தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!

மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.
இதில் நாமும் விதிவிலக்கல்ல..
ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.
பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!
விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.
நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்
BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.
நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.
லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.
பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு  பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?
எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது
அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.
ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.
2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.
இது மிகப்பெரும் அநியாயமாகும்.
2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே  பெட்ரோலை லிட்டர்  54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.
எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்
உண்மையில்  தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.
ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.
இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011
வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..
மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.
இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!
இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!
மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.
நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.
இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!
100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.
ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு  வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.
இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.
எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதலாக வரி விதிக்க காரணம்
1. தனியார் நிறுவனங்கள்
சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.
கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.
ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.
இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.
Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின்  லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.
இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.
தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.
இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.
முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.
2. வட்டி
65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.
இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.
அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.
பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.
அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.
18% எங்கே 65% எங்கே ?
பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்
மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.
இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான்  ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு’ பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.
இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.
மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.
பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்
State oil Petrol Diesel Kerosene gas
Andhra Pradesh 4 33 22.2 4 4
Maharastra 4 25 23 4 -
Gujarat - 23 21 - -
Madhya Pradesh - 28.7 23 4 4
Chattisgarh - 22 22 4 -
Goa - 22 21 4 4
Uttar Pradesh 4 26.5 17.2 4 -
Uttarakhand - 25 21 12.5 -
Delhi - 20 12.5 4 4
Himachal Pradesh - 25 14 - 4
Jammu, Kashmir - 20 12 4 4
Punjab - 27.5 8.8 4 4
Rajasthan - 28 18 4 -
Haryana 4 20 8.8 4 -
Chandigarh - 20 12.5 4 2
Tamilnadu - 30 21.4 4 4
Pondicherry - 12.5 12.5 - 1
Kerala - 29 24.6 - -
Karnataka 1 25 18 4 1
Orissa - 18 18 4 4
Assam - 25.7 15.5 2 4
Bihar 2 16 16 8 8
Jharakhand - 20 14.5 4 4
West Bengal - 25 17 4 4
Manipur - 20 12.5 4 4
Meghalaya - 20 12.5 4 4
Tripura - 15 10 - 1.5
Mizoram - 18 10 - 2
Arunachal Pradesh - 20 12.5 4 4
nagaland - 20 12 5 4

State
oil
Petrol
Diesel
Kerosene
gas
Andhra Pradesh
4
33
22.2
4
4
Maharastra
4
25
23
4
-
Gujarat
-
23
21
-
-
Madhya Pradesh
-
28.7
23
4
4
Chattisgarh
-
22
22
4
-
Goa
-
22
21
4
4
Uttar Pradesh
4
26.5
17.2
4
-
Uttarakhand
-
25
21
12.5
-
Delhi
-
20
12.5
4
4
Himachal Pradesh
-
25
14
-
4
Jammu, Kashmir
-
20
12
4
4
Punjab
-
27.5
8.8
4
4
Rajasthan
-
28
18
4
-
Haryana
4
20
8.8
4
-
Chandigarh
-
20
12.5
4
2
Tamilnadu
-
30
21.4
4
4
Pondicherry
-
12.5
12.5
-
1
Kerala
-
29
24.6
-
-
Karnataka
1
25
18
4
1
Orissa
-
18
18
4
4
Assam
-
25.7
15.5
2
4
Bihar
2
16
16
8
8
Jharakhand
-
20
14.5
4
4
West Bengal
-
25
17
4
4
Manipur
-
20
12.5
4
4
Meghalaya
-
20
12.5
4
4
Tripura
-
15
10
-
1.5
Mizoram
-
18
10
-
2
Arunachal Pradesh
-
20
12.5
4
4
nagaland
-
20
12
5
4
போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.
விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.
இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.
மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.
மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.
பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!
அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்
20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!
ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.
சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!
இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.
இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..
அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.
எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.
எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.
Tntj.net இணையதள நேயர்களுக்காக..
பெட்ரோல் விலை பற்றிய சிறப்பு ஆய்வு
அபு நபீலா
(விலை உயர்வால் பாதிக்கப்பட்டவன்)
புள்ளி விபரத்தில் சற்று கூடுதல் குறைவு இருப்பதாக யாருக்கும் தெரியவந்தால் தெரியப்படுத்தவும்.
Ref: MoneyControl , Indian gov Tax website, Press News, indian budget

ஞாயிறு

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி

அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும் (28/05/08 to 31/05/09 - 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள் , கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிருவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி செவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது. இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் ஒர் ஆண்டில் மட்டும் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி உள்ளனர். இதுவரை எந்த முஸ்லீம் இயக்கமும் செய்திறாத சாதனையை நமது TNTJ மாணவரணி செய்துள்ளது. தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டம் முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது,

தவ்ஹீத் தங்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களால் இதை சாதிக்க முடியவில்லை.( ஓட்டும் வாங்க முடியவில்லை). இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளக கொண்டு வேகத்தோடும் , வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது,
கல்வி சேவையோடு, முஸ்லீம் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் த்மிழகத்தில் 120 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவரணியை வழுப்படுத்தி உள்ளனர். முஸ்லீம்களை வைத்து உலக ஆதாயம் தேட முயலும் போலி முஸ்லீம் அமைப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் புறகணித்து இம்மை மறுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக முஸ்லீம் இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்த்தியாக நமது மாணவரணி உருப்பெற்றுள்ளது..

