பேரிஜம் ஏரி பகுதியிலிருந்து- குழாய்தொட்டிக்கு இரும்பு குழாய் மூலம் குடிநீர் கொண்டு பெரியகுளத்தில் சப்ளை செய்ய வேண்டும். பெரியகுளம் பகுதிக்கு கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் இருந்து குடிநீர் கிடைக்கிறது. அங்கிருந்து வரும் நீர் சோத்துப்பாறையின் வழியாக குழாய்தொட்டிக்கு வருகிறது. மேல்நிலைத் தொட்டிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பேரிஜம் ஏரியிலிருந்தும், சோத்துப்பாறையிலிருந்தும் வரும் குடிநீர் குழாய்தொட்டிக்கு வாய்க்கால் வழியாக திறந்தவெளியில் வருகிறது. மலைப்பகுதிக்கு சுமை ஏற்றிச் செல்வதற்கு குதிரை, கழுதைகள் மற்றும் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. திறந்தவெளியில் வரும் குடிநீரில் கால்நடைகளை குளிக்கவைக்கின்றனர். துணிகளை துவைப்பது, சமையல் பாத்திரங்களை கழுவுவது என நீரை மாசுபடுத்துகின்றனர். ஏரி பகுதியிலிருந்து குடிநீரை இரும்பு குழாய் மூலம் குழாய்தொட்டிக்கு கொண்டு வருவதற்கு பொதுப்பணித்துறை நிர்வாகத்துடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.