தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

ஞாயிறு


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’-வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.

‘சேவா’வில் அதிகமான ஆட்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்கள் மூலமாக வகுப்புவாத சித்தாந்தத்தை பரப்ப மோடி தலைமையிலான குஜராத் அரசு முயன்றது. இதற்கு ஒப்புக் கொள்ளாததால் குஜராத் அரசின் பகையை சம்பாதித்துள்ளதாக நானாவதி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.மானியங்களை நிறுத்திவைத்து ‘சேவா’ வை தனது வழிக்கு கொண்டுவர குஜராத் அரசு முயல்கிறது. கட்ச் பகுதியில் ‘சேவா’வின் பணிகளை எதிரி மனப்பான்மையோடு காண்கிறது குஜராத் அரசு.

கட்ச் பகுதியில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் மானியத்தை தராமல் முடக்கியுள்ளது குஜராத் அரசு. உறுப்பினர்கள் மத்தியில் சமூக வேறுபாடுகளில்லாமல் ஐக்கியம்தான் ‘சேவா’வின் வெற்றிக்கு காரணம். அரசு மானியத்தை முடக்கியதால் 12 ஆயிரம் பெண்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்க இயலவில்லை.மோடியின் அரசு 2002 இனப்படுகொலைக்கு பிறகு எல்லாம் மாமூலான நிலைமைக்கு திரும்பியுள்ளதாக கூறிவருகிறது.ஆனால், அரசியல் ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என நானாவதி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் கூறியுள்ளார்.

வெளியே சமாதானமும், உள்ளே வகுப்புவாதத்தையும் வளர்க்கும் கொள்கையை குஜராத் அரசு தொடர்ந்து கடைப்பிடித்துவருவதாக ஓவன் வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.வருங்காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினரை தேசிய நீரோட்டத்திலிருந்து மேலும் அகற்றுவதற்கு முயன்றுவருகிறது.பொது வாழ்க்கையை வகுப்புவாத மயமாக்க குஜராத் அரசு முயல்கிறது. இது கூடுதல் மோதல்களுக்கும், இரத்தம் சிந்துவதற்கும் உதவும் என ஓவன் அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

யார் யாரெல்லாம் குஜராத் கலவரத்தில் குற்றவாளிகள்?அவர்களுடைய பங்கு என்ன? என்பது குறித்து வினவியபொழுது, ஏன் அமெரிக்கா கலவர விவகாரத்தில் கவலைக்கொள்கிறது? என குஜராத் முதன்மை செயலாளர் சுதீர் மங்காட் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்? நீங்கள் எப்பொழுதும் கலவரத்தை குறித்துதான் கவலைப்படுகின்றீர்கள். உலகில் வேறு எவ்வளவோ காரியங்களும் நடக்கின்றது என மங்காட் கூறியுள்ளார்.மனித உரிமையை கவனத்தில் கொண்டு அமெரிக்கா குஜராத் பிரச்சனையை தொடர்ந்து நுட்பமாக கண்காணிக்க வேண்டுமென கூறி ஓவன் வாஷிங்டனுக்கு அனுப்பிய தனது செய்தியை முடித்துள்ளார்.
thoothu

சனி

மீட்டெடுத்த பள்ளியில் TNTJ தாயிக்கள் ஜும்ஆ உரை – பள்ளியை பராமரித்தோர் முடிவு!

சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியை அபகரிக்க நினைத்தவர்களிடம் இருந்து கடந்த 28-3-11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக மீட்டெடுத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியை பராமரித்து வருவோர்களின் கோரிக்கைக்கு இனங்க வெள்ளிதோறும் அந்த பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் ஜும்ஆ உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 1-4-11 அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கானத்தூர் பஷர் அவர்கள் உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

வெள்ளி

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடற்கரையில் கடந்த சில மாதங்களாக நூதன சம்பவம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடற்கரையில் கடந்த சில மாதங்களாக நூதன சம்பவம் ஒன்று நடந்து வருகிறது. கடற்கரை, மீன்பிடி துறைமுகம் என எங்கு பார்த்தாலும், லட்சக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குகின்றன. தினம்,தினம் ஒதுங்கும் இந்த மீன்களை,  உள்ளாட்ச்சி நிர்வாகத்திற்கு போதும், போதுமென ஆகி விடுகின்றது. கடலி்ல் ஒரு அடி ஆழத்திற்கு, லட்சக்கணக்கில் பல வகையான குட்டி மீன்கள் செத்து ஒதுங்குகின்றன.ஏன் இவ்வாறு மீன்கள் செத்து ஒதுங்குகின்றன என ,யாருக்கும் காரணம் புரியவில்லை. தண்ணீரில் விஷம் கலந்து இருந்தால், மற்ற பெரிய மீன்களும் செத்து ஒதுங்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. குறிபிட்ட சில வகை மீன்கள் மட்டுமே செத்து ஒதுங்குகின்றன. கடலில் எண்ணை கசிவு எதுவும் ஏற்படவில்லை. ஏதோ ஒரு காரணத்தால், கடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, இவ்வாறு மீன்கள் செத்து இருக்கலாம் என, மீன் வள நிபுணர்கள் கருதுகின்றனர் எனினும், செத்து ஒதுங்கும் மீன்களால், ஊர் முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. அப்புறப்படுத்துவதற்குள்

வெள்ளி மேடை (உறவினர்கள்) 01.04.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையில் நடந்த வெள்ளி மேடை.

