தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

இறந்தவர்களுக்கு தர்மம் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா?

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”என் தாய் திடீரென இறந்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்லறம் (தான தர்மம்) செய்திருப்பார். எனவே அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.
நூல் : புகாரி 1388


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா அவர்கள் வெüயே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்கüடம், ”அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெüயே சென்றிருந்த போது மரண மடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனüக்குமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”ஆம் (பயனüக்கும்)” என்று பதிலüத்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ”நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சி யாக்குகிறேன்” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2756


இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் மையித்துக்கு நாம் செய்யும் தர்மத்தின் நன்மை சேர வேண்டுமானால் மையித் தர்மம் செய்யும் பழக்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பவராகவும் தர்மம் செய்வதினால் பலன் இருக்கிறது என்பதை நம்பக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.