தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி

கோவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு

சமுதாய கோரிக்கையை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு  5% இடஒதுக்கீடு  தரும் கூட்டணிக்கே ஆதரவு என்று TNTJ அறிவித்த பொதுக்குழு முடிவை ஆதரிக்கிறோம்.
சமூக சிந்தனையுடன், சமுதாய முன்னேற்றத்துக்காக TNTJ எடுக்கும் மார்க்க மற்றும் அரசியல் முடிவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரிப்போம்.

அதிஷ்டத்தை நம்பாமல், உழைப்பையும், திறமையையும் நம்புங்கள்.

அதிஷ்டத்தை நம்பாமல், உழைப்பையும், திறமையையும் நம்புங்கள்.( தேர்வு நேர ஆலோசனை 2)

குறிப்பாக பிளஸ் 2 மாணவர்கள் தங்களது உயர்கல்வி வாய்ப்பை பிரகாசமானதாக்க மிகுந்த ஆர்வமுடன் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிப்பதற்கான சிரத்தையில் ஈடுபட்டுருப்பதை உணரமுடிகிறது.
முறையான திட்டமிடல் மற்றும் ஆர்வத்துடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வுக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதையும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் எளியமுறையில் விளக்குகிறார் கோபாலபுரம் டி.ஏ.வி.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், ஆர்.எம்.கே., குழும பள்ளிகளின் சீனியர் முதல்வருமான டாக்டர் சி.சதீஷ். இவரது மாணவர்கள் தேசிய, மாநில அளவிலான ரேங்க் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அனைத்து மாணவர்களும் தங்களால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்று நம்புங்கள். தற்போது பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருப்பதால் புதியதாக ஒரு பாடப் பகுதியை படிப்பதை தவிர்ப்பது நல்லது. இது வரை படித்த பாடங்களை 'ரிவ்யூ ' செய்ய வேண்டும்.  அதாவது ஒரு பாடத்தில் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை வேகமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் உட்பட அனைத்து விதமான கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்க இம்முறை உதவும்.
அனைத்து பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள் தெரிகிறதா என்று மாணவர்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர்கள் அறிவுறுத்திய முக்கியமான கேள்விகளையும், கேள்விகள் வேறு எந்தவகையில் கேட்கப்பட சாத்தியம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வினா வங்கி புத்தகத்தையும் பயன்படுத்தலாம். மேலும் கடந்த ஐந்து அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் வைத்து, அவற்றிற்கான பதில்களை மனதிற்குள்ளேயே சொல்லிப்பார்க்க வேண்டும்.
எந்த கேள்விகள் கடினமாக உணரப்படுகிறதோ, அதற்கான பதில்களை கண்டிப்பாக எழுதிப்பார்க்க வேண்டும். அதேபோல், படிப்பதை எளிதில் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத மாணவர்களும் எழுதிப்பார்ப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இதுதவிர, மாணவர்கள் தங்களுக்கே ஒரு சுயதேர்வு (டெஸ்ட்) வைத்து எழுதிப் பார்க்க வேண்டும். இதன்மூலம் மனதில் அந்த பதில்கள் நன்கு பதியும். தேர்வில் முழு மதிப்பெண்களை எடுக்க விரும்பும் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் தெளிவாக படித்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
தேர்வு காலங்களில் படிப்புடன், உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் அனைத்திற்குமே அடிப்படை ஆரோக்கியம் தான். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பசியுடன் படிக்க வேண்டாம். அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். முக்கியமாக எண்ணெய் பொருட்கள், 'ஜங்க்' உணவுகளை தவிர்க்கவும். தூக்கம் குறைந்தாலும் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, குறைந்தது 6.00 மணிநேரம் உறங்க வேண்டும். தேர்வு நடைபெறும் காலங்களில் 7 மணிநேரம் உறங்குவது அவசியம்.
படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியம். வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள ஒரு தனி அறையில் படிப்பது நல்லது. இல்லாவிட்டாலும், தொந்தரவு இல்லாத இடமாக இல்லாமல் இருந்தால் கூட போதுமானது. ஏனெனில் ஏற்ற சுற்றுப்புற சூழ்நிலை உங்கள் கவனத்தை சிதறாமல், ஆழமான கற்றலுக்கு வழிவகுக்கும்.
படிக்கும்போது நேராக அமர்ந்து படிக்கவும். படுத்துக்கொண்டோ, சாய்வாகவோ, தொய்வாகவோ அமராதீர்கள். டிவி பார்த்துக்கொண்டே படிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தேர்வு நாட்களில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைப்பதும், நண்பர்களுடன் தேவையில்லாதவற்றை பற்றி பேசுவதையும் தவர்க்கவேண்டும். எதிர்மறையான எண்ணத்துடன் பேசுபவர்களிடம் இருந்து முற்றிலுமாக விலகி இருங்கள்.
பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு 1.30 மணிநேரத்திற்கு ஒருமுறை 30 நிமிடம் இடைவெளி விட்டு படிக்கலாம். அந்த 30 நிமிடங்களில் பிடித்த விளையாட்டை விளையாடலாம். தேர்வுக்கு முதல் நாளே தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், அமைதியாகவும், பதட்டமின்றியும் இருக்க வேண்டும். தங்களுக்கான இடத்தில் அமர்ந்த பிறகு, ஐந்து நிமிடம் பிராணயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யவேண்டும். இது தேர்வு பயத்தையும், பதட்டத்தையும் குறைக்கும்.
கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை ஒருமுறை கவனமாக படித்துப்பார்க்க வேண்டும். விடைத்தாளை வாங்கியதும் அதில் நிரப்ப வேண்டிய கட்டங்களை கவனமாக நிரப்ப வேண்டும். தேர்வு எழுதும் போது முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதிலெழுதி, பின்னர் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அதில் தவறேதும் இல்லை. இதனால் மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டது. கையெழுத்தை முடிந்தளவு தெளிவாக புரியும்படி எழுத வேண்டும். அதற்காக கையெழுத்தை சீர்செய்வதில் நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கும்படி திட்டமிட்டு எழுத வேண்டும். ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தேர்வு நேரத்திற்கு முன்பே எழுதி முடித்தால், எழுதியவற்றை சரிபார்க்கவும். அதில் தவறுகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அந்த இடத்தை அடித்துவிட்டு சரியான பதிலை தெளிவாக எழுதவும். தேர்வு நேரம் முடிவடையும் முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியேற வேண்டாம். தேர்வுக்கு முன்பாக அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்தல் நல்லது. விடைத்தாளை இறுதியாக கொடுப்பதற்கு முன்பாக, உங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக விடைத்தாளில் எழுதியுள்ளீர்களா? என்பதை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
மாணவர்கள் தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்க கூடாது. எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும். அதிஷ்டத்தை நம்பாமல், உழைப்பையும், திறமையையும் நம்புங்கள். அதிக மதிப்பெண்களை குவிக்க முடியும்

