
ரியாத்:மத்திய கிழக்கில் பரவி வரும் அரசு எதிர்ப்பலையால் பீதியடைந்துள்ள, சவுதி மன்னர் அப்துல்லா, அரசுள்ளிட்ட பல்வேறு சலுகைக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள் அறிவித்துள்ளார். ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் சிகிச்சை பெற்று வந்த சவுதி மன்னர் அப்துல்லா, நேற்று, தலைநகர் ரியாத் திரும்பினார். அப்போது, 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அவற்றில், அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவுதி அரேபிய மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும். இவை தவிர வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் சிறையில் வாடும் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்களது கடனை அரசே வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.