்கு 300 என மொத்தம் 4,800 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
கூடுதல் விண்ணப்பம்: கடந்த வெள்ளிக்கிழமை வரை 3,381 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் 2,966 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) என விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 1,500 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களை எங்கு பெறலாம்? சென்னை மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகம், மதுரை-திருப்பரங்குன்றம், கோவை-சரவணம்பட்டி, திருச்சி-உறையூர், ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்.
கட்டணம்: விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ. 600. ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினருக்கு ரூ. 300. ஜூன் 6 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை மாதவரம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 7.
இது குறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு தலைவர் டாக்டர் திலகர் கூறியதாவது: கடந்த ஆண்டு 4,300 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) மட்டும் சுமார் 5 ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 25 முதல் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்பட உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்போது, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகலையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்பட்ட உடன் 2011-ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
தரவரிசைப் பட்டியல் எப்போது? ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 13, 14 தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 2010-ல் கட்-ஆஃப் மதிப்பெண்கள்
படிப்புகள் ஓ.சி. பி.சி. பி.சி (எம்) எம்.பி.சி. எஸ்.சி. எஸ்.சி.(ஏ) எஸ்.டி
பி.வி.எஸ்சி. 189.50 184.75 169.00 183.50 177.50 172.75 173
பி.எஃப்.எஸ்சி. 176.00 162.00 --- 166.00 165.50 137.50 ---
பி.டெக். 186.25 179.50 185.75 171 163 153.75 ---
ஓ.சி.-அனைத்துப் பிரிவினர்; பி.சி.-பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; பிசிஎம்-பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர்; எம்.பி.சி.-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.-தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.ஏ.-தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர்; எஸ்.டி.-பழங்குடி வகுப்பினர்

வெள்ளி

உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்

வருடம் தோறும் உணவு உற்பத்தியில் 1.3 பில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாவதாக ஐ.நா.,வீன் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) கூறியுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த அளவே கிடைத்து வரும் இயற்கை வளங்களே உள்ளதால், உணவு வீணாவதை குறைக்க வேண்டும்.

மக்களுக்கு உணவு வழங்க உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது.உலகின் உணவு உற்பத்தியில் பாதியளவு உணவு பொருட்கள் வீணாகி வருவதாகவும் கூறியுள்ளது.தற்போது உலகில்925 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த அறிக்கையில், வளரும் நாடுகளில் போதிய உள்கட்ட‌மைப்பு இல்லாதது மற்றும் விவசாய பாதிப்பு போன்ற காரணங்களினால் உணவு வீணாவது முக்கிய பிரச்னையாக உள்ளது.ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் நுகர்வோர்கள் வருடம் தோறும் 95 முதல் 115 கிலோ கிராம் உணவு பொருட்கள் வீணாகி வருகின்றன.

வியாழன்

+2 தேர்வில் நாமக்கல் TNTJ மாணவர்கள் சாதனை!

நாமக்கல்:  TNTJ நாமக்கல் மாவட்ட நகர தலைவர் ஷாகுல் ஹமீது அவர்களின் மகன் சகோ.முகமது யாஸர் அராபத். நாமக்கல் மாவட்ட முஸ்லிம் மாணவர்களில் +2 தேர்வில் 1158 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் (வேதியியலில் 200 – க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளார்).

நாமக்கல் புதுபட்டி TNTJ கிளை மாணவர் அணி சகோதரர் அப்துல் ரஹ்மான் நாமக்கல் மாவட்ட முஸ்லிம் மாணவர்களில் 1070 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மேலும் முஸ்லிம் மாணவியரில் சகோ.யாஸ்மின் 1056 மதிப்பெண் பெற்றுள்ளார்.

TNTJ மாணவர் அணியின் அருமையான வழி நடத்துதல் மற்றும் அருமையான அறிவுரைகள், www.tntj.net மற்றும் உணர்வு பத்திரிகையின் அழகான ஒத்துழைப்பு  இவை அனைத்தும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

 S.சித்தீக்.M.Tech

இந்த வார உணர்வில்.. (மே 13)


உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-35 ஏப்ரல் 29 – மே 05 Unarvu Tamil weekly


பகவானுக்கு உடல் நலமில்லை!
உலககோப்பையும் இந்தியாவின் இறையான்மையும்!
தேர்தல் கருத்து கணிப்பு ஒரு பித்தலாட்டமே!






