பெரியகுளம் சட்டசபை தொகுதி மறுசீரமைப்பில் "தனி' தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இடம் பெற்றிருந்த கொடைக்கானல் நகராட்சி தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீக்கப்பட்ட தேனி சட்டசபை தொகுதியில் இருந்த தேனி நகராட்சி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சி பகுதிகளும், ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட வடுகபட்டி பேரூராட்சி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், ஏ.வாடிப்பட்டி, துலுக்கப்பட்டி, முதலக்கம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளும் புதிதாக இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர பெரியகுளம் நகராட்சி மற்றும் பெரியகுளம் தாலுகா பகுதிகள் முழுவதும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
வாக்காளர்கள் விபரம்: தொகுதியில் 97 ஆயிரத்து 930 ஆண் வாக்காளர்களும், 98 ஆயிரத்து 586 பெண் வாக்காளர்களும், திருநங்கை ஒருவரும் உட்பட ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 517 பேர் உள்ளனர். தொகுதியில், 24 ஆண் ஓட்டுச்சாவடிகள், 24 பெண் ஓட்டுச்சாவடிகள், 183 பொது ஓட்டுச்சாவடிகள் உட்பட 231 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
தொகுதியின் சிறப்பு: ஐந்து மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள சுற்றுலா பகுதியான வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி இத்தொகுதியில் உள்ளது. விவசாயம் சார்ந்த இத்தொகுதியில் மா சாகுபடி அதிகளவில் நடக்கிறது.
இதுவரை எம்.எல்.ஏ.,க்கள்: தி.மு.க., சார்பில் 1967ல் எம்.மேத்தா, 1971ல் அன்புச்செழியன் ஆகியோரும், 1977ல் அ.தி.மு.க., சார்பில் பண்ணை சேதுராமன், 1980 ல் அ.தி.மு.க., வை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 1984 ல் அ.தி.மு.க., வை சேர்ந்த முகமது சலிம் ஆகியோர் வெற்றி பெற்றனர். 1989 ல்,தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மூக்கையா, 1991 ல் அ.தி.மு.க., சார்பில் பெரியவீரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். 1996 ல் தி.மு.க., சார்பில் மூக்கையா வெற்றி பெற்றார். 2001 மற்றும் 2006 தேர்தல்களில் அ.தி.மு.க., சார்பில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியை தி.மு.க., நான்கு முறையும், அ.தி.மு.க., ஆறு முறையும் கைப்பற்றியுள்ளது.