தேனி:பத்தாம் வகுப்பு மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் வருமாறு:பெரியகுளம் கல்வி மாவட்டத்தில்,தேனி என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யபிரகாஷ் (493/500)முதல் இடத்தையும், தேனி என்.எஸ்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா, ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செந்தான் அமுதன், மருதுபாண்டி ஆகியோர் (491/500) இரண்டாம் இடத்தையும் பெற்றனர். என்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிரோஷினி (490/500)மூன்றாம் இடத்தையும் பெற்றனர். உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில், போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மே.நி.ப.,மாணவர் அமர்நாத்(493/500) முதல் இடத்தையும், உத்தமபாளையம் முகமது பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி, போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் பள்ளி மாணவி பிரியங்கா, ராயப்பன்பட்டி செயின்ட் ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா, கூடலூர் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஞான சங்கீத்ராஜ் ஆகியோர்(491/500) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.மூன்றாம் இடத்தை ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மே.நி.பள்ளி மாணவி சவீதா, செயின்ட் ஆக்னஸ் பெண்கள் மே.நி. பள்ளி மாணவி திவ்யபாரதி, ராயப்பன்பட்டி எஸ்.யு.எம்.மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது ரமீஷ் ஆகியோர் (490/500)மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.தேனி என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யபிரகாஷ், (493/500) கூறுகையில், அதிகாலை 4 முதல் 7.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலும் படிப்பேன். பள்ளியில் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வுகள் பயனுள்ளதாக அமைந்தன. என்றார்.போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் அமர்நாத்(493/500) கூறுகையில், "தொடர்ந்து தேர்வுகள் நடத்தியதும், வெளி ஆசிரியர்களை கொண்டு அவற்றை திருத்தி மதிப்பெண் வழங்கியதும், அதிக மதிப்பெண் பெற உதவியாக இருந்தது.'என்றார்.இவர்கள் இருவரும் தேனி வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.இ.ஞானசங்கீத்ராஜ், (491/500)கூறுகையில் (என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, கூடலூர்) டியூசனுக்கு செல்லாமல் திட்டமிட்டு படித்தேன். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்து விடுவேன். இரவு 10 மணிக்கு மேல் கண்விழித்து படிப்பதில்லை. மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தது கூடுதல் மதிப்பெண் பெற உதவியாக இருந்தது என்றார்.
நன்றி். தினமலர்
நன்றி். தினமலர்