
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத இயக்கம் என்றாலும் சமுதாயத்துக்கு பயன் தரும் கோரிக்கைகளை வைத்து அதற்கேற்ப ஆதரவு நிலைபாட்டை எடுத்து வந்துள்ளது. எங்களுக்கு என்ன தருவாய் என்று பேரம் பேசாத இயக்கமாக தவ்ஹீத் ஜமாஅத் திகழ்கிறது.
- தமுமுக வில் நாம் இணைந்திருந்த போது அதிமுகவை ஆதரித்தோம்.
- பின்னர் திமுகவை ஆதரித்தோம்.
- பின்னர் அதிமுகவை ஆதரித்தோம்.
- அதன் பின்னர் திமுகவை ஆதரித்தோம்.
இப்படி மற்றவர்களும் மாறி மாறி ஆதரித்துள்ளனர்.
ஆனால் திமுகவை அவர்கள் ஆதரிக்கும் போது அதிமுகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் முன்னர் அவர்கள் ஆற்றிய உரைகளை தங்கள் இணைய தளத்தில் இருந்து நீக்கி விடுவார்கள்.
அது போல் அவர்கள் அதிமுகவை ஆதரிக்கும் போது திமுகவுக்கு ஆதரவாகவும் அதிமுகவுக்கு எதிராகவும் ஆற்றிய உரைகளை நீக்கி விடுவார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இப்போது அதிமுகவை ஆதரிக்கும் போது முன்னர் ஆற்றிய உரை தங்களுக்கு அதிமுகவிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலைப்படுவது ஒரு காரணம்.
ஆதரிக்கும் போதும் எதிர்க்கும் போதும் எல்லா வரம்புகளையும் மீறி நடந்து கொண்டது இரண்டாவது காரணம்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தேர்தலின் போது எடுத்த அனைத்து நிலைபாடுகள் சம்மந்தப்பட்ட உரைகளையும் நாம் நீக்கவில்லை. காரணம் யாரை ஆதரித்தாலும் அவர்கள் செய்த கொடுமையையும் மறவாமல் சுட்டிக்காட்டி விட்டு இன்ன காரணத்தால் ஆதரிக்கிறோம் என்று தான் பிரச்சாரம் செய்வோம்.
தமுமுகவில் நாம் இனைந்திருந்த போது அதிமுகவை ஆதரித்தோம். திமுகவை எதிர்த்தோம்.
அந்த உரை இதோ
அதிமுகவை ஆதரித்து நாம் செய்த பிரச்சாரம்
பின்னர் திமுகவை ஆதரித்த போது நாம் ஆற்றிய உரை
இப்படி தேர்தலில் ஆதரவு நிலை எடுக்கும் போதும் வரம்பு மீறாமல் எச்சரிக்கையாக நடந்து கொண்டோம்.
இந்த நேரத்தில் மட்டும் ஒற்றுமை கோஷம் பலமாக கேட்கும். எல்லாம் ஓட்டுப் பொறுக்கத் தான். இது போலி ஒற்றுமை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலும் நாம் விளக்கம் அளித்துள்ளோம்.
மேலும் தேர்தலில் தாங்கள் ஈடுபட்டு சமுதாய தொண்டாற்றப் போவதாக பம்மாத்து காட்டுவார்கள். சட்டமன்றத்தில்சமுதாயத்தின் குரலை எதிரொலிக்கப் போவதாகக் கூறுவார்கள். அத்தனையும் பாசாங்கு என்ப்தையும் நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.
தமுமுகவை ஆதரிப்பது முஸ்லிம்களின் மார்க்கக் கடமைபோல் சித்தரிக்கப்படுகின்றது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள
நன்றி : www.onlinepj.com