முஸ்லிம் மதகுருக்களுக்கு தடை விதித்த பைலட்

அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் அரபி மொழி ஆசிரியராக வேலை பார்ப்பவர் மசூதுர் ரஹ்மான். இவரும் இவரது மற்றொரு முஸ்லிம் மதகுரு நண்பரும் கரோலினா
என்ற இடத்திற்கு செல்வதற்காக அட்லாண்டிக் சவுத்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த வெள்ளி அன்று விமானத்தில் ஏறச் செல்லும்போது அவர்கள் அதில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானத்தின் பைலட் அவர்களை ஏற்றுவதற்கு உத்தரவு அளிக்காததால் அவர்கள் அதில் பயணிக்காமல் திரும்ப அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டெல்டா ஏர்லைன்ஸில் மாற்று டிக்கெட் கொடுக்கப்பட்டு அதில் பயணம் செய்தனர்.

இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தைச் சார்ந்த ஆலன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தாடி வைத்திருந்தால் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க பைலட்கள் மறுப்பது முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
inneram

வெளிநாடு வாழ் இந்தியர்கள் - சில நிலவரங்கள்

ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் "டயஸ்போரா' என்றும், இவர்களைப் பற்றிய பாடப்பிரிவை "டயஸ்போரிக் ஸ்டடீஸ்' எனவும் அழைக்கின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என உலகெங்கிலும் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது. 2010-ல் வெளியான யுஎன்டிபி அறிக்கையின்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரின் எண்ணிக்கையே மிக அதிகமானதாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. முசாபர் சிஷ்டி எனும் ஆராய்ச்சியாளர் 2007-ல் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி 1990-91-ம் ஆண்டு அயல்நாடுகளில் வசித்த இந்தியர்கள் நமது நாட்டுக்கு அனுப்பிய தொகை 2.1 பில்லியன் டாலர்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பாக, 10 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் அந்நியச் செலாவணி உயர்ந்தது.

1996-97-ல் 12.3 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த இவர்கள் அனுப்பிய தொகை, 2003-04-ல் ஏறத்தாழ 22 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது 2005-ம் ஆண்டு 23.5 பில்லியன் டாலர் எனும் அளவை எட்டியது. அந்தவகையில் சீனா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளை இந்தியா முந்திவிட்டதாகவும் உலக வங்கியின் மதிப்பீடு தெரிவிப்பதாக முசாபர்சிஷ்டி குறிப்பிடுகிறார்.

மாறிவரும் இந்தியா பற்றி "ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழில் தேவேஷ்கபர் எனும் கட்டுரையாளர் 2009-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து நமது நாட்டுக்கு வரவு 50 பில்லியன் டாலர்கள் எனத் தெரிவிக்கிறார்.

1830-களில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த நலிந்த பிரிவினராவர். 1834-க்கும் 1937-க்கும் இடையே, அதாவது 103 ஆண்டுகளில் 3 கோடி இந்தியர்கள் கடல்கடந்து சென்றதாகவும் அவர்களில் ஐந்தில் நான்கு பேர் மீண்டும் தாய்நாட்டுக்கே திரும்பிவிட்டதாகவும் தேவேஷ்கபர் கூறுகிறார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு இடம்பெயர்ந்த இந்தியர்கள் பெரும்பாலும் சமூகப் பொருளாதாரப் பிடிமானங்கள் உள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் இவரின் கருத்தாகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை பிறநாடுகளுக்குச் சென்றவர்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டோர் அதிகக் கல்வித்தகுதி கொண்டவர்களாக இருந்தனர். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் திறன்சார் மக்கள் இந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றனர் என்கிறார் தேவேஷ்கபர்.

புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாங்கள் குடியமர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தனர் என்பது வரலாறு. தேயிலை, கோகோ மற்றும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த இவர்களின் ஐந்தாவது அல்லது ஆறாவது தலைமுறையினர் இன்றைக்கும் உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

அரசியல், நிர்வாகம், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் இன்னோரன்ன துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக விளங்கியது. இன்றும் விளங்குகிறது என்பதை காலம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

உழைப்பு, திறமை, அறிவு இவற்றால் உலகின் பல பகுதிகளை மேம்படச் செய்த இவர்களும், இவர்களின் வாரிசுகளும் ஏதாவது ஒருவகையில் இன்னலுக்கு ஆட்படுகிறார்கள் என்பது குறித்து செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சியின் வாயிலாகவும் நமக்கு அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளில் குடியமர்ந்த காலத்திலும் இவர்கள் அடைந்த துயரங்களை பல ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

டிரினிடாடில் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

1845-லிருந்து 1917-வரை இந்தியாவிலிருந்து டிரினிடாட் தீவுக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் கிழக்கு உத்தரப் பிரதேசத்தையும், பிகாரையும் சேர்ந்தவர்கள். ஜாதி, சமுதாய, கலாசார அடிப்படையில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த இவர்கள் டிரினிடாடுக்கு அழைத்துவரப்பட்ட பின் பல்வேறு இடங்களிலுள்ள தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். உறவுகள், பந்தங்கள் போன்ற எந்தச் சமூகஉறவின் அடிப்படையிலும் இவர்கள் இணைந்து செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனும் பொதுவான அடையாளத்தைத் தவிர, அடுத்த வீட்டில் வாழ்பவருடைய மொழியும் கலாசாரமும்கூட தெரியாமல் இந்தத் தொழிலாளர்கள் வாழ்ந்ததாகப் பிரமோத்குமார் மிஸ்ரா எனும் மானுடவியல் பேராசிரியர் "ஈஸ்டர்ன் ஆந்த்ரோபாலஜிஸ்ட்' எனும் ஆய்விதழில் 1995-ம் ஆண்டு வெளியிட்ட கட்டுரையில் டிரினிடாடுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் நிலை குறித்து தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

கனடா நாட்டுக்கு 19-ம் நூற்றாண்டின் கடைசியில் சென்ற இந்தியர்களின் நிலையும் ஏறத்தாழ இவ்வாறே இருந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில நூறு இந்தியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எட்டு லட்சத்தைத் தாண்டி, கனடாவின் மொத்த மக்கள்தொகையில் 2.8 விழுக்காடு எனும் அளவை எட்டியது. வளமான வாழ்க்கைத் தரத்தோடு உயர்கல்வி கற்றோர் எனும் நிலையை அடைந்த சிறுபான்மைச் சமூகமான இந்திய வம்சாவளியினர் குடியமர்ந்த ஆரம்ப காலங்கள் சோதனைகள் நிரம்பியதாகவே இருந்தன. கடின உழைப்பு மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்களாக இந்தியப் பணியாளர்கள் இருந்தமையாலும் குறைந்த ஊதியத்துக்கு இவர்கள் தயாராக இருந்ததாலும், முதலாளிகள் இவர்களை வேலைக்கு அமர்த்தினர். ஆனால், இந்தியர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டதோடு, சமூக மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்தனர் என அஜயகுமார்சாகு எனும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

1907-ம் ஆண்டு அந்த நாட்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இந்தியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக இந்த ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். படிப்படியாக கனடாவில் குடியேறிய இந்தியர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தாக அஜயகுமார்சாகு குறிப்பிடுகிறார். முதலில் வான்கூவரிலும், பின்னர் விக்டோரியாவிலும் குருத்துவாராக்களை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்கிறார் இந்த ஆய்வாளர்.

உலகெங்கிலும் குடியமர்ந்த இந்தியர்கள் இன்றளவும் இன்னல்களை ஏதோ ஒருவகையில் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம்.

அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுக்கு கால்களில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியது, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் எனப் பிரச்னைகள் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை.

கடல் கடந்த இந்தியர்களின் திறமையும் அனுபவ அறிவும் வெளிநாடுகளுக்கே பயன்படுகின்றன என்பதில் ஆதங்கமும் வருத்தமும் இருந்தாலும் தங்கள் மூதாதையரின் வேர்களைத் தேடி அவர்கள் நம் நாட்டுக்குவர முயற்சிக்கும்போது பிரிவும் ஏக்கமும் பரஸ்பரம் மனதை வாட்டினாலும் அவர்களால் நாம் பெறும் அந்நியச் செலாவணி நமது பொருளாதாரத்தை உயர்த்தும் உந்து சக்தியாக விளங்குகிறது என்பதில் ஆறுதலும் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பல நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பாராளுமன்ற உறுப்பினர்களாக செனட்டர்களாக, அமைச்சர்களாகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் திறம்படப் பணிபுரிந்து வருகிறார்கள்.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக, ஐ.நா.சபையின் பல்வேறு பிரிவுகளில் நிர்வாகிகளாக, எழுத்தாளர்களாக தடம் பதித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் சிங்கப்பூரின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரவீந்தர்சிங்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே. பல்லாயிரக்கணக்கான நமது இளைஞர்கள் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் பணியமர்ந்திருக்கிறார்கள் என்றால் நமது நாட்டினரின் திறமைக்கும், உழைப்புக்கும், நாணயத்துக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரம் என்பதையே இது உணர்த்துகிறது.

