தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

இலங்கையில் நடைபெற்ற மாபெரும் கொள்கை எழுச்சி மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இலங்கை அமைப்பாக இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொழும்பில் கடந்த 03.04.2011 அன்று மாலிகாகந்தை, வைட்பார்க்க மைதானத்தில் மாபெரும் கொள்கை எழுச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மைக் குழு உருப்பினரும், தீண்குலப் பெண்மணி மாத இதழில் ஆசிரியருமான சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
ஏகத்துவ கொள்கைக்கு எதிரானவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பல விதமான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
ஆனால் நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
ஆண்களும், பெண்களுமாக பெருந்திரளாக கலந்து கொண்ட அந்த மாநாட்டில் தடைக்கல்லே தவ்ஹீதின் படிக்கல் என்ற தலைப்பு சகோதரர் சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.
மாநாட்டிலேயே நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான தமது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.