தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

அதிகம் டி.வி பார்த்தால் விரைவில் மரணம்-எச்சரிக்கை ரிப்போர்ட்

இடியட் பாக்ஸ் என் அழைக்கப்படும் தொ(ல்)லைக்காட்சியை அதிகம் பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அதிக நேரம் டி.வி பார்ப்பதினால் சர்க்கரை நோய்,இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்ப்படும் என்று அமெரிக்காவில் உள்ள 'ஹார்வார்டு ஸ்கூல் ஆப் புப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

     ஒரு நளில் இரண்டு மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி.பார்த்தால் சர்க்கரை வியாதி வருமென்றும்,மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக டி,வி,பார்த்தால் இதய அடைப்பு ஏற்ப்படும் என்றும்,அதிக நேரம் டி.வி.பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும்,இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங் ஹூ,மற்றும் கிரான்ட் வெட்ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

     இந்த ஆராய்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுதச் செய்வது மட்டுமில்லாமல்,டி.வி.பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்ப்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் என்று பிரான்க் தெரிவித்தார்.

    அதிகம் டி.வி.பார்ப்பதால் சர்க்கரை நோயோடு உடல்பருமனும் ஏற்ப்படும் என்று கிரான்ட் வெட் தெரிவித்தார்.1970 லிருந்து 2011வரை டி.வி.பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

    அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் தான் டி.வி.பாப்பதிலும் முன்னிலை வகிக்கின்றனர்.ஒருநாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டி.வி.பார்ப்பதாகவும்,ஐரோப்பியர்கள் 3 லிருந்து 4மணிநேரம் டி.வி.பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.மனிக்ககனக்கில் டி.வி.பார்ப்பதால் நோய்கள் வரும் என்ற இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து நாள் முழுவதும் 'மெகா சீரியல்களைப்'பார்த்து அழும் நம்மவர்கள் சிந்திப்பார்களா? 
நன்றி:தினமணி.        

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி

கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.
நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.
இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்.
ஆளும் கூட்டணி என்பது வெத்துவேட்டு என்பதை காவல்துறையினர் தெளிவாகவே புரியவைத்து அதிரடியாக சாவியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.
இதன் மூலம் தமுமுகவின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.
ஆர்.டி.ஓ விசாரித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் சாவியை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பதறிப்போன மமகவினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையை வாங்கிவிட்டனர்.
அதிகாரிகளை கைக்குள் போட்டு ஆளும்கூட்டணி என்று எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். இந்த இடைக்காலத்தடையை சட்டப்படி விரைவில் முறியடிக்க தக்க முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆர்ப்பாட்டம்
தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது.
அராஜகத்திற்கும், ரவுடித்தனத்துக்கும் மரண அடி கொடுக்க நியாயவான்கள் அணிதிரண்டு வருமாறு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றது.
குறிப்பு :உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .

ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காலக்கட்டத்தில் ஈராக்கிலிருந்து 1800 கோடி டாலர் தொகை காணாமல் போயுள்ளது என அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் உஸாமா அல் நுஜைஃபி தெரிவித்துள்ளார்.600 கோடி டாலரை காணவில்லை என கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈராக் தணிக்கையாளர்களிடமிருந்து 1800 கோடி டாலர் தொகையை ஈராக்கில் காணவில்லை என அறிக்கை கிடைத்துள்ளது என நுஜைஃபி அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் துவக்க கட்டத்தில் பெருமளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இத்தொகை ஈராக்கின் வளர்ச்சி திட்டங்களுக்கான பணமாகும்.இவை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்களும் இல்லை.இவை எங்கே சென்றது என்பது தெரியவில்லை.இதனைக்குறித்து பின்னர் விரிவாக பேசலாம்.ஈராக்கின் பணம் எங்கே சென்றது என்பது கண்டறியவேண்டியுள்ளது என நுஜைஃபி தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு புஷ்ஷின் அரசு 2000 கோடி டாலரை ஈராக்கிலிருந்து கொண்டு சென்றது.ஐ.நாவின் உணவுக்கு எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் கிடைத்த நிதித்தொகைதான் இது.ஈராக் அதிகாரிகள் நாட்டின் புனர்நிர்மாணத்திற்கு அமெரிக்கா ஒப்பந்தக்காரர்களுக்கும், ஈராக் அமைச்சர்களுக்கும் பணம் அளித்ததாகவும் கருதப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு போடப்பட்ட சட்ட ஒப்பந்தத்தின்படி காணாமல் போன பணத்திற்கு அமெரிக்காதான் பொறுப்பு என ஈராக் வாதிடுவதாக் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. போதிய அவகாசம் தந்தால் பணத்தின் கணக்கை காட்டலாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், 3 தடவை தணிக்கை செய்தபிறகும் பணம் எங்கே சென்றது என்பதுக்குறித்து கண்டுபிடிக்க அமெரிக்காவால் இயலவில்லை.

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை: கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

கோடை விடைமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் கல்வி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டது. கடந்த 15-ம் தேதி தான் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒரு வார காலத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவியும், மாணவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதேபோன்று தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் (15), பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் கல்வி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெற்றோர்களும் பீதி அடைந்துள்ளனர்

திங்கள்

கடையநல்லூர் கிளைகளின் ஒன்றினைந்த பொதுக் குழு கூட்டம் – சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.


முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்டதியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.
அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களில் எவ்வாறு கலந்து கொள்வது கூடாதோ அது போன்று பெண்வீட்டு விருந்து வைக்கப்படும் திருமணங்களிலும கலந்து கொள்வது கூடாது. அதுவும் ஒர் பித்அத்துதான். அனாச்சாரம் தான் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.
பிறகு மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஏன் புதிதாக வாங்கும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்காக பதிவு செய்ய வேண்டும்? என்பதையும் டிரஸ்டாக பதிவு செய்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் கொள்கையற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்கள்.
பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத் தலைவரும், கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினருமான முஹம்மது நாசிர் அவர்கள் முபாரக் பள்ளிவாசல் அருகில் வாங்கப்பட்ட இடத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில்தான் ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூல் செய்தார் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்து நான் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்யவில்லை என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது கடைந்தெடுத்த பொய் என்பதையும் நிருபித்தார்.
மேலும ஸைஃபுல்லாஹ் ஹாஜா இடம் வாங்குவதற்காக வசூல் செய்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டால் இந்த உண்மைகள் அவருடைய வாயினாலே வெளிப்படும் என்றும் அவர் அவ்வாறு வெளியிடுவாரா? என்றும் பொதுக் குழு உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.
ஸைஃபுல்லாஹ் ஹாஜா மீது நடவடிக்கை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும், மாவட்டப் பொறுப்பிலும் கிளைப் பொறுப்பிலும் இருந்த அவருடைய வகைறாக்களும் கீழ்கண்ட காரணங்களினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர்.
1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் மூலமாகவே நடத்தப்படவேண்டும். ஆனால் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களோ தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத், முபாரக் நலச் சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவாக் குழு, அக்ஸா மாணவர் அணி அமைப்பு போன்றவற்றை உருவாக்கி அவற்றின் பெயரில் தேர்தல் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், பிரசுரங்கள் வெளியிடுதல், அரசியல் வாதிகள் சந்திப்பு என்று செயல்பட்டு வருகிறார். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளுக்கு எதிரானதாகும்.
2- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்த தானம் செய்தல், கத்னா முகாம் நடத்துதல், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற பல்வேறு பணிகளைக் குறிப்பிட்டு அரபியிலும் ஆங்கிலத்திலும் புரஃபைல் தயாரித்து அதனைக் காட்டி பல இலட்சங்களை (சுமார் 40 இலட்சம் அல்லது அதைவிட அதிகம்) வசூல் செய்து முபாரக் பள்ளிவாசல் அருகில் உள்ள நிலத்தை வாங்கி அது தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்.
3- இவ்வாறு பதிவு செய்யலாமா? என்று ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பிஜேயிடம் கேட்ட பொழுது அவ்வாறு செய்வது கூடாது, ஜமாஅத்தின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும், அல்தாஃபி அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகம் இது பற்றி கேள்விப்பட்டு அல்தாஃபி, பிஜே, சம்சுல்லுஹா இன்னும் பல நிர்வாகிகள் முன்னிலையில் ஸைஃபுல்லாஹ் அவர்களை எச்சரிக்கை செய்த பிறகும் ஜமாஅத்திற்குத் தெரியாமல் தனக்கு வேண்டப்பட்ட தனி நபர் பெயரில் பதிவு செய்தது மிகப் பெரும் மோசடியாகும்.
4- நாங்கள் கடையநல்லூர் மக்களிடம் மட்டும் தான் வசூல் செய்தோம் என்று ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் கூறுகிறார். ஆனால் இது பொய்யாகும். கடையநல்லூர் மக்களிடம் மட்டும் வசூல் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைக் காட்டி அரபியிலும் ஆங்கிலத்திலும் ஏன் புரஃபைல் தயாரிக்க வேண்டும்.? ஆங்கிலத்தில் அல்லது அரபியில் படித்தால் தான் கடையநல்லூர் மக்கள் உதவி செய்வார்களா? மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலத்தின் சார்பில் விசா எடுக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகியாக பேச்சாளராக ரமலான் பிரச்சாரத்திற்காக துபாய் சென்ற பொழுது ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அமீரகம், குவைத், சவூதி அரேபியாவில் உள்ள கடையநல்லூர் அல்லாத தமிழ்நாடு தவ்ஹீத் சகோதரர்களிடமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையநல்லூரைச் சார்ந்த பலரும் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்காகவே உதவி செய்துள்ளனர். தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்து கொண்டே, தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக்காட்டி புரபைல் தயாரித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களிடம் வசூல் செய்து தனிப்பட்ட கமிட்டிக்கு பாத்தியப்பட்டது என்று கூறுவது ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதும் ஜமாஅத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மைக்கு எதிரானதாகும்.
5- புதிதாக எந்த ஒரு சொத்து வாங்கினாலும் அது அந்தந்த கிளையின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே வாங்கப்பட வேண்டும், அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையிலுள்ள அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பது நமது சட்ட விதியாகும். இதில் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வந்து பல்வேறு ஊர்களிலும் இவ்வாறு தான் நம்முடைய மர்கஸ்களுக்கு இடம் வாங்கப்படுகிறது. ஆனால் இது நடைமுறைக்கு வந்த பிறகு இந்த விதிக்கு எதிராக கடையநல்லூரில் புதிதாக வாங்கிய இடத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்ததுடன் அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, இது முபாரக் கமிட்டிக்கு பாத்தியப்பட்டதாகும், மாநிலத் தலைமை எங்கள் நிர்வாகத்தில் தலையிட அதிகாரமில்லை என்றெல்லாம் கூறுவது அமைப்பிற்கு எதிரான மிகப்பெரும் துரோகமாகும்.
6- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தான் பல்லாண்டுகளாக முபாரக் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. மேலும் மாநிலத் தலைமையின் மூலம் அளிக்கப்படும் ஃபித்ரா போன்றவைகளையும் இந்தக் கமிட்டி மூலம் விநியோகித்தனர். ஜாக்கினர் பள்ளியினை ஆக்கிரமிக்க வந்தபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தான் அதனை எதிர்த்து நின்றனர். வசைமொழிகளைத் தாங்கிக் கொண்டனர். இஸ்லாமியக் கல்லூரி பணத்தைத் தான் (கடனாக) முபாரக் பள்ளிவாசல் வழக்கு வகைக்காக ஸைஃபுல்லாஹ் பயன்படுத்தினார். மேலும் முபாரக் வழக்கு வகைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பல்வேறு செலவினங்களைச் செய்துள்ளனர். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இல்லையென்றால் முபாரக் பள்ளிவாசலை ஜாக்கினர் ஆக்கிரமித்திருப்பர். இது உலகிற்கே தெரிந்த உண்மை. அனைத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முபாரக் கமிட்டி என்பது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உட்பட்டதல்ல. என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது மாபெரும் மோசடியாகும்.
7- ஆடம்பரத் திருமணங்களிலும், பித்அத்கள்,பெண்வீட்டு விருந்து நடைபெறும் திருமணங்களிலும் கலந்து கொள்வது, அத்திருமணங்களை நடத்தி வைப்பது, சீர் சீராட்டு என்ற பெயரில் தவ்ஹீத் வாதிகள் இலட்சக்கணக்கில் பாத்திர பண்டங்களை வாங்கிக் கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
8- கிளை நிர்வாகத்தை கிளை நிர்வாகிகள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு மாற்றமாக கடையநல்லூர் கிளை நிர்வாகத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக கிளையின் பெயரில் இயங்கக்கூடிய ஆம்புலன்ஸ் வரவு செலவு கணக்குகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் நிர்வாகக் குழுவிலோ பொதுக் குழுவிலோ மக்களுக்கு மத்தியில் அதன் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
9- கிளை நிர்வாகிகள் தீர்த்து வைக்க வேண்டிய குடும்பப் பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தான் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வைப்பது.
10- மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாநில நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல், கிளை உறுப்பினர்களிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் கடையநல்லூரைச் சார்ந்த மாவட்ட நிர்வாகியையும், கிளை நிர்வாகிகளையும் கைப்பாவைகளாக்கி, ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் ஆதாயம் தேடி புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிவாசல் என்ற பெயரில் கட்டிடம் கட்டியது இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பணத்தினை இலட்சக்கணக்கில் செலவு செய்தது பொதுமக்களுக்கு மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்ணியததிற்கு பாதிப்பை ஏற்பறடுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக திகழ்ந்தவர் ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தான்.
11- மாநில நிர்வாகத்திற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல் மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்த சகோதரர் அப்துந் நாசிர் அவர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தி முபாரக் பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுவதற்கு பல மாதங்கள் தடைவித்தது ஜமாஅத்திற்கு எதிரான செயலாகும். மாநில நிர்வாகிககள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநிலத் தலைமைக்குரியதே என்பதை ஸைஃபுல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தும் மாநிலத் தலைமைக்கு எதையும் தெரிவிக்காமல் இவ்வாறு செயல்பட்டிருப்பது ஜமாஅத்திற்கு எதிரானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
12- மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஜும்ஆ உரைக்காக தாயிக்களை அனுப்பும் போது மாநில நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக எதேச்சதிகாரமாக அந்த தாயிக்களை மாற்றியதும் அவர்களுக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுக்கிறோம் எனவே எங்கள் விருப்பப்படி தான் பயன்படுத்துவோம் என்று கூறி ஜமாஅத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டினார்.
13- கடையநல்லூரைச் சார்ந்த ஒரு தனவந்தர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதுள்ள நம்பக்தன்மையாலும் நற்பணிகளாலும் கவரப்பட்டு தன்னுடைய நிலத்தினை பள்ளிவாசல் கட்டுவதற்காகவும், மையவாடி அமைப்பதற்காகவும் தானமாக வழங்கினார். அவருக்கு ஸைஃபுல்லாவாகிய என்னைத் தான் தெரியும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் கேட்டு ஜமாஅத்தின் அந்தஸ்தை பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்தி ஸைஃபுல்லாஹ் பேசி வருகின்றார். இது அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் உச்சகட்டம் ஆகும். ஸைஃபுல்லாஹ் ஜமாஅத்தினுடைய நிர்வாகியாக இல்லாமல் இருந்திருந்தால் இவரை யாருக்காவது தெரிந்திருக்குமா? நபியவர்கள் ஸகாத்தை வசூலிக்க அனுப்பிய நபித்தோழர் இவ்வாறு கூறிய போது இவர் தன்னுடைய தந்தை வீட்டிலோ தாய் வீட்டிலோ இருந்திருந்திருந்தால் இவருக்கு கிடைத்திருக்குமா? என்று நபியவர்கள் பதில் கூறினார்கள். அந்த நபித் தோழரின் கூற்றைப் போன்று தான் ஸைஃபுல்லாஹ்வின் பேச்சுகளும் அமைந்துள்ளன.
14- சுய இலாபத்திற்காக அரசியில் வாதிகளுடன் கைகோர்த்து செயல்பட்டதும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசியும் ஸைஃபுல்லாஹ் அவர்கள் செயல்பட்டுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
15- தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கி வ்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட முபாரக் பள்ளிவாசல் அருகில் அந்த ஆம்புலன்ஸிற்காக உள்ள இடம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட இடத்தில் நிறுத்தக் கூடாது. என்று கூறியதுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டில் எடுத்து நிறுத்தி ஜமாஅத்திற்கு எதிரான தன்னுடைய குரோதத்தை ஸைஃபுல்லாஹ் வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் இன்னும் ஜமாஅத்திற்கு எதிரான பல செயல்பாடுகளாலும் ஸைஃபுல்லாஹ் அவர்களும் அவரைச் சார்ந்த அவருடைய வகையறாக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் மாநிலத்தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்புப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
எனவே சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுடன் ஜமாஅத் தொடர்பான எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முபாரக் பள்ளிவாசல் தொடர்பாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்து தனி நபரின் பெயரில் பதிவு செய்தது தொடர்பாகவும் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுது.
மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த கூட்டம் சரியாக 1 : 30 மணிக்கு பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

போர்ப்ஸ்கஞ்ச்:உயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்-ஆமீனா காத்தூன்


போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க ’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார் அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.

மேலும் விபரங்களை கேட்ட பத்திரிகையாளர்களிடம் இப்பொழுதும் கிராமத்தில் போலீஸ் உள்ளது. வேறு ஏதேனும் கூறுவதற்கு பயமாக உள்ளது என மெதுவாக கூறி மகேஷ் பட்டின் அருகே அச்சம் மிகுந்து அமர்ந்திருந்தார் தாஹிருல் காத்தூன்.

பீகாரின் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில் பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றதை எதிர்த்து போராட்டம் நடத்திய முஸ்லிம் கிராமவாசிகள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி கறைபடிந்த போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் சொந்தங்களை இழந்தவர்களுடன் பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.

போர்ப்ஸ்கஞ்சில் விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழு சேகரித்த தகவல்களை வெளியிட மகேஷ் பட்டும், ஷப்னம் ஹாஷ்மியும் இணைந்து டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். கொல்லப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்தனர். சனிக்கிழமை காலை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தியை சந்தித்த இவர்கள் நாளை மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிப்பர்.