வியாழன்

கண் எவ்வாறு இயங்குகிறது? (படம் இணைப்பு)

Subsequent condition with post-traumatic cataract



வண்ணங்களைக் காண்பது எப்படி

Cutaway of eye (details shown in image below)
. Picture showing details of how we see color

வண்ணக் குறைபாடு

Picture showing details of how we see color

கண் காயங்களும் அதன் அறிகுறிகளும்

பெரும்பான்மையான விளையாட்டு சம்பந்தப்பட்ட காயங்கள், மன அதிர்ச்சி விளைவிக்கின்றன. காயம் ஏற்படுத்தும் பொருளின் அளவு, வேகம், கனம் ஆகியவற்றைப் பொறுத்து, கண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அளவிடப்படுகிறது. இவற்றுள் சில - கண்குழி முறிவு, கண்குழி மற்றும் கண் இமை நசிவு, கருவிழியில் காயம், கருவிழி அதிர்வு, ரெடினாவில் ரத்தப்போக்கு, ரெடினாவில் பிரிவு, கண்ணீர், கண் நரம்பு பாதிப்பு ஆகியவை. கண்குழி முறிவின் அறிகுறிகள் - வீக்கம், ஊமைக்காயம், கண்களை அசைக்கும் போது ஏற்படும் வலி, சாதாரணமாக இரு உருவங்களாகத் தோன்றும் உருவம் - ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்கும் போது சரியாகத் தோன்றுவது, மூக்கு சிந்தும் போது கண் இமை வீங்குவது ஆகியவை. கருவிழியில் ஏற்படும் காயத்தின் அறிகுறிகள் - பெருத்த வலி, கட்டுக்கடங்காத கண்ணீர் மற்றும் வெளிச்சத்தில் கண் கூசுதல் ஆகியவை. கண் நரம்பு பாதிக்கப்பட்டால், உடனடியாக கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ரெடினாவில் ஏற்படும் பிரிவின் அறிகுறிகள் - கண் பார்வையில் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ சிறிய புள்ளிகள் அல்லது வலைகள் தோன்றுவது, கண்களில் திடீரெனத் மின்னல் தோன்றுவது போன்ற பிரமை, மற்றும் கண்பார்வையை மறைக்கும் திரை.


.

