
நாமக்கல்: TNTJ நாமக்கல் மாவட்ட நகர தலைவர் ஷாகுல் ஹமீது அவர்களின் மகன் சகோ.முகமது யாஸர் அராபத். நாமக்கல் மாவட்ட முஸ்லிம் மாணவர்களில் +2 தேர்வில் 1158 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் (வேதியியலில் 200 – க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளார்).
நாமக்கல் புதுபட்டி TNTJ கிளை மாணவர் அணி சகோதரர் அப்துல் ரஹ்மான் நாமக்கல் மாவட்ட முஸ்லிம் மாணவர்களில் 1070 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மேலும் முஸ்லிம் மாணவியரில் சகோ.யாஸ்மின் 1056 மதிப்பெண் பெற்றுள்ளார்.
TNTJ மாணவர் அணியின் அருமையான வழி நடத்துதல் மற்றும் அருமையான அறிவுரைகள், www.tntj.net மற்றும் உணர்வு பத்திரிகையின் அழகான ஒத்துழைப்பு இவை அனைத்தும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
S.சித்தீக்.M.Tech