கர்ப்பிணியான பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதாக ஆமினா காத்தூன் கூறுகிறார். பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன் நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக நாங்கள் உபயோகிக்கும் சாலையை ஆக்கிரமிக்க முயன்றதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு போராட்டம் நடந்த இடத்திற்கு சென்றோம். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மதில் சுவரை இடித்ததற்கு பழிவாங்கும் விதமாக போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது-காத்தூன் கூறுகிறார்.

ஆண்கள் மஸ்ஜிதில் தொழுகையை முடித்த கையோடு போராட்டம் நடத்த சென்றனர். கைக்குழந்தைகளுடன் குண்டடிப்பட்டு விழுந்த பெண்களையும், குழந்தைகளையும் லத்தியால் அடித்த போலீஸ் வீடுகளில் நுழைந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் உடைத்தது என ஆமினா கூறுகிறார்.

எல்லோரும் பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை கொண்டாடும் வேளையில் தான் நாங்கள் உண்மை நிலையை கண்டறிய பீகாரின் போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றோம் என மகேஷ் பட் கூறுகிறார். சச்சார் கமிட்டியின் அறிக்கையில் கூறியபடி முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான சமூக சூழலில் வாழும் மாவட்டம் தான் போர்ப்ஸ்கஞ்ச் உள்படும் அராரியா மாவட்டம்.

இத்தகையதொரு சூழலில் வாழும் மக்களை இவ்வாறு கொன்றொழித்துவிட்டா சிறுபான்மை நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்? மகேஷ் பட் கேட்கிறார். போலீஸ் வகுப்பு வாதமயமாக்கப்படும் வேளையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மெளனம் சாதிப்பது மர்மமாக உள்ளது. நிதீஷ்குமாரை சந்திப்பதற்கு அவரை 26 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஒரு முறை கூட அவர் பதிலளிக்கவில்லை என மகேஷ் பட் கூறினார்.

இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும், ஆறுமாத பிஞ்சு க்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். ஜூன் மூன்றாம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேற்கண்ட மிரட்டலை பீகார் துணை முதல்வர் விடுத்தார்.

கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

thoothu

மனிதக் கழிவிலிருந்து உணவு - ஜப்பான் விஞ்ஞானியின் 'உவ்வே..' ஆய்வு

கஞ்சத்தனம் செய்வோரை கிராமப்புறங்களில் "எச்சில் கையால் காக்கை விரட்டாதவன்' என்பர். கருமித்தனம் செய்பரை இன்னும் கேவலமாக "இவனா பேண்ட... __யில் பருக்கை எடுப்பவன்" என்பர். ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் தற்போது மனிதக் கழிவிலிருந்து பருக்கை எடுக்கும் ஆய்வு ஒன்றைச் செய்து பலரையும் வாய் (முக்கை) அடைக்கச் செய்துள்ளார்!


மிட்ஷுயூகி இகெடா என்ற ஓகயாமா ஆய்வக விஞ்ஞானி ஒருவர் மனிதக் கழிவிலிருந்து உணவுப்பொருளுக்கு இணையான சத்துப் பொருட்களைப் பிரித்தெடுத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிர்வாகம், சாக்கடைக் கழிவிலிருந்து சாத்தியப்படக்கூடிய பயன்பாடுகளை ஆய்வு செய்து தரும்படி கோரியபோது, அவரது ஆய்வில் மேற்கண்ட சமாச்சாரத்தையும் கண்டுபிடித்துள்ளார்!

மனிதக் கழிவிலுள்ள நுண்ணுயிரிகள் தரமான உணவுபொருட்களுக்கு இணையான சத்துப்பொருளை உருவாக்கும் என்பதை தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார். மனிதக் கழிவை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட மாமிசத்தில் 63% புரதம், 25% நார்ச்சத்து,3% திரவச்சத்து மற்றும் தாதுக்களை பிரித்தெடுத்துள்ளார். அவற்றுடன் சோயா மற்றும் நிறமிகளைச் சேர்த்து செய்த உணவை 'உண்டுகளி(ழி)த்த' சுவைஞர்கள் மாட்டுக்கறியைப்போல் சுவையுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மாமிசங்களைப் பதப்படுத்தி விற்பனைக்குத் தயாராக பேக்கிங் செய்யும் நிறுவனங்களில் விலங்குகளிலிருந்து வெளியாகும் மீதேன் வாயுவால், 18% சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மனித உணவுக்கான விலங்குகள் நமது தானிய உற்பத்தியையும் சார்ந்திருப்பதால் உணவு ஒதுக்கீடு குறைவதோடு, இடநெருக்கடியும் ஏற்படுகிறது. மனித உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவது, மிருகவதையாகக் கருதப்படும் பிரச்சாரம் வலுவடைந்து வருவதால், தமது மனிதக் கழிவுக்கறி சரியான மாற்று உணவாக இருக்கும் என்று பேராசிரியர் இகெடா தெரிவித்துள்ளார்.

விலையைப் பொருத்தவரை மாமிசக் கறிக்கு இணையாக இருக்குமாம்! சத்துக்களை பிரித்தெடுப்பதற்கான விலை 10-20 மடங்கு அதிகம் என்பதால் இது ஒன்றும் அதிகமில்லை என்கிறார். மேலும், இகெடா கூறுகையில் மனிதக் கழிவிலிருந்து உணவா? என்ற உளவியல் ரீதியான மனத்தடைகளையும் உணர்ந்துள்ளதாகவும், சுற்றுச்சூழல்மீது அக்கரையுள்ளவர்கள், இத்தகைய மனத்தடைகளையும்மீறி தமது கண்டுபிடிப்பிலுள்ள சத்துக்களையும் கருத்தில் கொண்டால் அவர்களுக்கு விலை ஒரு பொருட்டாக இருக்காது என்கிறார்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஈடுகொடுக்க முடியாதளவில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வணிகமயம் ஆக்கப்படுவதாலும்,எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களால் விளைச்சல்கள் வீணாவதும்,உற்பத்திக்கும் தேவைக்கும் உள்ள அளிப்பு விகிதம் குறைந்து உலகின் சிலபகுதிகள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி அடுத்த 5-10 ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கணித்துள்ளதை கவனத்தில் கொண்டால்,நம் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யத்தவறுகிறோமோ என்ற குற்ற உணர்வும் ஏற்படுவதை தவிக்கமுடிய வில்லை!

inneram

சனி

உணர்வு அலுவலக மீட்புப் போராட்டம் – தயாராவீர்!

உணர்வு அலுவகம் தமுமுக வினரால் சட்ட விரோதமாக ஆக்ரமிக்கப்பட்டதைப் பற்றியும் அதை மீட்கும் முயற்சி பற்றியும் நாம் முன்னர் விளக்கியுள்ளோம்.

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.
இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆளும் கூட்டணி என்ற பம்மாத்து வேலை எடுபடவில்லை. ஆளும் கட்சிக்கு எதிராக வேலை செய்த தவ்ஹீத் ஜமாஅத் சொத்தையே ஆக்ரமிக்க முடியவில்லையே மற்றவர்களின் சொத்துக்களை எப்படி ஆட்டையைப் போடலாம் என்று தமுமுக கும்பல் இடிந்து போய் உள்ளது.
ஆனால் சாவியை தமுமுகவிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டாலும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைக்காததன் மூலம் காவல் துறையினர் அநீதி இழைத்துள்ளனர். இந்த அநீதியைத் தட்டிக் கேட்க நான்கு கட்ட போராட்டத்தை மாநில நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .

உணர்வு அலுவலகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராவீர்.

குரான் படிக்கிறார் டோனி பிளேர்


இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.   நன்றி: தினகரன்

வியாழன்

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.

""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
dinamani

இந்த நூற்றாண்டின் மிக இருண்ட முழு சந்திர கிரகணம்.. ஜூன் 15, 2011

ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர்.

கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள். முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடுகின்றனர். மக்கள் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? கிரகம் பிடிச்சவனே/வளே என்று திட்டுவது, இந்த கிரகணம் பிடிச்ச கிரகணத்தினால்தானா/ காரணத்தினால்தானா ?

"திருமலை திருப்பதி கோவில் ஜூன் 15 ல் மாலை 6 மணி முதல் ஜூன் 16 அதிகாலை 4.30 வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி பகல் 12.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மாலை 6 மணிக்கு கோவில் மூடப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் கோவிலில் நடைபெற உள்ள திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட உள்ளது." இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எது கிரகணம்....?

கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.



2011 , ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள் (30 நாட்களுக்குள்) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது..! ஆமாம். ஜூன் முதல் தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது, ஜூன் 15 ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவாக உள்ளது. இந்த முழு சந்திர கிரகணத்தின் போது, முழு நிலா நாளில், நிலவு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு விருந்து..! அடுத்து ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்..!

சூரிய குடும்பம், ஒரு மணல் துகள் போல, பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.

பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல. சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை(MilkyWay galaxy), தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்து குஞ்சு குளுவான்கள் படை சூழ நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது

அனைத்து கோள்களும், சற்றே சாய்ந்த நிலையில்

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட, 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல எல்லா அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை.


சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து, முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான். .