நமது மாணவரணி வரும் ஆண்டுகளில் கல்வி சேவையை தமிழகத்தின் அனைத்து கடை கோடி முஸ்லீம்களுக்கும் சென்றடையும் வகையில் தனது செயல்பாடுகளை பண்மடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். நமது மாணவரணியின் சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

-S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவரணி கல்வி கருத்தரங்குகள் நடைபெற்ற 80 இடங்கள்

வட சென்னை மாவட்டம்
 1. நேதாஜி நகர்
2. ஏழுகினறு
3. மண்ணடி
 

தென் சென்னை மாவட்டம் 
4. திருவல்லிகேணி
5. ஜாம்பஜார்
6. சேப்பாக்கம்
7. தரமணி
 

காஞ்சி (மேற்கு) மாவட்டம் 
8. தாம்பரம்
9. பல்லாவரம்
10. குன்றத்தூர்
11.. காஞ்சிபுரம்
12. உத்திரமேரூர்
13. பீக்கங்கரனை
14. காமராஜபுரம்
15. ரங்கநாதஜபுரம்
 

காஞ்சி (கிழக்கு) மாவட்டம் 
16. கல்பாக்கம்
17. கானத்தூர்
18.. செங்கல்பட்டு
19. கூடுவாஞ்சேரி (வள்ளளார் நகர்)  
திருவள்ளுர் மாவட்டம்
 20. பட்டாபிராம்
21. அரக்கோணம்
22. மதுரவாயல்
23. அம்பத்தூர்  
கடலூர் மாவட்டம்  
24. மேல்பட்டம் பாக்கம்
25. பரங்கி பேட்டை

விழுப்புரம் மாவட்டம் 

26. திண்டிவணம்  
வேலூர் மாவட்டம் 
27. பேரணம்பேட்
28. வேலூர்
 

திருவன்ணாமலை மாவட்டம்  
29. வந்தவாசிகிருஷ்ணகிரி மாவட்டம்
30. ஓசூர் நாமக்கல் மாவட்டம்

 31. நாமக்கல்  
தர்மபுரி மாவட்டம் 
32. தர்மபுரி  
தஞ்சாவூர்(வடக்கு) மாவட்டம் 
33. கும்பகோணம்
34. வழுத்தூர்
35. கதிராமங்களம்
36. சோழபுரம்
37. ஆவூர் 
தஞ்சாவூர்(தெற்கு) மாவட்டம்  
38. பட்டுகோட்டை  
திருவாரூர் மாவட்டம் 
 39. திருவாரூர்
40. முத்துபேட்டை
 
நாகை(வடக்கு) மாவட்டம் 
41. அரசூர்
42. துளசேந்திரபுரம்
 

நாகை(தெற்கு) மாவட்டம் 
43. நாகபட்டினம்
44. நாகூர் 
திருச்சி மாவட்டம்
 45. சிங்காரதோப்பு  
பெரம்பலூர் மாவட்டம்
46. லெப்பைகுடி காடு 

புதுக்கோட்டை மாவட்டம்
47. புதுகோட்டை
48. அம்மாபட்டினம்
49. அறந்தாங்கி  
இராமநாதபுரம் மாவட்டம்  
50. இராம்நாட்
51. கீழகரை
 

சிவகங்கை மாவட்டம் 
52. திருப்பத்தூர்
53. காரைகுடி
54.. இளையான்குடி
55. புதுவயல்  
கோவை மாவட்டம் 
56. போத்தனூர்
57. ஆனைமலை
58. ஆசாத் நகர்
59. பொள்ளாச்சி 
திருப்பூர் மாவட்டம்
 60. திருப்பூர்
61. மங்களம்
ஈரோடு மாவட்டம் 

62. தாராபுரம்
63. ஈரோடு  
சேலம் மாவட்டம்  
64. சேலம்  
மதுரை மாவட்டம் 
65. காய்தேமில்லத் நகர்
66. அவனியாபுரம்
67. வில்லாபுரம்
தேனி மாவட்டம் 

68. கம்பம்  
திண்டுக்கல் மாவட்டம் 
69. பேகம்பூர் 
விருதுநகர் மாவட்டம் 7
0. விருது நகர்
71. அருப்புகோட்டை

நெல்லை மாவட்டம் 

72. மேலப்பாளையம்
73. பாளையங்கோட்டை (ரஹ்மத் நகர்) 
தூத்துக்குடி மாவட்டம் 
74. செய்யுதுங்க நல்லூர்
75. ஆராம்பன்னை
76. தொங்கராங்குறிச்சி
 

குமரி மாவட்டம்
77. தக்கலை  

பாண்டிசேரி 
78. சுல்தான்பேட்டை  
காரைகால்  
79. காரைகால் 
80. TR பட்டினம்

சனி

அலஹாபாத் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டனம்! – நமது கண்டனத்தை ஜனவரி 27 ல் ….