Google Motion: கூகுளின் முட்டால் தனமான முடிவு – கூகுலை பயன்படுத்துவோர் அதிருப்தி


 
இன்டர்நெட் உலகின்  முடிசூடா மன்னாக திகழும் கூகுளின் இன்றய (ஏப்ரல் 1) முட்டால் தனமான முடிவு கூகுல் பயன்படுத்வோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றக்கு gmail ஐ ஒபன் செய்தால் Google Motion என்ற புதிய சேவையை google துவங்கியுள்ளதாக google செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கென தனி வீடியோவை உருவாக்கி அதில் ”நீங்க கைய காட்னா மெயில் send ஆயிடும் கால காட்னா மெயில் ஒபன் ஆகிடும்.. புதுசா கூகுள் இத கண்டுபிடுச்சுருக்கு”  என் பலரது பேட்டிகள் செய்முறை விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.
இறுதியில் Google Motion ஒபன் செய்தால் April Fool என்ற செய்தியை கூகுள் இடம் பெறச் செய்து, ஏப்ரல் 1 ஐ கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டு கூகுள் முட்டால் தனமான காரியத்தை செய்துள்ளது.
மிகப்பெறும் விஞ்ஞானிகளை கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனம் இது போன்று செய்தது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கூகுளின் நம்பகத் தன்மைய கேள்விக்குரியாக்கியுள்ளது. இனிமேல்  ”கூகுள் புதிதாக அதை செய்திகன்றது இதை செய்கின்றது என்றால் யாரும் நம்பப் பொவது கிடையாது. அதுவும் இது போன்று ஏதோ தில்லாலங்கடி வேலையாக இருக்குமோ என்றே நினைக்க தோன்றும்.
இதற்கு முன்னர் google buzz என்ற புதிய சேவையை துவங்கிய கூகுள் பொதுமக்களின் ப்ரய்வசிக்கு இது குந்தகம் விளைவிக்கம் வண்ணம் இருந்ததால் தனது தவறை திருத்திக் கொண்டு பொதுமக்களுக்கு பலகோடி ரூபாய் நஷ்டஈடு கொடுத்தது குறிப்பிடதக்கது.

மாத கால பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீ ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஒருமாத பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று (31.03.2011)  மதியத்துடன் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்…

நேற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சியின் ஆரம்பமாக பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒருமாத காலம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பகுதியில் சென்று எந்த அளவிற்கு வீரியமாக பிரச்சாரக் களத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வரக்கூடிய மூன்று மாதங்களில் கவனித்து அந்தந்த பிரச்சாரகர்கள் இருக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகள் அவர்களுக்கு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பேச்சாளர்கள் என்ற அடையாள அட்டையை மாநிலநிர்வாகம் வழங்கும் என்று அறிவிப்பு செய்தார்.
அதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பிரச்சாரகர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பிரச்சாரகர்களுக்கு அறிவுரையாக வழங்கினார்.
பொதுப்படையாக நாம் அனைவரும் தவறுகளிலிருந்து தவிர்ந்து வாழவேண்டும் என்று இருந்தபோதிலும், பிரச்சாரகர்களாக இருக்கக்கூடிய நாம், நமது இந்த தூய ஏகத்துவ பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான பாவங்களிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து வாழவேண்டும் எனவும், பெண்கள் தொடர்பான விஷயங்களிலும், பொருளாதரம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நமது ஜமாஅத்தின் இன்னபிற பிரச்சாரகர்கள் எந்த அளவிற்கு கவனமாகவும், பேணுதலாகவும் இருக்கின்றார்களோ அதைப்போல நீங்களும் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும், பிரச்சாரகர்கள் நேரந் தவறாமையை கடைபிடிப்பது அழைப்பு பணியின் முக்கிய அம்சமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு மத்தியில் காலத்தின் கட்டாயம் கருதி மிகுந்த பொருட்செலவோடு நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு தங்களது பங்களிப்பை பொருளாதார ரீதியாக பெருமளவு செய்த வெளிநாடு வாழ் மண்டலங்களுக்கும், மாவட்ட வாரியாக தங்களது பங்களிப்பை செய்த மாவட்ட நிர்வாகிகளுக்கும், கிளை நிர்வாகிகளுக்கும், தனிநபராக இருந்து பொருளாதார பங்களிப்பை செய்தவர்களுக்கும், நல்ல முறையில் பாடங்களை நடத்திய ஆசிரியர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய மாநில நிர்வாகிகளுக்கும், தங்களது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்லமுறையில் வழங்கிய அனைவருக்கும் நன்றிகூறி முடிக்க, ஒரு மாத பிரச்சாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

கலைஞர் செய்தியின் 2011 தேர்தல் களம் : மாநிலத் தலைவரின் அதிரடி நேர்கானல் (வீடியோ)