தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

எம்.ஐ சுலைமான் அவா்கள் டான் தமிழ் ஒளி டி.விக்கு வழங்கிய பேட்டி (வீடியோ)

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த தென்னிந்திய மார்க்க அறிஞரும், தீண்குலப் பெண்மணி மாத இதழின் ஆசிரியரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலப் பேச்சாளருமான சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் சர்வதேச தமிழ் தொலைக்காட்சி சேவையான டான் தமிழ் ஒளி க்கு வழங்கிய பேட்டி.

சர்வதேசமெங்குமுள்ள தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி ஊடகமான டான் தமிழ் ஒளியின் அழைப்பை ஏற்று கலையகத்திற்கு சென்ற எம்.ஐ. சுலைமான் அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரி கவிதா ராம்குமார் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்ன? இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருப்பது ஏன்? இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா? இலங்கையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தும் கொள்கை எழுச்சி மாநாடு பற்றிய விளக்கம் என்ன என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளை முன்வைத்தார்.

கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் மிக அழகாகவும், தெளிவாகவும் பதில்களை தெரிவித்தார் அறிஞர் எம்.ஐ சுலைமான் அவர்கள் .
                                                                                                             நன்றி்“rasminmisc