தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

வீணாகும் காய்கறிகளை கொண்டு மண்புழு உரம்: கவுன்சிலர் எதிர்பார்ப்பு

பெரியகுளம் : மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்து நகராட்சிக்கு வருவாயினை பெருக்கவேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட உழவர்சந்தை, தென்கரை மார்க்கெட், வடகரை சின்னமார்க்கெட் பகுதிகளில் மொத்த வியாபார கடைகளும், சில்லரை வியாபார கடைகளும் உள்ளன. பொதுமக்கள் ஏராளமானோர் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி, கிராமப்பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் காய்கறிகள் தினமும் ஆயிரக்கணக்கான கிலோ காய்கறிகள் விற்பனையாகிறது. இவற்றில் தினமும் குறைந்த பட்சம் 50 கிலோ காய்கறிகள் அழுகி, அடிபட்டு வீணாக மார்க்கெட் பின்புறம் மற்றும் வராகநதியில் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குப்பை அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வராகநதியில் அழுகிய காய்கறிகளை கொட்டுவதால் நீர் மாசுபடுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் வீணாகும் காய்கறிகளை சேகரித்து மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்கமுன் வரவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.