சீனாவின் தெற்குபகுதியைச் சேர்ந்த ஒரு நகரத்தில் "மெலமைன்" எனப்படும் நச்சுப்பொருள் கலந்த 26 டன் பால்பவுடரை அந்நாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மெலனைன் என்ற ரசாயனப் பொருள் பால்பவுடரில் கலந்துள்ள புரதச் சத்துக்களை அளவிட்டு அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விதமான நச்சுப் பொருளும் கூட.
சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் இருக்கும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் கடையில் இருந்து மெலமைன் கலந்த 26 டன் பால்பவுடரை பொலிசார் கைப்பற்றினர்.
இந்த பால்பவுடர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இன்னும் உபயோகப்படுத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை குறித்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சீனாவில் 2008ல் "மெலமைன்" கலந்த பாலை குடித்ததால் ஆறு குழந்தைகள் பலியாகினர். மேலும் மூன்று லட்சம் குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
newsonews