Eye with Hyphaema (blood clot in anterior chamber)Right iridodialysis from blunt trauma
Eye with Hyphaema (blood clot in anterior chamber) Right iridodialysis from blunt trauma
hemorrhage from blunt trauma
Blunt trauma from a paintball
Normal (pre-shooting) conditionCondition at time of shooting
Normal (pre-shooting) condition Condition at time of shooting
Subsequent condition with post-traumatic cataractCondition following lens replacement
Condition following lens replacement
Post accident condition
Post accident condition

மின்மினிகள்



மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.

தமிழகம் கண்ட தர்ஜுமா புரட்சி

தமிழகத்தில் நம்முடைய தவ்ஹீது பிரச்சாரம் தோன்றிய மாத்திரத்தில் தவ்ஹீது ஜமாஅத் ஆலிம்கள் மக்களிடம் வைத்த அன்பான வேண்டுகோள், 'திருக்குர்ஆனைப் படியுங்கள்' என்பது தான். திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள் என்று மக்களிடம் திரும்பத் திரும்பக் கூறினோம். 

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற வேண்டுகோளைத் தாங்கிய ஸ்டிக்கர்களை தங்கள் வீட்டுக் கதவுகளிலும், வாகனங்களிலும் கொள்கைவாதிகள் ஒட்டினர்.

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற நம்முடைய வேண்டுகோள் மக்களிடம் தீயாய் பரவியது. மக்கள் சாரை சாரையாக திருக்குர்ஆன் தர்ஜுமாக்களை வாங்க ஆரம்பித்தனர்.


உடனே இந்த ஆலிம்கள், குர்ஆன் விளங்காது என்று கோரஸ் பாட ஆரம்பித்தனர்; கூப்பாடு போட்டனர்; குருட்டுச் சிந்தனையைப் பரப்பினர்; கூக்குரல் எழுப்பினர்.


குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வ வெள்ளம், இந்த உலமாக்களின் குறுக்குச் சுவர்களைத் தகர்த்தெறிந்தது. புத்தகச் சந்தையில் ஒரு புது சகாப்தம் பூத்தது. தர்ஜுமா விற்பனை சாதனை படைத்து, விண்ணைத் தொட்டது.


இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். பி.ஜே. தர்ஜுமா வெளியீட்டுக்கு முன்பு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தர்ஜுமா, ஜான் டிரஸ்ட் வெளியீடாகும். அதனால் மக்கள் ஜான் டிரஸ்ட் தர்ஜுமாக்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். அதன் விற்பனையில், பதிப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்போம்.


1983ம் ஆண்டு 5000 பதிப்புகள் அச்சிட்டு, தனது பணியைத் துவக்கிய ஜான் டிரஸ்ட் நிறுவனம், இரண்டாவது பதிப்பு    5,000 மூன்றாவது பதிப்பு    10,000நான்காம் பதிப்பு    10,000  ஐந்தாம் பதிப்பு    10,000  ஆறாம் பதிப்பு    13,000  ஏழாம் பதிப்பு    10,000  எட்டாம் பதிப்பு 20,000  ஒன்பதாம் பதிப்பு 20,000  பத்தாம் பதிப்பு 20,000  பதினோறாம் பதிப்பு 10,000  12ம் பதிப்பு 10,000  13ம் பதிப்பு 10,000   14ம் பதிப்பு 10,000 என 25 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விற்பனை செய்தது.


இப்படிப் புனிதக் குர்ஆனைப் புரட்டிப் பார்க்கும் ஒரு புரட்சிக் கூட்டம் புறப்பட்டது. இப்போது தான் ஆலிம்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு தர்ஜுமாவை சந்தையில் இறக்கினார்கள்.


கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் தமிழாக்கத்தில் 1992ல் ஒரு தர்ஜுமா வெளியிடப்பட்டது.


இந்த தர்ஜுமாவைத் தந்தவர்கள், பாமரனுக்குக் குர்ஆன் விளங்காது என்று பகிரங்கமாகப் பேசியவர்கள்; பேசுபவர்கள். குர்ஆன் மொழியாக்கத்திற்கு மக்களிடத்தில் பலத்த வரவேற்பு என்றவுடன் தற்போது புத்தகச் சந்தையில் இந்த தர்ஜுமாவைக் களமிறக்கியுள்ளனர். 2004ம் ஆண்டு திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது.


