தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

பிளஸ் 2 கணிதப் பிரிவில் படித்தவர்கள் பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டில் சேர அனுமதி

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்து பயில்வதற்கு ஏற்கெனவே  நடைமுறையில் உள்ள பிளஸ் 2-வில் கணிதப் பாடப்பிரிவு படித்த மாணவர்கள் சேர இயலாது என்றும், இதற்கு பதிலாக பிளஸ் 2-வில் தொழிற்பிரிவு மற்றும் 10-ம் வகுப்பு படித்து, இரண்டு ஆண்டு  ஐ.டி.ஐ. படித்த மாணவர்கள் மட்டும் சேர இயலும் என ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது. ÷இதுதொடர்பாக பிளஸ் 2-வில் கணிதப் பாடப்பிரிவு படித்த மாணவர்களும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகங்களும் ஏ.ஐ.சி.டி.இ-க்கு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, சென்னை தொழில்நுட்ப இயக்ககம்  மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகியன இணைந்து இந்த ஆண்டு தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டில் பிளஸ் 2 கணிதப் பாடப்பிரிவு படித்த மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம் என அறிவித்துள்ளன.  ÷இதன் மூலம் பிளஸ் 2-வில் கணிதப் பாடப்பிரிவு படித்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைவர்.