அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்ற உன்மையான இஸ்லாமிய கொள்கையினை புதைக்கும் விதமாக அல்லாஹ்வின் மிகபெரிய கோவத்தை ஏற்ப்படுத்தக்கூடிய இணைவைப்பில் தமிழகம் மிகைத்துவிட்டது எனலாம்.
ஆனால் முன்பு நல்லடியார்கள் என்று கூறி சில முஸ்லிம் பெயர்தாங்கிகளை தான் இவர்கள் மஹானாகவும், அவ்லியாக்களாகவும் வழிபட்டுவந்தனர். ஆனால் தற்போது இவர்கள் உன்மையான இணைவைப்பில் மூழ்கிவிட்டனர் என்பதை நாம் கானும் போது வேதனையாக உள்ளது. ஈடிச, சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கணவாய் சையதுவருசை இப்ராஹிம் சாஹிப் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. ஒரு வாரத்திற்கு முன் சந்தனக்கூடு விழாவை ஒட்டி, இத்தர்ஹாவில் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சந்தனக்கூடு நடந்தது. சந்தனம்,பன்னீர்,பால் கலந்த குடத்தை நிர்வாகிகள் கணவாய்பிச்சை, நாகூர்மீரான், ஆஸாத்மீரான், முகமதுமன்சூர்அலி, ரஹ்மத்துல்லாக் ஆகியோர் சுமந்து தர்ஹாவில் இருந்து புறப்பட்டனர். முஸ்லிம்கள் திருக்குரான் வேதம் முழங்கி செல்ல, மேலக்கால் கருப்பணச்சாமி, அய்யனார் சுவாமி கோயிலில் துவா செய்து, பின்னர் தர்ஹாவிற்கு சந்தனக்கூடு சென்றது. பக்தர்கள் மொட்டை அடித்து, பல்வேறு இனிப்பு பதார்த்தங்கள், காணிக்கை செலுத்தி அருள்பெற்றனர்.
என்ற செய்தி வௌயாகி உள்ளன.
ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள் (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2-48)