(கட்டுரையாளர்: மதுரை காமராசர் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்)
-DINAMANI

புதன்

மென்மையும்! பொறுமையும்!!


அபூஹாரிஸ்
ஒரு கூட்டத்திற்குத் தலைவராக இருப்பவருக்கு மிக மிக அவசியம் பொறுமையாகும். தன் கீழ் இருக்கும் தொண்டர்களை நல்வழிப்படுத்தும் தலைவர்தொண்டர்களிடம் இருக்கும் பல செயல்களைப் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும்.
தொண்டர்கள் கோபப்படும் போது அல்லது கோபத்தை ஏற்படுத்தும் விதமாக நடக்கும் போது அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வது கட்டாயமாகும். இவ்வாறு நடந்து கொண்டால் தான் தொண்டர்களை அரவணைத்துச் செல்ல முடியும்.
மிகவும் மோசமான செயல்பாடுகளைக் கொண்ட அரபு மக்களிடம் இறைவனின் உதவியால் மென்மையாக நடந்து கொண்டதால் அவர்களை நபிகளார் அரவணைத்துச் செல்ல முடிந்தது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்...
(அல்குர்ஆன் 3:159)

தவ்ராத்தில் நபிகளார்
நபிகளாரைப் பற்றிய இதே கருத்து தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளது.
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்துதவ்ராத்தில் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்! என்றேன். அவர்கள்இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும்நற்செய்தி கூறுபவராகவும்எச்சரிப்பவராகவும்எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்! (இவ்வாறெல்லாம் கூறிவிட்டுநபி (ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) அவர் கடின சித்தம் கொண்டவராகவோ,முரட்டுத்தனமுடையவராகவோகடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்மாறாகமன்னித்துகண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்! வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் லாயிலாஹ இல்லல்லாஹ்(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்அதன் மூலம் குருட்டுக் கண்களும்செவிட்டுக் காதுகளும்மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும் என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது! என பதிலளித்தார்கள் என அதா பின் யஸார் அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2125