உத்ரபிரதேச மாநிலத்தில் 17 வயது பெண்னை கடத்தி கற்பழிப்பு செய்தவனை நிரபராதி என தீர்ப்பளித்து அலஹாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அலஹாபத் நீதிமன்றத்தின் இந்த அநியாயத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆதாரமில்லாமல் யூகத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்குவது என்பது சரியாக அமல்படுத்தப்படுவதில்லை என்று தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.
அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த மேல்நோக்கான (பொடுபோக்கான) செயல்  எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீபதிகள் அல்தாஃப் ஆலம் மற்றம் லோதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலஹாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற கண்டனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லும் அளவிற்கு அலஹாபாத்தின் மிகப் பெரும் அநியாயத் தீர்ப்பான பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிராக  லட்சோப லட்சம் மக்களின்  கண்டனங்கள் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 அன்று உலகிற்கு வெளிவரும் .
                                                நன்றி.TNTJ.net                 

வெள்ளி

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ 10 லட்சம் – என்.ஐ.ஏ

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA) அறிவித்துள்ளது.
சமீபத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் மூலம் கடந்த 2007ம் ஆண்டு மே18-ல் 68 பேர் பலியாக காரணமான சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஹிந்து பயங்கரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானது.
அச்சமயத்தில் நடைபெற்ற அஜ்மீர், மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் பங்குகொண்ட தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோருக்கும் சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரியவந்தது. ஆகவே தலைமறைவான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவித்துள்ளது.
முன்னதாக சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுடெல்லியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலக எண்ணை(1-29947020, 011-29947021) தொடர்பு கொள்ளவும்.

திங்கள்

நான் செய்த செயலுக்கு எனக்கு மரண தண்டனை கிடைக்கும் – இந்துத்துவா பயங்கரவாதி ஆசிமானந்த்!

ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான் மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும் இந்துத்துவா பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டது. இது குறித்து தனக்குத் தெரியும் என்றும் ஆசிமானந்த் கூறியுள்ளார்.
தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். என்றாலும் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் தவறாக் கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
கலீம் அவர்கள் சிறையில் ஆசிமானந்த் விடம் சிறையில் மனிதநேயத்துடன் நடந்து கொண்டது தான் இவரது இந்த வாக்குமூலத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
இது பற்றி டைம்ஜ்ஆஃப்இந்தியாவின் செய்தி
http://timesofindia.indiatimes.com/india/Aseemanand-owns-up-to-strike-on-Mecca-Masjid/articleshow/7238763.cms
www.TNTJSW.blogspot.com

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம் பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது. கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.

காதலிப்போர் கவனத்திற்க்கு :

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.
பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல, ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.

காதலிப்பதால் ஏற்படும் இழப்புகள் :

இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.

காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்.

படிக்கும் இளைஞர்களே!

காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும். இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” (நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்! 
                                                                                    நன்றி TNTJ .மாணவர் அணி

சனி

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்..

மறைவான ஞானங்களை தெளிவாகத் தெரிந்திருக்கும் மகத்தான ஆற்றலாளனாகிய அல்லாஹ் தன் அரும்மறையில் கூறுகின்றான். 

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 6:59)

இறையருளால் இஸ்லாமிய ஆண்டுக்கணக்கில் இரண்டாவது மாதமான ஸஃபர் மாதத்தை நாமெல்லாம் இன்ஷாஅல்லாஹ் அடைய இருக்கின்றோம். இம்மாதத்தில் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் இஸ்லாம் காட்டித்தராத இஸ்லாத்திற்கு முரணான எண்ணங்கொள்வதும், அதற்கேற்ற காரியங்களைச் செய்வதுமாய் இருக்கின்றனர். அவைகளை மூட நம்பிக்கைகளாய் அவர்கள் கருதுவதில்லை. இதனால் இஸ்லாத்தை மற்ற மதங்களைப் போன்று ஒரு மதமாக ஆக்குவதோடு அது ஏக இறைவனால் மனிதர்களுக்கு அருளப்பட்ட தனித்துவமிக்க ஒரு வாழ்வியல் மார்க்கம் என்பதை முஸ்லீம்கள் உணரவும், உணர்த்தவும் தவறி விட்டனர். இது தங்களுக்கும்,பிற மக்களுக்கும் தலைசிறந்த சன்மார்க்கத்திற்கும் தாங்கள் செய்யும் அநீதி என்பதை ஏனோ? உணர மறுக்கின்றனர்.

நன்றி :dubaitntj

பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன்,ஜன.5:கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.

இஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

பழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒரு லட்சம் பேராவது இதுவரை இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பிரிட்டனின் தலைநகரில் மட்டும் 1400 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

பிரிட்டனில் தேசிய அளவில் வருடந்தோறும் 5200 பேர் இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4000 ஆகும்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரிட்டனில் 60,699 பேர் இஸ்லாத்தை தழுவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.

வியாழன்

பாதிரியார்களுடன் நேருக்கு நேர்

  
04.01.11 காலை 10.00மணிமுதல் பகல் 2 மணி வரை கும்பகோனத்தில் பாதிரியார்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 
                               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
                            பெரியகுளம் நகர கிளை.

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் – 1 தேர்வுகள் – முஸ்லிம் பட்டதாரிகள் முந்திக் கொள்ளுங்கள்!