பொதுவாக, ஒரு வருடத்தில், 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின், மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய/சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள், (நேரம், வகை போன்றவை). 18 வருடம் , 11 நாட்கள் (6.585.32 நாட்கள்) நிகழும். இதற்கு சாரோஸ் சுழற்சி(Saros cycle) என்று பெயர். பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் துவங்கி, பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ./மணி நிலநடுக்கோட்டுக்கு அருகில். ஆனால் துருவங்களில், கிரகண வேகம் பொதுவாக 8,046 கி .மீ/மணி. முழு சூரிய கிரகணம் 1 .5 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி.மீ. பகுதி சூரிய கிரகணம், பூமியின் மற்ற இடங்களுக்கு, முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி.மீ தூரம் வரை தெரியும்

முழு சந்திர கிரகணம்

ஜூன் 15 ம் நாள் நமக்கு காட்சி அளிக்கப் போவது, முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் (Totality) அதிக பட்சம் 107 நிமிடங்கள். ஆனால், பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின் அடுத்த எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.

இந்த ஆண்டின்(2011) முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள் நிகழ உள்ளது. ஜூன் 15ம் நாள் வரவுள்ள சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் சரியாக 100 நிமிடங்கள். இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில், தெற்கு ஒபியுக்கசுக்கு(southern Ophiuchus)அருகில், மேற்கு லாகூன் நெபுலா(Lagoon Nebula ,M8)க்கு 7 பாகையில் நிகழவுள்ளது. இங்கே, சந்திரனில் கருமைப் பகுதி/முழு மறைப்பு நேரம் 100 நிமிடங்கள் அதிகமாக நீட்டிக்கும். இதற்கு,முன் ஜூலை 2000 ஆண்டில்தான், இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது. இந்த முழு கிரணத்தின்போது சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும். கிரகணத்தின் போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை, முறையே, அம்பரா(Umbra), பெனும்பரா(Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன் , சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய் தெரியும். இந்த ஆண்டு, ஜூன் 15ம் நாளில் நிகழ உள்ள கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த மாலை மயங்கும் வேளையில், நாம் ஒரே நேரத்தில் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில் பார்க்கும்போது, செலனோஹிலியன்(selenehelion ) என்ற நிகழ்வு உண்டாகிறது. மேலும் இந்த சமயத்தில் இப்படி சூரிய மறைவு மற்றும் சந்திர உதயத்தில் சூரிய, சந்திரனுடன், மாலை வேளையில் சந்திர கிரகணம் தெரிவதை படுக்கைவச கிரகணம் என்றும், சொல்கின்றனர்.

ஜூன் 15 நிகழவுள்ள இந்த கிரகண நேரம்:



முழு சந்திர கிரகணம்.. துவக்கம் முதல்.. முடிவு வரை
பெனும்பரா(Penumbra) கிரகணம் துவக்கம்: 17 .24 .34 UT.
பகுதி சந்திரகிரகணம் துவக்கம்: 16 .22 .56 UT
முழு மறைப்பு துவங்குநேரம்:
அதிக பட்ச முழு கிரகணநேரம்:
பகுதி கிரகணம் முடியும் நேரம்:
பெனும்பரா கிரகணம் முடியும் நேரம் :
கிரகண நேரம்:
முழு மறைப்பு நேரம் : 1 மணி, 40 நிமிடம்,52 நொடிகள்
பகுதி கிரகண நேரம்...: 3 மணி, 39 நிமிடம்,58 நொடிகள்.
பெனும்பரா கிரகண நேரம்: 5 மணி,39 நிமிடம், 1 வினாடி.
இந்திய நேரப்படி,2011 , ஜூன் 15 ன், முழு சந்திர கிரகணம்:
பெனும்பரா பகுதிக்குள் : இரவு 10 மணி, 52 நிமிடம், 52 நொடி .ஜூன் 15
. கருமைநிற பகுதி சந்திர கிரணத்துக்குள்:11 மணி,52 நிமிடம், 24நொடி
முழு மறைப்பு கிரகணம் :இரவு ௦0.மணி,51 நிமிடம், 57 நொடி ..ஜூன் 16
அதிக பட்ச கிரகணம் . ....:விடிகாலை,1 மணி,42 நிமிடம்,24 நொடி ஜூன் 16
முழு மறைப்பின் முடிவு..:காலை 2 மணி, 32 நிமிடம்,50 நொடி
கருமை நிற பகுதி கிரகணம் முடிவு:ஜூன் 16 காலை, 3மணி, 32 நிமிடம், 22 நொடி
நிலா பெனும்பராவை விட்டு விலகுவது: ஜூன் 16 , விடிகாலை, 4 மணி, 32 நிமிடம், 02 நொடி.

அரிதான.. மிக .. இருண்ட.. சந்திர.. கிரகணம்..!

இந்த ஆண்டு ஜூன் 15 ம் நாள் ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வே..! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது , சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணிக்கும். இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம், கி.பி. 2000 ஆண்டு, ஜூலை 16 ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம், கி.பி.2018 , ஜூலை 27 ம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென்னமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது. மேற்கு ஆசியா , ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் ௧௬ ம் நாள் சூரிய உதயத்துக்கு முன்,கிரகணம் முடிகிறது. இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சாரோஸ் சுழற்சியின் 130 வது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும், இது 34 வது கிரகணம்.இந்த வகை சாரோஸ் சுழற்சி, 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011 , டிசம்பர் 10 ம் நாள் ஏற்பட இருக்கிறது.

முழு சந்திர கருப்பு கிரகணம்

பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது. நிலா கருப்பு நிலாவாக காட்சி அளிக்கும். இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கமில்லாத நண்பர்களுக்கு, கிரகணத்தின் போது, சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சூரியன், பூமி மற்றும் சந்திரனின் மையங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமைவதால் /வருவதால்தான் சந்திரன் இப்படி இருட்டாக இருக்குமாம். மேலும் சமீபத்தில் ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை அள்ளி வளி மண்டலத்தில் வீசியதே..! அதுவும் கூட, இந்த இருண்ட முழு சந்திர கிரகணத்தின் ஒரு காரணியாகும். !முழுமையும் வானம் இருட்டாக, சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக் கூட இப்போது பார்க்கலாம். ! இதற்கு முன்னால், இப்படி ஒரு முழு சந்திரகிரகணம், 1971 , ஆகஸ்ட் 6 ம் தேதி ஏற்பட்டது. அடுத்து இது போல ஒரு முழு சந்திர கிரகணம், இன்னும் 47 ஆண்டுகள் கழிந்து, 2058 , ஜூன் 6 ம் நாள் வரவிருக்கிறது. இப்போதுள்ளவர்களில் எத்தனை மனிதர்கள், 47 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்படியான சந்திர கிரகணத்தைப் பார்க்கப் போகிறோம்...!

முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக,சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதி பலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான், அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் , முழு சந்திர கிரகணத்தின் போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது.இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..!

பால்வழி மண்டலம்



சாதாரணமாய் நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள். இந்த முறை சந்திர கிரகணத்தின் போது, தெற்கு வானில், தனுசு விண்மீன் படலமும்,அதன் பிரகாச விண்மீனான பூரட்டாதி, அதன் அருகில் வலப்பக்கத்தில், அழகாகத் தெரியும், பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியையும் கண்டு ரசித்து மகிழலாம்.அது மட்டுமல்ல. இரவு வானின் பிரகாச விண்மீன்களான, வடக்கில் உச்சியில் தெரியும் பருந்து/வடக்குச் சிலுவையின் தெனாப்(Denob),அதன் அருகில் உள்ள கழுku (aquis) விண்மீன் படல திருவோணம்(Altair), கொஞ்சம் தள்ளி யாழ் விண்மீன்(Lyra) படலத்தின் வேகா(Vega), இவை உருவாக்கும், கோடைக்கால முக்கோணம் (Summer Trianle) போன்றவற்றை பார்த்து பரவசப்படலாம்.

சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால்,முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம் , சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப் பட்டுள்ளது.

பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

மக்களை.. மிரட்டிய.. கொலம்பஸ்..!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் பெரிய கில்லாடி..! அவர், 1503 , ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி, திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள் குறித்த, ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, கடவுள் உங்கள் மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின் ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப் போகிறார், என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். பின் வழக்கம் போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கம் மகிழ்ச்சி கொண்டனர். எப்படி இருக்கிறது.. இந்த வரலாற்றுத் தகவல்..! எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிய வருகிறதா?

மூட நம்பிக்கையால்.. மூடப்பட்ட.. மக்கள்..!

பொதுவாக,தினம் தினம், சந்திரன் உதிப்பதில்லை. காரணம் நாம் அறிவோம். தினமும் சூரியன் நமக்குத் தெரிகிறது. அது நகர்வது போல தோன்றினாலும், அது நகர்வதில்லை. நாம்தான் சூரியனைச் சுற்றுகிறோம். கிரகணத்தின் போது எந்த சிறப்பு கதிரும் சூரியனிடமிருந்து வருவதில்லை . அப்போது வருகிறது என்று சொல்லப்படும் அகசிவப்பு கதிர், காமாக் கதிர்கள், எப்போதும் சூரியனிட மிருந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் வெயிலில் போனால் உடலோ, பொருளோ சூடாவதுக்கு காரணம் அகச்சிவப்பு கதிர்களே. பிரபஞ்சம் முழுவதும் காமாக் கதிர்கள் உள்ளனவே. ஆனால், கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எவ்வளவு சரி? அது மட்டுமல்ல, வானுக்கு விண்கலத்தை அனுப்பும், இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com)

இந்த வார உணர்வில்.. (ஜூன் 17)


முஸ்லிம் சிறுமி படுகொலை:தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணை

லகிம்பூரில்(உ.பி) நிக்ஹஸன் போலீஸ் நிலையத்திற்கு அருகே 14 வயது முஸ்லிம் சிறுமி மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை கமிஷனின் பிரதிநிதிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.


