ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவ்வருடத்தில் மாத்திரம் 143 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவிற்கு அடுத்த படியாக அதிகபடியான மரண தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்படுகின்றன. இதற்கு சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
4tamilmedia