பயனுள்ள தகவல்கள்

ஐஏஎஸ், ஐபிஎஸ்-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அhttp://www.tntj.net/wp-content/uploads/2011/01/tn-gov.jpgரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.

இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும்.

இந்த தேர்வை பற்றிய முழு விபரம்.

யார் விண்ணப்பிக்க முடியும்?
1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். தொலை தூர கல்வியில் படித்து இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
2. 21-வயதிற்க்கு மேல் இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
3. காவல் துறை பணிகளில் சேர உடல் தகுதி Physical fitness இருக்க வேண்டும்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : ஜனவரி 28 (இன்ஷா அல்லாஹ்)
விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் : அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள், சென்னையில் உள்ள TNPSC அலுவலகம். இந்த www.tnpsc.gov.in இணைய தளத்திற்க்கு சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்க்லாம்.

விண்ணப்பத்தின் விலை: ரூ.30.
தேர்வு கட்டணம் : முதல் கட்ட தேர்வு ரூ.75. இரண்டாம் கட்ட தேர்வு ரூ.125
தேர்வு நடக்கும் இடங்கள் : அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் நடத்தபடுகின்றன

சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் :
1. 10 – ஆம் வகுப்பு, 12 – ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்ட படிப்பிற்கான சான்றிதழ். ஒரிஜினல் சர்டிபிகேட்டை சமர்பிக்க வேண்டாம், நகலை அட்டஸ்டேஷன் செய்து அனுப்பினால் போதும்.
2. உடல் தகுதி Physical fitness சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Tamil Nadu Public Service Commission, Commercial Taxes Annexe Building, No.1 Greams Road, Chennai – 600 006

தேர்வை பற்றி
இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும். இதில் தேரியவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் www.tnpsc.gov.in இந்த இணைய தளத்தில் உள்ளது.

புதன்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு



சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை,அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரையும் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் நன்றாக தயாராகும் வகையில், க்கியப் பாடத் தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி அளித்து,அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வை ஏழரை லட்சம் மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 11 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். கடந்த பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தன. இந்த ஆண்டும், மார்ச் 1ல் தேர்வை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், 1ம் தேதி செவ்வாய்க்கிழமையில் வருகிறது. தேர்வுகள் எந்தவித குளறுபடிகளும் இன்றி, அமைதியாக நடக்க வேண்டும் என்பதால், 2ம் தேதி புதன் கிழமை
முதல் தேர்வை துவக்கலாம் என, தேர்வுத்துறைக்கு பல்வேறு அதிகாரிகள் ஆலோசனை அளித்தனர். அதன்படி, 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வெள்ளிக்கிழமையில் முடிகிறது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயாரிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக தாராள மனப்பான்மையுடன் தேர்வுத்துறை செயல்பட்டு வருகிறது.மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி
படிப்புகளில் சேர்வதற்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியமானதாக இருக்கிறது. இதை தேர்வுத்துறை அதிகாரிகள் உணர்ந்து, முக்கியப் பாடங்களுக்கு இடையே போதிய கால அவகாசம் அளித்து வருகின்றனர்.
தேர்வுத்துறை தாராளம்: அதன்படி, மார்ச்சில் நடக்கும் தேர்வுக்கும் போதிய இடைவெளி அளித்துள்ளனர். ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, 8ம் தேதி நடக்கிறது. அதன்பின், 9, 10 ஆகிய இரு நாட்களுக்குப் பின், 11ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. அதையடுத்து, இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் 14ம் தேதி வேதியியல் தேர்வு நடக்கிறது. அதேபோல்,கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுக்கு முன்னதாகவும் இரண்டு நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள், 17ம்
தேதி தான் நடக்கின்றன. அதன்பின், மூன்று நாட்கள் அவகாசத்திற்குப் பிறகு 21ம் தேதி உயிரியல், தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. இதன் மூலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட தேர்வுகளுக்கு, கடைசி நேர
வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்கள் நல்ல முறையில் தயாராக முடியும்.கடந்த முறை இந்த தேர்வை ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரிய வரும்.
பத்தாம் வகுப்பு: அதேபோல், பத்தாம் வகுப்பில் பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.,), மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. பிளஸ் 2 தேர்வைப்போல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கும் இடையிடையே போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகளும் மார்ச் 28ல் துவங்குகின்றன.மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், ஆறு நாட்கள் முன்னதாக மார்ச் 22ல் துவங்குகின்றன.
எனினும், நான்கு போர்டு தேர்வுகளும் ஏப்ரல் 11ம் தேதி தான் முடிகின்றன. கடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 966 பேர் எழுதினர். நான்கு போர்டுகளும் சேர்த்து ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 71
பேர் எழுதினர். இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டு 11 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே கடைசி: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வித் திட்டமாக இருந்து வருகிறது. ஆனால், பத்தாம் வகுப்பு வரை, ஸ்டேட்போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வகையான கல்வித் திட்டங்கள் இதுவரை அமலில் இருந்து வருகின்றன. நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது.
வரும் கல்வியாண்டில் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, 2012ல் ஒரே வகையான தேர்வு முறை அமலுக்கு வரும்.நான்கு வகையான கல்வி திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் கடைசி பொதுத்தேர்வாக,வரும் தேர்வு அமைந்துள்ளது.
சலுகை நேரம் தெரியுமா?
அனைத்து வகையான தேர்வுகளுக்கும், முதல் 15 நிமிடம் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் நுழைந்ததும், முதல் 10 நிமிடம் வினாத்தாள் படித்து பார்க்க சலுகை வழங்கப்படுகிறது. அடுத்த 5 நிமிடம், விடைத்தாளில் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் எழுதுவதற்காக வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை விடை அளிப்பதற்கான நேரம், 10.15க்கு துவங்கி, 1.15க்கு
முடிவடையும். அதுவே, 10ம் வகுப்பாக இருந்தால் 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும்.
ஓ.எஸ்.எல்.சி., அட்டவணை, பெரும்பாலும் எஸ்.எஸ்.எல்.சி., அட்டவணைப்படியே நடக்கிறது. மொழி மற்றும் ஆங்கில தேர்வுகளை அடுத்து, ஏப்ரல் 2ம் தேதி முக்கிய மொழிப்பாட மூன்றாவது தாள் தேர்வு நடக்கிறது. அதன்பின், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை.
அதேபோல், ஆங்கிலோ இந்தியன் தேர்வும், மெட்ரிக் தேர்வு அட்டவணைப்படியே பெரும்பாலான தேர்வுகள் நடக்கின்றன. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு, மார்ச் 22ம் தேதி மொழித்தாள் தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு, மொழி இரண்டாம் தாள் தேர்வு கிடையாது. மற்றபடி ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் சிவிக்ஸ் ஆகிய அனைத்து தேர்வுகளும்,மெட்ரிக் அட்டவணையே இவர்களுக்கு பொருந்தும்.
கடைசி நாளான ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு புவியியல் தேர்வு மட்டும் நடக்கிறது.
பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம்
பிளஸ் 2
2.3.11 மொழி முதல் தாள்
3.3.11 மொழி இரண்டாம் தாள்
7.3.11 ஆங்கிலம் முதல் தாள்
8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி
எஸ்.எஸ்.எல்.சி.,
28.3.11 மொழி முதல் தாள்
29.3.11 மொழி இரண்டாம் தாள்
31.3.11 ஆங்கிலம் முதல் தாள்
1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.11 கணிதம்
8.4.11 அறிவியல்
11.4.11 சமூக அறிவியல
மெட்ரிகுலேஷன்
22.3.11 மொழி முதல் தாள்
23.3.11 மொழி இரண்டாம் தாள்
24.3.11 ஆங்கிலம் முதல் தாள்
25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.3.11 கணிதம் முதல் தாள்
30.3.11 கணிதம் இரண்டாம் தாள்
1.4.11 அறிவியல் முதல் தாள்
5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்
8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்,அருளாளனிடம் சிறப்போம்