வாளால் மிரட்டப்பட்ட நபிகளார்
நபிகளாரை ஒருவர் வாளால் மிரட்டிபின்னர் வாள் தம்மிடம் வந்த போதும் அந்த நபரை நபிகளார் எதுவும் சொல்லாமலும் கண்டிக்காமலும் இருந்தார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தாத்துர் ரிகாஉ எனும்) போருக்காக நஜ்த் நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்க விட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்றுநிழல் பெற்று (ஓய்வெடுத்து)க் கொண்டிருந்தனர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக் கொண்டிருந்த போதுஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக் கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிருந்து) உருவப்பட்ட வாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர்என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்என்று என்னிடம் கேட்டார்.
நான்அல்லாஹ் என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர்என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்என்று கேட்டார். நான் அல்லாஹ் என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.
பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை. (கண்டிக்கவில்லை)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4585)
நபிகளாரைச் சபித்த யூதர்கள்
நபிகளார் காலத்தில் இருந்த யூதர்கள் நபிகளாரைப் பல வகையில் துன்புறுத்தி வந்தார்கள். அதில் ஸலாம் கூறும் போது கூட வார்த்தையை மாற்றி உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறினார்கள். அதற்கு அதிகப்பட்சமாக,உமக்கும் அப்படியே ஆகட்டும் என்று கூறினார்களே தவிர வேறு கடுமையான வாசகங்களைப் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியவர்களைக் கூட இவ்வாறு கூற வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.
யூதர்கல் ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்கடம் வந்துஅஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (ஸலாம் என்ற வார்த்தை சற்று மாற்றி ) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான் அவர்களுக்கு வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்கலும் நனத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று சொன்னார்கள். அப்போது நான்அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையாஎன்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்நான் தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல் விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6024)
பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசி
நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் நாகரீகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஒரு தடவை ஒரு மனிதர் பள்ளிவாசலிலேயே வந்து சிறுநீர் கழித்தார். அவரை மக்கள் அடிக்கப் போன போது நபிகளார் நபித்தோழர்களிடம்அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்று கூறி அவர் முழுமையாக சிறுநீர் கழித்த பின் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.
ஒரு கிராமவாசி பள்வாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாயில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (6025)
ஒரு முறை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவேநபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல்அசுத்தம் செய்தல் ஆகிய வற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோஅல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (480)
நபிகளாரிடம் கடுமை காட்டியவர்
நபிகளார் காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நாகரீகம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். தர்மம் கேட்கும் போது கூடக் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களின் இந்நிலைக் கண்டு நபிகளார் சிரித்தார்களே தவிர கண்டிக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தி யிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால்அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோன் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசிமுஹம்மதே! உங்கடமிருக்கும் இறைவனின் செல்வத்திருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (5809)
நபிகளார் சில கட்டளைகளைப் பிறப்பித்துநபித்தோழர்களை அனுப்பிய போது சிலர் தவறாகப் புரிந்து கொண்டு நடந்தார்கள். அதை நபிகளார் கண்டிக்காமல் விட்டுவிட்டார்கள்.
நபிகளாரின் கட்டளையில் தவறு செய்தவர்கள்
அகழ்ப் போரிருந்து திரும்பிய போது நபி (ஸல்) அவர்கள் எங்கடம்பனூகுறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்கல்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம் என்று கூறினார்கள்.
வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் அடைந்தனர். அப்போது சிலர்பனூகுறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையை தொழ வேண்டாம் என்று கூறினர். மற்ற சிலர், (தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவேநாம் தொழுவோம் என்று கூறினர். நபி (ஸல்) அவர்கடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்கல் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (946)
நபிகளாரை முள்ளில் தள்ளியவர்கள்
ஒருவர் தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள் மரத்தில் தள்ளி விட்டுஅவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாகப் பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறிய போது கோபப்பட்ட நபிகளார்நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப் பார்த்துபொறுமையாக இருந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள்ஹுனைன் போரிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்;சமுரா என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள் விட்டார்கள். நபியவர்கன் சால்வை முள் மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்றுஎன் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்கன் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந் திருந்தாலும் கூட அவற்றை உங்கடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்பொய்யனாகவும் காண மாட்டீர்கள்;கோழையாகவும் காண மாட்டீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல்: புகாரி (2821)
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர்அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும் என்று (அதிருப்தியுடன்) கூறினார்.
நான்நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்கடம் சொல்வேன் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அத்தது. அவர்களுடைய முகமே மாறி விட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்கடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக் கொண்டார் என்று சொன் னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரி (6100)

இலகுவையே தேர்வு செய்யும் நபிகளார்
பொதுவாக நபிகளார் அவர்கள் எது இலகுவானதாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். கடுமையானதை அவர்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். மென்மையான நடக்க முடிந்த அனைத்திலும் மென்மையாகவும் பொறுமையாகவும் இருப்பார்கள்.
இரண்டு விஷயங்கல் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் - எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்கலேயே அதிகமாக அதிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை;அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டுஅதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (3560)
நன்றி: தீன்குலப் பெண்மனி