அப்போது மக்களுக்கு விளங்காமல் இருந்த குர்ஆன், தற்போது வியாபாரம் என்று வந்ததும் விளங்க ஆரம்பித்து விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


தவ்ஹீது ஜமாஅத் தடம் பதிப்பதற்கு முன்பு தமிழகத்தில் ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி (முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது அவர்களின் தந்தை) மொழியாக்கத்தில், தர்ஜுமத்துல் குர்ஆன் ஃபி அதபில் பயான் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. முதலில் அரபு மூலத்துடன் வெளிவந்தது. பிறகு அரபு மூலமின்றி இது வெளியிடப்பட்டது. பிறகு மீண்டும் அரபு மூலத்துடன் வெளிவந்தது. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.


குர்ஆனின் அரபி மூலத்துடன் உள்ள தர்ஜுமாவை, முஸ்லிமல்லாத மக்களிடம் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை தான்.


இருப்பினும், குர்ஆனை மூலத்துடன் வெளியிட வேண்டுமா? மூலமில்லாமல் வெளியிட வேண்டுமா? முஸ்லிமல்லாதவர் களுக்குக் கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? என்று மயிர் பிளக்கும் சர்ச்சைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு நல்ல தமிழ் நடையில் இந்தத் தமிழாக்கம் வெளிவந்தது.


இது வெளியாவதற்காக மறைந்த அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் சவூதியிலிருந்து நிதி பெற்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


அதன் பின்னர் தான் ஜான் டிரஸ்ட் சார்பில் அப்துல் வஹ்ஹாப் அவர்களால் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.


ஜான் டிரஸ்ட் நிர்வாகம் இந்த தர்ஜுமாவில் திருத்தம் செய்வதற்காக பி.ஜே., அப்துல் காதர் மதனீ ஆகியோரை நியமித்தது. அப்போது, திருக்குர்ஆனின் 3:7 வசனத்திற்குச் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பு கடும் ஆட்சேபணைக்கு உள்ளானது. பின்னர் மீண்டும் பழைய மொழி பெயர்ப்பின்படியே அந்த வசனம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக பி.ஜே. அவர்கள், 'முதஷாபிஹாத்' என்ற தொடரை அவரது சொந்தப் பத்திரிகையான அல்ஜன்னத்தில் எழுதினார்.


அல்குர்ஆன் மனிதர்களுக்காக அருளப்பட்டது; அதில் மனிதர்கள் யாருக்குமே விளங்காத வசனங்கள் எதுவும் இல்லை என்பதே அந்தத் தொடரின் சாராம்சம். இது தற்போது புதிய வடிவில் ஏகத்துவத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றது.


சங்கை மிக்க குர்ஆன்


இது ஒரு சவூதிய வெளியீடு. இலவசம் என்பது இதன் தனிச் சிறப்பு. எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய நடையைக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் குறைபாடு. முஸ்லிம்களுக்கே புரியாது எனும் போது முஸ்லிமல்லாதவர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக கிறித்தவர்களிடம் கொடுப்பதற்குத் துளியும் தகுதியில்லை. காரணம், இந்த தர்ஜுமாவின் தோற்றுவாயை எடுத்துப் படிக்கும் மாத்திரத்திலேயே அதை மூடி வைத்து விடுவர்.

எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக) (அது உன்) கோபத்திற் குள்ளானவர்கள(ளின் யூதர்களின் வழிய)ல்ல. அன்றியும் வழிகேடர்கள(ளின் கிறிஸ்தவர்களின் வழியும)ல்ல.

இவ்வாறு மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இதைப் படிக்கும் ஒரு கிறித்தவர் எப்படி இஸ்லாத்திற்கு வருவார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.


இவை அனைத்தும் தர்ஜுமாக்கள். தவ்ஹீது ஜமாஅத் தனது பயணத்தைத் தொடங்கும் போது தப்ஸீர்களும் வெளியாகியிருந்தன.


1. தப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்


இது 1958ல் வெளியானது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதர் பாகவி ஆலிம் அவர்கள் இதை எழுதினார்கள்.


ஆதாரமற்ற ஹதீஸ்கள், வரலாறுகள், அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளின் தொகுப்பாகவே இந்த தப்ஸீர் அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் நிலவிய தமிழ் நடைக்கொப்ப இது வெளியானது. இப்போது அந்த நடை மக்களுக்குப் புரியாது.


2. அன்வாருல் குர்ஆன்


இந்த தப்ஸீரும் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்களின் தப்ஸீரைப் போன்றது தான். எனினும் உள்ளடக்கத்தில் இது ஓரளவுக்கு வேறுபட்டுள்ளது. அந்த தப்ஸீரைப் போன்று பெருமளவில் கதைகள் இதில் இடம் பெறவில்லை. இதன் ஆசிரியர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான் இன்றைய தவ்ஹீது ஆலிம்கள் களத்தில் இறங்குவதற்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தவர்கள்.