இந்த உலகில் நபிமார்கள் என்று சொல்லப்படும் இறைவனின் தூதர்கள் செய்த இஸ்லாமியப் பிரச்சாரத்தை நாமும் தினமும் செய்ய வேண்டும் அந்த பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துக் கொள்வது அல்லாஹ்வைப் பற்றிய பிரச்சாரமாகும்.

இன்றைக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் மாற்று மத அன்பர்களானாலும்,அல்லது இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு திரியும் அதிமான முஸ்லீம் பெயர் தாங்கிகளாக இருந்தாலும் இஸ்லாத்தை சரி வர புரியாததற்காண முக்கிய காரணம் இஸ்லாம் கூறும் கடவுல் கொள்கையை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.


அந்தக் கடவுல் கொள்கைளை அவர்கள் சரியாக அறிந்து கொண்டால் தமது வாழ்வில் வெற்றி பெருவது மிகவும் சுலபமாகிவிடும் என்பதை அறியாதுள்ளார்கள் என்பதே மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.
இதன் காரணத்தினால் தான் இஸ்லாம் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை ஒரு முக்கிய விஷயமாக நமக்கு எடுத்து சொல்கிறது.
உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நீர் நேரான வழியில் இருக்கிறீர்.(22:67)
உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்!(28:87)
அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும் அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.அவன் பக்கமே அழைக்கிறேன்.மீளுதலும் அவன் பக்கமே உள்ளது என்று கூறுவீராக!(13:36)
இதுவே எனது பாதை நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம்.அல்லாஹ் தூயவன் நான் இணை கற்பிப்பவன் அல்லன் என்று (முஹம்மதே!)கூறுவிராக!(12:108)
அல்லாஹ் நபி(ஸல்)அவர்களுக்கு இடக்கூடிய கட்டளைகளில் மிக முக்கியமான ஒன்றாக இதனை சொல்லிக் காட்டுகிறான்.அதாவது நபியவர்கள் செய்த முழுமையான பிரச்சாரத்தைப் பற்றி குறிப்பிடும் போது நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அதாவது இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதென்றாலே அது அல்;லாஹ்வைப் பற்றிய பிரச்சாரம் தான் என்பதை மிகத் தெளிவாக சொல்லும் படி மேற்கண்ட வசனத்தின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் உணர்துகிறான்.
நபியவர்களை உலகுக்கு அனுப்பியதன் நோக்கம்.
அல்லாஹ் இந்த உலகத்திற்கு நபி(ஸல்)அவர்களை அனுப்பியதன் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.
நபியே!(முஹம்மதே!)உம்மை சாட்சியாகவும்,நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும்,அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும்,ஒளி வீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.(33:45,46)
நபியவர்களை அல்லாஹ் ஐந்து விஷயங்களுக்காக இந்த உலகுக்கு அனுப்பியதாக சொல்கிறான்.
1.சாட்சியாளராக.
2.நற்செய்தி கூறக்கூடியவராக.
3.எச்சரிக்கை செய்யக் கூடியவராக.
4.அல்லாஹ்வின் விருப்பப் படி அவனை நோக்கி அழைப்பவராக.
5.ஒளி வீசும் விளக்காக.
இந்த ஐந்து விஷயங்களில் நான்காவதாக அல்லாஹ்வின் விருப்பப் படி அவனை நோக்கி அழைக்கக் கூடியவராக நபியை அனுப்பியிருப்பதாக இறைவன் கூறுகிறான்.
அல்லாஹ்வின் இந்தக் கட்டளையில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன.அதாவது அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க வேண்டும் என்பது முதலாவது.இரண்டாவது அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் போது நபியாக இருந்தாலும் தன்னிச்சையாக அல்லாஹ்வைப் பற்றி எதையும் கூறி அவன் பக்கம் அழைக்கக் கூடாது அவன் தன்னைப் பற்றி எதனை விரும்புகிறானோ,தன்னைப் பற்றி தனது தூதருக்கு எதனை கூறியுள்ளானோ அவைகளைக் கூறித்தான் அழைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?
இந்தக் கேள்விக்கு அல்லாஹ் மிகத் தெளிவாக பதில் தருகிறான்.
நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!(3:110)
அனைத்து மக்களுக்கும் நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து,அல்லாஹ்வை நம்ப வேண்டும் இந்தக் காரணத்திற்காகத்தான் அல்லாஹ் நம்மை மிகச் சிறந்த சமூகமாக சிலாகித்துச் சொல்கிறான்.
அதே போல் மேற்கண்ட வசனத்திற்கு மேலதிக விளக்கமாக அதே அத்தியாயத்தில் இன்னோர் இடத்தில் மிக அழகாக அல்லாஹ் கூறுகிறான்.
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்.(3:104)
அல்லாஹ் காட்டித் தந்த நல்வழியின் பக்கம் யார் அழைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் அதுவல்லாததின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்.