செவ்வாய்

25ஆ‌ம் தே‌தி ‌பிள‌ஸ் 2 ம‌தி‌ப்பெ‌ண் சா‌ன்‌றித‌ழ்க‌ள்

பிள‌ஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் வரு‌ம் 25ஆ‌ம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும் எ‌ன்று‌ம் தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று‌ம் அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆ‌ம் தேதி தொடங்கி 25ஆ‌ம் தேதி முடிவடைந்தது. 8 லட்சம் மாணவர்கள் எதிர்பார்க்கும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடுகிறார்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் அவர்கள் படித்த பள்ளியில் 9ஆ‌ம் தேதி காலை 10 மணிக்கு ஒட்டப்படும். மதிப்பெண் சான்றிதழ்கள் வரு‌ம் 25ஆ‌ம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும். தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல்கள் மற்றும் மறுகூட்டலுக்கு 11ஆ‌ம் தேதி முதல் 16ஆ‌ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதாவது அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், சென்னையை தவிர்த்த அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படமாட்டாது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.550 கட்டணமாகும். மற்ற பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணமாகும். தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டல்கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைத்தபிறகு விரும்பினால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305 கட்டணமும், மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205ம் கட்டணமும் ஆகும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தொகையை தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வு இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அதை கொடுத்தால் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1,010 செலுத்த வேண்டும். மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.505 கட்டணம் ஆகும். மறுகூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு ரூ.305ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205ம் கட்டணம் ஆகும். இதற்கான அறிவுரைகள் விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகலுடன் இணைத்து அனுப்பப்படும் எ‌ன்று வசுந்தராதேவி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணர்களிடையே எழுந்துள்ளது.


பிளஸ் 2 தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 65 மாணவர்கள் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கியுள்ளனர். 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் தொடங்கி, ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றுள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது, கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 199.25-க்குள் 822 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

விளைவு என்ன? இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க உள்ள பொதுப் பிரிவு மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் 512. கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 371 மாணவர்களில், 61 பேருக்கு மட்டுமே முதல் கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 310 மாணவர்களுக்கு, அவர்களது வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 வாங்கியுள்ளோருக்கு சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரிகள் கிடைக்குமா? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 200-க்கு 200, 200-க்கு 199.75, 200-க்கு 199.50, 200-க்கு 199.25 என அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அனைவருமே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேரவே விரும்புகின்றனர். இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 இருந்தாலும்கூட, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பல மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18,131 மாணவர்களில், 7,088 பேர் (39 சதவீதம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.50-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்: இதைத் தொடர்ந்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது. இதனால் சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இட கட்-ஆஃப் மதிப்பெண் குறித்து மாணவர்களும் பெற்றோரும் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். சென்னை திருவேற்காட்டில் ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை வண்டலூர் அருகே தாகூர் மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் அருகே ஸ்ரீ கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசகேரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி (சென்னை) ஆகிய 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 674 (65 சதவீதம்) எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வின்போதே சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுயநிதி கட்-ஆஃப் என்ன? அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் போன்று, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் கடந்த ஆண்டைவிட 2 மதிப்பெண் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு வகுப்புவாரியாக உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: ஓ.சி. (அனைத்துப் பிரிவினர்)-196.25; பி.சி. (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)-195; பி.சி. (முஸ்லிம்)-194; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.)-192.50; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-185.00; தாழ்த்தப்பட்ட (அருந்ததி வகுப்பினர்)-175.50; பழங்குடி வகுப்பினர்-153.25.

கட்டணம் எவ்வளவு? அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு நீதிபதி குழு கடந்த ஆண்டு நிர்ணயித்த ஆண்டுக் கட்டண விவரம்:

1. பி.எஸ்.ஜி., கோவை, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிகள்-ரூ.2.5 லட்சம்; 2. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி-ரூ.2.3 லட்சம்; 3. ஸ்ரீ கற்பக விநாயகா, தாகூர், ஸ்ரீ முத்துக்குமரன், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரிகள்-ரூ.2.25 லட்சம். இந்த ஆண்டும் தொடர்ந்து நீதிபதி குழு சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும்.

பி.இ. கட்-ஆஃப்: 2 மதிப்பெண் அதிகரிக்கும்

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 மதிப்பெண் வரை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: பிளஸ்-2 தேர்வில் இந்த ஆண்டு கணிதத்தில் 2,720 பேரும், இயற்பியலில் 646 பேரும், வேதியலில் 1243 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ இந்த ஆண்டு 120 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மதிப்பெண்

199-க்கு மேல் 1174 மாணவர்களும், 198-க்கு மேல் 2717 மாணவர்களும், 197-க்கு மேல் 4,294 மாணவர்களும், 196-க்கு மேல் 5881 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனால் கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 வரை அதிகரிக்கும்.