தமிழகத்தில் உலமாக்கள் பொதுக் கூட்டங்களில் பேசிய ஹதீஸ்களில், மக்களை மவ்ட்டீகத்திற்கு இழுத்துச் செல்லும் படுபாதகமான, படுமோசமான ஹதீஸ்களை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் எடுத்துக் கூறிய போது, 'அந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள்' என்று ஆணித்தரமாக அடையாளம் காட்டினார்கள்.


இப்படிப்பட்ட அறிவு ஞானம் கொண்ட அவாகள், தமது தப்ஸீரிலும் ஹதீஸ் கலையின் தர வரிசைக்கு மாற்றமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள்.


மவ்லிதுகள், மீலாதுகள், கப்ரு வணக்கங்கள் போன்றவற்றில் மாறுபட்ட, அதாவது நாம் இன்று கொண்டிருக்கும் தவ்ஹீதுக் கருத்தைக் கொண்டதால் வஹ்ஹாபி என்ற முத்திரையை வாங்கிக் கொண்டவர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

3. தாவூத்ஷாவின் தப்ஸீர்

இதுவும் தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வருவதற்கு முன் நடமாடிக் கொண்டிருந்த ஒரு தப்ஸீராகும். இவருடைய தப்ஸீரில் காதியானி வாடை வீசும்.


குர்ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்துத் தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவுத் ஷாவின் கனவு. தமது இறுதிக் காலத்துக்குள் திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல்

உறுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதான போது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்தி விட்டு முழுமையாக குர்ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.

அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதையும் மீறி அவர் அச்சேற்றினார்.


'இது காதியானி மொழிபெயர்ப்பு; காபிர் மொழி பெயர்ப்பு இதனை முஸ்லிம்கள் வாங்கக் கூடாது'' என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக் கட்டை விழுந்தது. நான்காம் தொகுதியை வெளியிட தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள் 13000 கொடுத்தார்கள்.


1967ல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவுத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.


4. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தப்ஸீர்

1996ல் திருக்குர்ஆன் என்ற பெயரில் இந்தத் தப்ஸீர் வெளியிடப்பட்டது. பொதுவாக தமிழில் வெளியான தப்ஸீர்கள், தர்ஜுமாக்கள் பிற மதத்தவர்கள் வாங்கிப் படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்த தப்ஸீர் அமைந்தது என்று சொல்லலாம்.


5. தற்போது ரஹ்மத் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்னு கஸீர் தமிழாக்கம்.

பி.ஜே. தர்ஜுமா


மூன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இதை மொழியாக்கம் செய்தவர் பி.ஜே. அவர்கள். முஸ்லிமல்லாதவர்களிடம் இது போய்ச் சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டது என்பதை இந்த தர்ஜுமாவை எடுத்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.


காரணம், பெரும்பாலும் தர்ஜுமாக்கள் எல்லாமே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகப் படிக்கும் வாக்கில் அமைந்துள்ளன. அதாவது அரபி நூல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் இந்த தர்ஜுமாவோ தமிழ், ஆங்கில நூல்களின் அடிப்படையில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக அமைந்துள்ளது.


தமிழகத்தில் வெளியான தர்ஜுமாக்கள் பெரும்பாலும் பிற மதத்தவர்களைக் கருத்தில் கொள்ளவே இல்லை. ஆனால் இந்த தர்ஜுமா பிற மதத்தவர்களையும் கவரும் வண்ணம் அதன் தமிழ் நடையில் முழு எளிமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.


பின் குறிப்புகள்


இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் இஸ்லாத்தை நோக்கி வீசுகின்ற ஏவுகணைகள் பலதார மணம், விவாகரத்து போன்றவையாகும். எனவே இது தொடர்பான வசனங்களைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்குப் பொருத்தமான, எளிதில் புரியம்படியான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது போல் அறிவியல் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கும் மன நிறைவைத் தரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக ஏகத்துவக் கொள்கை, வணக்கங்கள், சட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தமிழக முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களை தயவு தாட்சண்யம் இன்றி அல்லாஹ்வுக்குப் பயந்து மிகத் தெளிவாக இதன் பின் குறிப்புகளில் போட்டு உடைக்கின்றது.


கலப்படமின்மை


அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் தோன்றி, வணக்கங்களில் உள்ள பித்அத்கள், கலப்படங்கள், சேர்மானங்கள் ஆகியவற்றைக் களைந்து, இஸ்லாத்தைத் தூய வடிவில் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.


வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை ஏற்றுச் செயல்படவும் ஆரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். ஆனால் குர்ஆனில் உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்ஆனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது.  தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.


இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஓர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.


