தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

பிளஸ் 2 மார்க் பட்டியலுக்கு... வசூல் செய்யும் பள்ளிகள் மீது...நடவடிக்கை

பெரியகுளம் : பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெறும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 44 மேல்நிலைபள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் நேற்று முதல் மார்க் பட்டியல் தப்படுகிறது. இப்பட்டியல்களை இலவசமாக வழங்குமாறு அரசு தெரிவித்துள்ளது. எச்சரிக்கை: கடந்த ஆண்டில் சில பள்ளிகளில் பிளஸ் 2 மார்க் பட்டியல் மற்றும் டி.சி., வழங்கப்படும் போது மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. எச்சரிக்கை: அதேபோல் தற்போது மாணவ, மாணவிகளிடம் மதிப்பெண் பட்டியல் வழங்கும்போது பணம் வசூல் செய்யும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலகம் எச்சரித்துள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மார்க் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் வழங்க எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூல் செய்யும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.