அல்லாஹ்வை நோக்கி(மக்களை)அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லை கூறுபவன் யார்?(41:33)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைப்பவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை இறைவன் தெளிவாக சொல்வதுடன் இந்தப் பணி மிகத் தூய்மையான பணி என்பதையும் நமக்கு தெளிவு படுத்துகிறான்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.யாராவது நேர்வழியின் பக்கம் அழைக்கும் போது அதனை(நேர்வழியை) பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கக் கூடிய கூலியைப் போன்றே அவருக்கும் கிடைக்கும்.அதனைப் பின்பற்றுபவருக்கு அதனால் எந்தக் குறைவும் ஏற்படாது.(முஸ்லிம் : 4831)
பிரச்சாரத்திற்கு பிரத்தியேகமான நேரமா?
இன்று நம்மில் அதிகமானவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துப் பிரச்சாரம் செய்வதென்றால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு,ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களை ஒன்று சேர்த்து பயான் ஒன்றை செய்தால் அதுதான் பிரச்சாரம் என்று நினைகிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய பிரச்சாரத்தைப் பொருத்தவரை அதற்கெண்று இடமோ,நேரமோ தேவையில்லை கிடைக்கும் நேரத்தை கிடைக்கும் இடத்தில் பயண்படுத்த வேண்டும். அப்படித்தான் நபிமார்களின் பிரச்சாரம் அமைந்திருந்தது.
நபி நூஹ்(அலை)அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது நபி நூஹ் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்டுகிறான்.
என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும் பகலிலும் நான் அழைத்தேன் என்று அவர் கூறினார்.(71:05)
மேற்கண்ட வசனத்திலிருந்து நபி நூஹ் அவர்களின் பிரச்சாரம் நேரத்தை குறி வைத்து செய்யப் செய்யப்பட்டதல்ல மாறாக கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இரவு,பகல் என்று கூட பார்க்கவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது.
சிறையிலும் சீரான பிரச்சாரம்.
பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்த நபி யூசுப்(அலை)அவர்கள் கூட இடத்தை குறி வைக்காமல் தான் சிறையில் இருந்தாலும் பிரச்சாரம்; செய்வதற்கு அது தடை கல்லாக ஆகிவிடக் கூடாது என்பதால் அங்கும் தனது இறைவனின் பக்கம் அழைப்பதை தொடர்ந்தார்கள்.
என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள்(இருப்பது)சிறந்ததா? அல்லது அடக்கியாலும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்(இருப்பது சிறந்ததா?)வா(12:39)
எப்படி பிரச்சாரம் செய்வது?
இன்றைய காலத்தில் எத்தனையோ பேர் பிரச்சாரத்தின் யுக்கி தெரியாமலும்,நபிமார்களின் பிரச்சார முறையைப் புரியாமலும் தாங்கள் நினைத்த விதத்தில் பிரச்சாரம் என்ற பெயரில் எதை எல்லாமோ செய்வதற்கு எத்தனிக்கிறார்கள்.
ஆனால் பிரச்சாரத்திற்கான அழகிய முறையை அல்லாஹ் மிக இலேசான முறையில் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.
விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விளகியோரை அறிந்தவன் நேர்வழி பெற்றோறையும் அவன் அறிந்தவன்.(16:125)
அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய கட்டளைகளைப் பற்றியும் நாம் பிரச்சாரம் செய்கின்ற போது விவேகத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்.ஆனால் இன்று தங்களை பிரச்சாரகர்கள் என்று கூறிக் கொள்ளும் அதிகமானவர்களிடம் வேகம் மாத்திரம் தான் இருக்கிறதே தவிர விவேகம் இல்;லை.மார்க்க பிரச்சாரத்தில்; விவேகம் இல்லாத வேகத்தால் எந்தப் பயனும் நிகழ்ந்துவிடாது.
ஆதலால் ஒவ்வொரு பிரச்சாரகரும் எந்தளவு பிரச்சாரத்தில் வேகம் காட்டுகிறோமோ அதைவிட அதிகமாக விவேகமும் நம்மிடம் இருக்க வேண்டும்.
அது போல் நம்முடைய பிரச்சாரம் அதைக் கேட்கின்ற மக்களுக்கு அழகான உபதேசமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கெட்ட வார்த்தைகள் பேசி,அசிங்கமான முறையில் நடந்தால் நமது பிரச்சாரத்தில் எந்தவொரு நன்மையும் நிகழாது.
கண்டிப்பாக நாம் பேசும் பேச்சுக்களில் மிகவும் கவணமாக இருக்க வெண்டும்.
குர்ஆனையும்,ஹதீஸையும் பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் இந்த இரண்டுக்கும் எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பக் கூடியவர்களுடன் அழகிய முறையில் விவாதிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.அந்த அடிப்படையில் மிக அழகிய முறையில் பிரச்சாரம் செய்து தூய்மையான இஸ்லாத்தை உலகறியச் செய்யும் இந்தத் தூய பணியை தொடர்ந்தும் செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

