முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது சக அமைச்சர்களையும் தப்பிக்ககை வைப்பதற்காகவும் உண்மையை மறைப்பதற்காவும் குஜராத் அரசு இவ்வாறு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், குஜராத் அரசின் இந்த நடவடிக்கையை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையிலல் சுதந்திராமான விசாரணை தேவை என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியான 2002 ஆம் ஆண்டு கலவரங்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கும் புலனாய்வு பிரிவுக்கும் உத்தரவிடக் கோரி மே மாதம் நானாவதி கமிஷனில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் விண்ணப்பித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த குஜராத் அரசு வழக்கறிஞர் வாகீல், அரசு விதிகளின்படி தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், வாகனப் பதிவு புத்தகங்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றிய டைரி ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அழிக்கப்பட்டுவிட்டன என்று கூறினார்.
குஜராத் அரசின் இச்செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காகச் செய்யப்பட்ட கிரிமிணல் செயல் இது என்று கூறினார். மாநில அரசு இந்தப் பிரச்சனைகளை முழுமையாக மறைத்துவிட முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கூட்டுக் கொலை மற்றும் இன அழிப்பு தொடர்பான விசாரணை குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வரும்போது இவ்வாறு செய்திருப்பது, குஜராத் மாநில முதல்வரே இதில் தொடர்புடையவராயிருப்பார் என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது என்றும் மனீஷ் கூறினார்.
முதல்வர் நரேந்திர மோடியம் அவரது அமைச்சரவை சகாக்களும் குஜராத் கலவரத்தில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற உண்மை வெளிவராமல் இருப்பதற்காகவே அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ள என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடிய குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தவிர விசாரணை ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார்.
அரசு இவ்வாறு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நாங்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தோம் என்று கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகப் போராடி வரும் என்ஜிஒ அமைப்பான ஜன் சங்கர்ஷ் மஞ்சின் வழக்கறிஞர் முகல் சின்ஹா கூறியுள்ளார்.