பெரியகுளம், பிப். 23: பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டக் கடன் வழங்குவது குறித்த முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 25) நடைபெற உள்ளது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:÷மத்திய அரசின் வட்டியில் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான கடன் வழங்கும் திட்டத்தின் (ஐ.எஸ்.எச்.யு.பி) கீழ் தகுதியுள்ளவர்களுக்கு கடன் வழங்கப்படும்.இத் திட்டத்தில் சேர, 200 சதுர அடி மற்றும் அதற்கு மேல் காலியிடம் அல்லது இதே அளவு கொண்ட குடிசை வீடு மற்றும் சுவர் மோசமான நிலையில் உள்ள வீடு உள்ளோர் விண்ணப்பிக்கலாம். நிலம் மற்றும் வீட்டின் பத்திரம் அல்லது பட்டா விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது விண்ணப்பதாரரின் ரேஷன் அட்டையில் உள்ளவர் பெயரிலோ இருத்தல் வேண்டும்.இத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் ரேஷன் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், விண்ணப்பதாரர் புகைப்படம் ஒன்று, வீட்டு மனைப் பத்திரம் அல்லது பட்டா நகல், ஆண்டுóக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேலான வருமானச் சான்று ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை நகர்மன்ற அரங்கில் நடைபெற உள்ள முகாமில் பங்கேற்கலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(முஸ்லிம்களுக்கு வட்டியில்லாக்கடன் கொடுத்தால் முஸ்லிம்களும் கடன் வாங்கலாம்)
(முஸ்லிம்களுக்கு வட்டியில்லாக்கடன் கொடுத்தால் முஸ்லிம்களும் கடன் வாங்கலாம்)