தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

பிரான்சில் ஏப்ரல் 11 முதல் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்கிற சட்டம் அமலுக்கு வருகிறது



முகத்தை மறைக்கும் வகையில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் மரபு காரணமாக அவ்வாறு அணிந்து வருவார்களானால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரும்படி கோரப்பட்டு, முகத்திரை நீக்கக் கோரப்படுவார்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் உள்ளதாம்.

"இது ஒரு குறியீடான சட்டம் தான், அதற்காக எல்லா முஸ்லிம் பெண்களையும் துன்புறுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ஃப்ரேஞ்ச் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"தேவையற்ற குழப்பத்தைத்தான் இது ஏற்படுத்தும்" என்று பாரிஸ் நகர இமாம் மூஸா நியாம்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இச்சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.

முகத்தை மறைக்கும் எந்த ஆடை வகையையும், பொது இடங்களில், குறிப்பாக, வீதிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள், பள்ளிகள், பொது அவைகள், அரச அலுவலகங்கள், மருத்துவமனைகளில் அணியக்கூடாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. மீறுவோர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரை நீக்கி தங்கள் அடையாளத்தை பதிவு செய்யப் பணிக்கப்படுவார்களாம். மறுத்தால் இருநூற்று எட்டு அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
                                                                                                       நன்றி  : kahatoweta.