34 வது சென்னை புத்தக கண்காட்சியில் TNTJ ஸ்டால் அமைத்து ஏகத்துவ பிரச்சாரம்!

சென்னையில் 34 வது புத்தக கண்காட்சி துவங்கியுள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்ர்பாக ஸ்டால் அமைக்கப்பட்டு ஏகத்துவ பிரச்சார செய்யப்படுகின்றது.
கடை எண் 375 மற்றும் 376
சென்ற ஆண்டு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து  இந்த ஆண்டும் ஸ்டால் அமைக்கப்பட்டு ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது. 


(சென்ற ஆண்டுDSC00092DSC00101கடந்த 30-12-2009 ஆம் நாள் துவங்கிய 33வது சென்னை புத்தகக் கண்காட்சி 10-01-2010 ஆம் நாள் இனிதே நிறைவுற்றது.
இப்புத்தகக் கண்காட்சியில் வணிக நோக்கமின்றி தாவா பணியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கடையை (எண். 275) எடுத்திருந்தது.
நமது கொள்கை சகோதரர்கள் நமது ஸ்டாலிற்கு வருகை தந்தவர்களுக்கும், பார்வையாளராக அங்குமிங்குமாக நின்றிருந்தவர்களுக்கும், தாவா நோட்டீஸ்களை வினியோகித்தனர்.
மேலும் தூய இஸ்லாமியக் கொள்கைகளையும், பீ. ஜே. மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பையும் மேற்கோள் காட்டி சிறப்பாக தாவா பணி செய்தனர்.
இந்த தாவா பணியின் பயனாக ஓசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற சகோதரர் புனித இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது சிறப்பம்சமாகும்.

இறுதி நாளான 10-01-2010 ஆம் நாள் நாம் எதிர்பார்த் ததை விட அதிகமான சகோதரர்கள் வருகை தந்ததால் நமது தாவா பணிகுழுவினர் புத்தகக் கண்காட்சியகத்திற்கு வெளியிலும் அரங்கிலும் இன்னும் வீரியமாக தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்தனர்.
மாற்று மத சகோதரர்களுக்கு 50% சிறப்புக் கழிவுடன் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட 50% இழப்பையும் தாவா நோட்டீஸ் செலவீனங்களையும் தம்மாம் மற்றும் குவைத் மண்டலத்தினர் ஏற்றுக்கொண்டனர். தளவாடம் மற்றும் அரங்க அமைப்பிற்கான செலவை ரியாத் மண்டலமும், கடை வாடகையினை புருனை மண்டலமும் ஏற்றுக் கொண்டன. இலவச சி.டி.க்கள் மற்றும் இலவச புத்தகங்களுக்கான செலவை ஐக்கிய அரபு அமீரக மண்டலங்கள் ஏற்றுக் கொண்டன. இதர வாகனச் செலவு, போக்குவரத்து மற்றும் உணவுவகைச் செலவீனங்களுக்கு ஜித்தா மண்டலம் பொறுப்பேற்றுக் கொண்டது.)

