தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

நெய்வேலி மின் திட்டத்திற்கு அனுமதி

தமிழகத்தில் 5,907 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அனல் மின் நிலையம் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பழுப்பு நிலக்கரியைக் கொண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உதவும் இந்த திட்டத்தை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் செயல்படுத்துகிறது. இந்த மின் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது.இந்த புதிய மின் திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தென்மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு பிரிவுகளாக இந்த மின் திட்டம் செயல்படுத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் இது அமைக்கப்படுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், நெய்வேலியில் மூன்று அனல் மின் நிலையங்களை ஏற்கனவே இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.