ஐ.பி.எஸ் அதிகாரிகளான பி.எஸ்.ராவ் மற்றும் அனில் சர்மா ஆகியோர் இந்த விசாரணையை நடத்துகின்றனர். நேற்று முன்தினம் 14 வயதான முஸ்லிம் சிறுமி போலீஸ் ஸ்டேசனுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட நிலையில் மரணித்து காணப்பட்டார். தேசிய மனித உரிமை கமிஷனின் விசாரணைக்குழு சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். இச்சம்பவத்தைக் குறித்து பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தாமாகவே வழக்கை பதிவுச்செய்து விசாரணையை துவக்கியுள்ளது தேசிய மனித உரிமை கமிஷன்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 4வது நாடு இந்தியா

வன்கொடுமை, பெண் சிசுக் கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள் நடைபெறுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் உலக அளவில் மகளிர் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகளவில் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடம் வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து காங்கோ, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. சர்வதேச பெண்களுக்குக்கான சட்ட அமைப்பு மற்றும் மகளிர் உரிமை கழகத்தின் சார்பில் தாம்சன் என்பவரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் 3 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து கண்டங்களில் உள்ள 213 நிபுணர்களால் பெண்களுக்கு எதிராக சுகாதாரம், பாலியன் பலாத்காரம், பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான கொடுமைகள், மதம் சார்ந்த அடக்குமுறை, பொருளாதார ரீதியிலான கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இந்தியாவின் உள்த்துறை செயலராக இருந்த மதுக்கர் குப்தா தெரிவித்த அறிக்கையில் இந்தியாவில் சுமார் 100 மில்லியன் பேர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறும் கொடுமைகளில் 40 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய திருமணம், கட்டாய வேலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடைபெறுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 50 மில்லியன் ஆகும்.

செவ்வாய்

மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் ஊழலை சேர்த்துக் கொள்ளும் ஐமுகூ அரசாங்கம்



முதலாளித்துவம் நவீனத்துவத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது; அதில் பாபாக்களுக்கும், சுவாமிகளுக்கும், அரை பாபாக்களுக்கும் அரை சுவாமிகளுக்கும் பாத்திரம் எதுவும் இல்லாத மதச்சார்பற்ற அரசியலும் அடங்கும்.


புதிய தாராயமய சீர்திருத்தங்கள் முதலாளித்துவ வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன, அதனால் நவீனத்துவத்தை நோக்கிய நமது பயணமும் வேகமடைகிறது என்று சீர்திருத்தங்களை பலர் ஆதரித்தனர். இடதுசாரிகள் எப்போதுமே இந்த நிலையை மறுத்து வந்துள்ளனர். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை தாமதமாக மேற்கொள்ளும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுடன் கூட்டு சேர்கின்றது; ஆதலால், இன்றியமையாத வகையில் பழைய சமூக அமைப்பிற்கு பலத்த அடி கொடுப்பதற்குப் பதிலாக அதனுடன் சமரசம் செய்து கொள்கிறது; அது நவீனத்துவத்தை நோக்கிய பயணத்திற்குத் தடையாக இருக்கின்றது என்று இடதுசாரிகள் வாதிட்டனர். முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்ல முயற்சிக்கும் சமூக சக்திகளால் மட்டுமே (இடதுசாரிகள்-மொர்) நாட்டை நவீனத்துவத்திற்கு அழைத்துச் செல்லவும் முடியும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதும், சர்வதேச அரங்கில் நாட்டிற்குப் புதிதாகக் கிடைத்துள்ள 'கவுரமும்', மேட்டுக்குடியினர் உலகமயமாக்கப்பட்டிருப்பதும் இடதுசாரிகளின் நிலைப்பாடு தவறு என்கிற எண்ணத்தை உருவாக்கியிருந்தால், கருப்புப் பணத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டிய பாபா ராம்தேவிடம் நான்கு மத்திய அமைச்சர்கள் மிகக் கேவலமான முறையில் மன்றாடிய சம்பவம் அந்த எண்ணத்தைப் போக்கியிருக்க வேண்டும்.

இந்த சம்பவம் இன்னும் நம்மிடையே பழமை நீடித்திருக்கிறது என்பதை வலியுறுத்திக் கூறுவது மட்டுமின்றி, எல்லையற்ற கலக்கத்தை உண்டாக்கும் ஒன்றை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறது; அது, புதிய தாராளமய இந்தியா பழமையை எதிர்ப்பதற்குப் பதிலாக உண்மையில் அதைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கப் பஞ்சாயத்துகள் புத்துயிர் பெற்றிருப்பதை நாம் பார்த்தோம்; இப்போது, சாகும்வரை உண்ணாவிரதம் என்ற பெரும் மிரட்டலுடன் ஒரு பாபா தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோருகிறார். நம்முடைய வளர்ச்சி சாதனைகளைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் இன்றைய அரசாங்கம் ஓடோடிச் சென்று அத்தகைய ஒரு சாமியாரை தாஜா செய்கின்றது. அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று களியாட்டம் போடுகின்ற ஒரு பாபாவை தாஜா செய்ய ஜவஹர்லால் நேருவோ, அல்லது இந்திரா காந்தியோ கூட, நான்கு காபினெட் அமைச்சர்களை அனுப்பியிருப்பார்களா?

பொருளாதார ரீதியாக 'வெற்றி' அடைந்திருந்தபோதிலும் அரசாங்கம் இவ்வளவு கீழான நிலைக்கு வீழ்ந்து விடவில்லை; உண்மை என்னவெனில், அந்தப் பொருளாதார வெற்றியால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. பின்பற்றப்படும் பொருளாதாரப் பாதை தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ அரசியல் வர்க்கம் முழுவதையும் ஊழலில் சிக்க வைக்கின்றது. அது அரசியலை மதிப்பிழக்கச் செய்கிறது; ஆதலால், அனைத்து வகையான பாபாக்களுக்கும், சாமியார்களுக்கும், தங்களைத் தாங்களே ரட்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களுக்கும் களத்தைத் திறந்து விடுகின்றது; அவர்கள் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை; அவர்களே ஊழலற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை; களத்தில் நுழையும் அவர்கள் சமூக ஒப்புதல் எதுவும் இல்லாத தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலை அரசின் மீது திணிக்கிறார்கள். அரசியலை மதிப்பிழக்கச் செய்வது என்பது தவிர்க்கவியலாத வகையில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகும்; எந்தப் பழமைக்கு எதிராக நாம் சுதந்திரப் போராட்டம் நடத்தினோமோ அந்தப் பழைய காலத்திற்கு நம்மை பின்னோக்கி தூக்கி எறிவதாகும்.

ஆனால், ஊழலும் பொருளாதாரப் பாதையும் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது? சட்ட விரோதமாக வழங்கப்பட்ட சேவைகளுக்காக பணம் கொடுக்கப்படுவதையே ஊழல் என்கிறோம்; அதாவது, அவை விலை கொடுத்து வாங்கக் கூடிய சரக்குகள் இல்லை; அல்லது நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே விற்கப்படும் ரேஷன் முறையில் வழங்கப்படுவதைவிடக் கூடுதலாக சில பொருட்களையும், சேவைகளையும் வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாகப் பணம் கொடுப்பதை ஊழல் என்கிறோம். ஒரு தொலைபேசி இணைப்புக்காக சட்டப்படி என்ன கட்டணம் செலுத்த வேண்டுமோ அதை நான் ஏற்கனவே செலுத்தியிருந்த போதிலும், அதற்காக நான் லஞ்சம் கொடுத்தால் அது முதல் வகை ஊழலாகும்; எனது குழந்தைக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை எனில் (கல்லூரி இடங்களின் எண்ணிக்கையும் ஒரு வரம்பிற்கு உட்பட்டதே), நுழைவுக் கட்டணத்தைவிட அதிகமான பணம் கொடுத்து இடம் வாங்கினால் அது இரண்டாவது வகை ஊழலாகும். பெரும்பாலான ஊழல்களை இந்த இரண்டு வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவையாக வகைப்படுத்தி விடலாம். ஆனால், அடிப்படையான விஷயம் இதுதான்: ஊழல் எனும் கருத்துருவாக்கத்தின் அடிப்படையாக இரண்டு செயல் களங்களுக்கு (அல்லது செயல் பரப்பு) இடையிலான வேறுபாடு இருக்கின்றது; ஒன்று தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களம்; மற்றொன்று அதற்கு வெளியே இருக்கும் களம்.

தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்தில் ஊழலைப் பற்றி நாம் பேசுவதில்லை; தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்திற்கு வெளியே இருக்கின்ற களத்தில் தடையற்ற சரக்கு பரிவர்த்தனைக் களத்தில் போல் ஒரு விலை வாங்கப்படும்போதுதான் ஊழல் நிகழ்கின்றது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு களங்களின் எல்லைகள் தாண்டப்படக் கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும், அவ்வளவுதான். இது சாத்தியமா?

சரக்குமயமாக்கல்

முதலாளித்துவத்தின் கீழ் எல்லாவற்றையும் சரக்குகளாக்கும் ஒரு போக்கு எங்கும் ஊடுருவிப் பரவுகின்றது; அதாவது, எல்லாவற்றையும் சரக்காக ஆக்கும் ஒரு போக்கு என்பதைக் கண்டுபிடித்தது கார்ல் மார்க்சின் மிக ஆழமான அறிவுக் கூர்மையாகும். தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்திற்கும் அதற்கு வெளியே இருக்கும் களத்திற்கும் இடையிலான எல்லை எப்போதும் வெளி நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. (அதாவது, தடையற்ற சரக்கு பரிவர்த்தனை நிகழும் பரப்பின் எல்லை விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது-மொர்). ஆனால், இந்த எல்லை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், பின்னர் அதை வெளி நோக்கி தள்ளுவது சட்டத்தை மீறுவதாகிவிடும். அதாவது, அது ஊழலாகிவிடுகின்றது. புதிய தாராளமய சகாப்தத்திற்கு முன்னர், அதாவது 'லைசன்ஸ்-கோட்டா-பெர்மிட் ராஜ்' என்றழைக்கப்பட்ட முறை இருந்த காலத்தில் அத்தகைய ஒரு எல்லை வெளிப்படையான வகையில் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டது. இது ஊழலுக்கு ஒரு சுலபமான விளக்கத்தை அளித்தது (இந்த எல்லை தவறாகவும், தன்னிச்சையாகவும் நிர்ணயிக்கப்பட்டது என்கிற வாதத்தின் அடிப்படையில்); மற்றும் புதிய தாராளமய சீர்திருத்தங்கள் மூலம் இந்த எல்லையை வெளியே தள்ளினால் ஊழல் மறைந்து விடும்; அல்லது குறைந்தபட்சம் குறைந்துவிடும் என்கிற ஒரு தோற்றத்தையும் உண்டாக்கியது.

இரண்டு கண்கூடான விஷயங்களை இந்த வாதம் தவறவிட்டுவிட்டது. முதலாவதாக, இந்த எல்லையை நாம் எவ்வளவு தூரம் வெளி நோக்கி தள்ளினாலும், சட்டபூர்வமான எல்லை ஒன்று எப்போதும் இருக்க வேண்டும்; ஏனெனில், அனைத்துமே விற்பனைக்கு உரிய ஒரு சமுதாயத்தை கற்பனையே செய்து பார்க்க முடியாது (தேர்வு முடிவுகள் ஒரு சரக்காக ஆகிவிட்டால் என்ன நிகழும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்); அத்தகைய ஒரு சட்டபூர்வமான எல்லை இருந்தாலும் கூட, முதலாளித்துவத்தின் உள்ளியல்பாக இருக்கும் அதை வெளி நோக்கி தள்ளுகிற போக்கு ஊழலை உற்பத்தி செய்யும். இரண்டாவதாக, இந்த சட்டபூர்வ எல்லைக் கோடு எந்த அளவு ஆற்றலுடன் வெளிநோக்கித் தள்ளப்படுகின்றது என்பது பணம் பண்ணுவது எந்த அளவிற்கு மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகின்றதோ அதைப் பொருத்தே அமைகின்றது. அதாவது முதலாளித்துவ விழுமியங்கள் எந்த அளவிற்குப் பரவியிருக்கின்றது என்பதைப் பொருத்தே அமைகின்றது. புதிய தாராளமயச் சீர்திருத்தங்கள் அத்தகைய விழுமியங்களை எங்கும் ஊடுருவிப் பரவச் செய்துவிட்டன; நம்முடைய பொது வாழ்வில் ஊழல் எந்த அளவு சக்தியுடன் நுழைகின்றதோ அந்த சக்தி அதற்கேற்ற அளவு பெருகியுள்ளது. தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்தின் சட்டபூர்வ எல்லையை அமல்படுத்தும் இறுதிப் பொறுப்பு எப்போதுமே அரசின் அரசியல் ஊழியர்களிடம் இருப்பதால், முதலாளித்துவ தர்க்க நியாயம் முதலாளித்துவ அரசியல் வர்க்கத்தவர்களை ஊழல் செய்பவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக ஆக்குகின்றது.

ஊழலை சட்டபூர்வமானதாக ஆக்குவதன் மூலம் அதை ஒழித்துவிடலாம் என்கிற கருத்து பிழையானதாகும். தார்மீக ரீதியாக மட்டுமின்றி பகுத்தாயும் அறிவு ரீதியாகவும்; ஏனெனில், தடையற்ற சரக்கு பரிவர்த்தனைப் பரப்பிற்கு ஒரு எல்லை எப்போதுமே இருக்க வேண்டும்; முதலாளித்துவ விழுமியங்கள் எங்கும் பரவியிருக்கும் ஒரு உலகில் அப்போதும் கூட அது ஊழலை உற்பத்தி செய்யும்: எடுத்துக் காட்டாக, மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கான இடம் ஒரு சரக்காக ஆக்கப்பட்டு, அதிக விலை கொடுப்பவருக்கு விற்கப்பட்டாலும் கூட, அது மருத்துவக் கல்லூரிகளில் ஊழலை முடிவிற்குக் கொண்டு வந்து விடாது; ஏனெனில், அப்போது தேர்வு முடிவுகள் திருட்டுத்தனமாக வாங்கி விற்கப்படும். லோக்பால் சட்டம் கொண்டு வந்துவிட்டால் போதும் ஊழல் ஒழிந்து விடும் என்கிற எண்ணம் பிழையானது; எங்கும் முதலாளித்துவ விழுமியங்கள் பரவியிருக்கும் ஒரு உலகில் லோக்பால் அலுவலகமே ஊழலின் உறைவிடமாக ஆகிவிடும். ஒரு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி சமீபத்தில் விளக்கியது போல், பணி ஓய்வுப் புகலிடங்களுக்கான ஆசையில் (அவற்றை அளிப்பது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உரியது) பணியிலிருக்கும் நீதிபதிகள் அரசாங்கத்திற்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்குவதன் மூலம் அதன் தயவைப் பெற முயற்சிக்கின்றனர்.

எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஊழலின் அளவை மாற்ற முடியாது என்பதோ, அதை எப்போதும் குறைக்க முடியாது என்பதோ விஷயமல்ல. நமது தற்போதைய பொருளாதார பாதையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பணம் பண்ணுவதற்கான பேராவல், வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் சரக்குமயமாக்கலின் ஊடுருவல் ஆகியவை எங்கும் ஊடுருவிப் பரவிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ விழுமியங்கள் பற்றிய விவாதம் முழுவதையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்பதுதான் விஷயம்; அதனிடத்தில் அனைத்து வகையான சுலபமான உடனடித் தீர்வுகளும் சாமியார்களாலும், தங்களைத் தாங்களே ரட்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களாலும் தேசத்தின் தொண்டைக் குழிக்குள் திணிக்க முயற்சிக்கப்படுகின்றது; சந்தர்ப்பவாத அரசியல் வர்க்கம் ஜனநாயகத்திற்குக் கேடான வகையில் அவர்களது செயல்களுக்குப் பணிந்து போகின்றது.

ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சாமியார்கள், துறவிகள், ரட்சகர்கள் உள்பட அனைவருக்குமே தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து கருத்துக்கள் சொல்வதற்கும் அவற்றுக்காகப் போராடுவதற்கும் நிச்சயமாக உரிமை உண்டு. ஆனால், இரண்டு எச்சரிக்கைகள் அவசியம். முதலாவதாக, ஒரு தனிநபர் தனக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்கு பரிகாரம் பெறுவதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினால் அதில் நியாயம் உண்டு என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றபோதிலும், ஒரு ஜனநாயக சமுதாயத்தில் குறிப்பிட்ட பொதுக் கொள்கைகளைக் கோருகிற விஷயத்தில் அது ஒரு முறையான போராட்ட ஆயுதமல்ல; ஏனெனில், ஜனநாயக சமுதாயத்தில் அத்தகைய கொள்கைகளை தீர்மானிப்பதற்கு அரசியல் சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட வகையான பொதுக் கொள்கைகளைக் கோருவது போன்ற ஒரு அரசியல் நோக்கத்திற்கான அணி திரட்டல் அரசியலற்ற பற்றுகளின் அடிப்படையில் செய்யப்பட முடியாது. மத, ஆன்மீக அல்லது மற்ற காரணங்களுக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் ஒருவர் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை அரசியல் கோரிக்கைளுக்காக அணிதிரட்டினார் என்றால் அது மதச்சார்பற்ற அரசியலை சீர்குலைக்கும் வேலையாகும். அத்தகைய ஒரு நபரை தாஜா செய்யும் ஒரு அரசாங்கம் அந்த சீர்குலைவு வேலைக்குத் துணை போகின்றது.