செவ்வாய்

கல்வி உதவித்தொகை பெற வழிகாட்டும் இணையதளங்கள்

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை.ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.
www.scholarshipsinindia.com
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி இந்த வலைத்தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதைத்தவிர பரிசுகள், போட்டிகள், ஆய்வு படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவைப் பற்றிய தகவல்களையும் தருகிறது. இந்த வலைத்தளத்தில் தகவல்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் இதில் நிபுணர்களின் கேள்வி-பதில் பகுதியும் அடங்கியுள்ளது.
www.education.nic.in
இந்த தளம் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பள்ளிகல்வி-கல்வியறிவு மற்றும் உயர்கல்வி துறை ஆகிய 2 துறைகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் உதவித்தொகை அறிவிப்புகள் மற்றும் பிற நாடுகளால் இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள் பற்றி இந்த தளம் குறிப்பான விவரங்களை கொண்டுள்ளது.
www.scholarship-positions.com
இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு மற்றும் அதற்கு பிந்தைய உதவித்தொகை நிலவரங்களை தெரிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவுகிறது. பல்கலைக்கழக வாரியாக உதவித்தொகை விவரங்களை அறிய முடிவதோடு, இந்த தளத்திலிருந்து செய்தி மடல்களையும் பெறமுடியும். மேலும் இதில் மாணவர்களுடைய சில கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது. இதைதவிர வெளிநாட்டு படிப்புகள் சம்பந்தமான உதவிக்குறிப்புகளை தருவதோடு அதற்கான உதவித்தொகை பெறுவதைப் பற்றியும் தகவல் தருகிறது. அதேசமயம் இந்த தளத்தில் நுழைந்து தேட சற்று சிரமம் எடுத்து கொள்ள வேண்டியிருக்கும்.
www.studyabroadfunding.org
வெளிநாட்டு படிப்பிற்கான உதவித்தொகை கோருபவர்களுக்கானது இந்த தளம். முக்கியமாக மற்றும் குறிப்பாக அமெரிக்காவில் படிப்பதற்கான விவரங்களை இது கொண்டுள்ளது.
www.scholarships.com
இந்த தளம் அமெரிக்க படிப்புகளை பற்றிய தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது.
www.scholarshipnet.info
உலகளாவிய அளவில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு பிந்தைய காலம் மற்றும் பட்டப்படிப்பு அல்லாதவற்றுக்காக கிடைக்கும் உதவித்தொகைகள் பற்றிய விவரங்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் நாடுவாரியாக விவரங்கள் இல்லை.
www.eastchance.com
இந்த வலைத்தளம் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு உதவித்தொகை விவரங்களை கொண்டிருப்பதோடு, சமூக அறிவியல் மற்றும் கோடைகால வகுப்புகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. இதில் நாடுவாரியாக விவரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
www.financialaidtips.org
இந்த தளத்தில் நிதி சம்பந்தமான விதிமுறைகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதிலுள்ள கட்டுரைகள் மூலமாக ஒன்றிலிருந்து மற்றவைக்கு தொடர்பு கிடைத்தாலும், சில கட்டுரைகள் ஆர்வமிக்கதாக இருக்காது. மேலும் சமீபத்திய நிதிசம்பந்தமான விதிமுறைகள் இதில் கிடைப்பதில்லை.

திங்கள்

பயனுள்ள தகவல்கள் >> முக்கியச் செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கிழகம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர்களுக்கு தரம் வாய்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இலவசமாக Hardware and networking, C C++, Tally ,MS Office போன்ற கணிணி வகுப்புகளை நடத்தயிருக்கின்றது. இதற்குரிய கட்டனத்தை அரசே கட்டுகின்றது.
இதற்கான அறிவிப்பு பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. கணிணி கற்றுக் கொள்ள விரும்புவோர் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்திக கொள்ளலாம்.

சனி

இட ஒதுக்கீட்டை கண்கானிக்க குழு அமைக்க முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டிய அவசர தந்தி வாசகம்! மற்றும் முகவரி

இட ஒதுக்கீட்டை கண்கானிக்க குழு அமைக்க முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டிய அவசர தந்தி வாசகம் ! மற்றும் முகவரிகள்:
To
Honorable Chief Minister,
Chief Minister’s Cell, Secretariat
Chennai – 600009
Honorable Chief Minister
As brought to your attention, Muslims Reservation Still continues to face hurdles from Government Officials on implementation of 3.5%.
You have appointed High Level Observation Committee for Arundadiyar to ensure Implementation of Reservation.
We Muslims Demand similar High Level Observation Committee to supervise Implementation of Muslims Reservation.
பின் வரும் தமிழக முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளின் முகவரிகளுக்கும் அனுப்பவும்
அண்ணா அறிவாலயம்
No 268/269, Anna Salai, Teynampet, Chennai – 600018
முதல்வர் வீடு
New No.15, Old No.18,
4th Street, Gopalapuram,
Chennai 600086
துணை முதல்வர்
Deputy Chief Minister,
Secretariat , Chennai – 600009
Chief Secretary
Chief Secretary, Secretariat, Chennai – 600009
Home Secretary
Home Secretary, Secretariat, Chennai – 600009