1. மன்ஜில்

2. ருகூவுக்கள்

3. ஸஜ்தா அடையாளங்கள்

4. நிறுத்தல் குறியீடுகள்.

5. வேண்டாத ஆய்வுகள்

6. மக்கீ, மதனீ

7. குர்ஆனை முடிக்கும் துஆ
மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.


குர்ஆன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்ஆனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.
              நன்றி_ DUBAI TNTJ

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.

பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts  என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.
 

ஜஸாகல்லாஹு கைரா எப்போது கூற வேண்டும்?

ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்


1958 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَا حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ جَيِّدٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أُسَامَةَ بْنِ زَيْدٍ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்.
அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி)
நூல் : திர்மிதீ (1958)
25108 فَمَرَّ الْأَعْرَابِيُّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي أَصْحَابِهِ فَقَالَ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَوْفَيْتَ وَأَطْيَبْتَ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُولَئِكَ خِيَارُ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُوفُونَ الْمُطِيبُونَ رواه أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். நபியவர்கள் தான் பேசியபடி பழங்களைக் கிராமவாசியிடம் அழகிய முறையில் ஒப்படைத்தார்கள். அந்த கிராமவாசி தனக்குரியதை பெற்றுக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) நீங்கள் (பேசிய படி) அழகிய முறையில் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினார். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மது (25108)
பேச்சை முடிக்கும் போதும் எழுத்தை முடிக்கும் போதும் இதை கூற வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. மாறாக பிறருக்கு நன்றி தெரிவிக்கும் சந்தப்பங்களில் இவ்வாறு கூறிக் கொள்ளலாம் 

நன்றி : onlinepj.com

நான் ரொம்ப நல்லவங்கோ(?)

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாக்கர் உற்பட இன்னும் சிலர் வெளியேற்றப் பட்டது.தமிழுலகறிந்த பிரபலமான விஷயம்.

வெளியேற்றப்பட்டது ஏன்?


தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எனும் மாபெரும் பதவியில் இருந்த இந்த மகான் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஏ.ஸி பஸ்ஸில் குஜாலாக பிரயாணம் செய்ததும் நாம் அறியாத ஒன்றல்ல.

அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் இந்த மகானை(?)ஜமாத்திலிருந்து சில காலம் இடை நீக்கம் செய்து வைத்து மீண்டும் சேர்த்தது.

ஆனால் இவன் கதையோ அட்டையின் கதையாக மாறியது.

அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தாலும் மீண்டும் குப்பைக்குத் தான் செல்லுமாம்.

இவனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுத்து இவன் திருந்துவான் என எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்திற்கு இவன் செய்த அடுத்த துரோகம் எண்ணிலடங்காதவை.

தவ்ஹீத் ஜமாத் இவனை வைத்து விசாரனை செய்த ஸி.டி யைப் பார்ப்பவர்கள் இதனை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

நாங்க ரொம்ப………………….நல்லவங்கங்கோ………….

இப்போது போகும் இடமெல்லாம் நாங்க ரொம்ப நல்லவங்கன்னு வடிவேல் பாணியில் பேசித் திரிவதைப் பார்க்கிறோம்.

நாய் நடுக்கடலுக்கு சென்றாலும் நக்கித்தான் குடிக்க வேணும் என்று சொல்வதைப் போல் இவன் எங்கு சென்றாலும் தான் ஒரு கேவலம் கெட்டவன் என்பதை நிரூபித்து வருகிறான்.

நானும்(?) தவ்ஹீத் வாதி நானும்(?) தவ்ஹீத் வாதி……………. என்று சொல்லி மக்கள் மத்தியில் இயக்கம் நடத்தி பிழைப்பு நடத்தப் பார்த்தவனை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டனர்.

ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாய் இவனுடன் சேர்ந்த ஒரு காடயர் கூட்டம் தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியைத் தடுத்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கே சவால் விட நினைத்தனர்.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸைப் பற்றியும் நாம் பேசுவது இந்த ஜன்மங்களுக்கு புரிந்திருந்தால் ஒரு பெட்டையனுக்கு வக்காலத்து வாங்குவார்களா?

கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு "தத்கல்' திட்டம் அறிவிப்பு!