அத்தகைய ஒரு சீர்குலைவு அபாயம் சமகால இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிகழ்வுகள் மற்ற சாமியார்களும், பாபாக்களும் தங்களது சொந்த கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு களமிறங்குவதற்கான துணிச்சலை அளிக்கும். அந்த கோரிக்கைகள் எவ்வளவு நல்லவை போல் தெரிந்த போதிலும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் நமது மிகப் பெரிய சாதனைகளான நமது ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் அத்தகைய போக்கு மெல்ல மெல்ல அழித்துவிடும்.

பிரபாத் பட்நாயக்

நீயூஸ்கிளிக் (newsclick.in) 4.6.11

தமிழில்: அசோகன் முத்துசாமி

எ ன்ன படிக்கலாம்?- எங்கு படிக்கலாம்?கடல் மற்றும் கப்பல் துறை சார்ந்த படிப்புகள்....




fg;gy; Jiw gphpTfs;
fg;giyg; nghWj;jtiu %d;W gphpTfs; cs;sd. xd;W nlf;> ,uz;lhtJ vQ;rpd;> %d;whtjhf rYhd; (rikay; gphpT) nlf; gphptpy; Nghf;Ftuj;J> ruf;F ifahSjy;> guhkhpg;G Nghd;witfs; mlq;Fk;. ,d;[pd; gphpT ,Q;rpdpd; ,af;fj;ijAk; Nfl;lhpq; gphpT rikaiyAk; ftdpj;Jf; nfhs;Sk; gphpthFk;. ,k;%d;W gphpTk; rpwg;ghf nray;gLk; fg;gy;fs; kpfr; rpwe;jitahf ,Uf;Fk;.

fg;gy; khYkpahf Nru tpUk;Ggth;fSf;F iluf;lNul; Mg; \pg;gpq;> ,e;jpa fg;gy; mikr;rfj; Jiwapd; xg;GjNyhL gapw;rp mspf;fg;gLfpwJ. ,e;epWtdj;jpy; ehd;F khj gapw;rp nfhz;l nghJg;gilahd GJKf tFg;gpw;Fk;> rikay; gphptpw;Fk; (Saloon) Fiwe;jJ 10k; tFg;G Kbj;jtuhf ,Uj;jy; Ntz;Lk;. taJ 17.5 Kjy; 21 taJ epuk;gpatuhf ,Uf;f Ntz;Lk;. ,g;gapw;rp Kbe;jTld; ,e;jpa CDC Tld; ,e;jpa fg;gy; mikr;rfk; rhd;wpjio toq;Fk;. ,jd; %yk; ve;j fg;gy; fk;ngdpapYk; gzpahw;wyhk;.

NkYk; ,jpy; mjpfhhpahfNth> ,d;[pdpauhfNth Mf tpUk;Ggth;fs; ,e;jpa murhq;fj;jpd; nkh;f;fd;ily; bghh;l;nkd;l; elj;Jk; Njh;tpid vOJtjd; %ykhf me;j ,yl;rpaj;ij Rygkhf mila KbAk;. nlf;Nfl; kw;Wk; kiud; ,d;[pdpahpq; gapw;rp ngWgth;fs; epr;rakhf mjpfhhpahfNth ,d;[pdpauhfNth cUthfyhk;.
fy;tpj;jFjp
,g;gapw;rpapy; Nru 12k; tFg;G gbj;jpUf;f Ntz;Lk;. 60 rjtPj kjpg;ngz;fSf;F Nky; ngw;wpUf;f Ntz;Lk;. taJ tuk;G 20 ,Uf;f Ntz;Lk;. gp.v];.rp (B.Sc.,)gbj;jpUe;jhy; 55 rjtPj kjpg;ngz;fSk; taJ 22f;Fs;shf ,Uf;f Ntz;Lk;. my;yJ B.E., / B.Tech

Kbj;jpUg;gth;fs; 24 taJ nfhz;lth;fshf ,Uf;f Ntz;Lk;. ,jd; Kjd;ik gapw;rp fhyk; 3.5 khjq;fshFk;. ,g;gapw;rpfs; %yk; fg;gy; mjpfhhp MfTk; mjd; gpwF Njh;T vOJtjd; %yk; gbg;gbahd gjtp cah;itg; ngwyhk;. fg;gy; ,d;[pdpahpq; Jiwapy; gapy;gth;fs; fg;gypy; ,d;[pdpauhf gzpahw;w KbAk;. ,g;gapw;rpapy; Nru tpUk;Ggth;fs; nkf;fhdpfy;> kiud; vyf;bhpf;fy;> \pg; gpy;bq; bg;sNkh gbg;gpy; Fiwe;jJ ,Wjp Mz;by; 50 rjtPj kjpg;ngz;fs; ngw;wtuhf ,Uj;jy; Ntz;Lk;. taJ 22f;F Fiwthf ,Uf;f Ntz;Lk;.
Nkw;fz;l nlf;Nfl; gapw;rpapy; Nru tpUk;Ggth;fs; 10k; tFg;G> 12k; tFg;G gl;lk; bg;sNkh VjhtJ xd;wpy; Mq;fpyj;jpy; 50 rjtPjk; kjpg;ngz; ngw;wpUf;f Ntz;Lk;. khzth;fs; cly; jFjp FiwghL ,y;yhjth;fshfTk; fz; ghh;it 6:6 vd;w mstpy; fz;zhb mzpahjth;fshfTk; tz;zq;fis Jy;ypakhf mwpe;J nfhs;Sk; jpwk;gilj;jth;fshfTk; ,Uf;f Ntz;Lk;. ,d;[pdpahpq; Jiwapy; Nru tpUk;Ggth;fs; cly;eyj; jFjpNahL $l 10> 12> bg;skh VjhtJ xd;wpy; Mq;fpyj;jpy; 50 rjtPj kjpg;ngz;fs; ngw;wpUj;jy; Ntz;Lk;. fz; fz;zhb mzpgtuhf ,Ue;jhy; fz;zhb g;s]; ig ikd]; 2.5f;F cs;gl;l rf;jpahf ,Uj;jy; mtrpak;.
vq;Nf Nruyhk;
,g;gapw;rpapy; Nru rpwe;j gapw;rpapid ahh; mspg;ghh; vd;W ePq;fs; rpe;jpg;gJ GhpfpwJ. cq;fsJ Nfs;tpf;fhd gjpiy nrd;id SAMS epWtdk; jUfpwJ. Southern Academy of Maritime Studies Pvt. Ltd. (SAMS) vd;gJ D.G.\pg;gpq; mg;&t;L epWtdk;> jw;nghOJ fg;gy; fy;tpapy; Kjd;ikahf tpsq;FfpwJ kw;Wk; ISO 9002-2 rhd;wpjo; ngw;Ws;sJ. Det Norske Veritas Norway Tld; $l;lhf ,ize;J nray;gLfpwJ.

tpguq;fSf;F :
rjh;d; mfhlkp m/g; nkhpbk; ];lB];
gp.ypl;. vz; 110> fpof;F khjh rh;r; njU
uhaGuk; nrd;id - 600 013
njhiyNgrp 25900558> 25900563> 25902674
njhiyefy; 2590
nkhigy; 0-98410-37738> 31042100> 31037933

e-mail:samstudy@vsnl.com

குர்ஆன் பவர் பாய்ன்ட்வடிவில் ஓசை மற்றும் எழுத்து வடிவில்

கீழே இணைத்துள்ள குரான் பவர் பாய்ண்டில் குரானை வசிக்காவும் அதேசமயம் ஆடியோ வடிவில் கேட்கலாம் ஒருமுறை பதிவிறக்கம் செய்து உங்களின் கணினியில் நிறுவிக்கொண்டால் மீண்டும் கேட்க்க ஓத இணைய இணைப்பு தேவையில்லை

மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக பிடி ஆணை-arrest warrant

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை (arresst warrant)பிறப்பித்துள்ளது.


அறக்கட்டளை ஒன்றுக்காக வெளிநாடுகளில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

எனவே, அவர்களுக்கு எதிராகப் பிடி ஆணைப் பிறப்பித்து (arrest warrant) நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.

பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

பாபா ராம்தேவுக்கு இருக்கும் யோக பலத்தை கொண்டு ஒரு 10 மாதத்திற்காவது உண்ணாவிரத்தை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார்.


நுனி நாக்கை உள்நோக்கி வளைத்து சிறுநாக்கையும் அதைச் சுற்றி மேலண்ணத்தில் இருக்கும் நெகிழ்வான பகுதிகளையும் அழுத்துமாறு வைத்துக் கொண்டு மூச்சை சீராக இழுத்து விடுவதற்கு ஹட யோகத்தில் கேச்சரி முத்திரை என்று பெயர். இப்படிச் செய்வதால், ப்ராணன் இடது மற்றும் பிங்கள நாடியிலிருந்து அகன்று சுஷூம்னா நாடியில் நிலை கொள்ளுமாம். இதனால் ஒரு மனிதனுக்கு பசியே உண்டாகாமல் தடுத்து விட முடியுமாம். பதறாதீர்கள் நண்பர்களே. இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை – யோக சாஸ்திரம் தான் சொல்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் ஒரு நாட்டில் இது போன்ற ஆன்மீக சரடுகளையெல்லாம் பெரும்பாலானோர் நம்பப் போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால்,

இதையெல்லாம் நம்மை நம்பச் சொன்னதோடு அதையே மூலதனமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ள ஒருவருவருக்கு மேற்படி யோக டெக்னிக் ஒர்க்அவுட் ஆகாமல் காலைவாரி விட்ட சோகக் கதையை இனி பார்ப்போம்.