மே 16 முதல் விண்ணப்பம்:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 62 மையங்களில் பி.இ. படிப்பில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்றும் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

கடல் நீ்ர் மட்டம் உயருவதால் உலகின் முக்கிய நகரங்கள் மூழ்கி விடும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)



ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது.
இதே நிலை நீடித்தால் வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பூமி உருண்டையின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என எட்டு நாடுகள் கொண்ட ஆர்டிக் மானிடரிங் அசெஸ்மென்ட் திட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் 0.9 மீற்றர் முதல் 1.6 மீற்றர் வரை அதாவது 5 அடி, 3 அங்குலம் வரை கடல் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக தட்ப வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு கடந்த 2007ம் ஆண்டில் நடத்திய ஆய்வில் வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடல் மட்டம் உயர்வது குறித்து ஐரோப்பிய தட்ப வெப்ப நிலை குறித்த அமைப்பின் ஆணையர் ஹெட்கார்டு கூறுகையில்,"உலகில் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்துமே அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும் என்று தான் கூறுகின்றன. இது கவலையளிக்கும் ஒரு தகவலாகும்" என்றார்.

இந்நிலையில் தட்ப வெட்ப சீர்குலைவை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடல் மட்டம் அதிகரிக்கும் போது மாலத்தீவு உள்ளிட்ட உலகின் சில நாடுகள் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2100ம் ஆண்டில் 1.6 மீற்றர் அளவிற்கு கடல் மட்டம் அதிகரிக்கப் போகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடல் மட்டம் அதிகரிப்பால் சுனாமி தாக்குதலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு சமீபத்திய ஜப்பான் சுனாமியை உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாத்து வெப்ப நிலை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சர்வதேச அளவிலான இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

M.Sc. M.Phil படிக்க அண்ணாபல்கலை கழகத்தில் நுழைவு தேர்வு!

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்கான விண்ணப்படிவம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது
M.Sc. M.Phil நுழைவு தேர்வை பற்றிய விபரங்கள்
விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி : 10/05/11பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : The Director (Admissions), Anna University, Chennai 600 025
விண்ணப்பத்தின் விலை : ரூ.600தேர்வு நடைபெறும் தேதி : 05.06.2011
M.Sc. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள்...


1 M.Sc. Applied Mathematics (தகுதி : B.Sc. Mathematics (or) B.Sc. (Applied Science) படித்து இருக்க வேண்டும்)
2 M.Sc. Materials Science/Medical Physics (தகுதி : B.Sc. Physics கணிதம் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும் (or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
3 M.Sc. Applied Chemistry (தகுதி : :B.Sc. Chemistry கணிதம், இயற்பியல் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும்(or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
4 M.Sc. Applied Geology (தகுதி : :B.Sc. (Geology/Applied Geology/Physics/ Chemistry/Environmental Science/Applied Science) படித்து இருக்க வேண்டும்)
5 M.Sc. Electronic Media (SS) (தகுதி : ஏதாவது ஒரு B.Sc. படிப்பு அல்லது B.A. (Journalism / Visual Communication / Mass Communication) படித்து இருக்க வேண்டும்)
6 M.Sc. Science and Technology Communication (SS) (தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு அல்லது.+2 – ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் படித்து இருக்க வேண்டும்)
7 M.Sc. Environmental Science (SS) (தகுதி : ஏதாவது ஒரு B.Sc. படிப்பு, வேதியியல், உயிரியல் ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள் www.annauniv.edu/msc2year/index.php என்ற இணையதளத்தில் உள்ளது.
M.Phil. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள் :
1 M.Phil. Mathematics (தகுதி : M.Sc. (Mathematics/Applied Mathematics) படித்து இருக்க வேண்டும்)
2 M.Phil. Physics (தகுதி : M.Sc. (Physics/Medical Physics/ Material Sciences)படித்து இருக்க வேண்டும்)
3 M.Phil. Crystal Science (தகுதி : M.Sc. (Physics /Material Science /Medical Physics /Chemistry / Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)
4 M.Phil. Chemistry (தகுதி : M.Sc. (Chemistry/Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)
5 M.Phil. Applied Geology (தகுதி : M.Sc. (Geology/Applied Geology) படித்து இருக்க வேண்டும்)
6 M.Phil. English (தகுதி : M. A. (English) படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள்    www.annauniv.edu/mphil2011/index.php         என்ற இணையதளத்தில் உள்ளது.
S.சித்தீக்.M.Tech