
முஸ்லிம்களை பொறுத்தவரை கொடியை வணங்குவது நாட்டுபற்றல்ல. அந்நிய நாட்டவன் ஒருவன் நமது மண்ணை அபகரித்தால் நமது மக்களை தாக்க வந்தால் அவனிடமிருந்து நமது மண்ணையும் நமது மக்களையும் காப்பது தான் உண்மையான நாட்டு பற்று. அந்த வேளையில் உயிரே போனாலும் அதற்காக கவலைப்படாமல் சாக தயாராவது தான் நாட்டுப்பற்று. அதை இந்திய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அந்நிய நாட்டவனை நாம் எதிர் கொள்ளும் போது நாம் உயிர் நீத்தால் மறுமையில் சொர்க்கத்தை தருவதாக இறைவன் வாக்களிக்கின்றான். இது இஸ்லாமிய கொள்கைகளில் ஒன்று. எனவே இந்திய மண்ணையும் மக்களையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.