ஜூன் நான்காம் தேதி பாபா ராம்தேவ் கருப்புப் பணத்தையும் ஊழலையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது எப்படியும் இந்தாளுக்கு இருக்கும் யோக பலத்தின் அடிப்படையில் ஒரு பத்து மாதத்திற்காவது இந்த டிராமாவை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார். இந்த இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறார் அல்லவா?

பல ஆண்டுகளாக ராம்தேவ் செய்து வந்த யோகாப்பியாசங்கள் வழங்கிய உடல் உறுதியைக் காட்டிலும் அந்தச் சாதாரணப் பெண்ணின் மனவுறுதி வலிமையானது என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆக, போராட்ட உறுதியையும் கொள்கைப் பிடிப்பையும் உறுதி செய்வது வெறும் உடல் வன்மையல்ல – அது ஒருவன் ஏற்றுக் கொண்ட நேர்மையான அரசியலும் அதற்கு விசுவாசமாக நிற்கும் மனத்தின்மையும் தான் என்பது இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த யோகப் போராளி தினமும் பாலும், தேனும் அடித்து விட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருந்தும் ஒரு வாரத்திற்கு மேல் அண்ணாத்தேவின் உதார் விரதம் தாக்குப்பிடிக்கவில்லை.

போகட்டும். அண்ணா ஹசாரேவுக்கு மதிப்புக் கொடுத்த காங்கிரசும் அவரை ஒரு நாயகன் போல ஏற்றிப் போற்றிய முதலாளித்துவ ஊடகங்களும் பாபா ராம்தேவைக் கைவிட்டதன் தவிர்க்கவியலாத விளைவு தான் இப்போது அவரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.

அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு நாடெங்கும் குறைந்த பட்சமாகத் திரண்ட நடுத்தரவர்க்க மக்கள் திரளின் பின்னே இருந்தது, வலுவானதொரு என்.ஜி.ஓ வலைப்பின்னல் மற்றும் ஊடகங்கள். என்.ஜி.ஓவின் ஆன்மாவே அதன் அரசியலற்ற தன்மையும் மக்களை அரசியல் ஓட்டாண்டிகளாக்கிக் காயடிக்கும் துரோகத்தனமான செயல்திட்டமும் தான். இதனால் கீழ்மட்ட அளவில் ஊடுறுவ முடிந்த காவி கும்பலால் மேல்மட்ட அளவில் ஊடுறுவி ஓரளவுக்கு மேல் ஆதாயம் அடைய முடியவில்லை. மோடியை ஆதரித்த அண்ணா ஹசாரே கூட ஒரு கட்டத்தில் அதைப் பற்றிய விமர்சனம் வந்த போது சுதாரித்துக் கொண்டார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க் கொண்டிருக்கும் ஆங்கில ஊடகங்களுக்கும் அண்ணாவை மெனக்கெட்டு ஆதரிப்பதில் ஆதாயம் இருந்தது. வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் விளைவாய் அவர்களிடையே எழுந்திருந்த இயல்பான ஆத்திரத்திற்கும் ஆவேசத்திற்கும் ஒரு வடிகாலாய் அண்ணாவை முன்னிறுத்தி டி.ஆர்.பியை உயர்த்தி நன்றாகக் கல்லா கட்டிக் கொண்டார்கள்.

ஆனால், பாபா ராம்தேவின் கதையே வேறு. இவரைப் பின்னின்று இயக்கியது புகழ் போதையும் காவி கும்பலும் தான். இவரை ஆதரித்தால் தமது சந்தையான அரசியலற்ற மொக்கைக் கூட்டத்தில் பிளவு உண்டாகிவிடும் என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் அறிந்து இருந்ததாலேயே தெளிவாகக் கைகழுவி விட்டனர். ராம்தேவ் தில்லியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் டைம்ஸ் நௌவின் ‘நியூஸ் ஹவர்’ நிகழ்ச்சியைத் துவக்கிய அம்பி அர்னாப் கோஸ்வாமி, அந்நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார் – “அண்ணா ஹசாரேவை நாம் ஆதரித்தோம். ஏனெனில் அவர் அரசியல் சார்பற்றவராயிருந்தார். அவருக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கிறது”

அண்ணா ஹசாரே அரசியலற்ற மொக்கை என்பதால் தான் அவரால் ஊழலைப் பற்றி பேச முடிந்த அளவுக்கு அதன் அடிப்படையாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி பேசமுடியவில்லை. அவரது அரசியல் ஓட்டாண்டித்தனம் தான் ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே ஊழல் கறை படிந்து ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் ஊரே காறித் துப்பிய டைம்ஸ் குழுமத்தோடும் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ பர்காதத்தின் என்.டி.டிவியோடும் ஒட்டி உறவாட வைத்தது. இதோடு சேர்த்து, ஹரித்வாரில் இருந்து ராம்தேவை நேரடி ஒளிபரப்பு செய்வதெல்லாம் செலவு பிடிக்கும் காரியம். போட்ட துட்டுக்கும் வரும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்கும் எப்படி கட்டுபடியாகும்? எனவே அண்ணாவை ஏற்றிப் போற்றிய ஊடகங்கள் ராம்தேவை லூசில் விட்டுவிட்டார்கள்.

இந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொண்ட காங்கிரசு, முடிந்தவரை அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ராம்தேவை தில்லியிலிருந்து விரட்டியடித்த உடனேயே தனது ரத கஜ துரகாதிபதிகளை களமிறக்கிய காங்கிரசு, தொடர்ச்சியாக ராம்தேவை ஊடகங்களில் தாக்கி வந்தது. இதற்கிடையே ராம்தேவின் கும்பலை வேடிக்கை பார்க்கச் சென்ற பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் போட்ட தேசபக்தி குத்தாட்டத்தையும் காங்கிரசு சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் மெழுகுவர்த்திப் போராளிகள் ராம் லீலா மைதானத்தில் காங்கிரசு காட்டிய பூச்சாண்டிகளுக்குப் பயந்து மொத்தமாக பதுங்கிக் கொண்டனர். பாபா ராம்தேவ் வேறு சூழ்நிலை புரியாமல் போலீசை எதிர்த்து சண்டை போட 11,000 பேர் கொண்ட ஒரு ஆயுதப் படையை அமைக்கப் போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 பேர் பயிற்சி பெற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சும்மா ‘பே’ என்றாலே காலோடு மூத்திரம் போகும் தைரியசாலிகளான மெழுவர்த்தி வீரர்கள் முதல் வேலையாக வாங்கிய மெழுகுவர்த்தியை ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். பின்னே, போராட்டம் என்றால் பேஷன் பெரேடு என்று நினைத்தவர்களிடம் போய் சண்டை, ஆயுதம் என்று பேசினால் வேறென்ன நடக்கும்?

ஒருவழியாக ராம்தேவைச் சுற்றி எல்லா கதவுகளும் அடைபட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவருக்குக் கைகொடுக்க டபுள் ஸ்ரீ முன்வந்தார். நேற்று ராம்தேவைச் சந்தித்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவைக் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ராம்தேவ், தனது சத்தியாகிரகம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இத்தனைக்கும் கடந்த பத்துநாட்களாக அவர் நடத்திய டிராமாவை காங்கிரசு மதித்து எந்த உத்திரவாதத்தையும் அளிக்காத நிலையிலும் இனிமேலும் மேற்படி நாடகத்தைத் தொடர்ந்தால் தான் இத்தனை ஆண்டுகளாக மக்களின் தலையில் மிளகாய் அரைத்து சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு அனுபவிக்காமல் போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அஞ்சியே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.

ராம்தேவ் தில்லி வந்தபோது அவரை வரவேற்க நான்கு அமைச்சர்களையும் பின்னர் விரட்டியடிக்க நானூறு போலீசையும் ஏவிவிட்ட காங்கிரசு கும்பல் அவரை இப்போது எதிர்ப்பதற்கும் ஜனநாயக சக்திகள் ராம்தேவை எதிர்ப்பதற்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இவர்கள் ஊழலின் ஊற்று மூலத்தை ஆதரித்துக் கொண்டே ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் துரோகத்தனத்தையும், இந்த கும்பலின் பின்னேயுள்ள ஜனநாயகமற்ற தன்மையையும், அதன் நீட்சியாய் ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலின் புகலிடமாக இந்தப் போராட்டங்கள் மாறுவதையும் அடிப்படையாய்க் கொண்டே இந்தப் ‘போராட்டங்களை’ விமரிசிக்கிறோம்.

இனி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அக்கறை உள்ள மக்களுக்கு, ஊழலின் அடிப்படையாய் இருக்கும் அரசியலை எதிர்த்துப் போராடி முறியடிப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதற்கு இப்போது நடந்து வரும் கூத்துகளே துலக்கமான நிரூபணமாய் இருக்கிறது. இனிமேலும் இத்தகைய கைப்புள்ளகைகளின் பின்னே திரளும் காரியவாத அப்பாவிகள் திருந்தினால் அதுவே ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்குச் செய்யப்படும் பேருதவியாக இருக்கும்!
vinavu