தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

கோடைக்கால அறிவியல் முகாம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு அறிவியல் முகாம் மே மாதம் 16 முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை தலைவரும், இணை பேராசிரியருமான தாஜுத்தீன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
அறிவியல் முகாம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை சார்பில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான குறுகிய கால அறிவியல் பயிற்சி முகாம் மே 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. புது டெல்லி இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை உதவியோடு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மீனா ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவியரின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் விதமாக இன்ஸ்பயர் எனும் கோடைக்கால அறிவியல் முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த அறிவியல் முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பங்கேற்று அறிவியல் துறையின் சிறந்த பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலாம். தங்களது அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளலாம்.
90 சதவீத மதிப்பெண்கள்
இம்முகாமில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதவியல், கணினியியல், நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து சிறப்பு வகுப்புகளும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு அறிவியல் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை தலைவர் தாஜுத்தீன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் செய்து வருகின்றனர். இந்த அறிவியல் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் பெற்று தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும். தற்போது இறுதி தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க...
முகாமில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு தங்கும் வசதி, போக்குவரத்து செலவு மற்றும் உணவு ஆகியவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 29-ந்தேதி ஆகும். விண்ணப்பபடிவத்தை www.bdu.ac.in/inspire என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு inspirebdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 99435 35774, 94864 16938 என்ற தொலைபேசியிலோ முகாமின் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம். முகாமில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு துணைவேந்தர் மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Thanks to Daily thanthi