சென்னை:"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறியவர்கள், "தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வர்கள், "தத்கல்' திட்டத்தில், மார்ச் 14 முதல், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். சிறப்புக் கட்டணம், 500 ரூபாய், தேர்வுக் கட்டணம், 125 ரூபாய் சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில் மாணவர்கள் நேரில் ஒப்படைக்க வேண்டும். மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வர்களுக்கும், மேற்கண்ட தேதிகளில், துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இம்மாணவர்கள், சிறப்புக் கட்டணம், 500 ரூபாய், தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்திற்கு, 100 ரூபாய் மற்றும் இதர கட்டணங்களாக, 35 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில், மாணவர்கள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Source: dinamalar

புதன்

நாளை வீடு கட்ட கடன் வழங்கும் முகாம்

பெரியகுளம், பிப். 23: பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டக் கடன் வழங்குவது குறித்த முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 25) நடைபெற உள்ளது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:÷மத்திய அரசின் வட்டியில் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான கடன் வழங்கும் திட்டத்தின் (ஐ.எஸ்.எச்.யு.பி) கீழ் தகுதியுள்ளவர்களுக்கு கடன் வழங்கப்படும்.இத் திட்டத்தில் சேர, 200 சதுர அடி மற்றும் அதற்கு மேல் காலியிடம் அல்லது இதே அளவு கொண்ட குடிசை வீடு மற்றும் சுவர் மோசமான நிலையில் உள்ள வீடு உள்ளோர் விண்ணப்பிக்கலாம். நிலம் மற்றும் வீட்டின் பத்திரம் அல்லது பட்டா விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது விண்ணப்பதாரரின் ரேஷன் அட்டையில் உள்ளவர் பெயரிலோ இருத்தல் வேண்டும்.இத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் ரேஷன் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல்,  விண்ணப்பதாரர் புகைப்படம் ஒன்று, வீட்டு மனைப் பத்திரம் அல்லது பட்டா நகல், ஆண்டுóக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேலான வருமானச் சான்று ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை நகர்மன்ற அரங்கில் நடைபெற உள்ள முகாமில் பங்கேற்கலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(முஸ்லிம்களுக்கு வட்டியில்லாக்கடன் கொடுத்தால் முஸ்லிம்களும் கடன் வாங்கலாம்)

சட்டசபை தேர்தலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்க பரிசீலனை!


சட்டசபை தேர்தலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்க தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கிறது. தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக, வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் இத்தேர்தலில் ஓட்டுரிமை அளிக்க, இந்திய தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், இங்குள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் எப்படி சேர்ப்பது, அதற்கான தகுதிகள் என்னென்ன, அவர்கள் எங்கு ஓட்டளிப்பது என்பது குறித்து விரிவாக அறிக்கை அனுப்பப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தேர்தலை நடத்துவதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் மண்டல அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் விரைவில் திறக்கப்படவுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை அரசியல் கட்சிகள்,பொதுமக்கள் அங்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நன்றி: தினமலர்

சவுதி மன்னர் திடீர் சலுகை!



ரியாத்:மத்திய கிழக்கில் பரவி வரும் அரசு எதிர்ப்பலையால் பீதியடைந்துள்ள, சவுதி மன்னர் அப்துல்லா, அரசுள்ளிட்ட பல்வேறு சலுகைக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள் அறிவித்துள்ளார். ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் சிகிச்சை பெற்று வந்த சவுதி மன்னர் அப்துல்லா, நேற்று, தலைநகர் ரியாத் திரும்பினார். அப்போது, 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அவற்றில், அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவுதி அரேபிய மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும். இவை தவிர வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் சிறையில் வாடும் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்களது கடனை அரசே வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

இஸ்லாத்தை கேலிக்கூத்தாக்கிய SDPI மாநாடு

 

பார்க்க.   http://intjperiyakulam.blogspot.com/2011/02/sdpi.html
மாநாட்டு "புகை"படங்கள்

கேள்வி: அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு இடைத்தரகர் தேவையா?

    இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத்தரகராகவோ ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில
“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்திக்கும் போது பதிலளிக்கிறேன்; எனவே அவர்கள் என்னிடமே கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்போது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் (என்றுகூறுவீராக!)அல்குர்ஆன் 2 :186)
என “அல்பகறா” (பசுமாடு) என்ற அத்தியாயத்தில் இறைவனும்,
“(நண்பர்களே!) நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது (யாவற்றையும்) செவியுறுபனையும் (உங்களுக்கு) மிக நெருக்கமாகவனையுமே நிச்சயம் அழைக்கின்றீர்கள். அவன் (தனது பேரறிவால் எப்போதும்) உங்களுடனேயே இருக்கிறான்” (நூல் : முஸ்லிம்)
என்று அண்ணலாரும் நமக்குப் பிரார்த்தனையின் ஒழுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி
சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
 மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை 
  1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
  2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
  3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
  4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
  5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
  6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்

ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
”ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசிநெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7) 


இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
 பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்


இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது


  • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.


  • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
  • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன


  • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது


  • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.


  • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்)செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
  • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது


  • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது


  • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

  • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.


  • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.


  • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
  • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

  • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.


  • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன


  • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.


  • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

  • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
 அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்

நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

 சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?
 நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோ
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )
சகோதரர்களே இன்று இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதாவது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்களை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை காண்போமா?

பழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்
பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்! ஆதாரம் இதோ
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த பழங்களில்  அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா?

மிருகங்களின் வாயிலாக பொய்யை பரப்புதல்
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள்! ஆதாரம் இதோ
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா? இவைகள் பேசிவிடுமா? பறக்குமா? சிரிக்குமா?

இப்படிப்பட்ட செய்திகள் உங்கள் மெயில் இன்பாக்ஸில் கண்டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்கள். இந்த செயல் யுத, கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும்! ஆதாரம் வேண்டுமா? இதோ
சிந்திக்க சில வழிகள்
அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வி்ன் பெயர் தக்காளியில் வந்துவிட்டால் உடனே அதில் சிறப்பு என்கிறீர்களே அல்லாஹ்வின் பெயர் மட்டும்தான் தக்காளியில் தென்படுமா? இதோ இவைகளும் தென்படுகின்றன

கிராஃபிக்ஸ், எடிட்டிங் துணையுடன் பொய்களை பரப்புவது!
இன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது அதன் மூலம் மக்களை மூடர்களாக வழிதவற விடப்படுகிறார்கள்.

கிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்துவிட்டது!
ஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டு வீடியோ படமான மசூதியின் பறக்கும் மேற்கூறை ஆகியனவாகும்.

இவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே! இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா? இதோ

கப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்
கப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.”
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)

மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா? இதை உணர வேண்டாமா?

இதோ முஸ்லிம்களில் பலவீனர்கள் பரப்பும் கப்ரு வேதனை பற்றிய புகைப்படங்கள்

இந்த புகைப்படம் கப்ரு வேதனைக்கு காட்டப்படும் போது கூறும் புழுகு மூட்டைகள் இதுதான்.
  • இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.
  • சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது. உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.
 மேற்கண்ட இந்த கருத்துக்கள் புழுகு மூட்டைகளாக தென்படுகின்றன இதுபற்றி இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்!
தமிழகத்தில் தினமும் செய்திகளில் இடம்பெறும் மிக முக்கியமான தகவல்களில் ஒன்று கீழ்கண்ட செய்திதான்!
 கள்ளக்காதல் தொடர்பால் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். காவல்துறையினரின் புலன்விசாரனையில் உண்மை வெளிவந்தது பிணத்தை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது”

இப்படிப்பட்ட பிணங்களை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கும் போதுகூட அந்த பிணங்கள் மேலே கப்ரு வேதனைக்கு காட்டப்படும் அளவுக்கு சின்னாபின்னமாக இருக்காது அப்படியானல் கள்ளக்காதலால் கொலையுண்டவர்களுக்க அதாபு இல்லையா? என்ற கேள்வி எழவில்லையா?
 பிர்அவ்னுடைய உடல் படிப்பினையில்லையா?
மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான் அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது! எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா?
கப்ரு வேதனைக்கான ஞானம் மனிதனுக்கு உள்ளதா?
கப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை ஏனெனில் கடலில் தள்ளப்பட்ட பிணங்கள், நெருப்பில் எறிக்கப்படும் பிணங்கள் வேதனைகளை எப்படியாவது எங்கேயாவது அனுபவித்துக்கொண்டு இருக்கலாம் அதற்கான ஞானம் மனிதனுக்கு வந்துவிடுமா?
 அல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கை வைக்காதீர்
தக்காளியில், ஆட்டு ரோமத்தில், தர்புசனியில், சுட்ட சப்பாத்தியில் அல்லாஹ்வின் பெயர் போன்ற அரபு எழுத்துக்களை கண்டவுடன் அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்தீரா என்று ஆஹா ஓஹோ என்று பேசுகிறீர்கள் இது பலவீனமான நம்பிக்கை மட்டுமல்லாமல் அல்லாஹ்வை கிண்டலடிக்கும் செயலுமாகும்!
 சிந்தித்துப்பாருங்கள்
மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா? உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா?

அல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா?
 எது அதிசயம்
அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா? இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்!

இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்!

தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்!

துபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்!
 வானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்!
 எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்!

அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
தக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை  முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்!
ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
 என் இறைவன் அழகானவன்! தூய்மையானவன்! ஆற்றல்மிக்கவன்!
அல்ஹம்துலில்லாஹ்