எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களோடு ஆய்வு செய்யப்பட்டதில் 234 எம்.ஏல்.ஏக்களில் 120 பேர் கோடீஸ்வரர்கள். இது மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 52% ஆகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல்.ஏ.க்களில் 57 பேர் மட்டும்தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
தற்போதைய 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் 23 திமுக எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்கள். ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மூன்றுபேரும், 146 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 55% பேரும் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
மக்கள் நலப்பணியில் கோடீஸ்வரர்கள் ஆர்வமாக ஈடுபட்டிருப்பது, உலக நாடுகளிடையே நமது ஜனநாயகத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது. என்றாலும், கோடிகளைத் தக்கவைத்து நிரந்தர கோடீஸ்வரர்களாக இருக்கவே, அவர்களில் பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரியாமலா இருக்கும்?
-INNERAM